Sunday, February 4, 2018

காமமா? கடவுளா?

காமமா? கடவுளா?   பேசாலைதாஸ்
திருமணங்கள்சொர்க்கத்தில் நிட்சயிக்கப்படுகின்றது என்று சொல்லுவார்கள், நான் அதை ஆட்சேபிக்கின்றேன். அனேக திருமணங்கள்,சீதனத்தாலும், வரதட்சனையாலும், படிப்பு, வசதிகள், அழகு இவைகளை கருத்தில் கொண்டு, செய்யப்படுகின்ற ஒரு சமூக ஒப்பந்தமாக திருமணங்களை, நோக்கவேண்டியுள்ளது..உண்மைக்காதல் இப்போது இல்லை, எல்லாமே காரணத்தோடு நிகழ்கின்றது. காரணம் இருக்குமானல் அங்கே காதல் இருக்காது. ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே திருமணம் என்ற பந்தம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
                                                      ஒருவன் ஒருத்திக்கு என்பது ஒழுக்கவியல் சார்ந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கை, அது சட்டத்தாலும், சமயத்தாலும், சமூகத்தாலும் உறுதி செய்யப்படுகின்றது. சொல்லப்போனால், திருமணம் என்பது பெண்களுக்கான அடக்குமுறையாகவே நமது கலாச்சாரத்தில் கணிக்கப்படுகின்றது. ஏனெனில், பெண் என்பவள் ஆணுக்கு அடிமைபோலவும், ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டும் என்பதையே வேதவாக்காகவும் சொல்லிவைத்துள்ளார்கள். அதனால்தான், ‘கல்லானாலும் கணவன்’, ‘புல்லானாலும் புருசன்’, ‘சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை’ போன்ற பெண்ணடிமைக் கருத்துகளை அழுத்தம் திருத்தமாகப் பரப்பிவைத்தார்கள்.
                                                                             உடன்கட்டை ஏறுதல், பலதாரங்கள், பல தடவை திருமணங்கள் எல்லாம், ஒரு ஆணுக்கு வழக்கப்பட்டுள்ளது ஆனால் பெண்களுக்கு, விதவையானலும் மறுமணம் சில சமூகங்களில் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று நிலை மாறிவிட்டது. ஆம், இன்று ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று சமமாக எல்லாத் துறைகளிலும் சிறப்பாகப் பெண்களால் ஈடுபடமுடிகிறது. தற்போதும் திருமணத்தின் குறைகள் முழுமையாகக் களையப்பட்டதாகச் சொல்லமுடியாது என்றாலும், ஓரளவு ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. ‘திருமணம் என்ற இந்த உறவு மனிதர்களுக்கு இடையே அவசியம்தானா?’ எதற்காக இந்த ஒப்பந்தம்? உடலுறவுகொள்வதற்குச் சட்டமும் சமூகமும் வழங்கும் லைசன்ஸ் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா? என்று சிந்திக்க தோன்றுகின்றது.

                                                                            திருமணத்தின் உண்மை இலக்கு இதுதான், அன்பும் பிரியமும் அதன்வழியே உருவாகும் நட்பும் காதலாகி, ஒருவருக்கொருவர் துணையாகி வாழ ஓர் அமைப்பை ஏற்படுத்தித் தருகிறது திருமணம். மகிழ்ச்சியான உறவும், சந்தோஷமான வாரிசுகளும் திருமண ஒப்பந்தத்தை உயிருள்ளதாக மாற்றுகின்றது.. தம்பதியர் அன்பு கலந்து வளர்த்தெடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான சூழலையும் உருவாக்கித் தருவதும் மணவாழ்வின் இன்றியமையாத பங்காகிறது. நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகமாகத் தேவையான கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதோடு, காலத்தில் நட்பும் அன்பும் கலந்த நல்லதொரு உறவாகப் பரிணமிக்கின்றது.. எந்தவித திணிப்பும்  இல்லாதவரையில், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும் அவரவர் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், நல்ல நட்பின் அடிப்படையில் நீண்ட காலத் துணையாக வாழ்வதற்கான அற்புத வாய்ப்பாக மணவாழ்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம்


                                                                இருமனம் இணைகின்றபோது, அன்பும் பிரியமும் அதன்வழியே உருவாகும் நட்பும் காதலாகி, ஒருவருக்கொருவர் துணையாகி வாழ முயற்சிக்கும் வழியே திருமணம். அன்பும் பிரியமும் அதன்வழியே உருவாகும் நட்பும் காதலாகி, ஒருவருக்கொருவர் துணையாகி, காமசுகத்தை சரிவர, ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்வதே இல்லறம்! 
                                                                    காமத்தை பகிர்கின்றபோது, அதே சுகத்தை ஒருவன், இன்னொரு பெண்ணிடம் பெறுகின்றான் என மனைவி, காதலி உணர்கின்றபோது, அவளின் முக்கியமற்ற தன்மையை அவள் அறிந்து, தன் காதலன், கணவனிடம் இருந்து மனத்தளவில் தள்ளி நிற்க முற்படுகின்றாள். இந்த உணர்வு ஆண்களிடம் அவ்வளவாக வருவதில்லை. எனவே தான் ஒரு மனைவியிடம் இருந்து அதி உச்ச பங்களிப்பை, உடலுறவில் அடைய விரும்பினால், அந்த பெண்ணுக்கு, நீங்கள் நம்பிக்கை உடையவராக, பிரமாணிக்கமுள்ளவராக இருக்கவேண்டும், இதுவே ஆண் கற்பு (கன்னியம்) என்று நான் எண்ணுகின்றேன்.
                                                                                               நான் ஆண்தானே, யாரோடும் உறவு கொள்ளலாம் என்று இருந்தால்,  மனைவியிடம் இருந்தோ, காதலியிடம் இருந்தோ முழுமையான காம சுகத்தை அடைய முடியாது. காமத்தின் உச்சத்திற்கும் செல்லமுடியாது.  காமத்தின் உச்சம்,  ஆண்குறியின் அளவிலே, பெண் குறியின் அழகிலே இருக்கின்றது என்றும், உடலுறவின் நேர அளவில் இருக்கின்றது என்றும் சிலர், முட்டாள் தனமாக எண்ணுகின்றனர். அதனை நான் ஒத்துக்கொள்வதில்லை. 
                                                                                                    அன்பும் பிரியமும் தோய்ந்த இரு உள்ளங்களின் பார்வை பட்டாலே, ஆயிரமாயிரம் வோல்டேஜ் மின்சார உணர்ச்சிகள் இடம் மாறித்தாக்கும்! அப்படிப்பட்டவர்களுக்கிடையே இருக்கும், இருக்கமே காமத்தின் உச்ச நிலையை தொட்டுவிடும், வயது முதிர்ந்தவர்கள் அப்படித்தான் காமத்தின் உச்சத்திற்கு செல்கின்றார்கள். அன்பான வருடல் போதும்! இது என் அனுபவ பகிர்வு! அறுபதை நெருங்க, நெருங்கத்தான் எனக்கே, காதலும், காமத்தின் சூட்சுமமும் புரிகின்றது, இவ்வளவு காலமும் அடிமுட்டாளாய் இருந்துவிட்டேனோ? என அடிமனம் சொல்கின்றது.
                                                                     காமம் அது கடவுளிடம் செல்லும் வாசல், அன்பின் படிக்கட்டு, உனக்குள் தேங்கிக்கிடக்கும் அன்பு, காம ஏக்கமாகி இன்னொரு ஜீவனை உன்னிடம் அழைத்து வருகின்றது, அதை உன் உயிராக, நினைக்கத்தோன்றுகின்றது, நீங்கள் எல்லோரும் காதல் வயப்படும்போது, உங்கள் காதலியை உயிராக எண்ணியிருப்பீர்கள், நான் உண்மைக்காதலை சொல்கின்றேன். அனுப‌விக்க, சுவைக்க என்று நீங்கள் காதலிக்க முற்பட்டால், அது காதல் அல்ல, கடைச்சரக்கு! காம இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! இராஜ யோகி, ஏன் கடவுளுக்கும் இது  பொருந்தும்! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும், விசுவாமித்திரரால் தொடர்ந்து தவம் செய்ய முடியவில்லை.
                                                                இந்த உலகில் காமத்தின் குழந்தைகளாகப் பிறந்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும், அனைத்து அணுக்களிலும் இயற்கைச் சக்தியாக காமம் நிறைந்துள்ளது. அதனால்தான் ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்றார்கள். காம சக்தியை எந்த ஓர் உயிராலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ‘காமத்தை அடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனை அடைய முடியும்’ என்று பல்வேறு மதங்கள் போதனை செய்வதுதான், இன்றைய மனித குலத்தைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது எனது சிறுமதியின் எண்ணம்.
                                                                              காமத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை, காமத்தை கடவுளாக, கலைக்கண்ணோடு நோக்கவேண்டும், அன்பில் இரண்டு ஜீவன் ஒன்றை ஒன்று அறிந்து, அன்பு செய்து அதன் வழி காதல் கொண்டு,காமுறுகின்ற போது, அதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.  அதனால்தான் நம் முன்னோர்கள் காமத்தை கற்சிலைகளில் வடித்து, ஆலய வாசல்களில் வைத்தனர். கஜோரா, மாமல்லபுர கற்சிலைகள் இதற்கு சான்று. பெண்ணே ஒரு கோவில் தானே! ஆலையத்தில் நீ கால் பதித்து உள் நுழைகையில், பெண்ண்ணுக்குள் பிரவேசிக்கின்றாய் என்ற உள் உணர்வு இருக்கவேண்டும் என்பதற்காகவும், காமத்தில் கடவுளைப்பார் என்று உணர்த்தவுமே, காமம் கல்லிலே வடிக்கப்படுகின்றது. 
                                                                                       நான் மதுரையில் இருந்த போது, மீனாட்சியை பார்க்கும் போது, கல்லையும் மீறி, அவளின் அழகு கொங்கை திமிறுவதை பார்த்திருக்கின்றேன், அங்கே பக்தி பிரவகிக்கின்றது. அதே மதுரை வீதியில், பூக்கடைக்காரியின் திமிறும், நசுங்கும் கொங்கைகளை பார்க்கும் போது, கண்கள் கவ்விக்கொள்கின்றது, லட்ஜை பிறக்கின்றது, அப்படியே அள்ளி அனைக்கலாமா? என்று எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு என் அறிவு சம்மதப்பட்டால் நான் அங்கே காமக்காரன் ஆகிவிடுகின்றேன். அங்கே அன்பில்லை,  அனுபவிக்க வேண்டும் என்ற போகம் பிறக்கின்றது, பின் எப்படி எனக்கு கடவுள் யோகம் வரும்? நீங்களே சொல்லுங்களேன்!



                                                                     காமத்தில் மூன்று செயல்கள் நடைபெறுகிறது. முதலாவது, நேரம். அதாவது எப்போது காம உணர்வு ஏற்படுகிறதோ, அந்த நேரத்தில் இருந்து, அந்த இன்பத்தை அடையும் வரை அவர்களுக்கு இடையே நேரம் என்பதே இருப்பதில்லை. நான் முன்பு சொன்னது போல, நேரம் ஒரு பிரச்சனை அல்ல, அன்போடு வருடியபடியே, யுகம் யுகமாய் இருக்கலாம்.
                                  அடுத்தது, காமத்தில் ‘நான்’ என்பது மறைந்துபோகிறது. அன்புக்கலவையில் நான் நீ, எல்லாம் ஒன்றாகி நீர் என்ற கடலுக்குள் மூழ்கி முத்தெடுத்து, பேரின்பவாசலை தொடுகின்றோம். அங்கு நம் மனக்கண் முன் இறைவனின் பாதத்தை நீங்கள் உணர்வீர்களானால், உங்கள் மனைவி, காதலி உங்களுக்கு தேவியாகின்றாள்! மெதுவாக அவ்ள் காதுக்குள் முனகுங்கள், எந்தன் தேவியே! எந்தன் ஆவியே "  என்று அப்படி ஒரு அனுபவத்தை நான் தேடித்திரிகின்றேன்.

                              . மூன்றாவது, இயற்கையுடன் இணைவது. ஆம், காமத்தின் செயல்பாடுகளின்போது இயற்கையுடன் மனிதர்கள் இணைகிறார்கள். மனது கஸ்டப்படுகின்ற போது, தோள் சாய்ந்து கவலை சொல்ல, காதலியை நீங்கள் நாடியிருப்பீர்கள், உங்கள் சோகத்தை நீங்கள் சொல்ல சொல்ல, கல்லும் முள்ளும் மலராய் மாற்றும், காதலியின் மெல்லிய வருடலும், அணைப்பும், மெல்லிய சூடேற்றி, நெஞ்சத்தில், துவண்டு, மஞ்சத்தில் சாய்கின்றபோது, எல்லாகவலை, வலி, வேதனை, பசி, கோபம், ஆத்திரம் போன்ற அத்தனை உணர்வுகளும் மறந்து இன்பம் என்ற தேன் குத்தத்தில் வீழ்ந்து, திகைக்கின்ற எறும்பாகி, துருமப்பாகி,  இயற்கையுடன் இணைந்து பிரபஞ்சமாக மாறுகிறீர்கள்.
பின்னர் என்ன நானே கைம்மா, கம்பமத யானை, கடவுள் என்று எண்ணுவீர்கள்! எத்துனை இன்பம் வைத்தாய் என்று இறைவனை கூத்தாடுவீர்கள். அப்படிப்பட்ட  ஆனந்த கூத்தை நான் எப்போது ஆடுவேன்?
                                      அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்.