மன்னார் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விடயம்!
மன்னார் மக்களே! மன்னார் மாவட்டம் பொருளாதாரம், கல்வி இவைகளில் பின் தள்ளப்பட்ட ஒரு மாவட்டமாக என்றுமே இரு ந்து வருகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் அதி காரம் ஆளும் சிங்களவர் கையில் என்று, அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். அப்ப டியானால் யாழ் மாவட்டம் கல்வியிலும் பொருளாதார வளத்தி லும் சிறந்து நிற்கின்றதே அதற்கு யார் காரணம்? வட பகுதி க்கான அத்தனை மூலவளங்களும் யாழ் குடா நாட்டுக்குள் முட க்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? யாழ் குடாவுக்குள் எத்த னை தொழிற்சாலைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா? கண்ணடி தொழிற்சாலை சீமேந்து தொழிற்சாலை, சவக்கார தொழிற்சாலை, மீன்பதனிடும் தொழிற்சாலை, ஐஸ் தொழிற்சா லை, நெசவாலைகள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அதைவிட கல்விசாலைகளுக்கு அளவே இல்லை, யாழ் பல்கல க்கழகம் அமைவதற்கு யாழ்ப்பாண நகரில் இடமே இல்லை, இரு ந்தபோதும் பரமேஸ்வரா என்ற உயர் சைவ கல்லூரியை அடகு வைத்து யாழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் மக்கள் தமது அதிருப்தியை அவ்வப்போது தெரிவித்தா ர்கள். அதற்கு பிரிதொரு காரணமும் உண்டு. தரப்படுத்தலின் விளைவாக தமது பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய கல்வி வசதி, மலையகம், மட்டக்களப்பு, மன்னார் போன்ற மாணவர்க ளுக்கு கிடைக்கின்றதே என்ற ஆதங்கம், மனப்புழுக்கம். யாழ் பல்கலைக்கழகத்தில் எமக்கெதிராக அயல் ஊர் மக்கள் தாக்கு தல் நடத்தினார்கள். தாக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நான் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்!
தமிழ் தலைமைகள் பரந்து பட்டு சிந்தித்திருந்தால் யாழ் பல்கலைக்கழகம் விஸ்வமடு அல்லது கிளிநொச்சி, வவுனியாவில் நிறுவப்பட்டிருக்கும். அப்படி நிறுவப்பட்டிருக்குமேயானல் அந்த இடங்கள் எப்போதே வளர்ச்சி கண்டிருக்கும், இப்போது நடப்பது என்ன? விரிவடைய வேண்டிய பல்கலைக்கழகம் போதிய இடம் இன்றி தவிக்கி ன்றது! யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தொழில் நுட்ப கல்லூரி, கோப்பாயில், கொழும்புதுறையில் ஆசிரிய கலாசாலைகள் ஏன் இல்லை! ஏன் இதுவரை மன்னாரில் ஒரு வளாகம், ஒரு தொழில் நுட்ப கல்லூரி, பிரமாண்டமான தனியார் கல்வி நிறுவணம், ஏன் தரமான ஒரு நூலகம் உண்டா? புனித சவேரியார் கல்லூரி கொஞ்சம் முன்னேறுகின்றது என்றால் உட னடியாக சித்தி வினாயகர் கல்லூரியை திடப்படுத்த மன்னார் கல்வி வலய அதிகாரமையம் ஆவல் கொள்ளும். இதுதானே மன்னாரில் நடக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் இதுவரையும் சிங்கள அரச அதிபர்களா? கடமை புரிந்தனர்? சிங்கள அதிப ர்கள் அல்லது ஆசிரிய பெருந்தகைகள் என்ன சிங்களவர்களா? எல்லோருமே யாழ் மண்ணிலே இருந்து வந்தவர்கள்தானே! இவர்களுக்கெல்லாம் மன்னார் மண் தமிழ் மண் என உணர்வு ஏன் இல்லாமல் போனது? மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, கல்லும் சாந்தும் கொண்டு கட்டிய கட்டிடங்கள் தேவையில்லை. உண்மையான அர்ப்பணிப்போடு யாழ் ஆசிரியர்கள் கடமை யாற்றி இருந்தால் மன்னர் எப்போதே கல்வியில் முன்னேறி இருக்கும்.
