Saturday, July 7, 2018

விக்கியா மாவையா இந்த சோதனை தமிழர்களுக்கு தேவையா?


அன்பான தமிழர்களே! தமிழ் அரசியல்வாதிகளே! 
தமிழர்களுக்கு எதுவும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் சிங்கள அரசிய ல்வாதிகளும், சிங்களமக்களும் ஒற்றுமையோடு செயல்படுகின்றார்கள். போதாக்குறைக்கு முஸ்லீம் மக்களையும் துணைக்கு அணைத்துள்ளனர். இந்தவேளையில்தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இழுபறி! இந்த கேவல மான நிலைமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சி, இய க்கங்கள் சார்ந்த போட்டாபோட்டிதான் காரனம் என்பது எல்லோரும் அறிந்தவிடயம்! 

                                    தமிழ்ர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு ஒரு மனநோய் இருக்கின்றது. தாம் சார்ந்த கட்சிகள், அல்லது அமைப்புக் களுக்காக, இயக்கங்களுக்காக எந்தொவொரு பகுப்பாய்வும் இல்லாமல் கண்மூடித்தனமாக அதனை பின்பற்றுவதே அந்த நோய்! இதற்கு கார ணம், தமிழ் மக்களிடம், ஏன் ஆசிய ஆபிரிக்கா மக்களிடையே, அரசியல் கலாச்சாரம், அரசியல் உளவியல் என்ற அறிவியல் வளர்ச்சியடையவி ல்லை என்பதே! ஐரோப்பிய நாடுகளில், மக்கள் அரசியல் அறிவும், அது சார்ந்த அரசியல் கலாச்சாரமும் காணப்படுகின்றது. அவர்கள் கட்சிக் காக வாழ்பவர்கள் அல்ல, தமக்காக, தமது நாட்டுக்காக, தமது பொருளா தார சமூக நலன்களை முன்னெடுத்து செல்லக்கூடிய கட்சிகளின் தேர் தல் அறிக்கை கேட்டு, அது சாத்தியப்படுமா என ஆராய்ந்து, தமது வாக் குகளை பிரயோகிக்கின்றார்கள். இதில் அவர்கள் கட்சி  வளர்ச்சி பற்றி சிந்திப்பதே இல்லை. அதானால் தான் இந்த நாடுகள் அபார வளர்ச்சி அடைந்து செல்கின்றன.

                                                         தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகவேண்டும் என்று எண்ணி, அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர், தேசிய தலைவர் அவர்களே! சர்வதேசம் ஊடாக, இலங்கை பேச்சுவார்த்தைகளுக்கு சமிக் ஞை காட்டியவேளையில், விடுதலை புலிகளால் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கவில்லை, இதனை சாட்டாககொண்டு, இலங்கை அரசாங்கம் ஏனைய உதிரிகட்சிகள் சர்வ கட்சிகள் என்ற போர்வையில், பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இருந்தவேளையில், அதனை தடுக் கவே தேசிய தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வியூக பொறிமு றையை வைத்தார். ஆனால் அந்த பொறிக்குள்ளே தமிழரசு கட்சி, இயக்க ங்கள் தமக்கே வைத்த பொறிபோல, சிக்கிக்கொண்டு, கூட்டமைப்பு தவி க்கின்றது. அதற்குள் தத்தமது அரசியல் கட்சிகளை, இயக்கங்களை வள ர்த்தெடுக்க ஆசைப்படுகின்றனர். இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் அல்ல, ஏதோ ஒருவகையில் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்த வர்க்ளே! இருந்தாலும் மக்கள், மன்னித்துவிட்டார்கள்.

                                                                      இவர்கள் ஏதாவது ஒன்றை, புலிகளுக்கு பின்னர் பெற்றுதருவார்கள் என் நம்புகின்றார்கள். விடுதலைபுலிகளின் பாதையில் கொஞ்சமாவது பயணிப்பார்கள் என நம்புகின்றார்கள். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை, விக்கிநேஸ்வர‌ன், ஆனந்தி போன்றவர்கள், விடுதலைப்புலிகளின் இலட்சிய‌ உணர்வோடு, அதே பிரக்ஞையில் இருப்பதால் சற்று தீவிரவாத போக்கில் இருக்கின்றார்கள். மிதவாத போக்கில் உருவான தமிழரசு கட்சியும் அதனோடு ஒத்து பயணி க்கக்கூடிய இதர இயக்கத்தில் இருந்து வந்தவர்களும்,  நல்லாட்சி அரசா ங்கத்துடன், இணக்க, சகிப்பு தன்மையை கடைப்பிடித்து, அவர்களின் ஊடாக ஏதாவது பெறாலாம் என எண்ணுகின்றார்கள்! இது நடவாத காரி யம், சிங்கள பெரும்பான்மை இனவாத கருத்தில் ஊறிப்போனவர் கள், தமிழர்களுக்கு எதையும் தரப்போவதில்லை. 

                                                                      இப்போது இருக்கும் மாகாண சபையை எடுத்துக்கொண்டால் அதற்கு இறமை கொண்ட இறுதி அதிகாரம்  கொண்டு இயங்கமுடியாமல் இருக்கின்றது. டெனிஸ்வரனின் வழக்கு நல்லதோர் எடுத்து காட்டு! அப்படி அதிகாரம் கொண்ட சபையாக இருந்தாலும் தமிழர்கள் அதை அப்படியே சிங்கள தலைம களிடம், அடகு வைப்பார்கள். டெனிஸ்வரன் போன்றவர்கள் அதை கச்சிதமாக செய்து முடிப்பார்கள். சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசு கட்சி செல்கின்றது, தமிழ் அரசு கட்சியின் போக்கில், தமிழர் கூட்டமைப்பு செல்லவேண்டும் என்பதையே சுமந்திரன் போன்றோர் எதிபார்க்கின்றனர். அதற்கு மாறாக யார் வந்தாலும் அவர்களை எதிர்க்க தயங்கமாட்டார்கள், இதற்கு சம்பந்தனும் விதிவிலக்கல்ல.

                                                              இன்று விக்கியை விலக்கி வைக்க, எடுக்கும் முயற்ச்சி தமிழ் அரசு கட்சியை வலுப்படுத்தும் நோக்கமே தவிர வேறு ஒன்றுமல்ல. விக்கியை விலக்க எடுக்கும் முயற்ச்சி விபரீதமாக முடிய வாய்ப்பு இருக்கின்றது. தமிழர் கூட்டமைப்புக்கு பிரதியாக இன்னொரு அமைப்பு உருவாக இதுவே வழிகோலும். எனவே தமிழ் தேசிய கூட்டமை ப்பு தன்னை திடப்படுத்தி, வலுவுள்ளதாக மாற்றியமைக்கப்படவேண் டும் என்றால், விக்கி போன்றவர்களை வெளியே விடுவது மடமைத்தனம்! எல்லோரையும் உள்வாங்கிக்கொண்டு, கட்சி, இயக்கம் என்ற பேதமை யை மறந்து, நாம் தமிழர் என்ற உணர்வோடு, சிங்கள இனவாதத்துக்கு முன்னால், திடமாக, நம்பிக்கையோடு, எதற்கும் விட்டுக்கொடுக்காமல், சர்வதேச உதவியோடு, இந்தியாவையும் உள்வாங்கிக்கொண்டு புதிய பாதையில் பயணிக்கவேண்டும். 

                                                                           எத்தனைகாலம் இணங்கி செல்வது? சகிப்புதன்மை அரசியலை விட்டொழித்து, விடாப்பிடியாக நின்று அற வழி போராட்டத்தை திடப்படுத்த்வேண்டும், விஜயகால சொலவ்து போல, சொந்த கட்சியை எட்டி உதைக்கும், தைரியம், மாவையிடமோ சுமந்திரனிடமோ இருக்குமா? இதுதான் சாதாரண மக்கள் கேட்டும் கேள்வி ? அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment