வாடைக்காற்று ஆலமரம்! கடற்படைத்தளமாக மாறப்போகின்றதா?
பேசாலை வடக்கு கடற்கரை ஓரமாக, நான்காம் வட்டாரத்தை அண்மித்த பகுதி, அதாவது தற்போது கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி, துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடி க்கை மேற்கொளப்படுவதாக தகவல்கள் வெளிவந் துள்ளன. அதற்கான நிலத்தை, நில உரிமையாளர் களிடம் இருந்து வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அறியமுடிகி ன்றது. உண்மையில் அமையப்போவது என்ன?
ஒருசாரர் கருத்துப்படி, சிறியரக துறைமுகம் அமையவிருப்பதாக கூறுகி ன்றார்கள். சிலரோ இழுவைப்படகுகள் காற்று க்காலங்களில், பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஒரு படகுத்தளம் Yatch அமையவிருப்பதாக சொல்கின் றார்கள். இதில் இருந்து பேசாலை மக்களுக்கு சரி யானதொரு விளக்கம் இல்லை என அறியமுடிகின்றது.
பேசாலைக்கடற்கரை ஓரம் அதாவது பாடு என்று அழைக்கப்படுவது பேசாலை மக்களுக்கு சொந்தமானது! அத் தோடு பேசாலை மக்கள் சிலரின் நிலங்களும் இதற்காக பாவிக்கப்பட இருப்பதாக அறியமுடிகின்றது. அவ்வாறு நிலம் உரிமையாளரிடம் இருந்து வாங்கப்படுமானால், அதன் மீதுள்ள உரிமையும், அதனை ஒட்டிய பாட்டு உரிமையும் இழக்கப்படும்! இந்த படகுத்துறை யாரால் கட்டப்படுகின்றது? வெளிநாட்டு நிறுவணத்துக்காகவா? அல்லது அரசாங்கத்துக்காகவா? என்பதில் தெளிவு மக்களுக்கு இல்லை. அப்படி அது அமைக்கப்பட்டால், யாருடைய படகுகள் கட்டப்படும்? தனியே பேசாலை மக்களுக்காகவா? அல்லது எல்லோருக்காகவுமா? என்பது பற்றிய தெளிவு பேசாலை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
புயல் ஆபத்துகாலங்களில், மற்றைய பகுதிகளில் இருந்து வரும் படகுகளை காப்பாற்றவேண்டும் என்ற மீனவ ர்களின் தார்மீக அடிப்படையில் அடைக்கலம் கொடுக்கப்படலாம் அதில் தவறில்லை! ஆனால் நாளாந்த பாவனைக்காக எல்லோருக்கும் இடம் கொடுக்கும் நிலை ஏற்பட்டால், அதுபற்றி பேசாலை மக்கள், சிந்திக்க வேண்டும்? இது பாடு சம்பந்தமான உரிமை பிரச்சனை என்பதை என் உறவுகளே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!
அதுபோக ஏற்கனவே அந்த இடத்தில் ஒரு தற்காலிக கடற்படைத்தளம் இருக்கின்றது, எனவே கடற்படை களங்கள் தங்குவதற்கான உள் நோக்கம் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படலாம்! என்வே நாம் விழிப்பாக இருக்கவேண்டும்! நீங்கள் ஏற்கனவே அறிந்திரு ப்பீர்கள் சாகர்மாலா என்ற திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டம் தனியே இந்தியா மட்டுமல்ல, மாலைதீவு, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா என்பன உள்வாங்கப்படுகின்றது. அதாவது வங்காள விரிகுடா கடலை ஆழப்படுத்தி பல துறைமுகங்களை அமை த்து, கடல்வழி இன்னும் இதர பல முயற்சிகளுக்காக்வும் சாகர்மால திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த சாகர்மாலாவின் உள்நோக்கம், வங்காள விரிகுடா,இந்து சமுத்திரம் போன்ற பகுதியில், சீனாவின் முத்துமாலை திட்டத்தையும், சீனாவின் வர்த்தக கடற்பாதை, மீன்பிடி இவைகளை கட்டுப்படுத்துவதே அடிப்படை அம்சமாகின்றது. அந்தவ கையில் சிறியதும், பெரியதுமான துறைமுகங்கள் இந்தியா இலங்கை, மாலைதீவு, மலேசியா இதுபோன்ற நாடுகளின் கரையோரம் அமைய இருக்கின்றது. அதில் ஒரு திட்டமே, இரமேஸ்வரம் ஊடாக தலைமன்னார் பாதை அமைப்பது இடம்பெறுகின்றது. இவை எல்லாம் பல்தேசிய நிறு வணங்கள் நிதி குவித்து செயல்படுத்தி வருவதற்கான நிறைய ஆதார ங்கள் உண்டு. ஏற்கனவே தலைமன்னார் நடுக்குடா கரையோரம் பிரமாண்டமான ஹோட்டல் அமைக்கப்படுவது இதற்கான கட்டியமாக அமைகின்றது! என்வே பேசாலை மக்கள் நன்றாக சிந்தித்து, அமையவி ருப்பது என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment