Sunday, March 26, 2017

ரஜனியின் வருகையை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை

Sunday, 26 March 2017


ரஜனியின் வருகையை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை

என் அன்பு ஈழத்தமிழா! தமிழர் என்று அழைகப்படுபவர்கள் பல வகையினர் உண்டு. ஈழத்தமிழர். இலங்கைத்தமிழர், இந்திய தமிழர், புலம் பெயர் தமிழர். சர்வதேச தமிழர். இதில் ஈழத்தமிழர் என்று நான் கருதுவது வடக்கு கிழக்கு பூர்வீக ஈழத்து மண்ணில் வாழும் தமிழர்கள். இலங்கை தமிழர்கள் என நான் சுட்டிக்காட்ட விரும்புவது ஈழம் அல்லாத இலங்கையில் பூர்வீகமாக வாழும் தமிழர்கள் (இதில் மலையக மக்களும் அடக்கம்) இந்திய தமிழர் என்பது இந்தியா குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள், புலம்பெயர் மக்கள் என்பது இலங்கையை விட்டு புலத்தில் வாழும் ஈழத்து மக்கள், சர்வதேச தமிழர்கள் என்பது சிங்கை. மலேசியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள். தமிழர்கள் என்பதில் இன்னொரு வகையும் உண்டு. அதாவது ஏதிலிகள். சொந்த மண்ணில் எல்லாவற்றையும் போரிலே இழந்து எதுவுமற்று இன்னும் எதிர்பார்ப்புகளுடன் வாழும் எம் உறவுகள். ( இது என் சொந்த அனுமானம்)

                                                           இந்த உறவுகளுக்கு  தாயகத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜாவால் நடத்தப்படும் ஞானம் பவுண்டேசன் அளபரிய சேவைகள் செய்வதை நாம் அறிவோம். மகிந்த ஆட்சியின் போதும் இந்த நிறுவணம் செய்தது, அது விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. இன்றும் செய்துகொண்டிருக்கின்றது.
லைக்கா நிறுவணம், நடிகர் விஜய்ஜை வைத்து கத்தி படம் எடுத்தார்கள். இப்போது ரஜனி காந்தை வைத்து படம் பண்ணி பணம் உழைக்கின்றனர். அது அவர்களின் தொழில் சார் நடவடிக்கை. தாயகத்தை பிறபிடமாக கொண்ட ஒரு தொழில் அதிபர், எமது உறவு ஒன்று, தன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை விமர்சிக்கும் உரிமையோ, அல்லது அதை தடுக்கும் உரிமையோ தொல் திருமாவளவனுக்கோ, வைக்கோவுக்கோ அருகதை இல்லை. தேசியத்தலைவரின் பிம்பத்தில், தமது தோற்றத்தை பிரதிபலிக்க எத்தணிக்கும் எத்தர்கள் இவர்கள். தொல்திருமாவளவன், கருணாநிதியின் துரோகத்துக்கு துணைபோனார். வைகோ உருப்படியான ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கமால், பகக்கம் பக்கம் பாய்ந்து கேவலப்பட்டுப்போனார். இப்போது ரஜனிகாந் எதிலிகளை அதுவும் ஒரு தாயக தமிழனின் நிறுவண அழைப்பின் பேரில் அங்கு செல்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இதனை தீர்மானிப்பது. ஏதிலிகள் தான் தவிர வேறு யாருமல்ல‌
                                                                                                                                                பேசாலைதாஸ்

No comments:

Post a Comment