Tuesday, January 17, 2017

அரசியல் அமைப்பு சீர்திருத்தமும் தமிழர்களின் அபிலாசைகளும்,,,,,,

அரசியல் அமைப்பு சீர்திருத்தமும் தமிழர்களின் அபிலாசைகளும்,,,,,,
இன்று நாம் மிக முக்கியமான கட்டத்தில் நிற்கின்றோம். கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள், மறுவலத்தில் சொல்லப்போனால் மாறி மாறி தமிழ் சிறு பாண்மை இனத்தின் உரிமைகளையும் , உயிர்களையும் பறித்த, இரு கட்சிகள் ஏதோ ஒருவகையில் இணந்து நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதைவிட சிறப்பான அம்சம் என்னவென்றால் வரலாற்றில் இரண்டாவது தடவையாக தமிழ் சிறுபாண்மை கட்சியானது எதிர்க்கட்சி ஆசனத்தில் அம ர்ந்துள்ளது. மற்றைய கூட்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் இணந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிக்கட்சியாக இருப்பது ஜனநாயக விரோதமானது என்று குரல் எழுப்பியபோதும், அவை யாவும் கண க்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இலங்கையில் சிறுபாண்மை இனம் உயர் அதிகார சபையில் இருப்பதை எந்தவகையிலும் சிங்கள பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிலும் எங்கும் சிங்களப்பெரும்பான்மையே நிலைநாட்டப்படவேண்டும் என்ற சித்தாந்தம் பிரித்தானியா முடியாட்சியால் இலங்கையில் இறக்கு மதி செய்யப்பட்ட ஒரு சிந்தனையாகவே இருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1947 இல் உருவாக்கப்பட்ட டொனமூர் அரசிலமைப்பின் பாரளமன்ற ஜனநாயகம் என்ற பின்னனியில் பாராளமன்றத்தில் பெரும்பான்மை ஆசனத்தை எண்ணிகையின் (Simple Majority) நிருபிக்கும் ஒரு கட்சியே அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற சட்டவாக்கத்தில் சிங்களப் பெரும்பான்மையே இலங்கை அரசாங்கம் இலங்கை நாடு என்ற சிந்தனை ஓட்டத்தை பெரும்பான்மை சிங்களவரிடம் வேரூன்றி வளரவைத்துவிட்டது.
                                                                         சிங்கள அரசியல்வாதிகள் தமது அரசியல் லாபங்களுக்காக பெளத்த இனவாத சிந்தனையை மக்க ளிடையே ஊட்டி அரசியல் லாபம் தேட முற்பட்டதின் விளைவாக புத்த பிரிவேனாக்களின் செல்வாக்கும் பெளத்த அமைப்புகளின் செல்வாக்கும் அரசியலில் ஆதிக்கம் செலுத்த தொடங்கின இதனால் அரசியலில் யார் தலமை தாங்குவது? எந்த கட்சி அரசாங்கம் அமை க்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் புற சக்தியாக பெளத்த மதம் விளங்குகின்றது. இலங்கை ஒரு நாடு, அதில் ஒற்றை ஆட்சியே இரு க்கவேண்டும், அதிலும் பெளத்த மதம் ஒன்றே அரச மதமாக இருக்க வேண்டும், சிங்கள மொழி மட்டுமே அரசகரு மொழியாகவும் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்ற இறுக்கமான கோட்பா டுகளுக்குள்ளேயே, இலங்கை அரசின் ஆட்சி, நிர்வாகம், சட்டம், நீதி எல்லாமே அடங்கியுள்ளது. இதனை மீறுபவர்கள் யாராக இருந்தா லும் அவர்கள் அரசியலில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்பதே மிகப் பெறும் உண்மையாகும். ஒரு நாட்டுக்குள் இரு இனங்கள், சமத்துவமான முறையில் அதிகார ங்களை பகிர்ந்து கொண்டு, புரி ந்துணர்வோடு, ஒற்றுமையாக, இனப்பிரச்சினையில் ஒரு தீர்வை க்கண்டு  அபிவிருத்தியில் முன்னேறி, சுபீட்சம் காணலாம் என்ற கனவோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்றைய நல்லரசா ங்கத்தோடு நட்புறவை பேணிக்கொண்டு, அரசியல் அமைப்பு சீர் திருத்த‌ வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பேச்சாளரும் யாழ் பாராளமன்ற உறுப்பிணருமான சுமந்திரன் அவர்களின் உரைகளில் இருந்து அவதானிக்க முடிகின்றது. தற்போது நடைபெற்றுக்கொண்டு இரு க்கின்ற அரசியல் அமைப்பு சீர்திருத்தம் எவ்வளவு தூரம் பயணி க்கும்? அது ஈட்டக்கூடிய இலக்குகள் எவை? தமிழர்களின் அபிலா சைகள் எந்தளவு தூரம் நிறைவேறும் என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னர் இலங்கை அரசியல் அமைப்பின் வரலாற்றை பினோக்கி பார்த்து, அவை சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பிரதிபலி த்ததா? என்று விளங்கிக்கொள்ள வரலாற்றை பின் நோக்கி பார்ப்பது அவசியமாகின்றது. ,,,,,,,,,,,,,,  (தொடரும்)
                                                             

   1801 ஆண்டு முதல் பிரித்தானிய முடியாட்சியானது இலங்கையில் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கம் ஒன்றையே நிறுவினர். 1796 முதல் 1801 வரை இலங்கை பிரிட்டிஸ் கிழக்கிலங்கை வர்த்தக சங்கத்தினால் பரிபாலிக்கப்பட்டு வந்தது, பின்னர்  1815 ஆண்டு கண்டியின் வீழ்ச்சிக்குப்பின்னர் முழு இலங்கையும் பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் வந்தபொழுது சட்டசபை ஒன்றின் மூல்மாக இலங்கையரையும் உள்ளடக்கிய ஒரு சட்டசபையும்  Legislative Council நிருவாக சபையும் கோல்புறுக் கமிசானால்  1833 இல் உண்டாக்கப்பட்டது. இது ஒரு அதிகாரமற்ற சபையாகவே காணப்பட்டது, அதாவது பிரித்தானிய பாராளமன்றத்தில் இலங்கைக்காக இயற்றப்படும் சட்டங்களை அமுலாக்கும் ஒரு அமுலாக்கல் பிரிவாகவே இது காணப்பட்டது.இந்த நிலைமையை சட்டசபை பிரதிநிதிகள் எதிர்த்தபடியால்1864 இல் இந்த சட்ட சபை வடிவம் களைக்கப்பட்டது.அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்று இலங்கை புத்திஜீவிகள் வற்புறுத்தியதின் விளைவாக 1910 இல் மக்கலம் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.இதன் விளைவாக உத்தியோகப்பட்ட உறுப்பிணர்கள் 9 இருந்து 20 ஆக உயர்த்தப்பட்டது அதில் 4 பேர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பிணர்கள் ஆவார்கள் 2 ஐரோப்பிய உறுப்பிணரும் ஒரு பரங்கிஅய்ரும் ஒரு படித்த சிங்களவரும்  எல்லாமாக 4 பேர் தெரிவு செய்யப்பட்டனர். மக்கலம் சீர்திருத்ததிற்குப்பின்னர் 1822 இல் சேர் மனிங் சீர்திருத்தம் Manning Devonshire Reforms. கொண்டுவரப்பட்டது அதிலும்  கூட சட்ட சபை நிவாக சபை பிரதி நிதிகளின் எண்ணிக்கையே கூட்டப்படதே தவிர அதிகார பகிர்வு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் முழுவது பிரிட்டிஸ் வசமே இருந்தது. அதிகார பலமற்ற பிரதிந்திகள் எண்ணிக்கை கூடி இருந்தாலும் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் தொகுதிவாரியாகவோ அல்லது எண்ணிக்கை ரீதியாகவோ ச்மபலம் பேணப்படாமல் சிங்களவருக்கே அதிக எண்ணிக்கை வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் அரசியல் சாசன வரலாற்றில் டொனமூர் அரசியல் சீர்திருத்தமானது பல வழிகளில் ஏனைய சீர்திருத்தங்களவிட பல விடயங்களில் சிறப்புத்தன்மை வாய்ந்தது எனலாம். முதன் முதலாக வெள்ளை இன குடிய்ற்ற நாடுகளுக்கு  உதாரணம் கனடா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா போண்ற குடியேற்ற நாடுகளுக்கு அப்பால் கறுப்பினத்து குடியேற்ற நாடுகள், இலங்கை, கரிபியன், இந்தோனேசியா போன்ற‌ நாடுகளில் இலங்கையிலேயே முதன் முதலாக சர்வ ஜன வாக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாவதாக  பல் இன மக்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒரு அமைப்பை பாராளமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தது.
 இரண்டாவதாக  பல் இன மக்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒரு அமைப்பை பாராளமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தது. அதாவது இன அடிப்படையில் பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்கு பதிலாக பிர்தேசவாரியாக பிரதினிதிகளை தெரிவு செய்யும் முறையை அறிமுகம் செய்தது. தேசிய சபையில் State Council 61 உறுப்பீனர்கள் இதில் 50 பேர் பிரதேச வாரியாக தெரிவானார்கள் இதன் படி பிரதேசவாரியாக அதிகமான இன மக்கள் வாழும் பகுதியில் அவ்வப்பகுதி இனமக்கள் நன்மை அடைவர் என டொனமூர் எதிர்பார்த்தார் ஆனால் இந்த பொறி முறையை உடைக்கும் விதமாக சிங்கள தலமைகள் குடியேற்றவாதம் என்னும் கருவியை கையாண்டனர்..   ,,,,,,,,,,,,,,  (தொடரும்)      
         அன்புடன் பேசாலைதாஸ்    B.A(Hones) M.A (London) Political science

No comments:

Post a Comment