மன்னார் இ.போ.ச.சாலை ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பணிபகிஷ;கரிப்பு கைவிடப்பட்டது
(பிராந்திய செய்தியாளர்) 05.05.2016இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கான மன்னார் ஊழியர்களின் நலன் கருதி வவுனியாவில் இயங்கிவரும் மன்னார் சாலை கணக்காளர் காரி யாலயத்தை வவுனியாவிலிருந்து மன்னாருக்கு மாற்றும்படி இலங்கை போக்குவரத்து சபை வடக்கு இணைந்த மன்னார் தொழிற்சங்கம் முன் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை (05.05.2016) பணிபகிஷ;கரிப்பில்ஈடுபட்ட மன்னார் சாலை ஊழியர்கள் பகிஷ;கரிப்பை கைவிட்டு தங்கள் கடமைகளுக்கு திரும்பினர்.
மன்னார் இலங்கை போக்குவரத்து சபையில் கடமைபுரியும் ஊழியர்க ளின் நலன்கருதி மன்னாரில் இயங்க வேண்டிய மன்னார் இ.போ.ச. சாலை கணக்காளர் காரியாலயம் வவுனியாவில் இயங்கி வருவதால் இப்பகுதி ஊழியர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவற்றை மன்னாருக்கு மாற்றும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாவருக்கும் மன்னார் சாலை தொழிற்சங்கம் தெரிவித்திருந்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்தமையால் வியாழக்கிழமை (05.05.2016) மன்னார் இ.போ.ச.சாலை ஊழியர்கள் தங்கள் பணிபகிஷ;கரிப்பை மேற்கொண்டனர்.
பணிபகிஷ;கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள இ.போ.ச.சாலைக்கு முன்பாக பின்வரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தொங்கவிட்டு ஒன்று கூடியிருந்தனர்.
கணக்காளரின் அடாவடி நிறுத்தப்பட வேண்டும், தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், கணக்காளர் ஒருவரின் நலனுக்காக 220 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதா? வவுனியாவில் இயங்கும் மன்னாருக்குரிய கணக்காளர் காரியாலயம் உடன் மன்னாருக்கு மாற்றப்பட வேண்டும், கணக்காளரே ஊழியர்களை அச்சுறுத்தாதே என்ற வாசகங்கள் இவர்கள் இருந்த இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் அன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கான எந்தவித உள்ளூர் வெளியூர் போக்குவரத்து சேவைகளும் அதிகாலை முதல் நண்பகல் வரை நடைபெறவில்லை.
காலையில் இ.போ.ச.போக்குவரத்து சேவைகள் இடம்பெறாததால் மாணவர்கள் உட்பட பல பிரயாணிகள் பல சிரமங்களை எதிர்நோக்கியதால் வடமாகாண சபை உறுப்பினர் ரிவ்ஹான் பதியூதின் மன்னார் சாலைக்கு நேரடியாக சமூகமளித்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதுடன் சம்பந்தப்பட்ட மேல்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவாத்தை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து வடமாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் உபாலி கிரிபத்கொட மற்றும் வடமாகாண இ.போ.ச.சாலை செயல்பாட்டு முகாமையாளர் கே.கேதீஸ்வரன் மன்னாருக்கு விஐயத்தை மேற்கொண்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதைத் தொடர்ந்து நிலைமை சுமூக நிலைக்கு திரும்பியது
அதாவது மன்னாருக்கான கணக்காளர் அலுவலகம் எதிர்வரும் திங்கள் கிழமை (09.05.2016) மன்னாரில் இயங்கும் எனவும், மன்னார் கணக்காளராக இயங்கிவருபவரை உடன் மாற்றி புதியவரை நியமிப்பதாகவும் பணிபகிஷ;கரிப்பில் ஈடுபட்டவர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ் பணிபகிஷ;கரிப்பு முற்றுப்பெற்று நண்பகல் ஒரு மணிக்கு மன்னார் சாலை இ.போ.ச.சாலை போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
(படம்)
மன்னார் இ.போ.ச.சாலை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வியாழக்கிழமை (05.05.2016) பணிபகிஷ;கரிப்பை மேற்கொள்வதையும்
மன்னார் இ.போ.சபை போக்குவரத்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதையும்
இதனால் தனியார் பஸ் நிலையம் பிரயானிகளால் களைக்கட்டி இருப்பதையும் படங்களில் காணலாம்