Wednesday, August 1, 2018

ராஜபக்ஸாக்களின் மீள் வருகையை Re enter The Dragons என்று அழைக்கலாமா?

ராஜபக்ஸாக்களின் மீள் வருகையை  Re enter The  Dragons என்று அழைக்கலாமா? பேசாலைதாஸ் M.A (dip),London, B.A (Hones) in Politics

               இந்தியா உட்பட மேற்குலக நாடுகளின் சூழ்ச்சியின் பின்னால் விடுதலைப் புலிகள், இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். இதற்கு மையப்புள்ளி மகிந்த என்ற வேண்டாத நபர், என்ற ஒரே ஒரு காரனத்தினால், அவரை வீழந்த, நல்லாட்சி என்ற போர்வையில், மைத்திரி என்ற சுதந்திரகட்சியின் பிரதான நபர், இலங்கையின் ஜனா திபதி பதிவியில் அமர்த்தப்பட் டார். தான் இலங்கையின் ஜனா திபதியாக வருவோம் என்ற நம்பிக்கை அவருக்கு, துளி கூட இருந்திரு க்காது, ஆயினும் அவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார். 

                                            விடுதலைபுலிகளின் போராட்டத்திற்கு பின்னால், தமிழர்களின் தார்மீக உரிமை இருப்பதை, மேற்குலமும், இந்தியாவும் நன்கு உணர்ந்திருந்தாலும், விடுதலைப்புலிகளின் விட்டுக்கொடுக்காத, எதற்கும் சோரம் போகாத கொள்கை ரீதியிலான நிலைப்பாடு, அமெரிக்க, மேற்கத்திய மற்றும் இந்திய நலன்களுக்கு இடையூறாக இருக் கும் என்பதை நன்றாக அறிந்த, இந்த சக்திகள், விடுதலை புலிகளை பூகோள அரசியல் அரங்கில் இருந்து அழித்தொழிக்க ஏற்பாடுகள் செய்ய ப்பட்டன, ஆக மொத்தத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒரு சர்வதேச சதி என்றால் அது மிகையாகது:

                                                                        விடுதலைப்புலிகளின் தலைமைதான் இந்தியாவுக்கும், மேற்குலக நாயகர்களுக்கும், பிடிக்காதவர் என்றால் மகிந்தா என்பவரை ஏன் ஆதரித்து, தமது அரசியல் வீயூகத்தை மேற்கு லகமும் (இதில் நோர்வே முக்கிய பங்காற்றியது) இந்தியாவும் வகுத்தது, தென் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன்பிறகு விடுதலை புலிகளை அழித்திருக்கலாமே! என்று நீங்கள் நினைக்கலாம், அதற்கும் ஒரு காரனம் உண்டு. போரை மிக மன உறுதியோடு, முன்னெடு க்க, ரனிலையோ, சஜீத்தையோ அல்லது சந்திரிகா வழிவந்தவர்களி டமோ  போதிய திறமையும் தைரியமும் இல்லை. போரை தைரியமாக எதிர் கொள்ளும் மனோவலிமை (Gudds) மகிந்தாவிடமும், அவரின் சகோ தரன் கோட்டபாஜவிடமும் மட்டுமே இருந்தது. புலிகளின் தலைமையும் இதனை நன்றாக புரிந்து வைத்திருந் தனர். அவரே தமது களப்பங்காளி யாக எதிர்பார்த்தனர். அத்ற்கேற்றாற் போல, தமிழர்கள் தேர்தலை புறக்கனிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர், அதுவும் நடந்தது, தனது பகையாளி, பங்காளி மகிந்த ஆட்சிக்கு வந்தார்,  புலிகள், எதிர்பார்த் தபடி போரையும் ஆரம்பித்தார்.

                                                                தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பும், இதர முஸ்லீம் மக்கள் காங்கிரஸ் கட்சியும் தங்களது தலைமேல் கொண்டா டும், ரனிலை ஏன் புலிகள் அப்போது தோற்கடித்தார்கள் என்பதற்கு, கருணாவை முன் நிறுத்தி விடுதலை புலிகளுக்குள் பிளவை ஏற்படுத் தியது, ரனிலின் நரித்தந்திரம் என்பதை புலிகள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அண்டிக்கெடுக்கும் நன்பனைவிட, எதிர்த்து நிற்கும் எதிரி மேலானவன் என்பது புலியின் கோட்பாடு! தந்திரோபாயங்களை, வீழ்த்தும் வியூகங்களை வகுப்பதற்கு மேலாக, பழிக்குப்பழி வாங்கும் புலிகளின் அம்சம், அவர்களுக்கு பல இடையூறுகளை வகுத்தது, என் பதை நாம் பல்வேறு சந்தர்பங்களில் கண்டுள்ளோம். உதாரணத்துக்கு ரஜீவ்காந்தி கொலை, அனுராதபு சிங்களமக்கள் மீதான, தளபதி விக்கடரின் தாக்குதல், அவசரப்பட்டு முஸ்லீம் மக்களை வட கிழக்கில் இருந்து வெளியேற்றியமை இவைகளை எடுத்துக்கொள்ளலாம்.        

                                                               விடுதலைப்புலிகள் தான் இந்தியாவுக்கும், மேற்குலகத்துக்கும் வேண்டப்படாதவர்கள் என்றால், மகிந்த தரப்பினர் அவர்களுக்கு வேண்டப்பட்டவர் என்று அர்த்தமாகிவிட முடியுமா? விடை இல்லை என்பதே, மகிந்த ஒரு சீனச்சார்பு விசுவாசி, இதனை இந்தியா வும், மேற்குலக நாடுகளும் நன்றாக அறிந்துவைத்திருந்தனர், ஆனால் அவர்களுக்கு பேரச்சமாக இருந்தவர்கள் விடுதலைப்புலிகளே! அவர்க ளது அரசியல், பொருளாதார கொள்கைகள், சர்வதேச வலைப்பின்னல் கள், புலம் பெயர் தமிழர்களின் பக்கபலம், இந்திய சர்வேதேச தமிழர்க ளின் ஆதரவு, அதனைவிட விடுதலைபுலிகளின், படைபலம், ஆளணிகள் எல்லாமே, இந்தியாவுக்கும், மேற்குலகத்துக்கும் குறிப்பாக அமெரிக்கா வுக்கும் அச்சத்தை கொடுத்தது என்பது வியப்பில்லை. விட்டால் விடுத லைபுலிகள் இந்தியா மற்றும் தெற்காசிய பிராத்தியத்தின் போக்கி னையை மாற்றி அமைத்து, தமது பன்னாட்டு பொருளாதர ஒழுங்கமை ப்புக்கு விடுதலை புலிகள் பெரும் ஆபத்தாக மாறிவிடுவார்கள் என்று அஞ்சியே மகிந்தவை அப்போது அவசரம் அவசரமாக ஆட்சியேற்றி, தமது முள்ளிவாய்க்கால் கனவை நிறைவேஏற்றினார்கள். மகிந்தாவை பிறகு கவனித்துக்கொள்ளலாம், புலிகளை ஒரு கைபார்ப்போம் என்ற அமெரிக்காவின் திட்டமே அப்போது செயல்படுத்தப்பட்டது.

                                                    முதலில் விடுதலை புலிகளை அழித்துவிடுங்கள், தமிழர்கள் விரும்பிய தீர்வை கொடுப்பேன் என்ற வாக்குறுதியின் அடிப் படையில் மேற்குலகம் பின் நிற்க, இந்தியா போரை வழி நடத்தி விடுத லைப்புலிகளை இந்தியா அழித்தது! தமிழர்களை திருப்திப்படுத்தினால் போதும், அவர்களது அபிலாசைகள் தீர்ந்துவிடும் என்று கணக்குப்போ ட்ட மகிந்த, எடுத்த ஆயுதமே, அபிவிருத்தி அரசியல் என்ற பொறிமுறை! வடக்கில் வசந்தம் என்ற போர்வையில் மகிந்த அரசு, தனது நகர்வினை தமிழ் மக்கள் சார்பில் நகர்த்திய அதேவேளையில், றூகுணுச்சிங்கம் என்ற மாஜையை தென் இலங்கயில் உருவாக்கி, கண்டிய சிங்கள மக்களைவிட, தென் இலங்கை மக்கள் மனதில் கொலுவிருக்க, காலி துறைமுகம், மத்தல் விமானத்தளம் இப்படியான பல அபிவிருத்தி அரசியலை சிங்கள மக்களிடம் மகிந்த புகுத்தினார்! 

                                                              இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு, வடக்கில் இந்தியாவின் துணையையும், தெற்கில் சீனாவின் துனையுடனும் ஏககா லத்தில் காய்களை மகிந்த நகர்த்திக்கொண்டிருந்தார். இலங்கை மக்க ளின் பொருளாதார அபிவிருத்தி, சுபீட்சம் இவைகளை விட, சீன இலங் கையில் உள் நுழைகின்றதே என்கின்ற கவலைதான் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பெரிய பிரச்சனையாக தோன்றியது. எனவே மகிந்தாவையும் அவரது பரிவார ங்களையும் அரசியலில் இருந்து அப் புறப்படுத்த அமெரிக்கா, இந்தியா வகுத்த திட்டமே நல்லாட்ட்சி என்ற தாரகமந்திரம், அதற்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டவரே மைத்திரி! அதன் வழிகாடிகள் ரனிலும் சந்திரிகா அம்மையாரும் ஆகும்!  

                                         என்னதான் ஆசீர்வாதங்களையும், சலுகைகளையும் மைத்திரிக்கு மேற்குலகமும், இந்தியாவும் நல்கினாலும், சுதந்திர கட்சி என்ற மூச்சும், உள்விசுவாசமும் மைத்திரியிடம் இல்லாமல், இல்லை. சுதந்திரகட்சி நலிவடைந்து சின்னாபின்னமாவதில் மைத்திரிக்கு, உடன்பாடு இல்லை. அதேவேளை சுதந்திர கட்டசியை பலவீனப்படுத்திக் கொண்டு, தமது ஐக்கியதேசிய கட்சியை பலப்ப்டுத்துவதில் ரனில் முயற்ச்சி செய்யும் அதேவேளை, சஜீத் தலைமையை விரும்பும் ஐக்கிய தேசிய கட்சி அடக்கி வாசிக்கின்றது. மகிந்த ராஜபக்சாவை அரசுகட் டிலில் இருந்துதான் இறக்கமுடியுமே தவிர, போரை வெற்றி கொண்ட புகழ் வீரன் , மன்னவன் என்ற விம்பத்தை சிங்கள மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது என்பதை கடந்த உள்ளூராட்சி தேர்தல் உறுதி ப்படுத்தியுள்ளது.  இதனை மறைமுகமாக ஆதரிக்கும் மைத்திரி, மகிந்த அரசுக்கு எதிரான சர்வதேச இராணுவ விசாரனை மற்றும் ஊழல் வழக்குகள் இவைகளிடம் இருந்து மகிந்தாவையும் அவர்து சகோதரர் கோட்டபாஜ ராசபக்சாவையும் காப்ப்றேறி வ்ருகின்றார் என்ற குற்ற சாட்டு மைத்திரிமேல் வைக்கப்ப்டுகின்றது. ம‌கிந்தாவின் மீள்வருகை யை மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ இல்லையோ நிட்சயம் மைத்திரி எதிர்பார்க்கின்ரார் என்பதே உண்மை!

                                                                     என்னதான் சொன்னாலும் அடுத்து வரும் காலங்களில், ராஜபக்சா குடும்பம் ஆட்சிக்கு வரும், தமிழ் ஈழம் மலரு மோ மலராதோ கட்டாயம் தாமரை மொட்டு மலரும் என்பது எல்லோ ரினதும் கனிப்பு! தாமரை மொட்டு மலரும் போது, அதன் மலர்ச்சியை எப்படி தமிழர்களின் மலர்ச்சியாக மாற்றியமைக்க போகின்றோம் என்பதில் தான் தமிழர்களின் வெற்றி அமைந்துள்ளது. ரனில் தலைமை யிலான நல்லாட்ச்சி எதனையும் செய்துவிடப்போவதில்லை, அதனை சிங்கள இனவாத பூதம் அனுமதிக்கபோவதுமில்லை. அபிவிருத்தி அரசி யல் என்ற போர்வையில் தமிழர்களின் யதார்த்த பூர்வமான பொருளா தார பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்படும் போது, அதன்வழியாக சிங்கள மக்களின் சில பொருளாதர நலன்கள் பூர்த்திசெய்யப்படும் , இதனை சாதகமாக பயன்படுத்தி, இனங்களுக்கிடையிலான சாமாதான சகவாழ்வு நோக்கத்திற்கான நல்ல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  

                                                                அந்த தீர்வினை நிரத்தரமாக தக்கவைக்க, அரசியல் சாசன ரீதியாகவோ அல்லது இனப்பிரச்சனை தீர்வாகவோ தொடர்ந்தும் நடைமுறை படுத்தக்கூடிய  வழிமுறைகள் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து தமது பயணத்தை மேற்கொள்ளவேண்டிய, ஒரு வழிமுறையை தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும். ராஜபக்கசாக்களின் வருகை உர்ஜிதமாகின்ற போது, அதனை தடை செய்ய இந்தியா மீண் டும் இலங்கை தமிழர் சார்பில் தனது நிலையை இந்தியா மறுபரிசீ லனை செய்ய தொடங்கும். சீனச்சார்பு ஒன்று மட்டுமே தமிழர்களின் விருப்பினை வென்றெடுக்க கூடிய ஒரே ஒரு வழி என்பது எனது நிலை ப்பாடு. மகிந்த மீண்டும் வரும் போது, சர்வதேசம் யுத்த குற்றத்தை கையில் எடுக்கும், அது தமிழருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். இந்தியாவும் தமிழர்கள் பால் தந்து அக்கறையை தீவிரப்படுத்தும். எனவே ராஜபக்சாக்களின் வருகை அதாவது மீள்வருகை, நல்ல பயன்களை கொண்டுவரும் ஒரு ட்ரகனாக மாறும் ! அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment