Saturday, January 14, 2017

வில் பத்தும் ஈழத்தமிழரும்

  வில் பத்தும் ஈழத்தமிழரும்
நந்திக்கடலில் அஸ்தமனாமன ஈழத்தமிழரின் விடியலும் விடுதலை யும், அதனைத்தொடர்ந்து வந்த நல்லாட்சி எனும் அரசாங்கம், ஈழ த்தமிழருக்கு நியாமான தீர்வை கொடுக்கும் என்று தமிழ் மக்களை நம்பவைத்து பலத்த ஆதரவுடன் எதிர்க்கட்சி என்ற நிலைக்கு வந்து விட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எதையுமே சாதிக்கவி ல்லை. தமிழர்கள் தத்தமது பூர்வீக இடங்களில் குடியமர்த்தப்படு வார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரு கின்றது. வடபுலத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் அது தன்னக த்தே கையகப்படுத்திக்கொண்ட பெரும் நிலங்கள், இன்னமும் விடுபடவில்லை.
                                                            தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இன்னமும் கேள்விகுறியாக உள்ளது. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைபுலிகளின் உறுபிணர்கள்  புணர்வாழ்வு என்ற போர்வையில், அரச புலனாய்வின் தீவிரகண்கானிப்பில் வை க்கப்பட்டு பின்னர் ஒவ்வொருவராக மர்மமான முறயில் மரணிப்ப தும் நடந்தவண்ணம் உள்ளது. மாவீரர்களது குடும்பங்கள், அவர்க ளது விதவைகள் பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டு கவனிப்பார் அற்று, விபச்சார வாழ்கைக்கு தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலையை பார்க்கின்றோம். இவையெல்லாம் இவ்வாறு இருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தோடு தேனிலவில் ஈடுபட்டு ள்ளது
                                                    இது ஒரு புறமிருக்க தற்பொழுது நாடாளு மன்றம், அரசியலமைப்பு நிறுபண சபையாக மாற்றப்பட்டு புதிய் அரசியலமைப்பு பற்றிய ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. எதிர்காலத்தில் அமையவுள்ள இந்த அரசியமைப்பு சட்டமானது தமிழர்களது சுயாட்ச்சி, வடக்கு கிழக்கு இணைந்த தாயக பூமி, அவர்களது மதம் கலாச்சாரம் இவைகளை பூரண சுத ந்திரமாக கையளும் நிலைக்கு புதிய அரசியல் அமைப்பு இடம் கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நல்லாட்ட்சி அரசாங்கமோ ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு என்று சொல்லிக்கொ ண்டு சமஸ்ட்டி என்ற சொல்லைக்கூட ஜீரணிக்க முடியாமல் வயி ற்றை தடவிக்கொண்டு இருக்கின்றது. அவசர அவசரமாக புத்த சிலைகள் நிறுவப்பட்டு புதிய புதிய பெளத்த வழிபாட்டு இடங்கள் உதயமாகின்றன. மீள்குடியேற்றம் என்ற பெயரில் நல்லாட்சி அரசா ங்கம் வெளிநாட்டு நிதி உதவியுடன் பெளத்த மக்களை தமிழர்க ளின் பூர்வீக இடங்களில் குடியேற்றுவதுடன் வர்த்தக கட்டிடங்க ளையும் நிறுவுகின்றது. இது தெரியாமல் நமது ஊரவர்கள் தமது பெரும் காணிகளை கஸ்டத்தின் மத்த்யில் விற்பனை செய்கின்ற னர்.
                                                இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதிதியூன் அவர்கள் இடம் பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை வட பகுத்யில் குடியேற்றுவதில்  ஆர்வமாக செயல்பட்டு வருகின்றார்.முசலி,  மரி ச்சுக்கட்டி இன்னும் வில்பத்துக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்களில் அவர்களை குடியேற்றுவ தில் அயராது உழைக்கின்றார்.. அவர்து செயல்பாட்டை கடந்த அரசாங்கம் எதிர்த்தது, சிங்கள இனவெறி பிக்குகள் சங்கங்கள் கட்சிகள் வெகுவாக எதிர்த்தன ஏன் இவரது வளர்ச்சியை பொறு த்துகொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் கூட இன்னமும் எதிர்த்து க்கொண்டே இருகின்றது.அதேபோல தமிழ தேசிய கூட்டமைப்போ தமிழ் மக்கள் அமைப்புகளோ முஸ்லீம் மக்களது மீள்குடியேற்ற த்தில் அக்கறை காட்டாமல் வாளா இருப்பது வேதனை அளிக்கி ன்றது. புலிகளினாலும் அரச இறாணுவத்தினாலும் முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முஸ்லீம் மக்கள் அவரவர் இடங்களில் குடியமர்த்தப்படுவது நமது மண்ணை பாதுகாக்கும் செயலுக்கு ஒப்பானது. முஸ்லீம் மக்களது அரசியல் நிலைப்பாட்டில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், அமைச்சர் ரிஷாட் அவர்கள் மீதது சில கண்டங்கள் விமர்சனங்கள் இருக்க லாம் ஆனால் அவை எல்லாவற்றையும் முஸ்லீம் மக்கலது மீள் குடியேற்றத்தின் மீது காட்டுவது நமக்கு நாமே குழிபறிப்பது போலாகும்.
                                                                               அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment