Monday, June 11, 2018

தமிழ் மக்கள் மனதை வெல்லும் இராணுவம்! எங்கே போகும் இந்த அலை?

எந்த இராணுவத்தை, தமிழ் இன அழிப்பு இராணுவம் என்று, தமிழ் தேசியம் சர்வதேச அரங்கினில் எடுத்து கூறியதோ, அதே இராணுவ அதிகாரியின் காலில் விழுந்து,  தமிழ் சனங்கள் அழுது புரண்டார்கள். அந்த இராணுவ அதிகாரிக்கு, மலை போல மாலை அணிவித்து, தமது தோள்களில் தூக்கி வீதி வலம் வந்திருக்கின்றார்கள்! பூக்கள்ளால் எறிந்து இதய நன்றியை தெரிவித்துள்ளார்கள். இது பற்றி மனோகனேசன் இவ்வாறு விபரிக்கின்றார்.


சற்று முன் கர்ணல் பந்து இரத்னப்ரியவுடன் பேசினேன். "ஐந்து வருடங்களாக, ஒரு கணமும் ஆயுதத்தை கையில் எடுக்காமல் பணி செய்தேன். மக்கள் மனங்களை வெல்ல முடிந்தது, சார். இனியும் பணி செய்ய காத்திருக்கேன், சார்" என்றார். இது பற்றி எனக்கு தெரியும் என்றேன். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன், கொழும்பில் என் அமைச்சுக்கு படையெடுத்து வந்து என்னை சந்தித்த, பெருந்தொகை முன்னாள் போராளிகள் குழுவினர், இவரது இடமாற்றத்தை ரத்து செய்து தருமாறு மன்றாடி கண்ணீர் விட்டு அழுது கேட்டுக்கொண்டார்கள்.

மூன்று வருடங்கள் ராணுவ சேவையை முடித்தவர்கள் இடமாற்றம் பெற வேண்டும் என்ற பின்னணியில், ஐந்து வருடங்கள் பணியில் இருந்துவிட்ட இவரது இடமாற்றத்தை, மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், சில மாதங்களுக்கு மாத்திரமே தாமதிக்க என்னால் முடிந்தது. இப்போது இரத்னப்ரிய இடமாற்றம் பெற்று தெற்கின் கம்பஹா மாவட்ட அம்பேபுஸவுக்கு போகிறார்.

நிற்க, இது இப்படியே இருக்க, பூதாகரமாக எழும் கேள்வி, இது எப்படி?? என்ன காரணம்? மேற்கண்ட மற்றும் கீழ்வரும் கேள்விகள் பலவற்றுக்கு என்னிடம் பதில்கள் அல்லது கருத்துகள் உள்ளன. அவைபற்றி இங்கு இப்போது சொல்ல வரவில்லை. சொன்னால் வடக்கிலும், தெற்கிலும் இருக்கும் கோமாளிகள் சிலருக்கு கோபம் வரும். இதை எதிர்மறையாக பார்க்கலாமா? நேர்மறையாக பார்க்கலாமா? இத்தகையை உபசரிப்பு, “வெளிப்படையான” ஆதரவு, இன்று வடக்கில் அரசியல்வாதிகள் எவருக்கும் இருக்கிறதா? தெரியவில்லை.

அது ஒருபுறம் இருக்க, இன்று “சிங்கள இராணுவம்”, “மங்கல இராணுவம்” (மங்கல, மங்கள இரண்டும் ஒரே பொருள் சொற்கள்) ஆகிறதா? இது நல்லதா? கெட்டதா? மக்களுடன் கலந்து வாழ்ந்து மனங்களை வெல்ல, வடக்கின் தமிழ் தலைமைகள் தவறி வருகின்றனவா? இது கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்ட போக்கா (tendency)? அல்லது இப்போக்கு யாழ் குடாவையும் ஆட்கொண்டு வருகிறதா?
                                                                                                 மேற்கண்டவாறு மனோகனேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனக்குள்ளும் நிறைய ஆதங்கம் உண்டு. கேள்விகள் உண்டு. ஒரு இராணுவ அதிகாரி, தமிழ் மக்களின் மனங்களை வென்றுள்ளார் என்றால் அதற்கான பின்னணிகளை நாம் ஆராயவேண்டும். 


இராணுவ அதிகாரிக்காக புலம்பி அழுத மக்கள் வேறு யாருமல்ல, வன்னிப்போரிலே பாதிக்கப்பட்ட மக்களும், புணர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி வீரர்களின் குடும்பங்களும் உறவுகளும். குறிப்பாக புலி வீரர்களும், அவரின் குடும்பமும் எமது தமிழ் மக்களினால் ஒதுக்கப்பட்டார்கள், அவர்களுக்கு சமூகத்தில் ஒட்டி உறவாட அனுமதி மறுக்கப்பட்டது. புலனாய்வு பயம் ஒருபுறம் இருக்கலாம். அவர்களுக்கு வேலை, கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. விதைவைகளுக்கு மறு வாழ்வு அளிக்க, நம் சமூகம் பின்னுக்கு நின்றது. புலி வீரர்களாய் இருந்த யுவதிகளை, வாலிபர்களை திருமணம் செய்து அவர்களுக்கு வாழ்வளிக்கும் சமூக பொறுப்புகளில் இருந்து நாம் ஒதுங்கி நின்றோம். எத்தனையோ புலி வீரர்களின் இளம் மனைவியர். ஊணம்முற்ற தனது கணவனையும் பிள்ளைகளையும் பராமரிக்க பரத்தமையில்  ஈடுபட்டு பாலியல் தொழிலாளி ஆனார்கள். இதிலும் கொடுமை என்னவென்றால் அவர்கள் தமிழ் மக்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டர்கள். வெளிநாடுகளில் இருந்து தாயகம் செல்லும் புலம்பெயர் உறவுகளும் கருணை என்ற பெயரில், பாலியல் சுரண்டலை மேற்கொண்டார்கள்: இவர்களுக்கு உதவி செய்ய யாருமே முன்வரவில்லை. புலம் பெயர் உறவுகளிடம் பிச்சை கேட்டு கதறி அழுத எத்தனையோ முக நூல் பதிவுகளை ஆதாரமாக எடுத்து காட்டலாம்? நமக்காக நமது விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து, விடுதலைப்புலிகள் பக்கம் நின்ற மக்கள் தான், இப்போது இராணுவ அதிகாரிக்காக கதறி அழுதார்கள்.
                                             
                                 வேலை வாய்ப்பும், அரச உதவிகளும் பெற்றுக்கொடுத்தால், மக்கள் கறி அழுது, மாலை போட்டு ஆராத்தி எடுப்பார்கள் என்று உங்களில் ஒரு சிலர் நியாயம் கற்பிக்க முன்வரலாம். அவர்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன். புலம் பெயர் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு டாலர் வீதம் ஒவ்வொரு மாதம் கொடுத்தாலே தமிழ் மக்களின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தலாம். புலிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்த புலம் பெயர் உறவுகள், களத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய‌, கரங்கள் நீட்டுவதற்கு தயாராக்வே இருந்தனர். அதற்கான ஒரு கட்டமைப்பை செய்ய  உள்ளூர் தமிழ் தேசிய தலைமைகள் தவறி இழைத்தது. புலிகள் அதிகாரத்தில் இருந்த போது, வெளி, உள் பொருளாதார கட்டமைப்பு இருந்தது. ஆனால்  புலிகளுக்கு பின்னர் அரசியல் தலைமை வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய தவறு இழைத்தது என்றே சொல்லமுடியும்.

   தமிழ் மக்களிடம், தமிழரசு கட்சியை வளர்ப்பதா? காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதா? டெலோ இயக்கமா? புளட் இயக்கமா? உனக்கு எதத்னை கதிரை? இப்படியாக தாம் தாம் சார்ந்த கட்சிகளையும் இயக்கங்களையும் வளர்த்து அதிலே இலாபம் தேடுவதில் மட்டும் தமிழ் அரசியல் ஆர்வம் காட்டின. போதாக்குறைக்கு நல்ல ஆட்சி அரசாங்கத்துடன் சகிப்பு தன்மையுடன் tolarence approach  கூடிய அரசியல் நடவடிக்கையாக, ஒரு இராஜ தந்திர நகர்வாக, சர்வதேச அழுத்தத்தை, சர்வதேச விசாரணைக்கான அழுத்தத்தை நீர்த்துப்போகும் அளவுக்கு முட்டாள் தனமான காரியத்தை செய்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன ஆளுக்கு இரண்டு கோடி வாங்கி விட்டார்களே, ஜானாதிபதி சட்டவாளர், எதிர்க்கட்சி ஆசனம், பிரதி அவைத்தலைவர் இப்படியான பதவிகளுக்காகவே குறிவைத்தது போல நடந்து வெற்றியும் பெற்றனர்.

தமிழ் மக்களிடம், தமிழரசு கட்சியை வளர்ப்பதா? காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதா? டெலோ இயக்கமா? புளட் இயக்கமா? உனக்கு எதனை கதிரை? இப்படியாக தாம் தாம் சார்ந்த கட்சிகளையும் இயக்கங்களையும் வளர்த்து அதிலே இலாபம் தேடுவதில் மட்டும் தமிழ் அரசியல் ஆர்வம் காட்டின. போதாக்குறைக்கு நல்ல ஆட்சி அரசாங்கத்துடன் சகிப்பு தன்மையுடன் tolarence approach  கூடிய அரசியல் நடவடிக்கையாக, ஒரு இராஜ தந்திர நகர்வாக, சர்வதேச அழுத்தத்தை, சர்வதேச விசாரணைக்கான அழுத்தத்தை நீர்த்துப்போகும் அளவுக்கு முட்டாள் தனமான காரியத்தை செய்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன ஆளுக்கு இரண்டு கோடி வாங்கி விட்டார்களே, ஜானாதிபதி சட்டவாளர், எதிர்க்கட்சி ஆசனம், பிரதி அவைத்தலைவர் இப்படியான பதவிகளுக்காகவே குறிவைத்தது போல நடந்து வெற்றியும் பெற்றனர். இப்படியே சென்றால் தமிழ் மக்களின் இதயங்களை இராணுவமும். முஸ்லீம் அரசியல் தலைமைகளும் கைப்பற்றிக்கொள்ளும். தமிழ் தேசியம் கேள்விக்குறியாக்கப்படும்.. அன்புடன் பேசாலைதாஸ்   pesalaithas@hotmail.com  0047 92278528

No comments:

Post a Comment