Saturday, April 28, 2018

மன்னார் நகரப்புற எல்லைக்குள் சட்டவிரோத மணல் அகழ்வால் எதிர்காலத்தில் பாரிய விளைவை மன்னார் தீவு எதிர்நோக்கும் நகர சபை அமர்வில் விசனம்

(மன்னார் நகர சபையின் இரண்டாவது அமர்வில் ஒலித்தவை)
மன்னார் நகரப்புற எல்லைக்குள் சட்டவிரோத மணல் அகழ்வால் எதிர்காலத்தில் பாரிய விளைவை மன்னார் தீவு எதிர்நோக்கும் நகர சபை அமர்வில் விசனம்
( நிருபர் வாஸ் கூஞ்ஞ) 25.04.2018
மன்னார் நகர எல்லை புறத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு மன்னார் பிரதேச செயலாளரால் அனுமதி பெறப்பட்டு அகழ்வு செய்யப்படுகின்றதா அல்லது சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை முதலில் கண்டறியப்பட வேண்டும். இது விடயமாக ஒரு குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை அமர்வு நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இரண்டாவது அமர்வாக நடைபெற்றது.
இதில் ஒலித்தவை
செயலாளர்
செயலாளர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நகர சபை மண்டபத்தை நகர சபை ஊழியர்களுக்கும் நகர சபை உறுப்பினர்களுக்கும் வருடம் ஒரு முறை மட்டும் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதை தொடர்வதா என முன் வைத்தபோது இதை தொடரலாம் என சபை ஏக மனதாக தீர்மானித்தது.
தற்பொழுது புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான முன் ஏற்பாட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவசரமாக இவ்விடத்திலுள்ள நகர சபைக்கான கடைகளை நாங்கள் அப்புறப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதில் சில கடைகள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒன்பது கடைகளை வெளியேற்ற வேண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நாங்கள் இவ்விடத்தை யூடிக்கு கையளிக்க வேண்டியுள்ளது என்றார்.
உறுப்பினர் நவ்சீன்
எம்மை நகர சபை ஊழியர்கள் பிரமாண்டமான முறையில் வரவேற்றமைக்கு நான் அனைவர் சார்பிலும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
எம்மை வீதி வழியாக வரவேற்று வந்தபொழுது அதிகமான மக்கள் வீதியோரங்களிலிருந்து உற்று நோக்கியதை நாம் அவதானித்தோம்.
இவர்களுடைய எண்ணக்கருத்து என்னவாக இருந்தது என்றால் எதிர்காலத்திலாவது மன்னார் நகரம் அபிவிருத்தி அடையுமா என்பதாகும். ஆகவே நாம் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டியுள்ளது.
ஆகவே தலைவர் அவர்களே எம் நகரப் பகுதியில் பல தரப்பட்ட மக்கள் வாழ்கின்றபோதும் நாம் அவர்களின் நலன் கருதி அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம். நாங்களும் உங்களுக்கு எங்கள் பூரண ஒத்துழைப்பை நல்குவோம்.
முன்னாள் நகர பிதாவாக இருந்த உங்கள் தந்தை சிறப்பாக வழி நடத்தியதுபோல நீங்களும் கட்சி பேதமின்றி அமைச்சராக இருக்கலாம் பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லது மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெறப்படும் நிதிகளையும் கொண்டு இவ் நகரத்தை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும்.
நாங்கள் உங்களுக்கு எதிர் கட்சியாக இருந்தாலும் நல்ல விடயங்களுக்கு ஒத்துழைக்க பின் நிற்க மாட்டோம். இவ் சபையில் பலதரப்பட்ட கட்சி உறுப்பினர்களாகவும் வேறுபட்ட மதத்தினராக இருந்தாலும் இங்குள்ள 16 உறுப்பினர்களும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என தெரிவித்தார்.
உறுப்பினர் பிரிந்தாவனநாதன்
இந்த சபையில் ஆளும் கட்சி எதிர் கட்சி என்பது கிடையாது. ஆகவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படுபவர்கள் என்பதை மனதில் இருத்திக் கொள்வது நலம் என நினைக்கின்றேன் என்றார்.
உறுப்பினர் டிலானி குரூஸ்
இவ் வருடம்தான் பெண்களுக்கு இவ் சபையில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெண்கள் என்ற ரீதியில் நாங்கள் உங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் நாம் மன்னார் மைந்தர்கள் என்ற உணர்வோடு மன்னார் நகரத்தை அழகுமிக்க நகரமாக்க செயல்படுவோம் என்றார்.
உப தவிசாளர் ஐhன்சன்
இங்கு கன்னி அமர்விலே அனைவரும் ஒன்றினைந்து நல்ல கருத்துக்களை பரிமாறுகின்றபோது மனதுக்கு நல்ல இதமாக இருக்கின்றது. காலையில் எமக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போது இடம்பெற்ற கசப்பான சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்பு கோரி நிற்கின்றோம்.
கடந்தது கடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக நடக்கட்டும். ஏனைய மாவட்டங்களை விட எமது மாவட்டம் தூய்மையாக அழகாக வைக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
நமது செயலகத்தில் நல்ல உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள். நாம் நிதி வளத்தைப்பெற்று இவ் நகரத்தை நல்ல மாற்றத்துக்கு கொண்டு வருவோம் என்றார்.
உறுப்பினர் குலதுங்க
உறுப்பினர் குலதுங்க பேசுகையில் மக்கள் நமக்குத் தந்த ஆணையை எமது சிரமேற் கொண்டு மக்களுக்காக கட்சி பேதமின்றி நாங்கள் தவிசாளரின் தலைமையில் நல்ல திட்டங்களை முன்வைத்து செயல்பட எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு என தெரிவித்தார்.
குப்பை
மன்னார் நகரில் குப்பைக் கொட்டுவதில் இருந்து வரும் பிரச்சனை இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை. கடந்த காலங்களில் மன்னார் சேமக்காலைக்கு அருகில் கொட்டப்பட்டு வந்ததால் பல பாரிய விளைவுகள் ஏற்பட்டன.
பின் பட்டித்தோட்டப் பகுதியில் கொட்டப்பட்டபோது அங்கு மக்களின் ஆர்பாட்டத்தால் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.
தற்பொழுது களவான முறையிலேயே குப்பைகளை கொட்ட வேண்டியுள்ளது. குப்பைக் கொட்டுவதற்கு ஒரு சரியான இடத்தை அவசரமாக தெரிந்தெடுக்க வேண்டிய அவசியம் உண்டு. ஒரு மாதத்தால் தற்பொழுது குப்பை கொட்டும் இடம் நிறைந்து விடும் என சபையில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அறுவை செய்யப்படும் விலங்குகள் கழிவுகளை மக்கள் வாழும் சூழலில் கொட்டுவதால் இதனாலும் பாரிய சுகாதார கேடுகளும் நிலவி வருவதால் இது விடயத்தையும் கவனிக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சேமக்காலை
மன்னார் சேமக்காலையை எம்பொழுதும் துப்பரவாக வைத்திருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. அங்கு மின் ஒளி வசதிகள் மேற்கொள்ளப்படுவதுடன் தண்ணீர் வசதிகளும் செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
உறுப்பினர் இரட்ணசிங்கம்
இரட்ணசிங்கம்; இங்கு தெரிவிக்கும்போது குப்பைக் கொட்டும் இடத்துக்காக கடந்த ஆட்சி காலம் முதல் மன்னார் அரசு அதிபர் பிரதேச செயலாளர் ஆகியோருடன் நீண்ட காலமாக தொடர்ச்சியாக போராடி வந்தும் இதுவரைக்கும் எமக்கு சாதகமான நிலைமை வரவில்லை. ஆகவே நாம் தொடர்ச்சியாக போராடுவோம். பிரதேச செயலாளருக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றார்.
ஆலோசனை சபை
சபை கலைக்கப்பட்டபின் அரசியல் சார்பற்ற ஒன்பது பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று இயங்கி வந்தது. இப்பொழுது புதிய சபை நியமிக்கப்பட்டுள்ளதால் ஆலோசனை குழுவை நியமிப்பது சபைதான் தீர்மானிக்க வேண்டும் என செயலாளர் தெரிவித்தார்.
காணிகள் வழங்கப்படுவது
மன்னார் நகரத்தில் நகர சபைக்கு தெரியப்படுத்தாமல் பிரதேச செயலாளர் தான்தோன்றித் தனமாக அரச காணிகளை வழங்கி வருவதாக முறையீடுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே நகர சபையின் அனுமதியின்றி காணிகள் வழங்கக் கூடாது என பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
சுடலைச் சாம்பல்
சுடலைச் சாம்பல் களவாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. ஆகவே இது ஏதோ ஒரு தீய செயல்பாட்டுக்கு பாவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
வருமானம்
கடந்த காலத்தை விட மன்னார் நகர சபைக்கு வருமானம் அதிகரித்து வருவதாக செயலாளரினால் சபையில் தெரிவிக்கப்பட்டது. அதுவும் சோலை வரியே அதிகமாக கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இறைச்சிக் கடை
மூர்வீதியில் முன்பு இறைச்சிக் கடை இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது இயங்காதிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டபோது முன்பு ஒரு தனியார் கடையை வாடக்கைக்கு எடுத்து ஏலத்தில் விடப்பட்டு இறைச்சிக் கடை இயங்கி வந்தது. ஆனால் அது சபையின் சட்விரோத செயல்பாடு என தெரிவிக்கப்பட்தையிட்டு மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே சபைக்கு நிரந்தரமான காணித்துண்டு ஒன்று கிடைக்கும் பட்சத்தில் அங்கு இறைச்சிக் கடை ஒன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவிடயமாக பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியும் பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்பட்டது.
மணல் அகழ்வு
உறுப்பினர் ஐங்கர சர்மா கருத்து தெரிவிக்கையில் மன்னார் நகர் எல்லைப்பகுதியில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. இது மன்னார் தீவுக்கு எதிர்காலத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை.
ஆகவே மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சட்ட விரோமாக இடம்பெறும் மணல் அகழ்வை நாம் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த மணல் அகழ்வுக்கு பிரதேச செயலாளரால் அனுமதி வழங்கப்படுகிறதா அல்லது சட்டவிரோமாக அகழ்வு செய்யப்படகிறதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டதுடன் ஒரு குழுவையும் நியமித்து நடவடிக்கை எடுப்பது நலம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)
LikeShow More Reactions

வன்னியை பொறுத்தமட்டில் அமைச்சர் ரிசாட்டுடன் இணைந்து பயணிக்க முடியாது எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்

வன்னியை பொறுத்தமட்டில் அமைச்சர் ரிசாட்டுடன் இணைந்து பயணிக்க முடியாது எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்

(செய்தியாளர்) 26.04.2018
அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் அவர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க நாங்கள் கூட்டுச் சேர்ந்திருந்தால் நாங்கள் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் அவருடன் நாங்கள் கூட்டுச்சேர விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
-மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை நோக்கியதையிட்டு நேற்று முன்தினம் (25.04.2018) ஊடகவியலாளர்கள் இது விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோது அவர் தெரிவிக்கையில்
கேள்வி
மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோ இயக்கத்துக்கும் இடையே நிலவிய ஆசன பங்கீடே காரணம் என தெரிவிக்கப்படுகிறது இதற்கு உங்கள் கருத்து என்ன?
ஆசன பங்கீடுகளில் பிரச்சனை வந்தது உண்மை. ஆனால் தேர்தலில் வரைக்கும் அந்த பிரச்சனை தலை தூக்கவில்லை. அத்துடன் எங்களிடமும் ஒரு சில பிழைகள் இருக்கிறது. மக்களிடம் நாங்கள் போகவில்லை.
மேலும் மக்கள் இவ் தேர்தலில் தங்கள் வட்டாரத்தில் தங்கள் உறவினர் அத்துடன் தங்கள் வட்டாரத்தில் சேவை செய்யக் கூடியவர்கள் என்பதையே முன்னிருத்தி தெரிவு செய்துள்ளனர்.
ஆகவே இவ் தெரிவை நாங்கள் கட்சி முரன்பாடாக பார்க்கவில்லை. மாறாக இந்த தேர்தல் வட்டார முறையில் தெரிவு செய்யப்பட்டவர்கள். எங்களால் நியமிக்கப்பட்டவர்களை அந்த வட்டார மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்திருக்கின்றது. இதனால்தான் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றதொழிய எங்கள் கட்சிக்குள் உள்ள முரன்பாடுதான் காரணம் என சொல்ல முடியாது.
-கேள்வி
மக்கள் மத்தியில் இன்னொரு கேள்வி எழுந்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு நீங்கள் அதாவது உங்கள் கட்சியோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது தேசிய கட்சிகளுக்கு எதிராக எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் முன் வைப்பதில்லை எனவும், ஆனால் தமிழ் கடசிகளையே நீங்கள் பெரும்பாலும் தாக்கி பேசி வந்ததாகவும் என தெரிவிக்கப்படுகிறதே?
அப்படியல்ல தற்பொழுது உள்ள நாட்டிலுள்ள அரசியல் மாற்றம் எமது பிரச்சனைகளை இரு அரசியல் கட்சிகளம் சேர்ந்து தீர்ப்பதாக உறுதியளித்தார்கள். இதற்கு சர்வதேசம் எங்களுக்கு வாக்குறுதி தந்திருந்தது.
சர்வதேசத்துடன் நாங்கள் இணைந்து கொண்டுதான் நாங்கள் வெளியிலிருந்து இந்த அரசுக்கு ஆதரவை வழங்கி வருகின்றோம்.
ஆனால் நாங்கள் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் எவரையும் அல்லது அவர்களின் கட்சிளையோ தூற்றி பேசவில்லை. ஆனால் நாங்கள் பொதுவாக தெரிவித்தது என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பை எல்லோரும் ஒரு பொது எதிரியாக எங்களை நோக்குகின்றார்கள் என்றுதான்.
இதை நாங்கள் இந்த தேர்தல் தெரிவிலே கண்டு கொண்டோம். இதனால் பல சபைகளை தமிழர்கள் கைப்பற்ற முடியாது நிலை ஆகிவிட்டது.
உதாரணமாக மன்னார் பிரதேச சபையானது ஒன்று தமிழர் ஒருவர் தவிசாளராக வந்திருக்க வேண்டும். அல்லது உப தவிசாளராக வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டும் இல்லை.
இவ் பிரதேசத்தில் தமிழரும் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் இந்த இடத்தில் இவ்வாறு நிகழ்ந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு எதிரியாக நோக்கியமையே.
நாங்கள் பிரிந்து சென்றமையாலே எங்களுக்கு இவ்வாறான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் பிரிந்து சென்றமையால் இன்றைக்கு தென்னிலங்கை கட்சிகளான யானைக் கட்சிக்கும் கை கட்சிக்கும் கூடுதலான ஆசனங்கள் கிடைத்திருப்பது கவலை தரும் விடயம்.
பிரிந்திருப்பதற்கு நாங்களும் மற்றைய தமிழ் கட்சிகளும் வித்திட்டு இருக்கின்றோம். இது எமக்கு கவலையை உண்டு பண்ணியுள்ளது. இதனால் மற்றவர்களை பெரியவர்களாக்கி கூடுதலான ஆசனங்களை பெற வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் எதிர் காலத்தில் தமிழர்கள் பிரிந்து வாழக் கூடாது என்பதேயாகும்.
கேள்வி
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தவிசாளர் உப தவிசாளர் தெரிவுகளை கையாளுவோம் என அமைச்சர் ரிசாட் உங்களுடன் பல முறை முயன்றதாக தெரிவிக்கப்படுகிறதே அது விடயமாக?
அமைச்சர் ரிசாட் என்னுடன் பேசினார். ஆனால் வன்னியை பொறுத்தமட்டில் நாங்கள் அவருடன் கூட்டு சேர்ந்து போகமுடியாது.
காரணம் இங்கு எங்கள் மக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற நிலைக்கு அப்பால் அமைச்சர் ரிசாட்டுடன் நாங்கள் கூட்டுச் சேர முடியாது என்றுதான் எங்கள் நிலைப்பாடு.
உண்மையில் நாங்கள் அமைச்சருடன் இணைந்திருந்தால் நாங்கள் அதிகமான இடங்களில் ஆட்சியை பிடித்திருப்போம். அதை செய்ய விரும்பவில்லை என்றார்.
(வாஸ் கூஞ்ஞ)

Thursday, April 26, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த துரோகமே மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளரை இழப்பதற்கு காரணம்! -மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாகீர்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த துரோகமே மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளரை இழப்பதற்கு காரணம்!
-மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாகீர்-
(தலைமன்னார் நிருபர்- வாஸ் கூஞ்ஞ) 20.04.2018
மன்னார் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்றிருந்த போதும் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவில் தம்முடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதைத் தட்டிக் கழித்தமையே ஒற்றுமை சீர்குழைந்தது என மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகமது முஜாகீரும் மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை(20.04.2018) காலை மன்னார் நகர சபையின் உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அமைச்சர் றிஷாம் பதியுதின் மற்றும் அவரது கட்சியினையும் சாடி உரையாற்றியமையினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன் செய்தியாளர்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியி;டனர்.
மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தோதலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஐந்து உள்ளுராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.
இதில் ஐந்து உள்ளுராட்சி சபைகளிலும் அதிக வாக்குகளை பெற்ற போதும் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்திருந்தார்
ஆயினும் அவர்கள் அமைச்சரின் அழைப்பிற்கு செவி சாய்க்காததினால் வேறு கட்சிகளுடன் இணைந்து மக்கள் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முயன்றமையினால் தங்களால் கைப்பற்றப்பட்ட மூன்று சபைகளிலும் உப தவிசாளர் பதவியையும் இழக்க நேரிட்டது.
அதே நேரத்தில் நாங்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே இன்று(நேற்று) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வசமிருக்கும் மன்னார் நகர சபையின் வரவேற்பு விழாவில் இன,மத,கட்சி வேறுபாடின்றி கலந்து கொண்டோம்.
ஆயினும்,வரவேற்பு நிகழ்வில் எங்கள் தலைவரையும், கட்சியையும் தொடர்ச்சியாக விமர்சிப்பதால் எமது நல்லிணக்கத்தை அவர்கள் விரும்பவில்லை என்பதாக கருதியே நாங்கள் அணைவரும் ஒருமித்து அங்கிருந்து வெளி நடப்பு செய்தோம்.
மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக நாங்கள் ஒரு தமிழ் பிரதிநிதியையே தீர்மானித்திருந்தோம்
. ஆயினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் கூட எங்களுக்கு எதிராக செயற்பட்டதனாலேயே அந்த உப தவிசாளர் பதவியையும் அவர்கள் இழக்க நேரிட்டது.
இவ்வாரிருக்க அமைச்சர் றிஸாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிதான் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் குள்ள நரி வேளையை செய்வதாக தெரிவிப்பதை நாம் வன்மையாக கண்டிப்பதோடு எமது கவலையையும் தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகமது முஜாகீரும் மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
(வாஸ் கூஞ்ஞ)

நானாட்டான் பிரதேச சபையை திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றியது!

நானாட்டான் பிரதேச சபையை திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றியது!