அன்பர்களே! 1981 இல் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியிலே மன்னார் மாவட்ட இளம் பட்டதாரிகள் சம்மேளனத்தை அங்குரார்ப்பணம் செய்து இரா ப்போசன விருந்துபசாரம் நடத்தினேன். அதிலே மன்னார் மாவ ட்டத்தின் அரசியல் கல்வி மற்றும் உள்ளூர் ஆட்சி அதிகாரம் மன்னார் மக்களின் கைகளுக்கு எப்போது வருகின்றதோ அப்பொழுதுதான் மன்னார் மாவட்டம் நிமிர்ந்து நிற்கும் என்று நான் உரையாற்றினேன் அவ்வுரை மறுநாள் காலையில் வீரகேசரியில் பிரசூரிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்திலே அரச நிர்வாகிகளாக இருந்தவர்கள் யாழ் படித்த வகுப்பினரே! அவர்கள் எமது ம ண்ணுக்கு எதுவுமே செய்யவில்லை. தங்களுக்கு அதிகாரமும் நிதியும் ஒதுக்கப்படவில்லை என ஒப்பாரிவைக்கலாம், ஆனால் உள்ளூர் மக்களின் சக்தியை கொண்டு ஏதாவது செய்திரு க்கலாம். உதாரணமாக எரியூட்டப்பட்ட யாழ் நூலகத்தை புண ரமைக்க யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வீதி வீதியாக சென்று நிதிசேகரித்தோம் அப்படிப்பட்ட பெரும் தன்னார்வ செயல்பாட்டினை மன்னார் மாவட்டம் கண்டிருக்குமா? அழகக்கோன் செய்தாரா? சூசைதாசன் செய்தாரா? இல்லை இப்போது உள்ள சாள்ர்ஸ், அடைக்கலமாவது செய்தார்களா? சார்ள்ச் அவர்களை தவிர, இவர்கள் எலோரும் மன்னார் மைந்தர்கள்தான் ஆனால் மன்னாரின் வளர்ச்சியை விட மன்னார் மக்களின் மேம்பாட்டினை விட தமது அரசியல் இருப்புக்காக தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிக்கின்றனர். தமிழ் தேசியம் என்றவுடன் கழுதையை நிறுத்தினாலும் வோட்டு போடுவோம் என்ற மனோபாவம் கொண்ட எமது மன்னார் மக்களின் தன்னார்வத்தை மட்டும் முதலாக கொண்டு எத்தனையோ அபிவிருத்தி பணிகளை இந்த பிழைப்பூதிய அரசியல்வாதிகள் செய்திருக்கலாம். இவர்கள் எதையுமே செய்யவில்லை. ஆக குறைந்த பட்ட்சம் சமூக விழிப்புணர்வு கூட்டமாவது நடத்துகின்றார்களா? ஆக தமிழ் தேசியவாதம் பற்றி மட்டும் கதைத்து வாக்குவேட்டைக்கு வருவார்கள் வேட்டை முடிந்ததும் ஓட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். எமது மன்னார் மக்கள் பஞ்சத்தினால் ஏழ்மையினால் பெரும் காணிகளை சிங்கள தரகு வியாபாரிகளுக்கு விற்கின்றார்களே! அந்த மக்களிளுக்கு உதவி செய்கின்றார்களா? வெளி நாடுகளில் உள்ள புலம் பெயர் மக்கள் அப்படிப்பட்ட காணிகளை விலை கொடுத்து வாங்குங்கள் என்று ஊக்கப்படுத்துகின்றார்களா? ஆக மொத்தத்தி தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு சமூக பொருளாதார
மேம்பாடு பற்றிய எத்தவிதமான அறிவும் இல்லை அக்கறையும் இல்லை. இனியும் இனியும் தமிழ் தேசியம் பற்றி கதைத்துக்கொண்டு மட்டந்தள்ளப்பட்ட சமூகமாக இருக்கப்போகின்றோமா? அதற்காக தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்படுங்கள் என்று நான் வாதிடவரவில்லை. தமிழ் தேசியவாதத்தை புத்திசாலித்தனமாக பாவியுங்கள். தேசிய உணர்வு அலைகளை காட்டவேண்டிய இடத்தில் காட்டுங்கள்!
பாராளமன்றத்திலே எமது பிரதிநிதிகள் மூலம் எதிரொலிக்கலாம், பிரதேச அபிவிருத்தி சபையிலே தமிழ் தேசிய கூட்டணி குந்தி இருப்பதால் நடக்கப்போவது என்ன எதுவுமே இல்லை? பாராளமன்ற தேர்தல் வரும் போது தமிழ் தேசியம் பற்றி சிந்திக்கலாம் ஆனால் உள்ளூராட்சி என்று வரும்போது அபிவிருத்தி பற்றி மாற்றி யோசிக்கலாமே! அரசாங்கத்தோடு ஒத்துபோகின்ற உள்ளூராட்சி இருந்தால்தானே வாதாடி ஆளும் வர்க்கத்தை ஏமாற்றி அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்
எனவே உள்ளூராட்சி தேர்தல் வெகு சீக்கிரம் வர இருக்கின்றது எனவே மன்னார் மக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் இழந்துபோகவேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.
எப்படி விடுதலைப்புலிகள் தமது இயக்கம் பற்றியும், தமது இயக்கம் ஒன்றே ஏக பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என விரும்பி, பல சிக்கலைகளை சந்தித்தார்களோ அதேபோல தமிழ் அரசுக்கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீச்சையும் பலத்தையும் குறைத்து, தமிழ் அரசு கட்சியை வளர்த்தெடுக்கும் போக்கில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றது. தமிழ் தேசியம் என்பதற்கு மேலாக கட்சி அரசியலே இவர்கள் விரும்புகின்றார்கள். தமது தமிழ் அரசுக்கட்சியை வளர்க்க பலப்படுத்தும் விதத்திலேயே தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். மன்னார் மாவட்டத்தில் தமது வசதிக்காக, மன்னாரைப்பிறப்பிடமாக இல்லாத ஒருவரை, அவரது கோடிக்கனக்கான பணத்தை கருத்தில் கொண்டு, ஒரு சீமேந்து வியாபாரியை மன்னார் தொகுதி பாராளமன்ற உறுப்பிணராக்கியுள்ளனர். ஏன் பெரும்பன்மையுள்ளவங்காலை பேசாலை தலைமன்னார் இப்படிப்பட்ட ஊர்களில் இருந்து தகுதியானவர்கள் இல்லை என்ற ஓர் உணர்வா? மக்களே சற்று சிந்தியுங்கள். வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை புத்திசாலித்தனமாக கையாளுங்கள் நன்றி அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment