சிறீ லங்கா அரசியல் யாப்பும் அதன் மீதான ஆப்புகளும்! பேசாலைதாஸ்
அரசியல் யாப்புகள் பலவகைப்படும். நெகிழும் யாப்பு, நெகிழா யாப்பு, எழுதப்பட்ட யாப்பு, எழுதப்படதா யாப்பு இப்படியாக யாப்பு பலவகைப்படும். இதிலே இலங்கை அரசியல் யாப்பு எழுதப்பட்ட ஆனாலும் நெகிழும் தன்மை கொண்டது. எனவே தான் 1978 ஆம் ஆண்டு ஜே ஆர் ஜெயவர்த்தனே என்பவரால் அறிமுகப்ப டுத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டின் டி கோலிஸ்ட் அமைப்பை(Charles De gaulle System) ஒத்த அரசியல் அமைப்பே தற்போது நடைமுறையில் உள்ளது, இந்த யாப்பு இலங்கை ஜனாதிபதிக்கு அதி உயர் உச்ச அதிகாரங்களை வழங்கி இருந்தது, ஒரு ஆனை பெண்ணாகவும், ஒரு பெண்ணை ஆனா கவும் மாற்ற முடியாதே தவிர மற்ற எல்லாம் இந்த அரசியல் யாப்பு மூலம் செய்யலாம் என ஒரு முறை ஜே ஆர் ஜெயவர்த்தனே வர்ணித்தார். இந்த யாப்பு மூலம் இலங்கைக்கு இருந்த ஒரே ஒரு அனுகூலம், ஜனாதிபதி தன க்குள்ள தற்துனிபு அதிகாரம் மூலம், எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்! இதன் மூலம் அரசியல் கைதிகளை விடுவிக்கவோ மன்னிக் கவோ நாட்டின் ஜனாதிபதியால் முடியும்! இராணுவத்தை தண்டிக்கவோ, அவர்களினால் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க அவரால் முடியும், இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வையும் அவரால் அமுல்படு த்த முடியும், எழுதப்பட்ட அரசியல் யாப்பினால் ஒரு ஜ்னாதிபதிக்கு இவையாவும் சாத்தியமாகும்! ஆனால அவர்கள் ஒருபோதும் அதனை செய்யமாட்டார்கள்.
உண்மையில் இலங்கையில் பின்பற்றப்படுவது எழுதப்படாத அரசியல் யப்பே! அந்த எழுதப்படாத யாப்பு, மகா நாயக தேரர்கள், மல்வத்த மற்றும் அஸ்கிரிய பெளத்த பீடங்கள் சொல்லும் மாகாவம்ச சிந்தனை ஊடாகவே இந்த எழுதப்படாத யாப்பு நெறிப்படு த்தப்படுகின்றது. இலங்கை ஒரு பெளத்த நாடு, இது சிங்கள பெளத்த ர்களுக்கே உரிய நாடு என்ற சிந்தனையை வளர்ப்பதில் எல்லா சிங்கள தலைமைகளும் செயல்படுகின்றனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்க ளுக்கு நியாயமான தீர்வுகளை ஒரு போதும் தரப்போவதில்லை!
ஆனால் அதிர்ஸ்டவசமாக சிங்கள தலைமைகளின் இரு பெரும் வரலாற்று கட்சிகளுக்கிடையிலான அதிகார போட்டியில், அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக சிறுபாண்மை தமிழ் முஸ்லிம் கள் உள்ளனர். எனவேதான் எப்பாடுபட்டாவது இந்த சிறுபான்மை வாக் குகள் தேங்கிகிடக்கும் தமிழ் மக்களின் வாழ்விடங்களை சிங்கள மய ப்படுத்தும் திட்டத்தில் சகல சிங்கள தலைமைகளும் ஒத்திசைவாக சிங் களபெளத்த நாடு என்ற இலட்சியத்தை நோக்கி நகர்கின்றார்கள்! அத ற்கு சார்பாக தமிழ் மக்களிடையே வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பொருளாதார அபிவிருத்தி மந்தம், காலாச்சார சீரழிவு, இராணுவ கெடு பிடி இவைகளை ஊக்குவிக்கின்றார்கள். அபிவிருத்தி என்ற தந்திரத்தி னால் எமது இருப்பை சிங்களம் கேள்விக்குறியாக்குகின்றது
தற்போது அரசியல் யாப்பு மீறப்பட்டதாக சிங்கள புத்திஜீவிகள் கொதிக்கின்றார்கள், அரசியல் யாப்பு மீறப்ப டுவது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதல்ல, மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது, அரசியல் யாப்புக்கு விரோதமானது, சிங்களம் மட்டும அரச மொழியாக்கியது அரசியல் யாப்புக்கு விரோத மானது, உயர்கல்வியிலே தரப்படுத்தல் அரசியல் யாப்புக்கு விரோதமா னது, தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள குடியேற்றம், அரசி யல் யாப்புக்கு எதிரானது இப்படியாக அரசியல் யாப்பு காலத்துக்கு காலம் கற்பழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் வாய் மூடி மெளனம் காத்த சிங்கள அரிவு ஜீவிகள், இப்போது மட்டும் ஏன் கொதிக்கின்றார்கள்? காரனம் பாதிக்கப்படுவது இன்னொரு சிங்கள தலைமை என்பதால் இப்போது ஜனநாய்கம் மீறப்படுகின்றது என ஒப்பாரி வைக்கின்றா ர்கள்! அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜால்ரா அடிக்கின்றது!
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் நிலையில் உள்ளனர். மகிந்தவுடன் எழுத்து மூல மான உத்தரவாதம் கேட்ட கூட்டணி, ரணிலிடம் அப்படியான ஒரு உத்தரவாதத்தினை ஏன் கேட்கவில்லை? இந்த கேள்விக்கு தமிழ் தரப்பு சொல்லும் விளக்கம், ரணிலிடமும் கேட்கப்பட்டுள்ளது, சிங்கள கடும் கோட்பாட்டாளர்களான அடிப்படைவாதிகளை கிளர்ச்சி கொள்ளவை க்கும் என்பதால் தமது, கோரிக்கை இரகசியமாக கையாளப்படுகின்றது என கூறுகின்றார்கள்! இந்த நகர்வு சிங்கள அடிப்படைவாதிகளை ஏமா ற்றி, தமிழர்களுக்கு ஒரு தீர்வை எட்டும், கேலிக்குறிய கதையாக இருக்கின்றது.
உண்மையில் தமிழர்களின் தேசிய பிரச்சனை, சிங்கள கடுங்கோட்பாடளர்களின் புரிதலில் தங்கியுள்ளது என்ற அடிப் படை அறிவு கூட, சமபந்தர், சுமந்திரனுக்கு இல்லையா? இனப்பிரச்ச னையில் தீர்வு காணும் வல்லமை, மகிந்தா ஒருவருக்கே உண்டு! ஏனெ னில் வெல்லமுடியா புலிகளை வெற்றி கொண்டவர் மகிந்தா! சிங்கள மக்களை பொறுத்தவரை மகிந்தா ஒரு போர்வெற்றியாளன்! சிங்கள மாக புருசன், போரைவெற்றி கொண்டதால் அவரே சர்வதேசத்தின் முன் ஒரு போர் குற்றவாளி! மகிந்தாவின் தலை குறிவைக்கப்பட்டுள்ளது! சர்வேதசத்தினால் தனக்குள்ள கரையை கழுவிக்கொள்ள மகிந்தா வினால் மட்டுமே முடியும்! அவரே பொறுப்பு கூறுதலுக்கு உள்ளாக்க ப்பட்டவர், ரணிலோ மைத்திரியோ சந்திரிகாவோ அல்ல! எனவேதான் தானாக கவிழ இருந்த அரசாங்கத்தை, முண்டியடித்துக்கொண்டு, பிரதமர் பதவியை மிகிந்த ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் ஏணைய ராஜபக்சாக்களுக்கு பெருவிருப்பம் இல்லை! வெறும் 18 மாதமே உயிர் வாழும் நல்லாட்சி அரசாங்கத்தை ஏண் மகிந்த அவசர அவசரமாக கலைக்கவேண்டும்? ஏதோ ஒரு இராஜதந்திர நகர்வினால் மைத்திரி, மகிந்தாவை காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு விளைவே இந்த ஆட்சி கவிழ்ப்பு
தமிழருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று மகிந்தர் நினைக்கமாட்டார் மாறாக தானும் தம்பி கோட்டவும் தப்பவே ண்டும் என்பதற்காக, தம்மீதுள்ள கறையை அகற்ற மகிந்தா சில நகர் வுகளை செய்வார், அப்படி அவர் செய்யும் போது, கடும் அடிப்படைவாத சிங்களவர்களுக்கு, மஹா பீடத்துக்கு விளக்கம் சொல்ல மகிந்தா ஒரு வரால் மட்டுமே முடியும்!ஏனெனில் ஐரோப்பிய சாயல் கொண்ட, ரணிலைவிட , கடும் கோட்பாட்டாள்ரும், சிங்கள பெளத்த காவலனாக தன்னை அடையாளப்படுத்தும் மகிந்த சொன்னால் அதனை யாவரும் ஏற்றுகொள்வார்கள், அவர் மூலமாக நாம் இன பிரச்சனை சார்பாக முன்னோக்கி நகரமுடியும்! சர்வதேச நன்மதிப்பை பெற, பெளத்த மதத்தின் கீர்த்தி மீதான கரையை போக்க, தன்னை கீர்த்தி சிறீ சிங்கள தலைவனாக உருவகப்படுத்த தமிழர்களுக்கு சார்பான சில நக்ர்வுகளை துரிதமாக செய்வார் என்பது எனது அனுமானம்! அன்புடன் பேசாலைதாஸ்