Saturday, July 28, 2018

மாகான சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக களமிறக்கப்படுபவர் யாராக இருக்கலாம்?

மாகாண‌ சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக களமிறக்கப்படுபவர் யாராக இருக்கலாம்?  பேசாலைதாஸ்
                                     


இராமன் ஆண்டால் என்ன? இராவணான் ஆண்டால் என்ன? கூட வந்த அனுமர் ஆண்டால் என்ன? என்று இந்த கேள்விக்கான பதிலை காணா மல், தமிழ் மக்கள் இருந்துவிடப்போவதில்லை. மாகான சபைக்கான ஆயுள் காலம் வெகு சீக்கிரம் காலவதியாகின்றது. இந்த நேரத்தில், நல் லாட்சி அரசாங்கம் பற்றிய அவநம்பிக்கை மக்கள் மனதில் ஆழவேரூண் ருகின்றது. அரசியல் அமைப்பு மாற்றத்தால் எதுவும் நடந்துவிடப்போவ தில்லை என்ற ஏமாற்றம் மக்கள் மனதில் எட்டிப்பார்க்கின்றது, மறுபுறம் தாமரை மொட்டு மலரும், இராஜபக்ஸாக்களின் கை தெற்கில், ஓங்கி வரும் ஒரு தோற்றப்பாடு தென்படுகின்றது. 

                                                  சர்வதேச இராஜதந்திரிகள் மட்டத்தில் இது பற்றி அவதானிக்கப்பட்டுவருகின்றது. இது இவ்வாறு இருக்கின்றவேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அதன் பங்காளிகளுக்கும் இடையில் சச்சரவுகள் உருவாகியுள்ளன. தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கத்தை எப்படியாவது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிலைனிறுத்தவேண்டும் என்பதில் சுமந்திரன், மாவை போன்றவர்கள் அதிதீத அக்கறை காட்டுகி ன்றனர். இதற்கு உடந்தையாக ரெலோ சார்பில் அடைக்கலநாதன் சார்பு நிலை எடுக்கின்றார்.

                                                           முதல் அமைச்சர் அவர்களோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கையை  கடுமையாக விமர்சித்துவருகின்றார். முதலமைச்சரின் இந்த நிலைப்பாட்டால், அவரை முன் நிறுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஒரு அரசியலை, அதிருப்தியாளர்கள் உருவாக்க முயற்ச்சி செய்கின்றார்கள்.  அதிருப்தியாளர்களை பொருத்த வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு, காத்திரமான நடவடிக்கைகளை செய் யவில்லை, அதன் தீவிரதன்மை போதாது, விட்டுக்கொடுப்பு, அதாவது இணக்கப்பாட்டு அரசியலை, தெற்கோடு நடத்துவதில், எந்த பிரயோச னமும் இல்லை என்ற போக்கில்  அதிருதியாளர்கள் தமிழ் தேசிய கூட்ட மைப்பை விமர்சித்துவருகின்றர்கள். 

                                                             அதற்கு மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, குறிப்பாக முதலமைச்சரின் செயல்பாடு போதாது என்ற கோணத்தில் முதலமைச்சரை விமஎசித்துவருகின்றனர். இதில் ஓரளவு நியாயம் இருக் கத்தான் செய்கின்றது. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள், முதலமைச்சராக வந்த காலந்தொட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு, மாகான சபை யின் ந‌டவடிக்கைகள் நின்றுவிடுகின்றன, குறைந்த பட்டசம் உடனடித் தேவைகளை, நிறைவேற்றுவதிலாவது முதல்வர் கருத்தாய் இருந்திருக்க வேண்டும், அவ்வாறு செயலாற்றுவதில் சட்ட சரத்துகள் தொடர்பாக, ஒரு நீதிஅரசர் என்ற வைகையில் அவருக்கு என்ன தடங்கள் இருந்துருக்கும் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.

                                                               முதலில் ஒரு முதலமைச்சர் அவருக்குள்ள அதிகார எல்லை அவரின் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்ப்பது இந்த தருணத்தில் பொருத்தமானது என நினைக்கின்றேன். ஒரு ஜனநாயக நாட்டில், சட்டத்தின் வாயிலாக, அதிகார பகுப்பு the separation of powers உறுதிசெய்யப்பட்டிருக்கவேண்டும், நான் இங்கு குறிப்பிடுவது அதிகார பரவலாகம் அல்ல the distribution of  power. இவை இரண்டுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு. 

                                                           மாகான மட்டத்தில் அதிகார பங்கீடு அல்லது மாகானங்கள் சுயேற்சையாக இயங்க கூடிய வகையில் மத்திய அரசின் அதிகார குறைப்பு  the devolution of powers to the regional units of governance என்பது சட்ட ஆக்கம் நடமுறைப்படுத்தல் என்பதில் முக்கிய தூணாக இருக்கின் றது. மத்தியிலும் மாகனமட்டத்திலும் சமனிலை பேணுகின்ற போக்கில் இருப்பதுதான் சிறந்த அமைப்பாக கருத இடமுண்டு. 13 வது திருத்த சட்டத்தின் மூலம் மாகான சபைகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம், அதன் பொருளாதார, சமூக நலனதிட்டங்களை நடைமுறைப்படுத்துவத ற்கு போதுமானவை அல்ல. அதனை நிறைவேற்ற நடைமுறைபடுத்த, நிறைவேற்று அதிகாரத்தின் (ஜானதிபதி) மாகான பிரதியான ஆளுனர் ஒத்துபோககூடியவராக இருக்கவேண்டும், ஆனால் ஆளுனரோ ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலின் படியே செயல்படுவார். 

                                       இதனால் பிரதம நீதியரசராக இருந்த முதலமைச்சார் இதனை மனதார ஏற்றுக்கொண்டுள்ளாரா அல்லது அதன்மீது அதிருப்தி கொண்டு, மந்த கதியில் செயல்படுகின்றாரா? அல்லது மத்திய அரசுக்கு அளுத்தம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உடனடி தேவைகள் பொறுத்து அசமந்தமாக இருக்கின்றாரா என்பது கேள்விக்குறியாக இரு க்கின்றது. ஒரு முதலமைச்சர் தன் போக்கில், அரசுக்கு அப்பால், வெளி நாட்டு அரசுகளுடனோ அல்லது நிறுவணங்களுடனோ தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்று நடைமுறை படுத்த சட்டத் தில் இடமில்லை. அது இருந்தாலே போதும் புலம் பெயர் மக்களின் பலத்துடன் வடக்கு கிழக்கு மாகானங்களை துரித கதியில் அபிவிருத்தி செய்யலாம்.

                                                               இதுதான் முதலமைச்சருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் உள்ள கொள்கை முரண்! அபிவிருத்தி, உட னடித்தேவை நிறைவேற்றம் என்பனவற்றுக்கு மேலாக இனப்பிரச்சினை யில் முக்கிய தீர்வினை நோக்கி, அரசாங்கத்தை முன்னுக்கு தள்ளவேண் டும் என்பதில் முதலமைச்சர் தனது தீவிரதன்மையை வெளிப்படுத்து கின்றார். இதனை ஆதாயமாக்கிக்கொண்டு, அதிருப்தியாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக, முதலமைச்சரின் தலைமையில் களம் இறங்க ஆவலாக இருக்கின்றார்கள். அவ்வாறு அமையுமானல் அதனால் பாதகமான விளைவுகளே ஏற்படும்! 

                                                       இதற்கிடையில் ஈரோஸ் அமைப்பினர், எல்லா போராளி அமைப்புகளும் ஒன்றாக திரளவேண்டிய நிலை வந்துவிட்டது என புதிய சிந்தனையை உருவாக்கியுள்ளார்கள்! இவை எல்லாம் ஒரு வண்டிலுக்கு பல எருதுகளை பூட்டி ஓடுவதுக்கு ஒப்பானது ஆகும். எனவே தற்போது செய்யவேண்டிய வேலை, தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுப் படுத்தவேண்டும், அதற்கு விக்கினேஸ்வரன் ஐயாவை முன் நிறுத்தி, களத்தில் இறங்கவேண்டும், சுமந்திரன் போன்றவர்கள், தமது கடும் போக்கினை மாற்றி, அரசுக்கு அலுத்தம் கொடுக்கும் தீவிரதன்மையை முன்னெடுக்கவேண்டும். 

                                                           ஒருவேளை எதிர்பார வகயில் ஆட்சி கலைக்  கப்பட்டு, அல்லது எதிர்வரும் தேர்தல்களில், மகிந்த அணி ஆட்சிக்கு வந்தால், சர்வதேசம் இறுக்கமான,, தீவிர தன்மையை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கும், அதேபோல இந்தியாவும் எதிர் பார்க்கும். எனவே எல்லோருக்கும், எல்லா பக்கமும் சாத விளைவு களை ஏற்படுத்தக்கூடிய தீவிர தன்மையை கடைப்பிடித்து, எதற்கும் விட்டுகொ டுக்காமல், தற்போதய நல்லாட்சி அரசுக்கும் அலுத்தம் கொடுத்து, விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் முக்கிய இடம் கொடுத்து, பலமான ஒரு அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வியூகம் வகுக்கவேண்டும் என நான் எண்ணுகின்றேன். இதுவே மக்களின் அபிலாசை என்றும் எண்ணுகின்றேன்.. அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment