சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அல்லது அதிகாரபூர்வ மொழியாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரச கரும மொழிகள் சட்டம் (Official Language Act) என்பதன் ஊடாக அப்போது ஆட்சி அதிகாரத்தை கைபற்றிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதே இந்த சட்டம். "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சி மொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்கள வர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.
வலது சாரி போக்கினையும், தாராளமயமாக்கல் கொள்கை, மேலைத்தேய அரசியல் மரபுகளை கொண்ட ஐக்கியதேசிய கட்சியானது, ஓரளவு கட்சியின் கொளகைகளுக்கேற்ற விதத்தில், சிறுபா ன்மை மக்களை அரவணைத்தபடி, தொடர்ச்சியாக, டி, எஸ், சேன நாயகா, அவரது மகன் டட்லி சேனநாயக்கா என்பவர்களினால் தொடர் அதிகாரத்தில் இருந்ததை சகித்துக்கொள்ளாத எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஐக்கியதேசிய கட்சியில் இருந்து பிரிந்து, இலங்கை சுதந்திரகட்சி SLFP என்பதை தற்போதைய ராஜபக்சாக்களின் தந்தை யாக இருந்த ராஜபக்சாவின் உதவியுடன் நிறுவப்பட்டதே இந்த சுதந்திர கட்சி,
எடுத்த எடுப்பிலே சுதேசியம், இனவாதம் என்பதை முன்னெடுத்து, இலங்கயில் உள்ள வறிய கிராமிய சிங்களவர் மத்தியில் செல்வாக்கு பெற்று, ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது, பெளத்த சமயம், சிங்கள மொழி, சுதேச வைத்தியம், சுதேச விவசாயம் இவைகளுடன் மகாவம்ச சிந்தனையுடன் ஒரு இனவாத கட்சியாக இந்த சுதந்திர கட்சி பயணித்தபடியால் மிகவிரைவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினா ர்கள். இவர்களின் தலை தூக்கலோடு ஆரம்பித்ததே இனச்சிக்கல்! இன்று வரை சுதந்திர கட்சியும் அதனிடம் இருந்து திரிபு பெற்ற சுதந்திர ஐக்கிய முன்னணி MEP சிங்கள இனவாதத்தை முன் நிறுத்திவருகின்றது. பெளத்த பேரினவாதத்தின் அதிர்வலையானது சகல சிங்கள கட்சிகளை யும் இனவாத அலைக்குள் இழுத்துவரப்பட்டன், அதிலே ஐகியதேசிய கட்சியும் அள்ளுண்டு போனது தவிர்கமுடியாத விளைவாகும்!
இந்த இனவாதத்திற்கு எதிராக அடிப்படை அரசியல் உரிமைகளை தார்மீக வழியில் போராடி பெற்றுக்கொள்ள எத்தணித்த தமிழர்களின் தார்மீக வழியிலான போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. இதன் விளைவு ஆயுத போராட்டத்தில் தமிழ் இளைஞர் கள் இறங்குவதற்கு இலங்கையில் இருந்த பெளத்த பேர்னவாதமே அடிப்ப டை காரணம். துர்ரதிஸ்டவசமாக இந்த ஆயுதப்போராட்டம் இந்திய எதிர்ப்பலை அழுத்தத்துடனும் பேச்சுயை சந்தித்தித்தபடியால், இந்தியாவின் துணையுடன் தமிழர்களின் அடிப்படை போராட்டமானது பயங்கரவாதம் என்ற கோனத்தில் சர்வதேசத்தின் பார்வை பதியப்பட்ட தன் எதிரொலியாக முள்ளிவாய்க்காலில் மெளனிக்கப்பட்டது,
மீண்டும் அதே சர்வதேச அனுசரனையுடனும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் வழி யாக இனப்பிரச்சனைக்கு ஒற்றை ஆட் சியின் வரம்புக்குள் போதிய அதிகாரங்களை மாகான சபை அதிகார வழிமூலமாக பெற்றுக்கொ ள்வதற்கான போக்கில் தமிழ் தேசிய கூட்ட மைப்பு செயல்படுகின்றது, எத்தனையோ விட்டுக்கொடுப்புகளுடன் அதிகபட்சமாக தமிழ் தரப்பு இற்ங்கிவந்துள்ளது, அது கூட கிடைக்குமா என்பது கேள்விக்குறியே? இன்னும் ஒரு வருட தவனைக்குள் பொது தேர்தல் வரப்போகின்றது, தேர்தலுக்கு முன்பு அரசியல் யாப்பு சீர்தி ருத்த வேலைகள் துரிதப்படுத்தும் அவசியம் உண்டு. ஆனாலும் அதற் கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன,
மீண்டும் ஐக்கியதேசிய கட்சி பலமான நிலையிலும், தமிழ்தேசிய கூட்டமைப்பும் போதிய ஆசனங்களுடன் எதிர் வரும் பொதுதேர்தலில் வெற்றி பெறுவார்களாக இருந்தால் இனப்பிர ச்சினை ஒரு தீர்வுக்கு வரும் என்று நம்பலாம், அதற்கு முன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னைத்தானே சுத்திகரிக்கவேண்டிய நிலையில் உள்ளது வெறுமனே பதவி பண ஆசைகளுடன் சுகபோகங்களை அனுபவிக்கும் பாராளமன்ற உறுப்பிணர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் இணைத்து கொள்ளப்படவேண்டும், புணர்வாழ்வு அழிக்கப்பட்ட முன்னாள் விடு தலை போராளிகளை தயங்காமல் களம் இறக்கவேண்டும், மாவீர ர்களின் குடும்பங்கள் அரசியலுக்கு இழுத்துவரவேன்டும், டெலோ ஈபி புளட் போன்ற முன்னாள் அரசபடை ஒட்டுண்ணிகளைவிட இவர்கள் மேலானவர்கள் என்பதே மக்களின் மனங்களில் இருக்கும் எண்ண ங்களாகும், 1956 இல் பற்றவைக்கப்பட இனவாத அலையில் போராடி மடிந்த மாவீரர் குடும்பங்களுக்கு கட்டாயம் தியாக உணர்வு இருக்கும் என்பதே எமது வாதம் அன்புடன் பேசாலைதாஸ்h
ttps://www.facebook.com/abu.afaaynaqedrin/videos/10154190960521729/?t=4