தமிழ் சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கு பகிரங்க திறந்த மடல்! பேசாலைதாஸ்
தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளே! அரசியல்வாதிகளே! தென் இலங்கை சிங்கள பெரும்பான்மை கட்சி களுக்கிடையில், ஆட்சி அதிகாரத்திற்கான இடைவிடா போராட்டம், இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது, இருபெரும் சிங்கள இனவாத கட்சிகள், எப்பொழுதும் சமமான பலத்தையே கொண்டிருப்பது தவிர்க் கமுடியாத ஒரு நியதியாகிவிட்டது, இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்றால் தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினரின் அனுசரனை இல்லாமல் அதிகாரத்தை தக்கவைப்பது பெரும் கேள்விக் குறியாக இருப்பது சகலரும் அறிந்த விடயம்! இந்த தருணத்தை மிகச் சரியாக தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாவித்து நமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய அரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது! குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாய்ப்பான தருனம் இது என்றே சொல்ல முடியும், இந்த சந்தர்ப்பத்தை கை நழுவவிடுவது முட்டாளதனமானதும், அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது ஆகும்!
இதுவரையும் நல்லாட்சி அரசோடு முட்டு கொடுத்து எதுவித நன்மையும் நாம் கண்டதில்லை, தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, காணாமல் ஆக்கப்படவ ர்களுக்கு சரியான பதிலை நல்லாட்சி அரசு வழங்கவில்லை, மாகாண சபைக்கு போதிய அதிகாரம் வழக்கப்படவில்லை, இராணுவத்தால் ஆக்கிரமிப்பு நிலம் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு சரியான பொருளாதார புணர்வாழ்வு வழக்கப்படவி ல்லை, போரிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவார ணம் வழங்கப்படவில்லை, வடக்கு மாகாண சபையின் நிருவாகத்தில் மத்திய அரசின் கவர்ணர் அதிகார அநாவசிய குறுக்கீடுகள், இராணுவ அதிகாரங்கள் வடக்கு மாகாண அபிவிருத்த்யில் பிரசன்னம், தமிழர்க ளின் கலாச்சாரத்தை சீரழிக்கும் போதை ஊக்குவிப்புகள், கிரிமினல் குற்றவாளிகளை உருவாக்கும் ஆவா குழுக்களை உருவாக்கி ஊக்குவி ப்பது,மறைமுக சிங்கள குடியேற்றத்தை துரிதப்படுத்தல் இப்படியாக பல பிரச்சனைகளுக்கு இந்த நல்லாட்சி எதையும் செய்ததில்லை!
யுத்தக்குற்றங்களுக்கு பொறுப்பு கூறும், சர்வதேச அழுத்தத்தில் இருந்துவிடுபல தமிழ் தேசிய கூட்டமைப்பை பயண்படுத்துகின்றது, இராணுவத்தை நல்லவர்களாக சித்தசிக்கும் காட்சிகளை இந்த நல்லாட்சி படம் போட்டு காட்டுகின்றது, இராணுவம் அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதாக சர்வதேசத்துக்கு காட்டுகின்றது, பேச்சுவார்த்தை என்ற போர்வையில் விடுதலை புலிகளை அழித்த இந்த ரணிலின் நல்லாட்சி பொறிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு விழுந்தமை பெரும் பின்னடைவே!
அரசியல்யாப்பு மாற்றத்தால் நிரந்தர தீர்வை எட்டலாம் என்பது பகல் கனவு! ஜே ஆர் ஜெயவர்த்தனே அறுதிப்பெரு ண்மை பலத்தில் இருந்த போது கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அரசியல் அமைப்பை De Gaulle system இப்போது 18 வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டவாக்கம் மூலம நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது, இதன் பிரகாரம் புதிய பிரதமரை நியமித்தது தவறு என்று கூட இப்போது வாதிக்கப்படுகின்றது. நிலமை இவ்வாறு இருக்க, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஊடாக தீர்வு காண்பது என்பது ஏமாற்று வித்தை!
தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர அவசரமாக செய்யவேண்டியது, விக்கினேஸ்வரன் போன்ற அதிருப்தியாளர்களை சந்த்தித்து அவர்களை உள்வாங்கி அமைப்பை பலப்படுத்தவேண்டும், இதற்காக எந்தவித விட்டுக்கொடுபையும் செய்ய தமிழரசு கட்சி தயாரக இருக்கவேண்டும்! விக்கி, ஆனந்தி போன்றவர்கள் கட்சி அமைத்து ஆளுக்கொரு பக்கம் இழுத்து, தமிழர்களின் பலத்தை சிதைப்பதை நிறுத்தவேண்டும்! முஸ்லீம் தலைமகளுடன் முடிந்த அளவு, சகிப்பு தன்மையுடன் அவர்களையும் உள்வாங்கவேன்டும், ஒருமித்த கருத்தாக இனப்பிரச்சனைக்கு காத்திரமான சமஸ்டி அமைப்பிலான ஒரு தீர்வு திட்டத்தை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கவேண்டும், இதற்கு அமைவாக எப்பொழுதும் யாராலும் மாற்றியமைக்கபட முடியாத ஒரு நெகிழா யாப்பு சீர்திருத்த மூலம் குறைந்தது ஒரு வருட எல்லக்குள் அமுலாகவேண்டும் என்ற கோரிக்கையை ஒரு சர்வதேச ஒப்பந்தமாக கொண்டுவரவேண்டும், இதற்கு நோர்வே இந்தியா நாடுகளின் தலைமையில் மீறமுடியா ஒரு ஆணையை, சர்வதேச ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக பெற்றுக்கொண்டு ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்!
சிறுபாண்மை பாராளமன்ர உறுப்பிணர்களின் ஆதரவை பெற, உங்கள் ஒவ்வொருவருக்கும் இருபது கோடிக்கும் மேல், இலஞ்சம் தர சிஙகள தலைமை தயாரக இருக்கின்றது, நிர்மலநாதனின் விலை இப்போது இருபது கோடிக்கு மேல் ஏகிறுகின்றது. மன்னார் மக்களே மிக, மிக விழிப்பாக இருங்கள்! மந்திரி பதவி, அபிவிருத்தி என்று ஆசை காட்டுவார்கள், எல்லாவறையும் வாங்கிக்கொளுங்கள், ஆனால் தமிழ் தேசிய தீர்வுக்கு சமஸ்டி வழியிலான தீர்வை, சர்வதேச மத்தியஸ்தம் மூலமாக ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றி சீக்கிரம் இனப் பிரச்சனைக்கு தீர்வை காணுங்கள்! மன்னார் மக்கள் சார்பாக பேசாலைதாஸ்