(செய்தியாளர்) 11.04.2018
மன்னார் நானாட்டான் பிரதேச சபையை திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கைப்பற்றியுள்ளது.
திருவுளச் சீட்டின் மூலம் தெரிவு இடம்பெற்றதை தொடர்ந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திருச்செல்வம் பரஞ்சோதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலமையில் நேற்று(11) நானாட்டான் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இத்தெரிவிற்கு முன்னதாக தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு தொடர்பிலான ஒழுங்கு விதிகளை மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து தவிசாளருக்கான பெயர்களை முன்மொழியுமாறு ஆணையாயர் அழைப்பு விடுதத்திருந்த நிலையில் தமிழ் தேசசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திருச்செல்வம் பரஞ்சோதி அவர்களும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அன்ரன் றோஜர் ஸ்ரான்லின் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதனைத் அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என்பதை ஆணையாளர் ஒவ்வொரு உறுப்பினராக வினாவினர்.
இந்நிலையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கப்பட்டது.
இதனை அடுத்து இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இருவரும் தலா எட்டு வாக்குகளை பெற்று சமநிலையை எட்டினர்.
இந்நிலையில் திருவுளச் சீட்டின் அடிப்படையில் இடம்பெற்ற தெரிவின் போது நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளராக முன்மொழியப்பட்ட தமிழ் தேசியக் கூட்மைப்பைச் சேர்ந்த திருச்செல்வம் பரஞ்சோதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தவிசாளர் தமது பதவிளை பொறுப்பேற்றுக் கொண்டு உப தவிசாளருக்கான தெரிவிற்குரிய அழைப்பை விடுத்தார்.
இதன் போது அணைத்து உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் உப தவிசாளரை தெரிவு செய்யும் படி கேட்டுக் கொண்டனர்.
இதனை அடுத்து உப தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பேதுருப்பிள்ளை லூர்துநாயகம்பிள்ளையின் பெயரும் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மடுத்தின் ஜெயானந்தன் குருஸ் அவர்களது பெயரும் முன்மொழியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பகிரங்க வாக்களிப்பின் போது இருவரும் தலா எட்டு வாக்குகளை பெற்றமையினால் உப தவிசாளர் தெரிவும் திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டது.
இதில் பேதுருப்பிள்ளை லூர்துநாயகம்பிள்ளை நானாட்டான் பிரதேச சபைக்கான உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நானாட்டான் பிரதேச சபைக்கு தெரிவாகியிருக்கும் பதினாறு உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏழு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் சர்பில் ஐந்து உறுப்பினர்களும், தமிழ்த் தசிய விடுதலைக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் உள்ளடங்குகின்றனர்.
தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவின் போது அமைச்சர்களான றிஸாட் பதியுதின், அமிர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
( வாஸ் கூஞ்ஞ)
LikeShow More Reactions
Comment

தேர்தல் காலங்களில் நாம் நடந்து கொண்டது போன்று அல்லாது மன்னார் நகரத்தை ஒன்றுபட்டு அபிவிருத்தி செய்ய முனைவோம். மன்னார் நகரப் பிதா டேவிட்சன்

தேர்தல் காலங்களில் நாம் நடந்து கொண்டது போன்று அல்லாது மன்னார் நகரத்தை ஒன்றுபட்டு அபிவிருத்தி செய்ய முனைவோம்.
மன்னார் நகரப் பிதா டேவிட்சன்
(செய்தியாளர்) 24.04.2018
தேர்தல் காலங்களில் நாம் இவ் சபைக்கு தெரிவு செய்யப்படுவதற்காக போட்டியிட்டபோது நடந்து கொண்ட விதமாக இருக்காது மன்னார் நகரத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் நோக்குடன் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட உங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நிற்கின்றேன் என மன்னார் நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தனது கன்னிப் பேச்சில் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் இரண்டாவது அமர்வு நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை (20) மன்னார் நகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தனது கன்னிப் பேச்சில் கடந்த காலங்களிலே நாம் பல்வேறுப்பட்ட கட்சிகளிலே போட்டியிட்டு இவ் சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு இங்கு வந்திருக்கின்றோம்.
நாம் இங்கு தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்ற நோக்கம் எம் மன்னார் நகரத்தை அபிவிருத்தி செய்வதேயாகும்.
இவற்றை நாம் எம் மனதில் வைத்துக் கொண்டு நாம் எந்த விதமான முறையில் இவ் நகரத்தை அபிவிருத்தி செய்வது, எமது செயற்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒன்றினைந்து சிந்தித்து செயல்பட வேண்டும் என நான் இந்நேரம் உங்களுக்கு அழைப்பு விடுத்து நிற்கின்றேன்.
மேலும் நகர சபையின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவும். செயற்பாட்டுக்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நாம் மக்களுக்கு தேர்தல் காலங்களில் என்ன என்ன வாக்குறுதிகளை வழங்கினோமோ அதை நாம் மக்களுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.
அத்துடன் தேர்தல் காலங்களில் நாம் பல தரப்பட்ட கடசிகளில் போட்டியிட்டவாறு நாம் இந்த சபையில் நடந்து கொள்ளக் கூடாது எனவும் மாறாக எதிர் காலங்களில் எமது நகர சபையின் அபிவிருத்தியிலேயே நாம் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.
(வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் 'தம்பா' சுற்றுக்கிண்ணப் போட்டியில் டிலாசால் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.

மன்னாரில் 'தம்பா' சுற்றுக்கிண்ணப் போட்டியில் டிலாசால் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.
(செய்தியாளர்) 24.04.2018
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையுடன் மன்னார் கீரீன் வீல்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் கே.சிறீகாந் தலைமையில் மூன்று தினங்களாக நடாத்தப்பட்ட 'தம்பா' சுற்றுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அடம்பன் பாலைக்குழி டிலாசால் விளையாட்டுக் கழகம் இறுதி சுற்றுப் போட்டியில் எருக்கலம்பிட்டி அல்வல்லா விளையாட்டுக் கழகத்தை பெனால்டி மூலம் 2-1 கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
கடந்த வாரம் மன்னார் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ் போட்டியில் மன்னார் மாவட்டத்திலிருந்து 42 கழகங்கள் பங்குபற்றின.
இறுதி நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் மொ.இ.மொ.இஸ்தீன் உட்பட பலர் இதில் முக்கியஸ்தர்களாக கலந்து கொண்டனர்.
இறுதி சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுக் கொண்ட அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் 40 ஆயிரம், 30 அயிரம் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
( வாஸ் கூஞ்ஞ)
LikeShow More Reactions
Comment

Monday, April 16, 2018

மன்னார் பிரதேச சபையின் தலைவர் பத‌வி பறிபோனது அவமானமே!

மன்னார் பிரதேச சபையின் தலைவர்  பத‌வி பறிபோனது அவமானமே!
                                         கடந்த உள்ளூர் சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்ததின் விளைவு, தற்போது பிரதேச சபையின் தலைவர் பதவி கைநழுவிப்போயுள்ளது. இலங்கையில் இனப்பிரச்சனை முரண்பட்ட காலம் முதல். முஸ்லிம் சமூகம் பல அனுகூலங்களை பெற்றுவருகின்றது. முஸ்லிம் சமூகமும், அதன் தலைமைகளும், முஸ்லீம் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளனர். சிறுபாண்மை சமூகத்தின் பாதுகாப்பு இலங்கையில் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பொருளாதாரத்தை முன்னேற்றி ஒரு  சில நாட்களில், இனக்கலவரம் என்ற போர்வையில் பறி கொடுப்பதும், வரலாற்றில் காலகாலமாக நாம் கற்றுவந்த பாடம்! இதனை அண்மையில் நடந்த கண்டி முஸ்லிம் கலவரம் நல்லதோர் அனுபவம்! இருந்தபோதும் முஸ்லீம் சமூகம் இதனை உணர்வதாக தெரியவில்லை. தமிழ் தேசியத்தின் இருப்பு, அதன் பாதுகாப்பு ஊடாகவே முஸ்லிம் மக்களது உரிமை பாதுகாக்கப்படும் என்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தி, தமது வெற்றிகளை முஸ்லீம் சமூகம் பெற்றுக்கொள்வது அபாயகரமான தற்கொலை முயற்ச்சியாகும்.

  மறு கோணத்தில் உற்று நோக்கினால் இதற்கு காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த உள் கட்சி முரண்பாடுகள் ஒரு காரனம். இதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதும், அதன் சிதைவை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இதைத்தான் வங்காலை பேசாலையில் உள்ள சில அரசியல் முகவர்கள் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவது வேதனையானது இனிவர இருக்கும் தேர்தல்களில் வங்காலை பேசாலை தலைமன்னார் மக்கள் மிக கவனமாக செயல்படவேண்டும். முஸ்லிம் தலைமை அதிகாரத்தை கைப்பற்றினால், சமூர்த்தி, பஸ் கொண்டக்டர், சதோசாவில் மாவு நிறுக்கின்ற  தொழில், புகையிரத சேவையில் கட்டை அடுக்கும் தொழில் இப்படியான் சில்லறைத்தனமான் ஒரு சில தொழில் வாய்ப்புகளையே முஸ்லீம் சமூகம் எமது தமிழ் இளைஞர்களுக்கு வீசும்! அதனை நீங்கள் கவ்விக்கொள்ளுங்கள். அமைச்சர்களாக இருக்கும் முஸ்லிம் அமைச்சுகளில் தரமான பதவி தமிழர்களுக்கு இல்லை என்பதை நான் உறுதிபடச்சொல்கின்றேன். என்வே நஎம் உறவுகளே விழிப்பாக இருங்கள் என்பதை மீண்டும் சொல்கின்றென்.அன்புடன் பேசலைதாஸ்     

மன்னாரில் வீதி விபத்துக்கள் களவுகள் போன்றவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரiஐகள் குழு வேண்டுகோள்.

மன்னாரில் வீதி விபத்துக்கள் களவுகள் போன்றவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரiஐகள் குழு வேண்டுகோள்.
(செய்தியாளர்) 09.04.2018
மன்னார் பகுதியில் வீதி விபத்துக்களும் களவுகளுமே அதிகமாகக் காணப்படுவதால் இவைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளம்படி மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகள் மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எஸ்.பீரீஸிடம் வேண்டிக்கொண்டனர்.
நடப்பாண்டு புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக் கிழமை மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எஸ்.பீரீஸை மரியாதையின் நிமித்தம் அவரின் அலுவலகத்தில் சந்தித்தது.
அவ்வேளையில் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகள் மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தை நோக்கும்போது இங்கு அதிகமாக களவும், விபத்துக்களுமே அதிகமாக காணப்படுகின்றன.
விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதற்கான காரணம் வாகன ஓட்டிகளுக்கு சரியான சட்டத்திட்டங்கள் பயிற்சிகள் இல்லாமை பெரும்பாலும் தெரிய வருகின்றது.
இதற்கு ஒரு காரணமும் இருப்பதாக தெரியவருகிறது. அதாவது வாகன ஓட்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் வாகன பரிசோதகர் ஒருவர் முன்னிலையில் மட்டும் வழங்கப்படுவதால் இங்கு தகுதியற்றவர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு முறைகேடான முறையில் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
ஆகவே எதிர்காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது போக்குவரத்து பரிசோதகர் திணைக்களம், பிரதேச செயலக அதிகாரி, பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிசார் கொண்ட ஒன்றினைந்த குழுவின் முன்னிலையில் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாகில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் சரியான வீதி போக்குவரத்து சட்டத்திட்டங்களை கற்றுக் கொண்டு தங்கள் அனுமதிப் பத்திரங்களை பெறும் நிலை தோன்றலாம் என தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அடுத்து மன்னார் பகுதியில் எந்த முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்தப்படாததினதால் அவர்கள் தாங்கள் விரும்பிய கட்டணங்களை பிரயாணிகளிடம் அறவிடுவதாகவும் புகார்கள் கிடைப்பதனால் ஒவ்வொரு முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச் குழு பொலிஸ் அத்தியட்சகரிடம் வேண்டுகோள் விடுத்தது.
அடுத்து இரவில் பொலிசார் வீதிகளில் சைன் அங்கி இல்லாமல் இருளில் இருந்து பரிசோதனை செய்வதால் பலர் பல அளெசரியங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே இது விடயமாக கவனம் செலுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் நகர் புறங்களில் குறிப்பாக நகர சபை எல்லைக்குள் மக்கள் செறிந்து நிற்கும் இடங்களில் வாகனங்கள் அதி வேகத்தில் செல்லுவதாலும் பல விபத்துக்கள் இடம்பெறுவதையும் இவ் குழுவினர் சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறன இடங்களில் வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொள்ளும்படி வேண்டப்பட்டது.
இவற்றை செவிமடுத்த மன்னார் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எஸ்.பீரீஸ் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவிக்கையில் பிரiஐகள் குழுவுக்கும் பொலிசாருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டிய அவசியத்தை தெரிவித்தார்.
ஏனென்றால் பொலிசாரும் பிரiஐகள் குழுவும் பொது மக்களுக்காகவே தங்கள் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்ததுடன் பொது மக்களுக்கு பொலிசாரால் எதாவது விழப்புணர்வு ஏற்படுத்தும்போது பிரiஐகள் குழுவும் தங்களுக்கு ஆதரவை வழங்கும்படியும்
அத்துடன் தாங்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் எடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)