Wednesday, January 31, 2018

இந்த விடயத்தில் ஓஷோவை நான் எதிர்க்கின்றேன்! பேசாலைதாஸ்

இந்த விடயத்தில் ஓஷோவை நான் எதிர்க்கின்றேன்!  பேசாலைதாஸ்

இயல்புக்கு மாறான, இயற்கைக்கு மாறான ஓரினச்சேர்க்கை பற்றிய ஓஷோ இப்படி கூறுகின்றார்! "ஓரின சேர்க்கையின் இறுதி வெளிப்பாடு எய்ட்ஸ். ஓரின சேர்க்கை ஒரு மத சம்பந்தப்பட்ட வியாதி. அது பெண்கள் அனுமதிக்கப்படாத மடாலயங்களில் பிறந்தது." என்று, தவறான கண்ணோட்டத்தில் ஓஷோ முன்வைக்கும் கருத்தை முற்றுமுழுவதுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. பிரமச்சாரியம், துறவு என்ற‌ நிலையில், பாலி யல் உணர்வுகளைமதங்கள் மறுப்பது உண்மைதான், அதனால் சில பிரமச்சாரிகள், துறவு நிலையினர் ஓரினச்ச்சேர்க்கையாளாராக இருப்ப தற்கு வாய்ப்புகள் உள்ளன. இது ஆண், பெண் இரு பால் துறவிகளுக்கும் பொருந்தும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல, ஆனாலும் தனியே மதம் மட்டும் இதற்கு காரனம் என்று வலியுறுத்துவது தவறு. 

                                                             ஓரினச்சேர்க்கைக்கு அடிப்படைக்காரனம், உடலில் எற்படுகின்ற ஹார்மோன் சிக்கல்தான் உண்மையான, ஓரின ச்சேர்க்கைக்கு காரனமா கின்றது. ஒரு ஆணுக்கு, பெண்களுக்கான ஹார்மோன் உற்பத்தியாகிவிட்டால் அவர்கள் இரண்டும் கெட்டான், நிலைக்கு உள்ளாகின்றனர். அவர்கள் இயல்பாக பெண்களை நாடவே ண்டிய இடத்தில், ஆண்களை நாடும், திருநங்கைகளாக மாறிவிடுகின்ற னர். சமூகத்தில் திருநங்கைகளுக்குகான அங்கீகாரம் இல்லாதபடியால், அவர்கள் தங்களை திருநங்கைகளாக வெளிப்படுத்த முடியாது, ஆண் என்ற போர்வைக்குள் மறைந்து வாழ்கின்றனர். உண்மையில் இவர்கள் நிலை பரிதாபமானது. இவர்களின் உணர்வுகளை நாம் மதிப்பதில்லை! இந்திய கலாச்சாரத்தில் இவர்கள் ஹரியின் புத்திரர்களாக கருதப்ப ட்டனர், அர்த்தநாரிஸ்வரர் என்று போற்றப்பட்டனர். 

                                                                                       இன்று நிலைமை அப்படி இல்லை. மேலைநாடுகளில், இவர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகின்றன, எனவே தான் ஒரினச்சேர்க்கையை அங்கீகரிக்கின்றன, அவர்களுடைய தனிமனித உரிமையாக, ஓரினச்சேர்க்கை அடையாளப்படுத்தப்படுகி ன்றது.  பிரச்சனை என்னவென்றால், இயற்கையான சேர்கையில், திரு ப்தி காணாத சிலர், வெளிப்பகட்டுக்கும், சமூக அந்தஸ்த்துக்காகவும், துறவு, பிரமச்சாரியம் என்பதின் உட்பொருள் விளங்காமல், துறவு நிலைக்கு தங்களை ஒப்புவித்து, பின்னர் தன் உடலின் உணர்ச்சிகளோடு சதா போராட்டம் நடத்தும், துறவிகள், பெண்களை எளிதில் அடைய முடி யாத நிலை, அல்லது தமது பாலியல் சேர்க்கை, சமூகத்துக்கு தெரிந்துவி டுமே! என்ற அச்ச உணர்வு காரனமாக, எளிதில் ஓரினசேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஹார்மோன்கள் செய்யும் குழப்பம் இல்லாத ஒரு இயல்பான மனிதன், காம்வேட்கையினால், ஓரினசேர்க்கையில் ஈடுப ட்டால் அவன் இயற்கைக்கு மாறாக, இயல்புகளுக்கு மாறக இயங்கு கின்றான். 
                                                                                        ஆண் மற்றொரு ஆணுடன் கலவியில் ஈடுபடுகிறான். மனிதன் மிருகங்களுடன் கலவியில் ஈடுபடுகிறான். நீ மிருகங்களுடன் கலவியில் ஈடுபடுகிறாய் எனும் விஷயத்தை நீ கண்டிப்பாக மறைக்க முயற்சி செய்வாய். நீ உன்னையே தாழ்த்தி கொள்கிறாய். நீ உன்னை மிருகங்களின் தரத்திற்கு குறைத்து கொள்கிறாய்.  ஓரினசேர்கையின் பிடியில் இருப்பவர், தானாகவே சமூகத்தின் வட்டத்தில் இருந்து, ஒதுங்கி தனித்தீவாக வாழமுற்படு கின்றனர். நீ குற்ற உணர்ச்சியை உணர்வதே அதன் காரணம்.

                         இயல்புக்கு மாறாக நடப்பது உனக்கு குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீ அருவெறுப்பாக உணர்கிறாய். அது உன்னை நீ ஏற்றுகொள்ள முடியாமல் செய்கிறது. நீ இயல்புக்கு மாறாக நடப்பவ னாக இருந்தால் நீ சுயமரியாதை உள்ளவனாக இருக்கமுடியாது. ஒரு மனிதனாக இருப்பதில் உள்ள பெருமைகளை எல்லாம் நீ இழந்துவிடு கிறாய்.
                                    
                                                               ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறானது, இயற்கைக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளும் பாவகாரியமே அதற்கான தண்டனையை இயற்கையே வழங்கும் அதுவே எட்ஸ்! துறவின் மேன்மை, அதன் அவசியம் புரியாமல்,  ஓஷோ பிணாத்துவதின் காரனம் புரியவில்லை! துறவு நிலை, பாலியல் உணர்வுகளை என்றுமே புறக்கனித்ததில்லை, காம இன்பம், பாலியல் இன்பம் இவைகளை கண்டுணர்ந்து, அதைவிட வீடு பேறுதல், என்ற பேரின்ப இறை அனுப வத்தை கண்டுணர்ந்தவர்கள், அல்லது அதைக்கண்டுணர்ந்து ஆனந்த பரசவம் அடைய,  முயற்ச்சி செய்பவர்கள்,  சிற்றின்ப பாலியல் உணர்வு களுக்கு தாமே மறுப்பு கொடுத்து, துறவு நில பூணுகின்றனர். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், துறவு மடங்கள் துறவிகளை, குருக்களை தயார் செய்வது அல்லது உற்பத்தி செய்யும் மடத்தனமான காரிய ங்களை, மதங்கள் திணிப்பதினாலேயே, போலி துறவிகளும், பிக்குக ளும், போலிச்சாமியார்களும் உருவாகின்றனர். இவர்களே எளிதில் ஒரினசேர்க்கையில் அகப்படுகின்றனர். புத்த மடங்கள், ஆச்சிரமங்கள், கிறிஸ்தவ குருமடங்கள் என்பன் சின்ன வயதினரை சேர்த்து, அவர்களை துறவு நிலைக்கு தயார் செய்கின்றார்கள். பெரும்பாலானவர்கள், பெரு மைக்காகவும், சமூக அந்தஸ்த்துக்காகவும் தமது பிள்ளைகளை துறவு நிலைக்கு அனுப்புகின்றனர். அவர்களும் பாலியல் இன்பம் என்றால் என்னவென்ற அனுபவ அறிவு இல்லாமல், மாடங்களுக்குள் புகுந்து, அவஸ்தைப்படுகின்றனர். காரனம் மடத்தை விட்டு வெளியே வந்தால், புறக்கனிக்கப்படுவோம் என்ற அச்சம் காரனமாக, அப்படியே இருந்து விடுகின்றனர்.

                                                 ஒரினச்சேர்க்கையில், அல்லது பெண்களோடு தொடர்பு கொண்ட துறவிகள், செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். அவர்கள் தைரியமாக தமது இயாலாமையை ஒத்துக்கொண்டு, துறவு நிலையில் இருந்து வெளிவருதல்! எவன் ஒருவன் தன் இயாலமையை, தன் தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றானோ அவனது தவறுகள், இயலாமை புனிதாமிகின்றது. சமூகமும் இப்படிப்பட்ட நேர்மையாளர்களை அங்கீகரித்து அவர்களை போற்றவேண்டும்! இதனை விடுத்து போலித்தனமாக துறவு வாழ்க்கை வாழமுற்பட்டால்,,  ஒரு நாள் நிட்சயம் தோற்றுப்போவாய்,, உன்னுடைய பொற்றோர், உன்னுடைய நண்பர்கள்......அனைவருமே உன்னுடைய எதிரியாகிவி டுவார்கள். நீ உனது அந்தஸ்த்தை இழந்து விடுவாய். நீ உனது குடும்ப த்தை இழந்து விடுவாய். நீ உனது சுயமரியாதையை இழந்துவிடுவாய். நீ வெறுமனே ஒரு பழிக்கப்பட்ட மனிதனாக இருப்பாய்.நாம் மிகவும் போலித்தனமான உலகத்தை உருவாக்கிவிட்டோமே என்று வருந்துவாய்! அதனோடு கணக்கை முடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணர்வாய்! மதங்களின் புனிதத்தன்மையை, இறைத்தன்மையை போலியாக்கும் முயற்ச்சியை கைவிட்டு, உண்மையாக இரு நேர்மையாக இரு! இது அனைத்து துறவிகளுக்கும், குருக்களுக்கும் பொருந்தும் ...    
                                                                      நன்றி