Tuesday, May 3, 2016

மன்னார் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களும் போதைவஸ்து கடத்தல்களும் ஒரு பார்வை!

மன்னார் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களும்  போதைவஸ்து கடத்தல்களும் ஒரு பார்வை!  

மன்னார் மாவட்டத்தில் அன்மைக்காலங்களில் பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றது. நாடளவில் இக்குற்றச்செய ல்கள் அதிகரித்துள்ளது. போருக்கு பின்னர் ஒரு நாடு ஒரு சமூகம் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஆனால் மன்னார் மாவட்டத்தில் இந்த பிரச்சனை அதிகரிப்பத ற்கு என்ன காரனம் என்பதை ஆய்வு செய்து அதைதடுப்பதற் கான வழிகள் என்ன என்பதை கண்டறிவது சமூக ஆர்வலர்கள் புத்தி ஜீவிகளின் கடமையாகும். இந்த விடயத்தில் சமய தலைவ ர்கள்  ஆசிரிய சமூகம் கூடுதல் அக்கறை கொள்ளவேண்டியு ள்ளது. போருக்கு முன்னைய காலங்களில் கிராமங்கள், சமூகக ங்கள் தனித்துவம் கொண்டு இருந்தபடியால் பாலியல் குற்றச்செ யல்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை, போருக்குப்பின் அரச படைகள் ,இடம்பெயர்ந்து வந்தவர்கள், வறுமை, விதைவ கள் அதிகரிப்பு, இளவயது ஆண்கள் போரில் இறந்தது போக  எஞ் சியவர்களில்வெளி நாடுகளுக்கு கனிசமான அளவு புலம்பெயர் ந்து சென்றமை இதுபோன்ற பல, காரணிகள் இந்த விடயத்தில்
செல்வாக்கு செலுத்துகின்றன. இருந்த போதும் பாலியல் குற்ற செயல்கள் அதிகரிப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண் டும். பாலியல் குற்றவாளிகள் உருவாகுவதற்கு போதை வஸ்து பாவனையும், போதைவஸ்து கடத்துவதும் பெரும் பங்கு வகிக்கி ன்றது. தலைமன்னார் வழியாக போதை வஸ்து கடத்தப் படுவது சர்வதேச ரீதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.இதற்கு உள்ளூர் வத்தகர்கள் மறைமுகமாக உதவி செய்து, பெரும் செல்வந்தர் கள் ஆகியுள்ளார்கள். இப்படி பணத்தை தேடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு சமூகத்தில் இருந்து ஓரம் கட்டப்படவேண்டும். இதற்கு சமூக விழிப்புணர்வு எமது இளை ஞர் மத்தியில் உருவாகவேண்டும். அப்படி துணிச்சலாக முன் வரும் இளைஞர்களை சமூகம் வரவேற்று அவர்களுக்கு ஊக்க மும் உற்சாகமும் அளிக்கவேண்டும். போதைவஸ்து எமது மன்னார் வழியாக கடத்தப்படுவதை உடனடியாக நிறுத்தவேண் டும். போதை வஸ்து எமது சமூகத்தை சீரழிக்கும்.பாலியல் குற் றம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு மன்னார் மாவட்ட புலம் பெயர்ந்து  வாழும் மக்களும் உதவி செய்யவேண்டும். இது தொடர்பாக எமது இணையத்தளம் பூரண ஒத்துழைப்பு வழங்க தயாரக உள்ளது. நன்றி
அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் நோர்வே

No comments:

Post a Comment