மன்னார் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விடயம்!
மன்னார் மக்களே! மன்னார் மாவட்டம் பொருளாதாரம், கல்வி இவைகளில் பின் தள்ளப்பட்ட ஒரு மாவட்டமாக என்றுமே இரு ந்து வருகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் அதி காரம் ஆளும் சிங்களவர் கையில் என்று, அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். அப்ப டியானால் யாழ் மாவட்டம் கல்வியிலும் பொருளாதார வளத்தி லும் சிறந்து நிற்கின்றதே அதற்கு யார் காரணம்? வட பகுதி க்கான அத்தனை மூலவளங்களும் யாழ் குடா நாட்டுக்குள் முட க்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? யாழ் குடாவுக்குள் எத்த னை தொழிற்சாலைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா? கண்ணடி தொழிற்சாலை சீமேந்து தொழிற்சாலை, சவக்கார தொழிற்சாலை, மீன்பதனிடும் தொழிற்சாலை, ஐஸ் தொழிற்சா லை, நெசவாலைகள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அதைவிட கல்விசாலைகளுக்கு அளவே இல்லை, யாழ் பல்கல க்கழகம் அமைவதற்கு யாழ்ப்பாண நகரில் இடமே இல்லை, இரு ந்தபோதும் பரமேஸ்வரா என்ற உயர் சைவ கல்லூரியை அடகு வைத்து யாழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் மக்கள் தமது அதிருப்தியை அவ்வப்போது தெரிவித்தா ர்கள். அதற்கு பிரிதொரு காரணமும் உண்டு. தரப்படுத்தலின் விளைவாக தமது பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய கல்வி வசதி, மலையகம், மட்டக்களப்பு, மன்னார் போன்ற மாணவர்க ளுக்கு கிடைக்கின்றதே என்ற ஆதங்கம், மனப்புழுக்கம். யாழ் பல்கலைக்கழகத்தில் எமக்கெதிராக அயல் ஊர் மக்கள் தாக்கு தல் நடத்தினார்கள். தாக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நான் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்!
தமிழ் தலைமைகள் பரந்து பட்டு சிந்தித்திருந்தால் யாழ் பல்கலைக்கழகம் விஸ்வமடு அல்லது கிளிநொச்சி, வவுனியாவில் நிறுவப்பட்டிருக்கும். அப்படி நிறுவப்பட்டிருக்குமேயானல் அந்த இடங்கள் எப்போதே வளர்ச்சி கண்டிருக்கும், இப்போது நடப்பது என்ன? விரிவடைய வேண்டிய பல்கலைக்கழகம் போதிய இடம் இன்றி தவிக்கி ன்றது! யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தொழில் நுட்ப கல்லூரி, கோப்பாயில், கொழும்புதுறையில் ஆசிரிய கலாசாலைகள் ஏன் இல்லை! ஏன் இதுவரை மன்னாரில் ஒரு வளாகம், ஒரு தொழில் நுட்ப கல்லூரி, பிரமாண்டமான தனியார் கல்வி நிறுவணம், ஏன் தரமான ஒரு நூலகம் உண்டா? புனித சவேரியார் கல்லூரி கொஞ்சம் முன்னேறுகின்றது என்றால் உட னடியாக சித்தி வினாயகர் கல்லூரியை திடப்படுத்த மன்னார் கல்வி வலய அதிகாரமையம் ஆவல் கொள்ளும். இதுதானே மன்னாரில் நடக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் இதுவரையும் சிங்கள அரச அதிபர்களா? கடமை புரிந்தனர்? சிங்கள அதிப ர்கள் அல்லது ஆசிரிய பெருந்தகைகள் என்ன சிங்களவர்களா? எல்லோருமே யாழ் மண்ணிலே இருந்து வந்தவர்கள்தானே! இவர்களுக்கெல்லாம் மன்னார் மண் தமிழ் மண் என உணர்வு ஏன் இல்லாமல் போனது? மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, கல்லும் சாந்தும் கொண்டு கட்டிய கட்டிடங்கள் தேவையில்லை. உண்மையான அர்ப்பணிப்போடு யாழ் ஆசிரியர்கள் கடமை யாற்றி இருந்தால் மன்னர் எப்போதே கல்வியில் முன்னேறி இருக்கும்.
அன்பர்களே! 1981 இல் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியிலே மன்னார் மாவட்ட இளம் பட்டதாரிகள் சம்மேளனத்தை அங்குரார்ப்பணம் செய்து இரா ப்போசன விருந்துபசாரம் நடத்தினேன். அதிலே மன்னார் மாவ ட்டத்தின் அரசியல் கல்வி மற்றும் உள்ளூர் ஆட்சி அதிகாரம் மன்னார் மக்களின் கைகளுக்கு எப்போது வருகின்றதோ அப்பொழுதுதான் மன்னார் மாவட்டம் நிமிர்ந்து நிற்கும் என்று நான் உரையாற்றினேன் அவ்வுரை மறுநாள் காலையில் வீரகேசரியில் பிரசூரிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்திலே அரச நிர்வாகிகளாக இருந்தவர்கள் யாழ் படித்த வகுப்பினரே! அவர்கள் எமது ம ண்ணுக்கு எதுவுமே செய்யவில்லை. தங்களுக்கு அதிகாரமும் நிதியும் ஒதுக்கப்படவில்லை என ஒப்பாரிவைக்கலாம், ஆனால் உள்ளூர் மக்களின் சக்தியை கொண்டு ஏதாவது செய்திரு க்கலாம். உதாரணமாக எரியூட்டப்பட்ட யாழ் நூலகத்தை புண ரமைக்க யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வீதி வீதியாக சென்று நிதிசேகரித்தோம் அப்படிப்பட்ட பெரும் தன்னார்வ செயல்பாட்டினை மன்னார் மாவட்டம் கண்டிருக்குமா? அழகக்கோன் செய்தாரா? சூசைதாசன் செய்தாரா? இல்லை இப்போது உள்ள சாள்ர்ஸ், அடைக்கலமாவது செய்தார்களா? சார்ள்ச் அவர்களை தவிர, இவர்கள் எலோரும் மன்னார் மைந்தர்கள்தான் ஆனால் மன்னாரின் வளர்ச்சியை விட மன்னார் மக்களின் மேம்பாட்டினை விட தமது அரசியல் இருப்புக்காக தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிக்கின்றனர். தமிழ் தேசியம் என்றவுடன் கழுதையை நிறுத்தினாலும் வோட்டு போடுவோம் என்ற மனோபாவம் கொண்ட எமது மன்னார் மக்களின் தன்னார்வத்தை மட்டும் முதலாக கொண்டு எத்தனையோ அபிவிருத்தி பணிகளை இந்த பிழைப்பூதிய அரசியல்வாதிகள் செய்திருக்கலாம். இவர்கள் எதையுமே செய்யவில்லை. ஆக குறைந்த பட்ட்சம் சமூக விழிப்புணர்வு கூட்டமாவது நடத்துகின்றார்களா? ஆக தமிழ் தேசியவாதம் பற்றி மட்டும் கதைத்து வாக்குவேட்டைக்கு வருவார்கள் வேட்டை முடிந்ததும் ஓட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். எமது மன்னார் மக்கள் பஞ்சத்தினால் ஏழ்மையினால் பெரும் காணிகளை சிங்கள தரகு வியாபாரிகளுக்கு விற்கின்றார்களே! அந்த மக்களிளுக்கு உதவி செய்கின்றார்களா? வெளி நாடுகளில் உள்ள புலம் பெயர் மக்கள் அப்படிப்பட்ட காணிகளை விலை கொடுத்து வாங்குங்கள் என்று ஊக்கப்படுத்துகின்றார்களா? ஆக மொத்தத்தி தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு சமூக பொருளாதார
மேம்பாடு பற்றிய எத்தவிதமான அறிவும் இல்லை அக்கறையும் இல்லை. இனியும் இனியும் தமிழ் தேசியம் பற்றி கதைத்துக்கொண்டு மட்டந்தள்ளப்பட்ட சமூகமாக இருக்கப்போகின்றோமா? அதற்காக தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்படுங்கள் என்று நான் வாதிடவரவில்லை. தமிழ் தேசியவாதத்தை புத்திசாலித்தனமாக பாவியுங்கள். தேசிய உணர்வு அலைகளை காட்டவேண்டிய இடத்தில் காட்டுங்கள்!
பாராளமன்றத்திலே எமது பிரதிநிதிகள் மூலம் எதிரொலிக்கலாம், பிரதேச அபிவிருத்தி சபையிலே தமிழ் தேசிய கூட்டணி குந்தி இருப்பதால் நடக்கப்போவது என்ன எதுவுமே இல்லை? பாராளமன்ற தேர்தல் வரும் போது தமிழ் தேசியம் பற்றி சிந்திக்கலாம் ஆனால் உள்ளூராட்சி என்று வரும்போது அபிவிருத்தி பற்றி மாற்றி யோசிக்கலாமே! அரசாங்கத்தோடு ஒத்துபோகின்ற உள்ளூராட்சி இருந்தால்தானே வாதாடி ஆளும் வர்க்கத்தை ஏமாற்றி அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்
எனவே உள்ளூராட்சி தேர்தல் வெகு சீக்கிரம் வர இருக்கின்றது எனவே மன்னார் மக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் இழந்துபோகவேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.
எப்படி விடுதலைப்புலிகள் தமது இயக்கம் பற்றியும், தமது இயக்கம் ஒன்றே ஏக பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என விரும்பி, பல சிக்கலைகளை சந்தித்தார்களோ அதேபோல தமிழ் அரசுக்கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீச்சையும் பலத்தையும் குறைத்து, தமிழ் அரசு கட்சியை வளர்த்தெடுக்கும் போக்கில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றது. தமிழ் தேசியம் என்பதற்கு மேலாக கட்சி அரசியலே இவர்கள் விரும்புகின்றார்கள். தமது தமிழ் அரசுக்கட்சியை வளர்க்க பலப்படுத்தும் விதத்திலேயே தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். மன்னார் மாவட்டத்தில் தமது வசதிக்காக, மன்னாரைப்பிறப்பிடமாக இல்லாத ஒருவரை, அவரது கோடிக்கனக்கான பணத்தை கருத்தில் கொண்டு, ஒரு சீமேந்து வியாபாரியை மன்னார் தொகுதி பாராளமன்ற உறுப்பிணராக்கியுள்ளனர். ஏன் பெரும்பன்மையுள்ளவங்காலை பேசாலை தலைமன்னார் இப்படிப்பட்ட ஊர்களில் இருந்து தகுதியானவர்கள் இல்லை என்ற ஓர் உணர்வா? மக்களே சற்று சிந்தியுங்கள். வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை புத்திசாலித்தனமாக கையாளுங்கள் நன்றி அன்புடன் பேசாலைதாஸ்
Saturday, January 28, 2017
Tuesday, January 17, 2017
அரசியல் அமைப்பு சீர்திருத்தமும் தமிழர்களின் அபிலாசைகளும்,,,,,,

இன்று நாம் மிக முக்கியமான கட்டத்தில் நிற்கின்றோம். கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள், மறுவலத்தில் சொல்லப்போனால் மாறி மாறி தமிழ் சிறு பாண்மை இனத்தின் உரிமைகளையும் , உயிர்களையும் பறித்த, இரு கட்சிகள் ஏதோ ஒருவகையில் இணந்து நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதைவிட சிறப்பான அம்சம் என்னவென்றால் வரலாற்றில் இரண்டாவது தடவையாக தமிழ் சிறுபாண்மை கட்சியானது எதிர்க்கட்சி ஆசனத்தில் அம ர்ந்துள்ளது. மற்றைய கூட்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் இணந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிக்கட்சியாக இருப்பது ஜனநாயக விரோதமானது என்று குரல் எழுப்பியபோதும், அவை யாவும் கண க்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இலங்கையில் சிறுபாண்மை இனம் உயர் அதிகார சபையில் இருப்பதை எந்தவகையிலும் சிங்கள பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிலும் எங்கும் சிங்களப்பெரும்பான்மையே நிலைநாட்டப்படவேண்டும் என்ற சித்தாந்தம் பிரித்தானியா முடியாட்சியால் இலங்கையில் இறக்கு மதி செய்யப்பட்ட ஒரு சிந்தனையாகவே இருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1947 இல் உருவாக்கப்பட்ட டொனமூர் அரசிலமைப்பின் பாரளமன்ற ஜனநாயகம் என்ற பின்னனியில் பாராளமன்றத்தில் பெரும்பான்மை ஆசனத்தை எண்ணிகையின் (Simple Majority) நிருபிக்கும் ஒரு கட்சியே அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற சட்டவாக்கத்தில் சிங்களப் பெரும்பான்மையே இலங்கை அரசாங்கம் இலங்கை நாடு என்ற சிந்தனை ஓட்டத்தை பெரும்பான்மை சிங்களவரிடம் வேரூன்றி வளரவைத்துவிட்டது.
சிங்கள அரசியல்வாதிகள் தமது அரசியல் லாபங்களுக்காக பெளத்த இனவாத சிந்தனையை மக்க ளிடையே ஊட்டி அரசியல் லாபம் தேட முற்பட்டதின் விளைவாக புத்த பிரிவேனாக்களின் செல்வாக்கும் பெளத்த அமைப்புகளின் செல்வாக்கும் அரசியலில் ஆதிக்கம் செலுத்த தொடங்கின இதனால் அரசியலில் யார் தலமை தாங்குவது? எந்த கட்சி அரசாங்கம் அமை க்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் புற சக்தியாக பெளத்த மதம் விளங்குகின்றது. இலங்கை ஒரு நாடு, அதில் ஒற்றை ஆட்சியே இரு க்கவேண்டும், அதிலும் பெளத்த மதம் ஒன்றே அரச மதமாக இருக்க வேண்டும், சிங்கள மொழி மட்டுமே அரசகரு மொழியாகவும் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்ற இறுக்கமான கோட்பா டுகளுக்குள்ளேயே, இலங்கை அரசின் ஆட்சி, நிர்வாகம், சட்டம், நீதி எல்லாமே அடங்கியுள்ளது. இதனை மீறுபவர்கள் யாராக இருந்தா லும் அவர்கள் அரசியலில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்பதே மிகப் பெறும் உண்மையாகும். ஒரு நாட்டுக்குள் இரு இனங்கள், சமத்துவமான முறையில் அதிகார ங்களை பகிர்ந்து கொண்டு, புரி ந்துணர்வோடு, ஒற்றுமையாக, இனப்பிரச்சினையில் ஒரு தீர்வை க்கண்டு அபிவிருத்தியில் முன்னேறி, சுபீட்சம் காணலாம் என்ற கனவோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்றைய நல்லரசா ங்கத்தோடு நட்புறவை பேணிக்கொண்டு, அரசியல் அமைப்பு சீர் திருத்த வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பேச்சாளரும் யாழ் பாராளமன்ற உறுப்பிணருமான சுமந்திரன் அவர்களின் உரைகளில் இருந்து அவதானிக்க முடிகின்றது. தற்போது நடைபெற்றுக்கொண்டு இரு க்கின்ற அரசியல் அமைப்பு சீர்திருத்தம் எவ்வளவு தூரம் பயணி க்கும்? அது ஈட்டக்கூடிய இலக்குகள் எவை? தமிழர்களின் அபிலா சைகள் எந்தளவு தூரம் நிறைவேறும் என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னர் இலங்கை அரசியல் அமைப்பின் வரலாற்றை பினோக்கி பார்த்து, அவை சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பிரதிபலி த்ததா? என்று விளங்கிக்கொள்ள வரலாற்றை பின் நோக்கி பார்ப்பது அவசியமாகின்றது. ,,,,,,,,,,,,,, (தொடரும்)
1801 ஆண்டு முதல் பிரித்தானிய முடியாட்சியானது இலங்கையில் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கம் ஒன்றையே நிறுவினர். 1796 முதல் 1801 வரை இலங்கை பிரிட்டிஸ் கிழக்கிலங்கை வர்த்தக சங்கத்தினால் பரிபாலிக்கப்பட்டு வந்தது, பின்னர் 1815 ஆண்டு கண்டியின் வீழ்ச்சிக்குப்பின்னர் முழு இலங்கையும் பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் வந்தபொழுது சட்டசபை ஒன்றின் மூல்மாக இலங்கையரையும் உள்ளடக்கிய ஒரு சட்டசபையும் Legislative Council நிருவாக சபையும் கோல்புறுக் கமிசானால் 1833 இல் உண்டாக்கப்பட்டது. இது ஒரு அதிகாரமற்ற சபையாகவே காணப்பட்டது, அதாவது பிரித்தானிய பாராளமன்றத்தில் இலங்கைக்காக இயற்றப்படும் சட்டங்களை அமுலாக்கும் ஒரு அமுலாக்கல் பிரிவாகவே இது காணப்பட்டது.இந்த நிலைமையை சட்டசபை பிரதிநிதிகள் எதிர்த்தபடியால்1864 இல் இந்த சட்ட சபை வடிவம் களைக்கப்பட்டது.அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்று இலங்கை புத்திஜீவிகள் வற்புறுத்தியதின் விளைவாக 1910 இல் மக்கலம் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.இதன் விளைவாக உத்தியோகப்பட்ட உறுப்பிணர்கள் 9 இருந்து 20 ஆக உயர்த்தப்பட்டது அதில் 4 பேர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பிணர்கள் ஆவார்கள் 2 ஐரோப்பிய உறுப்பிணரும் ஒரு பரங்கிஅய்ரும் ஒரு படித்த சிங்களவரும் எல்லாமாக 4 பேர் தெரிவு செய்யப்பட்டனர். மக்கலம் சீர்திருத்ததிற்குப்பின்னர் 1822 இல் சேர் மனிங் சீர்திருத்தம் Manning Devonshire Reforms. கொண்டுவரப்பட்டது அதிலும் கூட சட்ட சபை நிவாக சபை பிரதி நிதிகளின் எண்ணிக்கையே கூட்டப்படதே தவிர அதிகார பகிர்வு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் முழுவது பிரிட்டிஸ் வசமே இருந்தது. அதிகார பலமற்ற பிரதிந்திகள் எண்ணிக்கை கூடி இருந்தாலும் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் தொகுதிவாரியாகவோ அல்லது எண்ணிக்கை ரீதியாகவோ ச்மபலம் பேணப்படாமல் சிங்களவருக்கே அதிக எண்ணிக்கை வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் அரசியல் சாசன வரலாற்றில் டொனமூர் அரசியல் சீர்திருத்தமானது பல வழிகளில் ஏனைய சீர்திருத்தங்களவிட பல விடயங்களில் சிறப்புத்தன்மை வாய்ந்தது எனலாம். முதன் முதலாக வெள்ளை இன குடிய்ற்ற நாடுகளுக்கு உதாரணம் கனடா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா போண்ற குடியேற்ற நாடுகளுக்கு அப்பால் கறுப்பினத்து குடியேற்ற நாடுகள், இலங்கை, கரிபியன், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இலங்கையிலேயே முதன் முதலாக சர்வ ஜன வாக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாவதாக பல் இன மக்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒரு அமைப்பை பாராளமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தது.
இரண்டாவதாக பல் இன மக்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒரு அமைப்பை பாராளமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தது. அதாவது இன அடிப்படையில் பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்கு பதிலாக பிர்தேசவாரியாக பிரதினிதிகளை தெரிவு செய்யும் முறையை அறிமுகம் செய்தது. தேசிய சபையில் State Council 61 உறுப்பீனர்கள் இதில் 50 பேர் பிரதேச வாரியாக தெரிவானார்கள் இதன் படி பிரதேசவாரியாக அதிகமான இன மக்கள் வாழும் பகுதியில் அவ்வப்பகுதி இனமக்கள் நன்மை அடைவர் என டொனமூர் எதிர்பார்த்தார் ஆனால் இந்த பொறி முறையை உடைக்கும் விதமாக சிங்கள தலமைகள் குடியேற்றவாதம் என்னும் கருவியை கையாண்டனர்.. ,,,,,,,,,,,,,, (தொடரும்)
அன்புடன் பேசாலைதாஸ் B.A(Hones) M.A (London) Political science

Saturday, January 14, 2017
வில் பத்தும் ஈழத்தமிழரும்
வில் பத்தும் ஈழத்தமிழரும்
நந்திக்கடலில் அஸ்தமனாமன ஈழத்தமிழரின் விடியலும் விடுதலை யும், அதனைத்தொடர்ந்து வந்த நல்லாட்சி எனும் அரசாங்கம், ஈழ த்தமிழருக்கு நியாமான தீர்வை கொடுக்கும் என்று தமிழ் மக்களை நம்பவைத்து பலத்த ஆதரவுடன் எதிர்க்கட்சி என்ற நிலைக்கு வந்து விட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எதையுமே சாதிக்கவி ல்லை. தமிழர்கள் தத்தமது பூர்வீக இடங்களில் குடியமர்த்தப்படு வார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரு கின்றது. வடபுலத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் அது தன்னக த்தே கையகப்படுத்திக்கொண்ட பெரும் நிலங்கள், இன்னமும் விடுபடவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இன்னமும் கேள்விகுறியாக உள்ளது. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைபுலிகளின் உறுபிணர்கள் புணர்வாழ்வு என்ற போர்வையில், அரச புலனாய்வின் தீவிரகண்கானிப்பில் வை க்கப்பட்டு பின்னர் ஒவ்வொருவராக மர்மமான முறயில் மரணிப்ப தும் நடந்தவண்ணம் உள்ளது. மாவீரர்களது குடும்பங்கள், அவர்க ளது விதவைகள் பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டு கவனிப்பார் அற்று, விபச்சார வாழ்கைக்கு தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலையை பார்க்கின்றோம். இவையெல்லாம் இவ்வாறு இருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தோடு தேனிலவில் ஈடுபட்டு ள்ளது
இது ஒரு புறமிருக்க தற்பொழுது நாடாளு மன்றம், அரசியலமைப்பு நிறுபண சபையாக மாற்றப்பட்டு புதிய் அரசியலமைப்பு பற்றிய ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. எதிர்காலத்தில் அமையவுள்ள இந்த அரசியமைப்பு சட்டமானது தமிழர்களது சுயாட்ச்சி, வடக்கு கிழக்கு இணைந்த தாயக பூமி, அவர்களது மதம் கலாச்சாரம் இவைகளை பூரண சுத ந்திரமாக கையளும் நிலைக்கு புதிய அரசியல் அமைப்பு இடம் கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நல்லாட்ட்சி அரசாங்கமோ ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு என்று சொல்லிக்கொ ண்டு சமஸ்ட்டி என்ற சொல்லைக்கூட ஜீரணிக்க முடியாமல் வயி ற்றை தடவிக்கொண்டு இருக்கின்றது. அவசர அவசரமாக புத்த சிலைகள் நிறுவப்பட்டு புதிய புதிய பெளத்த வழிபாட்டு இடங்கள் உதயமாகின்றன. மீள்குடியேற்றம் என்ற பெயரில் நல்லாட்சி அரசா ங்கம் வெளிநாட்டு நிதி உதவியுடன் பெளத்த மக்களை தமிழர்க ளின் பூர்வீக இடங்களில் குடியேற்றுவதுடன் வர்த்தக கட்டிடங்க ளையும் நிறுவுகின்றது. இது தெரியாமல் நமது ஊரவர்கள் தமது பெரும் காணிகளை கஸ்டத்தின் மத்த்யில் விற்பனை செய்கின்ற னர்.
இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதிதியூன் அவர்கள் இடம் பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை வட பகுத்யில் குடியேற்றுவதில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றார்.முசலி, மரி ச்சுக்கட்டி இன்னும் வில்பத்துக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்களில் அவர்களை குடியேற்றுவ தில் அயராது உழைக்கின்றார்.. அவர்து செயல்பாட்டை கடந்த அரசாங்கம் எதிர்த்தது, சிங்கள இனவெறி பிக்குகள் சங்கங்கள் கட்சிகள் வெகுவாக எதிர்த்தன ஏன் இவரது வளர்ச்சியை பொறு த்துகொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் கூட இன்னமும் எதிர்த்து க்கொண்டே இருகின்றது.அதேபோல தமிழ தேசிய கூட்டமைப்போ தமிழ் மக்கள் அமைப்புகளோ முஸ்லீம் மக்களது மீள்குடியேற்ற த்தில் அக்கறை காட்டாமல் வாளா இருப்பது வேதனை அளிக்கி ன்றது. புலிகளினாலும் அரச இறாணுவத்தினாலும் முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முஸ்லீம் மக்கள் அவரவர் இடங்களில் குடியமர்த்தப்படுவது நமது மண்ணை பாதுகாக்கும் செயலுக்கு ஒப்பானது. முஸ்லீம் மக்களது அரசியல் நிலைப்பாட்டில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், அமைச்சர் ரிஷாட் அவர்கள் மீதது சில கண்டங்கள் விமர்சனங்கள் இருக்க லாம் ஆனால் அவை எல்லாவற்றையும் முஸ்லீம் மக்கலது மீள் குடியேற்றத்தின் மீது காட்டுவது நமக்கு நாமே குழிபறிப்பது போலாகும்.
அன்புடன் பேசாலைதாஸ்

Subscribe to:
Posts (Atom)