Saturday, February 26, 2022

 உருளும் உக்ரைன் 

போர் வந்து விடும்.... வந்து விடும்.... என்று நேட்டோ நாடுகள் தம்மால் முடிந்தளவு ஆயுதங்களை உக்ரேனுக்கு விற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்....! அந்த மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்துவதற்கான பொருளாதார உதவிகளை விட இந்த கருவிகளை விற்பனை செய்யும் வியாபாரம் கோலோச்சும் இன்றைய பதற்றமான கால கட்டத்தில் போர் வேண்டவே வேண்டாம் பேச்சுவார்தைகள் மூலம் சமூக நிலை ஏற்பட வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது பகுதியை தொடருகின்றேன்....

அமெரிக்காவும் ஏனைய அதன் முதலாளித்துவ சிந்தனைக் கூட்டாளிகளும் இணைந்து 1949 ஆம் ஆண்டில், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ)(Nato) என்பது யு.எஸ்., கனடா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளால் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு சக்தியாக உருவாக்கப்பட்டது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக சோவியத் யூனியன் சோசலிச நாடுகளை இணைத்து வார்சோ(Warsaw) என்ற அமைப்பை உருவாக்கியது. உண்மையில் இதற்கான முன்னெடுப்பை சோவியத் யூனியன் எடுக்கவில்லை. ஏனைய சோசலிச நாடுகள் எடுத்த முன்னெடுப்பில் சோவியத் யூனியன் இதில் இணைந்து கொண்டதே வரலாறு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியன் அதன் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தனது நட்பு கொள்கை வட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஜேர்மனியின் கிழக்கு பகுதி சோவியத் ஒன்றியத்தின் சோசலிச கொள்கையின் அடிப்படையிலும் மேற்கு ஜேர்மன் அமெரிக்காவின் முதலாளித்துவ முகாமிற்குள்ளும் தம்மை இணைத்துக் கொண்டன. 

1950 களில், மேற்கு ஜேர்மனி நேட்டோவில் இணைந்து கொண்டது. மேற்கு ஜேர்மனியை எல்லையாகக் கொண்ட நாடுகள் மீண்டும் ஒரு இராணுவ சக்தியாக சோசலிச நாடுகளுக்கு எதிராக செயற்படலாம் என்ற அச்சம் எற்பட்டது. 

இந்த அச்சுறுத்தலால் அன்று சோசலிச நாடுகளாக இருந்த செக்கோஸ்லோவாக்கியா போலந்து மற்றும் கிழக்கு ஜேர்மனி போன்ற நாடுகள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்க முயன்றன. இறுதியில், ஏழு நாடுகள் வார்சா(wasaw) ஒப்பந்தத்தை உருவாக்கி ஒன்றாக செயற்படத் தொடங்கின. 1955 இல் வார்சா(Warsaw) ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வார்சா நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் சோவியத் யூனியன், அல்பேனியா, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா மற்றும் கிழக்கு ஜெர்மனி ஆகியவை வார்சா ஒப்பந்த அமைப்பில்

(Warsaw Treaty Organization) கையெழுத்திட்டு இணைந்து கொண்டன.

வார்சா ஒப்பந்தத்தின் (Warsaw Pact) உறுப்பினர்கள் தங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் ஒருவரையொருவர் பாதுகாப்பதாக உறுதியளித்தாலும், அதன் உறுப்பினர்களின் உள் விவகாரங்களில் தலையிடாததை வலியுறுத்தி, கூட்டு முடிவெடுப்பதில் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், சோவியத் யூனியன் செல்வாக்கு அதிகம் இவ் அமைப்பிற்குள் இருந்தது தவிர்க முடியாத வரலாற்றுப் போக்காகும். 

எவ்வாறு நேட்டோ நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு போக்கு அதிகம் உள்ளதோ அதனைப் போன்றதாகவே இங்கும் இருந்தது.

வார்சா உடன்பாடு 36 ஆண்டுகள் நீடித்தது. அந்த சமயத்தில், நேட்டோ அமைப்புக்கும் வார்சா ஒப்பந்த அமைப்பிற்கும் நேரடியாக மோதல் இருக்கவில்லை. ஆனால் பனிப்போர் அவற்றிற்கு இடையே தொடர்ந்து கொண்டே இருந்தன.

குறிப்பாக சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்த்தில் இந்தப் பனிப் போர் இருந்தது. அதாவது போரில் அமெரிக்காவும்... அதன் தலமையிலான நேட்டோ(Nato)வும் சோவியத் யூனியனும் அதன் தலமையிலான வார்சா(Warsaw) நாடுகளும் நேரடியாக (மோதலில்) ஈடுபடாமல் தமது ஆதரவு சக்திகளுக்கு போர்களத்தில் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்கிவித்தனர். 

சண்டையற்ற இராணுவ சம பலத்தை பேணுதல் இதனைத்தான் பனிப் போர் என்று அழைத்துக் கொண்டனர் அரசியல் ஆய்வாளர்கள்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு 1991 முன்பு இல் - பிராகாவில் அந்த அமைப்பு(Warsaw) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது.

கிழக்குத் (ஐரோப்பிய, ஆசிய)தொகுதியில் அரசியல் கிளற்சிகள் போலந்தில் 1989 இல் தொடங்கியது. இது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிற புரட்சிகளைத் தூண்டியது, கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் மீண்டும் இணைத்த பெர்லின் சுவர் அழிக்கப்பட்டது. (அதிகாரப்பூர்வ மீள் இணைப்பு சோசலிச கிழக்கு ஜேர்மனி முதலாளித்துவ மேற்கு ஜேர்மனி இடையே அக்டோபர் 3, 1990 இல் ஏற்பட்டு ஜேர்மன் என்ற ஒரே நாடு உருவானது). 

இதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியனின் மாநிலங்களில் ஒன்றியமாக செயற்படுதல் என்பதற்கு எதிராக தனியாக பிரிந்து செல்லல் என்ற போக்கு வலுவடைந்து சோவியத் யூனியன் ஒரு நாடாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக பலவீனமடைந்தது.

இதற்கான எல்லா வகையான கொல்லை வழி குழிப்பறிப்புகளையும் நேட்டோ நாடுகள் செய்தன. சோவியத்தில் நாடுகள் சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் மாறாக அமெரிக்கா போன்ற நாடுகள் தமது நாட்டின் மாநிலங்கள் பிரிந்து செல்லாமல் கவனித்துக் கொண்டன. 

கூடவே தனித்தனியாக இருந்த இரு வேறு வேறு கருத்தியலுடன் ஆட்சி நடைபெற்ற கிழக்கு மேற்கு ஜேர்மனிகளை இணைக்கவும் செய்தன என்ற அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

சோவியத் ஒன்றியம் டிசம்பர் 31, 1991 சுய விருப்பத்தின் அடிப்படையில..? தனித் தனியாக பிரிந்து 15 நாடுகள் உருவானது. அவை சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த 15 நாடுகள்: ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தான்.

இதே போன்ற செயற்பாடு செக்கோசிலாவிக்யாவிலும் தொடர்ந்த காலங்களில் நடைபெற்றது.

சோவியத் ஒன்றியத்தின் பல நாடுகள் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனி நாடுகளாக உருவான பின்பு பல பிரச்சினைகளை எதிர்கொண்டன. 

தமது நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிறுவுவதற்கு அப்பால், தமது நாடுகளை சந்தைப் பொருளாதாரங்களுக்கு மாறுவதற்கும், தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மக்கள் தொகை வீழ்ச்சியைச் சரிசெய்வதற்கும், அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் மதங்களை நிறுவுவதற்கு அல்லது மீண்டும் நிறுவுவதற்கும் போராடின. 

சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்றதன் விளைவாக பல சோவியத் நாடுகள் இன்னும் கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கின்றன.

சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக... நம்பிக்கையாக... அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.

சோவியத்தின் இறுதி அதிபர் மிகைல் கோப்பச்சேவ் பதவி ஏற்கும் வரை இது தொடர்ந்தது. அவர் பதவி ஏற்ற பின்பு சோவியத் யூனியனில் உருவாக்கிய பெரெஸ்ட்ரோயிகா(Perestroika - இது ரஷ்ய மொழியில் அமைந்த சொல்) (ரஷ்யன் 'மறுசீரமைப்பு') மற்றும் கிளாஸ்னோஸ்ட்(Glasnost - இது ரஷ்ய மொழியில் அமைந்த சொல்)(ரஷ்யன் 'திறந்த வெளி') என்ற சீர்திருத்தங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சோவியத் ஒன்றியத்தில் உள்ள நாடுகள் தமது இறையாண்மையை பயன்படுத்தி பிரிந்து செல்லாம் என்ற அரசியல் சுதந்திரம் தனியாக 15 நாடுகள் உருவாவதற்கு வாய்பை ஏற்படுத்தின.

கோப்பச்சேவ் தலமையிலான சோவியத் யூனியன் மேற்கு நாடுகளுடன் அதிககளவில் பேச்சுவார்தையில் ஈடுபட்டது. கோப்பசேவ் பிரிட்டிஷ் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் முக்கிய உறவுகளை உருவாக்கினார் மார்கரெட் தாட்சர், மேற்கு ஜெர்மன் தலைவர் ஹெல்முட் கோல் மற்றும் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன். 

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள்    விலக்கப்பட்டன. சோவியதிற்குள் சரிந்து வரும் பொருளாதார நிலமைகளை கரு

த்தில் கொண்டு சீர் திருத்தங்களை மேற்கொள்ள முயன்றார்.

கூடவே ஐக்கியப்பட்டு ஒன்றியமாக சோசலிச கொள்கையில் பலமாக பயணித்துக் கொண்டிருந்த சோவியத்தை வீழ்த்துதல் என்ற அமெரிக்கா அதன் கூட்டமைப்பு நேட்டோவின் பொறி கோபபர்சேவ் இன் நாடுகளின் இறையாண்மையை பிரிந்து செல்வதை அங்கீகரித்தல் என்ற அதிக தாரளவாதம் என்று இரண்டுமாக சோவியத்யூனியன் பல நாடுகளாக சிதறுவதறகு வழி வகுத்துவிட்டது. இன்து அவை தமக்குள் மோதும் நாடுகளாகவும் முட்டுச் சந்திற்குள் வந்து நிற்கின்றன. 


'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பார்கள் இங்கு ஊர் பலவாக பிரிந்ததினால் ஆயுத விற்பனைக் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகி இருக்கின்றது.

இந்த சோவியத் யூனியனின் சிதறல் ஆரம்பமான போது... சோவியத் யூனியன் தொடர்ந்தும் சோவியத் ஒன்றியமாக செயற்படுவது என்று சோவியத் ஒன்றியத்தின் 9 நாடுகள் ஆதரவாகவும் 6 நாடுகள் எதிராகவும் என்ற நிலமை ஏற்பட்ட போது பொறிஸ் யெல்சன் போன்ற ரஷ்சிய தலைவர்களின் சித்து விளையாட்டினால் பெரும்பான்மை அடிப்படையிலான முடிவு என்ற விடயம் அடிபட்டு ஒன்றாக செயற்பட முடியாத நிலமையே இறுதியில் ஏற்பட்டது. 

இதற்கு பின்புலமாக மேற்குலக நாடுகள் கண இடைவெளிகள் இன்றி செயற்பட்டனர் என்பது அன்றைய கால கட்டத்து அரசியல் நகர்வுகள் மேற்குலக ஊடகங்களின் ஒரு தலைபட்சமான பிரச்சார வாடையிலான செய்திகள் நிறுவி நின்றன.

தற்போதைய நிலையில் சீனாவின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதையும் அடுத்த பகுதிகளில் பார்ப்போம்



நீண்ட நாட்களாக தனி நாடு அமைக்க போராடி வரும் உக்ரைனின் கிழக்கே அமைந்த டொன்பாஸில், ரஷ்ய மொழி பேசும் டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் ஆகியவற்றை தனி நாடுகளாக அங்கீகரித்து அமைதியை நிலைநாட்ட அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படைகளை அனுப்பிவிட்டார்.

உக்ரேனுக்கு மேற்காக உக்ரேனின் தலைநகர் கீவ்(Kiev) இற்கு அண்மையாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடானா பெலாறஸ்(Belarus) இல் இருந்து உக்ரேனுக்குள் படைகள் புகுந்துவிட்டன.

உக்ரேனின் தெற்கு பகுதியில் கருங்கடலுக்கு அருகில் அமைந்த கிறீமியா(Crimea)வில் இருந்து உக்ரோனுக்குள் தனது படைகளை நகரச் செய்தும் விட்டது ரஷ்யா. 2014 இல் உக்ரேனினல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ரஷ்ய சார்பு அரசை அமெரிக்க நேட்டோ கூட்டாளிகள் சதிப்புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த ரஷ்ய மொழி பேசும் கிறீமியாவை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

முழு உக்ரேனையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்தும் விட்டது.

நேட்டோ அமைப்பில் இணையாது சுதந்திரமான நாடாக செயற்படுங்கள் எமது எல்லை நாடாக நட்பு நாடாக என்பதை மீறி மேற்குலகின் வேலைத்திட்டங்களுக்கு அமைய படைக் குவிப்புகளை மேற்கொண்ட உக்ரேனுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் தனது நாட்டின் பாதுகாப்பு கருதி செயற்படத் தொடங்கிவிட்டது ரஷ்யா.

வழமை போல் உக்ரேனுக்கு எதிரான யுத்தம் ஆரம்பித்தவுடன் உக்ரேன் நாட்டிற்கு ஆதரவான குரல் என்றதற்குள் தம்மை சுருட்டிக் கொண்டன நேட்டோ அமெரிக்க நாடுகள்.

இந் நிலையில் ஏற்கனவே எழுதிய இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாம் பாகத்திற்குள் நுளைகின்றேன்... (முதல் இரண்டு பாகங்களையும் படிக்காதவர்கள் அதனை வாசியுங்கள் அப்போதுதான் தொடர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்)

முதலில் பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது. தொடர்ந்து இவை தம்மை சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்திக் கொண்டன.

அதனைத் தொடர்ந்து பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது. இந்த சில  மாநிலங்களு அதிகாரங்களை பரவலாக்க மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து தொடர்ந்தும் சோவியத் ஒன்றியமாக ஒற்றுமையாக செயற்பட எடுத்த முயற்சிகள் கை கூடவில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏனைய ஆர்மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ்தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் தம்மை சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்துகொண்டன. 

கூடவே சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான “அல்மா அடா”வில் நடைபெற்றது.

சோவியத்தில் இருந்து பிரிந்து உருவான மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச் சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான், அஜர்பைஜான், ஆர்மீனியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் இந்த மகா நாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் யூனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். “காமன்வெல்த்” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர்.

இதனால் சோவியத் யூனியன் என்று மாபெரும் தலைவரால் உருவாகப்பட்ட சோசலிச ஒன்றியம் டிசம்பர் 8, 1991ல் கலைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் அதிபரான கோர்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25, 1991 ம் தேதி இரவு ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். “நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது” என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

கோப்பச் சேவ் இன் இந்த பொருளாதாரச் சீர்திருத்தம், பிரிந்து செல்வது வரையிலான அதிகாரப் பரவலாக்கம் தாராளவாதத்தினால் ஏற்பட்ட இந்த உடைவிற்கு எதிராக செயற்பட்ட எட்டு கம்யூனிஸ்ட் முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். தமது முயற்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

இவ்வாறுதான் சோவியத்தின் உடைவு ஏற்பட்டது

இன்று யுத்தத்தின் மையப் புள்ளியாக இருக்கும் உக்ரேன் 1991 இன்று வலிந்து உடைக்கப்பட்ட சோவியத் யூனியனின் ரஷ்யாவிற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடு.

சோவியத் அதிபர் கோப்பச் சேவின் தாராளவாதம் நாடுகளுக்கு இன்னும் சுதந்திரம் வழங்குதல் என்ற புதிய கொள்கைகளுக்கு அப்பால் அன்றைய அமெரிக்க அதிபர் றொனால் றீகன் செயற்பாடுகளினால் சோவியத் என்ற மாபெரும் சோசலிச சாம்ராஜ்யம் அன்று உடைந்தது.

இதில் ரஷ்யாதான் சோவியத்தின் மிகப் பெரிய நாடாகவும் சோவியத்தின் தொடர்ச்சியாகவும் உணரப்படும் நாடு. இதில் உக்ரேன் அதற்கு அடுத்த படியாக பேசப்பட்ட நாடு. சோவியத் யூனியனின் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து வெளிநாட்டு அமைச்சர்தான் ஷிவநாட்சே தான் உக்ரேனின் முதல் அரசுத் தலைவராக பொறுப்பெடுத்தார். 

கடந்த 30 வருடங்களாக இந்த நாடுகள் சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட சோசலிச கருத்தியலை தொடர்ந்தும் தமது ஆட்சி அதிகாரத்தில் காவிச் சென்றனவா என்பதற்கு பதிலாக இல்லை என்று கூறினாலும் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை இந்த நாட்டு மக்களிடமும் கூடவே கம்யூனிச் சிந்தாத்தமான சமத்துவக் கொள்கைகளும்  அந்த நாட்டு மக்களிடம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இது அண்மைக்கால்களில் இளைஞர்களிடம் அதிகம் உருவாகி வருவதை செய்திகள் கூறியும் நிற்கின்றன.  அரசுகளிடம் இந்த அரசியலுக்கான செயற்பாடுகள்  அதிகம் இருக்கவில்லை.

பொறிஸ் ஜெல்சன் ரஷ்யாவின் தலமைப் பொறுப்பை எடுத்தார். பொறிஸ் ஜெல்சன் அமெரிக்காவின் விருபத்திற்கு ஆடுபவராகவும் கூடவே அவரின் தனிப்பட்ட நடவடிக்கையினாலும் சோவியத்தின் விம்பத்தை அதனைத் தொடர்ந்த ரஷ்யாவின் அடையாளத்தின் உலக அரங்கில் ரொம்பவும் தாழ்நிலையிற்கு கொண்டு சென்றது வரலாறு. 

சோவியத்தின் உடைவினால் உருவான நாடுகள் அனேகம் ரஷ்யாவின் மேற்கு கரையோரங்களில் தான் அதிகம் அமைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நேட்டோ, வார்சோ என்று முதலாளித்துவ முகாம் சோசலிச முகாம் என்றிருந்து உலகம் முதலாளித்து முகாம் என்று ஏகபோகமாக தன்னை கட்டமைத்துக் கொண்டது. 

அமெரிக்க முதலாளித்துவம் இனி உலகில் ரஷ்யா எழுத்து வர முடியாது.... ( அதுதான் முதல் அத்தியாயத்தில் கூறிய 'சிங்கன் செத்தான்" கதை) சீனாவும் என்னுடன் நட்பாக இருக்கின்றது என் செயற்பாட்டை கேள்வி கேட்க யாரும் இல்லை என்று தனது சொல்லுக்கு கட்டுப்படாத இணைய மறுத்த அனைவர் மீதும் பொருளாதாரத் தடை போன்ற மிரட்டல்களால் தனது கைக்குள் கொண்டு வந்தது. இந்த வரலாற்றை நாம் 1990 களில் இருந்து அண்மைய காலம் வரை அவதானிக்க முடியும்.

இதற்கு மாற்றீடாக ஐரோப்பிய யூனியன் ஈரோ(Euro) என்று கொண்டு வந்தாலும் தனது மிக நெருங்கி சகாவான பிரித்தானியா மூலம் அதற்கும் முக்கணாங்கயிறு போட்டது தற்போது பிரித்தானியா பொது நாணயத்திற்குள் வராமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தும் போய்விட்டது. வேறு வழியில்லாமல் ஐரோப்பிய யூனியனும் நேட்டோவின் இன்னொரு தம்பியாகி அதனுடன் பிணைந்து இணைந்துவிட்டது. இது வர்க்கக் குணாம்சத்தின் வெளிப்பாடுகள்.


இதேபோல் இந்தியா தென் ஆபிரிக்கா பிரேசில் சீனா ரஷ்யா போன்ற நாடுகளால் உருவான பிறிக்ஸ்(BRICS) என்ற கூட்டமைப்பும் ஒரு அளவிற்கு மேல் வளர விடப்படவில்லை அமெரிக்க டாலரின் செயற்பாடுகளால்.

குறிப்பாக அமெரிக்க டாலருக்கு மாற்றீடாக உலக சந்தையில் நாணய பரிமாற்றத்தை வேறு ஒரு நாணயத்தினால் மாற்றீடு செய்யப்படுவதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. சீனாவும் பொருளாதார வல்லரசாக தன்னை வளர்த்துக் கொண்டாலும் தனது யென் ஐ பொது நாணயமாக்க முடியவில்லை.

இந்நிலையில் தான் சிரியா இல்லாமல் செய்ய புறப்பட்ட அமெரிக்காவையும் அதன் நட்பு நேட்டோ செயற்பாடுகளையும் அவர்களால் ஒரு காலத்தில் உருவாக்கி வளர்த்து விடப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் செயற்பாடுகளின் முதுகெலும்பை உடைத்துக் காட்டி 'சிங்கன் செத்தான்' என்று கோஷம் போட்டவர்களுக்கு பதில் சொல்ல விளைந்திருக்கின்றது ரஷ்யா சில வருடங்களுக்கு முன்பு. 

அதன் தொடர்ச்சியைதான் இன்று உக்ரேனில்.....

தடைகளும், படைகளும் விடைகளை கொடுக்காது... போரை நிறுத்தாது... சமாதானத்தை ஏற்படுத்தாது.... மாறாக தடையற்ற பேச்சுவார்த்தைகள் விட்டுக் கொடுப்புகள்தான் போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தும். மனித குலம் கடந்து வந்த வரலாறு அவ்வாறானது. அந்த சமாதானத்தை வேண்டியே தொடர்கின்றேன்..

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையிற்கு தயார். மேற்குலக நாடுகளை நம்பினோம்... நேட்டோ நாடுகளை நம்பினோம்.... நாம் தனித்து விடப்பட்டுள்ளோம்.... நேட்டோ அமைப்பில் சேருங்கள் என்று சொன்ன நாடுகள் எல்லாம் எங்கே போய்விட்டன. இந்தியா தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் - இது உக்ரேன் தலைவர் ஒரு நாள் போர் முடிவின் பின்பு மனம் வருத்தி வெளியிட்டுள்ளது அழைப்பு.

ஆயுதங்களை கைவிட்டுவிட்டு சரணடையத் தயாராக வாருங்கள் பேசுவதற்கு குழுவை அனுப்புகின்றோம் - இது ரஷ்யா

சுதந்திரமான நாடாக யார் பக்கம் சாராமலும் சிறப்பாக ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ பக்கம் சாராமல் செயற்படுங்கள் என்று தனது கொல்லைப் புறத்தில் இருக்கும் உக்ரேனுக்கு 'ஒரு காலத்தில் எம்முடன் ஒன்றாக பயணித்த நீங்கள்.." என்பதை கருத்தில் எடுக்காது நேட்டோவின் நகர்வுகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றீர்கள் என்பதையும் காதில் வாங்காது நேட்டோவை நம்பிய உக்ரேனை இன்று கைவிடப்பட்ட? நிலையில்.... 

இதனை உக்ரேன் தலைவரே போர் ஆரம்பித்த ஒரு நாளில் தெரிவிக்கும் நிலமை நேட்டோ நாடுகளின் நம்புபவர்களுக்கான செய்திகளை சொல்லி நிற்கின்றது.

ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகளால் தன்னிச்சையாகவே தனியரசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பகுதிகளையுமே புடின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்திருக்கிறார். இதன் மூலம் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையேயான பூகோள அரசியல் போட்டி, கிழக்கு ஜரோப்பாவில் இரண்டு புதிய தேசங்கள் தோன்றுவதற்கான வழிகளைத் திறந்துவிட்டிருக்கும் நிலையில்....

இந்த யுத்தம் பற்றி ரஷ்ய அதிபர் கருத்து தெரிவிக்கையில்...

'உக்ரைன் அதிகாரத்தை அமெரிக்காவின் பொம்மை ஆட்சி” என்று வர்ணித்தார். 'ஒரு தேசத்துக்கான எந்தப் பண்புகளையுமோ அடிப்படைகளையுமோ கொண்டிருக்காத அந்த நாடு நேட்டோவின் யுத்த மேடையாக மாறியிருக்கிறது' என்றும் குற்றம் சுமத்தினார். 'நவீன உக்ரைன் கம்யூனிஸ ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட தேசம். ஆனால் 2014 உருவான அரசு அதன் ரஷ்யத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டு அங்கு ஊழல் மிக்க பயங்கரவாத ஆட்சி கட்டியெழுப்பியுள்ளது' என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடியாக..

புடினின் தனிநாட்டு அங்கீகாரப் பிரகடனத்தை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். எவருடைய நகர்வுகளும் உக்ரைன் நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிப்பவையாக இருக்க வேண்டும் என்று ஐ. நா. சபை கூறியிருக்கிறது.

சர்வதேச சட்டங்களையும் ஏற்கவே உக்ரேன் ரஷ்யா ஆதரவுடன் தனிநாடு அமைக்க போராடி வந்த கிளர்சியாளர்கள் இடையிலான 'மின்ஸ்க்' உடன் படிக்கையையும் மீறி மொஸ்கோ உக்ரைனின் ஒரு பகுதிக்குத் தனி நாடுகளுக்கான அங்கீகாரத்தை அளித்திருப்பதால் அதன் மீது தடைகளை அறிவிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

ஆனால் மேற்குலகின் தடைகள் எதனையும் மொஸ்கோ கணக்கில் எடுப்பதாக இல்லை. இதற்கான காரணங்களை விரிவாக தொடர்ந்து அடுத்த பகுதிகளில் பார்ப்போம். 30 வருடங்களாக ரஷ்யா மீது மேற்குலகம் அதிக தடைகளை விதித்தே இருக்கின்றது.

ரஷ்யாவும் பதிலாக தனது வான் பறப்பு பிரதேசத்தில் நேட்டோ நாடுகளின் விமானங்கள்(சிவில் விமானங்கள்) பறப்பதற்கு தடை விதித்திருக்கின்றது

இந்நிலையில்தான் 'செத்தான் சிங்கன்" என்ற கூச்சலுக்கு பதிலடியாக சிரிய உள் நாட்டு யுத்தத்தில் சிரிய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க செயற்பட்ட பின்பு தற்போது மீண்டும் எழுந்து வருகின்றது ரஷ்யா.

குண்டுகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் நாம் தயார் இல்லை. ஆனால் எதிர்காலத்திலும் குண்டுகளுடன் நாம் உங்கள் நாட்டில் முகாம் அமைக்க அனுமதி தாருங்கள் என்பது போன்ற கூட்டமைப்பாகிப் போனது நேட்டோவின் தற்போதைய செயற்பாடுகள். 

25 வருடங்களுக்கு முன்பு சோமாலியா மீதான ஆக்கிரமிப்பின் போது கிடைத்த கசப்பான இழப்புக்களுடன் கூடிய அனுபவங்கள் தரையினூடு தமது படைகளை நகர்த்துவதை தவிர்த்து வருவதான அமெரிக்க தலமையிலான நேட்டோ நாடுகளின் செயற்பாடுகள் தற்போதும் தொடர்வார்கள் என்றே நம்பப்படுகின்றது.

தடைகளையும், கண்டனங்களையும், தமது நாடுகளுக்குள் நிதி திரட்டி உதவி செய்வதாகவும் கூறிக் கொள்ளல்கள் மட்டும் ஒரு நாட்டில் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கான நிவாரணமாக அமைய மாட்டாது. மாறாக யுத்தத்தை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகளை அடைவதற்குரிய இராஜதந்திரி அணுகுமுறைகளை இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டும். 

இதே போன்ற அனுபவங்களை ஈழத் தமிழராகிய நாங்களும் அனுபவித்தவர்கள் ஏன் தற்போது குண்டுகள் அற்ற நிலையிலும் அவை தொடர்ந்தும் வருகின்றன. இந்த வலிகள் எவ்வாறானவை என்பது ஒவ்வொரு சமான்ய மக்களுக்கும் தெரியும் யுத்தங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பொது மக்களே.

கடந்து 50 வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா நேட்டோவின் ஆதரவுடன் படையெடுத்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டால் தலை சுற்றும்.

இத்தனைக்கும் படையெடுத்து ஜனநாயகத்தை... நல்லாட்சியை.... உருவாக்கப் போகின்றோம் என்று சென்ற நாடுகளின் இன்றைய நிலையை நாம் விபரிக்க தேவை இல்லை. அந்த நாடுகளின் பட்டியலை இந்தப் பதிவின் புகைப்படமாக இணைத்துள்ளேன். அவற்றின் நிலமைகளை ஆராய்ந்தால் நிலமைகள் புரியப்படலாம்.

அண்மைய காலத்து உதாரணங்களாக 1980 களில் ஆப்கானிஸ்தானில் அமைந்த சோசலிச அரசிற்கு ஆதரவாக அங்கிருந்த சோவியத் படைகளை அமெரிக்காவால் உருவாக்கிய முஹாஜிதீன்களைக் கொண்டு விரட்டி அடிக்கப்பட்டது. அவ்வாறுதான் உலகம் நம்பியது.

பின்பு முஹாஜிதீன்களில் ஆட்சிக் காலத்தில் இரட்டைக் கோபுர தாக்குதல் சூத்திரதாரி பின் லாடனை பிடிப்பதற்கு என அங்கு சென்ற அமெரிக்க நேட்டோ படைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நின்று எல்லா சங்காரமும் செய்து கடந்த வருடம் 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற கணக்காக வெளியேறிய ஆப்கானின் இன்றைய நிலை என்ன...? நஜிபுல்லா காலத்து ஆட்சியை விடவா சிறப்பாக இருக்கின்றது..?

ஈராக்கிலும் இதே நிலை. இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக அங்கே புகுந்து இன்றுவரை அங்கு இரசாயன ஆயுதங்கள் இல்லை என்றாகிப் போன அப்பா, மகன் என் 'புஷ்" செயற்பாடுகளினால் சின்னாபின்மாகிப் போனதுதுதான் ஈராக்கின் இன்றைய நிலமை. கூடவே சதாம் குசைனை தூக்கிலும் தொங்கவிட்டார்கள். இன்று சதாம் குசைன் ஆட்சிக் காலத்தை விடவா சிறப்பாக இருக்கின்றது அங்கு.. வாழ்க்கை.

லிபியாவிற்குள் ஜனநாயகத்தை உருவாக்குகின்றோம் என்று புகுந்தவர்கள் குடிமனை, கல்வி, மின்சாரம் போன்று சகல அடிப்படை தேவைகளையும் இலவசமாக வழங்கி ஆட்சி செய்த கடாபியை மதகின் கீழ் இருந்து இழுத்து வந்து சுட்டுக் கொன்றுவிட்டு இன்று லிபியர்களே பல்வேறு சிற்றரசர்களாக தமக்குள் அடிபட்டுச் சாகும் நிலமையில் ரொம்பவும் சீரழிந்து போய் இருக்கின்றனர். கடாபி காலத்தை விடவா தற்போது அங்கு வாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிலர் கூறுவது போல் ஆமை புகுந்த வீடாகிப் போனது போல் நேட்டோ படைகள் புகுந்த நாடுகள்

இன்னும் சற்று பின்னோக்கி சென்றால் மார்சல் டிட்டோ அணிசேரா அமைப்பை உருவாக்கி நாம் நேட்டோவும் இல்லை வார்சோவும் இல்லை என்று வாழ்ந்த யூக்கோஸ்சிலாவியா என்ற நாட்டை அமெரிக்க தலமையிலான நேட்டோ படைகளை அனுப்பி உள்நாட்டுக் கலகத்தை அடக்குகின்றோம் இன அழிப்புகளை தடுக்கின்றோம் என்று சென்று இன்று அந்நாடு எட்டு நாடுகளாக துண்டாடப்பட்டு தமக்குள் முட்டி மோதும் வறிய நாடுகளாக தத்தளிக்கின்றன.

இந்நிலையில் இன்று தமது அணிக்குள் வாருங்கள் என்று உக்ரேனில் ஆட்சி  மாற்றத்தை 2014 ஏற்படுத்தி சோவியத்தின் முன்னாள் நாடுகளின் ஒன்றான ஜோர்ஜியாவைப் போல் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற நிலையில் எற்பட்ட யுத்தம் முன்னைய சகோதர்களை இன்று குண்டுகளை பரிமாறி தமக்குள் அடிபட்டுச் சாகும் நிலை ரொம்பவும் விமர்சனத்திற்குள் உள்ளாக்கி இருக்கின்றது. வேதனையாக இருக்கின்றது.

இந்த நிலையில் நான்காவது பாகத்தில் வரலாற்றை தொடர்கின்றேன்.... 

'சிங்கன் செத்தான்' என்று அமெரிக்காவால் 1990 களில் நம்பப்பட்ட ரஷ்யா பல பொருளாதாரத் தடைகள், உடைவுகள், முட்டுக் கட்டைகளை தாண்டி 30 வருடங்களில் அமெரிக்காவை கேள்வி கேட்கும் வகையில் இன்னோர் முகாமாக எழுந்து நிற்கின்றது இன்று.

சோவியத்தின் இறுதிக் காலத்தில் அமெரிக்காவின் உற்ற தோழனாக இருந்த சீனாவும் தற்போது அணி மாறி ரஷ்யாவின் பக்கம் நெருங்கி வந்துள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவின் அண்மைய செயற்பாடுகளில் இரட்டைக் குழத் துப்பாக்கி போல் செயற்படுகின்றது சீனா.

இதனை நாம் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் போரை நிறுத்தியது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்தியது என்பவற்றில் கண்டோம். இன்று உக்ரேனின் விடயத்திலும் அவ்வாறான நிலைப்பாட்டை சீனா எடுத்த நிலையில் இந்தியாவும் இதனை ஒத்த முடிவை எடுப்பதாகவே உணர முடிகின்றது.

சோவியத் யூனியனின் உடைவு காலத்தில் அமெரிக்காவின் நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஏற்பட்ட முக்கிய உடன்பாடு தனது முன்னாள் ஒன்றிய நாடுகளை நேட்டோவின் அமைப்பில் இணைக்கக் கூடாது என்பது இதனை தொடர்ந்து 30 வருடங்களாக நேட்டோ நாடுகள் மீறியே வருகின்றன. இதன் ஒரு முக்கிய முட்டுச் சந்தில் தற்போது உக்ரேன் அமெரிக்கா ரஷ்யா