Thursday, January 17, 2019

சிறைச்சாலைகளும் சித்தரவதைகளும்,,,,,


சிறைச்சாலைகளும்                                          சித்தரவதைகளும்,,,,, பேசாலைதாஸ்

                                                     சிறைச்சாலை என்பது குற்றம் செய்தவர்களை வதைக்கும் சிறைக்கூடம் என்பது இலங்கை போன்ற நாடுகளில் உள்ள காவல்துறை  மற்றும் சிறைக்காவலர்களின் கருத்தாக உள்ளது, இது உண்மையில் மனோவியாதியின் வெளிப்பாடாகும். சிறைத்தண்டனை யின் உண்மையான நோக்கம், குற்றம் செய்தவர்கள், தாங்கள் செய்த
குற்றத்தின் பக்கவிளைவுகளையும், அதா னல் பாதிக்கப்பட்டவர்களின் துயரங் களை சிந்தனை செய்து, அப்படிப்பட்ட துயரங்களுக்கு, விளைவுகளுக்கு தங் களால் ஆன பரிகாரங்கள் எது என் பதை தெரிந்து கொண்டு, குற்றவாளி களை சிறந்த பிரஜைகளாக மாற்றுவதே சிறைக் கூடங்களின் முக்கிய பணியாகும். அதுவே முக்கிய நோக்கமாகவும் அமையவேண் டும். 

                                                                     நோர்வே நாட்டில் மனோவியாதியினால் உந்தபட்ட அந்நாட்டின் பிரஜை ஒருவர் தன்னை ஒரு ஹீரோவாக நினைத் துக்கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களை துப்பாகியால் சுட்டு வீழ்த்தினான், அப்படிப்பட்ட ஒரு கொலையாளிக்கு தேவையான சட்ட தரணிகள் வசதி செய்து கொடுக்கப்பட்டு, மிகவும் கெளரவமான முறை யில் நோர்வே பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜராக்கி விசார ணைகள் மேற்கொண்டார்கள், பின்னர் அவருக்கு ஆயுள்கால தண்டனை வழங்கினார்கள், 

                                                   கைதி, குற்றவாளி என்பதற்கு மேலாக அவர்கள் மனிதன் என்ற சிந்தனையை மனதில் நிறுத்தவேண்டும், குற்றங்களும், குற்றவாளிகளும் பெருகுவதற்கு முக்கிய காரணம் பொருளாதார பிரச்ச
னைகளும், சில சமூக கட்டுப்பாடுகளுமே ஆகும். எனவே குற்றங்கள் பெருகுவதற்கான தார்மீக பொறுப்பை அந்த நாட்டின் அரசாங்கம் பொறு ப்பெடுத்து குற்றங்கள் பெருகாமல் இருப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அண்மைக்காலமாக இலங்கைச்சிறைக ளிலே சித்திரவதைகள் தாராளமாக இடம் பெறுகின் றது, 1983 ஆண்டு வெளிக்கடையில் நடைபெற்ற சிறைச்சாலை படுகொலைகள், இலங்கை க்கு அபகீர்த்தியை ஏற்படுத்தின,.

                                           தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் சித்திரவ தைகள் இடம்பெறுகின்றன, இதைவிட கொடுமை, சிறைச்சாலைகளில் சில சமூக விரோதிகள், போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். சில சிறைக்கைதிகள் அரசியல்வாதிகளனால், அரசியல் படுகொலைக் கருவிகளாக பாவிக்கப்படுகின்றனர். இதனால் சட்டத்தின் பார்வையில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மண்ணை தூவுகின்றார்கள். இந்த நிலை முற்றாகமாறவேண்டும்!  அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த அதிர்சியான காணொளிக்காட்சி அதிர்ச்சியளிக்கின்றது. அதுபற்றிய மேலதிக விபரம் இதோ!

தென்னிலங்கை சிறையில் கைதிகள் சித்திரவதை:வெளியான ஆதாரம்! (இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளினால் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தும் அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகி யுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்ததுடன் , குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக, மதத்திற்கான மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே சேனக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கண்ணாடி மற்றும் முட்களால் தாக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ள்ளார். 2011 ஆம் ஆண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் கூட 20 இற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் சித்திரவதைக்குட்படுத்தப்பட் டுள்ளனர்.இதேவேளை இரத்தினபுரி சிறைச்சாலையில் ஜீவானந்தன் எனப்படும் கைதி ஒருவர் கைகள் துண்டிக்கப்பட்டு சித்திரவதைக்குள் ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. 

                                         இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு சிறைச்சாலை பொறுப்பதிகாரிக ளால் இழைக்கப்பட்டுள்ள சித்திரவதையை வெளிப்படுத்தும் காணொளி ஆதாரம் கிடைக்க்பபெற்றுள்ளது. குறித்த கைதிகளை பார்வையிட வரும் உறவுகள் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைகேடா க நாடாத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறையில் இருந்த கைதிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment