Monday, November 27, 2017

*அவர்களின் அகத்தில் நிலம் இருந்தது. அகழ்ந்தனர். -போல் செலான்.

*அவர்களின் அகத்தில் நிலம் இருந்தது. அகழ்ந்தனர்.
 -போல்  செலான்.
1987ஜூலை மாதத்தின் இறுதி நாட்கள். இந்தியப் படை யினர் பெருங்கவச வாகனங்களில் பல்லாயிரக்கணக்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தபோது யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நான் சென்றேன். என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றவர்கள் Saturday Review வார இதழின் ஆசிரியர் காமினி நவரத்னவும் இன்னொரு நெருங்கிய நண்பரும் (அவருடைய பெயரை இப்போதைக்குத் தவிர்த்துவிடுகிறேன்.) காமினி நவரத்ன இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர்; 1983 ஜூலைப் படுகொலைகளின்போது தடைசெய்யப்பட்டிருந்த சற்றர்டே றிவியூ இதழ் மறுபடியும் ஒழுங்காக வெளிவரக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்கப் பலரும் தயங்கிய வேளை துணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டவர். பத்திரிகைத் துறையில் எனது வழிகாட்டி; சிங்களவர்.
கொழும்புவில் மகரகமவிலிருந்த காமினியின் வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தபோது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரான தீவிரமான போராட்டம் வெடித்தது. ஜே.வி.பியும் அதனோடு இணைந்த பலரும் மகரகம சந்தியில் இலங்கை அரசுக்குச் சொந்தமான பல வாகனங்களுக்குத் தீ வைத்தபோது நானும் காமினியின் மைத்துனரும் மகரகம சந்தியிலிருந்து காமினியின் வீட்டுக்குச் செல்லும் சிறு தெருவில் ஓட்டோவுக்காகக் காத்திருந்தோம். நான்கு பிக்குமார் அந்த அழிப்பில் முன்னணி வகித்தார்கள். கடைகள் சிலவும் கொளுத்தப்பட்டன.
மகரகம பாதுகாப்பில்லை என உணர்ந்த காரணத்தால் குமாரி ஜயவர்த்தனவின் ஏற்பாட்டில் ஹெந்தல எனும் இடத்தில் அமைந்திருந்த அவரது கடலோர வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தேன்.
அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் நான் பணிபுரிந்து வந்த சற்றர்டே றிவியூ அலுவலகத்துக்கு இந்தியப் படையின் உயரதிகாரிகள் சிலர் ‘நல்லெண்ண விஜயம்’ மேற்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் காமினி நவரத்னவும் நானும் அங்கிருக்கவில்லை என்பதால் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கனக ராஜநாயகத்தை அவர்கள் சந்தித்தார்கள். அவர் துணிச்சலானவர். அவரை ‘ஆடு’ என்றுதான் ஏ.ஜே. அழைப்பார். அந்தச் சந்திப்பு நல்ல அறிகுறி அல்ல என்பது நமது நிறுவனத்தினருக்கு அப்போதே தெரிந்துவிட்டது. எமது அச்சகம், அலுவலகம், எம்மிடம் இருந்த கோப்புகள் எல்லாவற்றையும் அவர்கள் பார்வையிட்டார்கள். எமது கருத்தியல் என்ன என்று கேட்டார்கள். ‘சேரன் ருத்ரமூர்த்தியைக் கட்டாயம் பார்க்க வேண்டும். அழைத்து வர முடியுமா?’ என்று பணிப்பாளரைக் கேட்டார்கள். நல்ல காலம். அப்போது நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டேன்.
பத்திரிகை ஆசிரியர் குழுவில் பலருக்கும் அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்த விஸ்வலிங்கத்துக்கும் பல காலமாக நல்லுறவு இருக்கவில்லை. எனவே பத்திரிகை தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதில் எப்போதும் முரண்பாடுகளும் குழப்பங்களும் ஏற்படும்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நான் இலங்கையை விட்டு வெளியேறி நெதர்லாந்துக்குச் சென்றேன். ஓரிரு மாதங்களில் மறுபடியும் போர் ஆரம்பமாகிவிடும் என்பதையும் ஊகித்திருந்தேன். இப்படி ஊகிப்பதற்கு நுண்ணறிவு எதுவும் அன்று தேவைப்பட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 22, 1987இல் நயினாதீவிலும் முல்லைத்தீவிலும் தமிழ் மக்கள்மீது இலங்கைப் படையால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பூநகரியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் எங்கள் பத்திரிகை, செய்தி வெளியிட்டது. ‘Accord Runs into Snags?’ என்று தலைப்பிட்டு ஏ.ஜே. எழுதியிருந்தார். ஆகஸ்ட் 18, 1987 அன்று ஜே.ஆர். ஜயவர்த்தன மீதும் அவரது அமைச்சரவை மீதும் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சில் மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபேவிக்கிரம கொல்லப்பட்டார். பிரேமதாச, லலித் அதுலத்முதலி ஆகியோர் காயமடைந்தனர். ஒப்பந்தத்தை எதிர்த்த தென்னிலங்கைக் கட்சிகளின் ஆதரவாளர்கள், உறுப்பினர்களுள் சிலரே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த என் நண்பர்கள் சிலர், “சண்டையைத் தவிர வேற வழி இல்லை. ஆனால் எப்ப மூளும் என்றுதான் சொல்ல முடியாமல் இருக்கிறது,” என்று சொன்னார்கள்.
பிற்பாடு திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தமை, இடைக்கால நிர்வாக அமைப்பை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்துவதற்கு ஜே.ஆர். அரசு ஏற்படுத்திய நெருக்கடிகள், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கடலில் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலும் அவர்கள் தற்கொலை செய்தமையும், ஒப்பந்தம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அவநம்பிக்கை, இந்திய உளவுச் சேவை மற்றைய இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்க ஆரம்பித்தமை, ஜே.என். தீக்ஷித்தின் அகங்காரம் மிக்க செயற்பாடுகள் எனப் பல்வேறு காரணங்களால் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அக்டோபர் 11, 1987 போர் மூண்டது.
சற்றர்டே றிவியூ வெளிவருவது சாத்தியமில்லை என்பது ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் ஒக்டோபர் 17 அன்று வரை பத்திரிகை வெளியாகியது. இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட கொக்குவில், தலையாழிப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள் போன்றவற்றை விவரமாக வெளியிட முடிந்திருந்தாலும் ஈழமுரசு, முரசொலி ஆகிய நாளிதழ்களையும் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி ‘நிதர்சன’த்தின் ஒளிபரப்புக் கோபுரத்தையும் வெடிவைத்துத் தகர்த்ததுபோல சற்றர்டே றிவியூ தகர்க்கப்படவில்லை. எல்லாவற்றையும் மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் அல்லது வெடிவைப்போம் என்ற எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டது. போர் உக்கிரமாக நிகழ்ந்தபோதும் இந்தியப் படையினர் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய தகவல்களும் விவரங்களும் கொழும்பு ஊடகங்களில் வரவில்லை அல்லது அவற்றுக்கு முற்றாகத் தெரிந்திருக்கவில்லை. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று சற்றர்டே றிவியூக்கு எழுதிக்கொண்டிருந்த டி.பி.எஸ். ஜெயராஜ் கொழும்புவுக்குத் தப்பிச் சென்று அங்கே விவரமாகக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தபோதுதான் இந்தியப்படையின் படுகொலைகளும் தாக்குதல்களும் பற்றிய விவரங்கள் பரவலாகத் தெரிய ஆரம்பித்தன.
அக்டோபர் 21, அன்று யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் நிகழ்ந்த பிற்பாடு கொழும்புவிலிருந்து காமினி நவரத்தின New Saturday Review என்று ஒரு பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். அது  போட்டோகாப்பி  (xerox) வடிவத்திலேயே முதலில் வெளியிடப்பட்டது. அதன் முதலாவது இதழிலேயே படுகொலைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
New Saturday Reviewஇதழ்களைக் காமினி நவரத்தின உடனுக்குடன் நெதர்லாந்திலிருந்த எனக்கு அனுப்பிவைப்பார். அங்கே அவ்விதழ்களின் இன்னொரு பதிப்பை நானும் அங்கு படித்துக்கொண்டிருந்த சித்திரலேகா மௌனகுருவும் வெளியிட்டு ஐரோப்பாவிலுள்ள செய்தி நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பிவந்தோம். இந்த வெளியீட்டைச் செய்ய எம்முடன் பணிபுரிந்தவர்கள் பேரா. றேச்சல் கூரியன், பேரா. அம்ரிதா சாச்சி, யான் பிரெண்ஸ்மா ஆகியோர். இவர்கள் அனைவரும் நெதர்லாந்தில் நான் கல்விகற்ற Institute of Social Studies என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்கள். அங்குதான் நானும் சித்திரலேகாவும் சுனிலா அபேசேகராவும் படித்துக்கொண்டிருந்தோம்.
றேச்சல் கூரியன் என்னுடைய ஆய்வு நெறியாளராக இருந்தவர். இலங்கை மலையக மக்களின் குடியுரிமைச் சிக்கல்கள், கூலி உழைப்பின் நெருக்கடிகள் பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவர். இந்து ராம், கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற ஆளுமைகள் றேச்சல் கூரியனின் நண்பர்கள். நெதர்லாந்து வந்தால் அவர்கள் றேச்சல் கூரியனின் வீட்டில் தங்குவது வழமை. எங்களுடைய இலக்கிய, அரசியல் ஒன்றுகூடல்கள் பலவும் அவரது வீட்டிலேயே நடைபெறுவது வழக்கம். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நா. சண்முகதாசன், Saturday Review / TRRO நிறுவனர் கந்தசாமி ஆகியோர் நெதர்லாந்து வந்திருந்தபோதும் றேச்சல் கூரியன் வீட்டிலேயே ஒன்றுகூடல்கள் நிகழ்த்தியிருந்தோம்.
1987 நவம்பர் மாதம் முதல் வாரம் என்று நினைவு. இந்து ராம் நெதர்லாந்து வருகிறார் என்று றேச்சல் கூரியன் சொன்னார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தினதும் இந்தியப் படைகளதும் தீவிரமான ஆதரவாளராக அவர் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எனினும் இந்தியப் படைகளின் படுகொலைகள், அண்மைக்கால நிகழ்வுகள் பற்றி அவருடன் கலந்துரையாடலாம் என றேச்சல் கூரியன் கருதினார். இரவுநேரச் சிறு ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தார் அவர்.
New Saturday Reviewவின் இரண்டு இதழ்களை அப்போது வெளியிட்டிருந்தோம். யாழ். மருத்துவமனைப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள், யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் நூலகத்திலும் இந்தியப் படையினர் பலர் மலங்கழித்து மாசாக்கிய அவலம் பற்றிய விரிவான செய்திகள் அவற்றில் வெளிவந்திருந்தன.
இந்து ராமுடனான உரையாடல் தொடக்கத்தில் இணக்கமாக இருந்தாலும் இந்தியப் படையினரின் படுகொலைகளைப் பற்றிப் பேசியபோது கடினமாக மாறிவிட்டது. ‘ஒரு கையைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டுதான் அவர்கள் போர் புரிகிறார்கள்; மிகப் பண்பட்ட படையினர் அவர்கள். நீங்கள் சொல்கிற மாதிரி எத்தகைய படுகொலைகளையும் அவர்கள் புரிந்திருக்கமாட்டார்கள்,’ என்று உணர்ச்சிவசப்பட்டார்New Saturday Review இதழ்களை அப்போது அவருக்குக் கொடுத்தேன். அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ‘இவையெல்லாம் புலிகளின் பொய்ப் பிரச்சாரம். இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் காவிக்கொண்டு திரிகிறீர்கள்?’ என்று மிகவும் காட்டமாக எங்களைக் கேட்டார்.
‘இல்லை. இது காமினி நவரத்தின வெளியிடுவது. அவர் உங்களது நண்பர்தானே. அவரும் புலியா? இதனை நானும் றேச்சலும் இங்கே இருக்கிற மற்றை நண்பர்களும்தான் இங்கே வெளியிடுகிறோம்,’ என்று அவருக்குச் சொல்லும்போதே அவர் கோபத்துடன் எழுந்து தன்னுடைய அறைக்குப் போய்விட்டார். இந்தியப் படையினர் எத்தகைய அநியாயமும் புரியாதவர்கள், அவர்கள் இலங்கை வரும்போது ஒருகையைப் பின்புறம் வைத்துக்கொண்டு மறுகையில் காந்தியின் ‘சத்தியசோதனை’ நூலை ஏந்திக்கொண்டுதான் வந்தார்கள் என்று தீவிரமாக நம்புகிறவர்கள் இப்போதும் பலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தருவதல்ல.
யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் ஏராளமான இந்தியப் படையினர் மலங்கழித்தமை பற்றிப் பெயர் குறிப்பிடாமல் ஏ.ஜே. கனகரத்தினா New Saturday Reviewவில் எழுதியிருந்த கட்டுரை இந்திய, இந்தியப் படை ஆர்வலர்கள் பலரது கோபத்தைக் கிளப்பியிருந்தது. அந்தக் கட்டுரையில் நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரான வி.எஸ். நைப்பால் எழுதிய ‘An area of Darkness’ (1964) என்ற இந்தியப் பயண நூலில் இருந்து ஏ.ஜே. மேற்கோள் காட்டியிருந்தார். நைப்பால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ட்ரினாட் (Trinidad)டில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முதல் தடவையாக இந்தியாவுக்குச் சென்ற அனுபவப் பண்பாட்டு அதிர்ச்சி பற்றியதே அந்த நூல். இந்தியா எங்கிலும் பொது இடங்களில் மக்கள் மலம் கழிப்பது சாதாரணமாக இருந்தமையைக் கண்ணுற்ற நைப்பால், இந்தியாவைப் போகுமிடமெங்கும் சுரணையற்று மலங்கழிக்கும் ஒரு மிகப்பெரிய கூட்டமாக உருவகப்படுத்தி இருந்தார். அதற்காக நிறைய விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
‘இந்தியர்கள் எல்லா இடங்களிலும் மலம் கழிக்கிறார்கள்; பெரும்பாலும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் மலம் கழிக்கிறார்கள்; கடற்கரையில் மலம் கழிக்கிறார்கள்; ஆற்றங்கரைகளில் மலம் கழிக்கிறார்கள்; தெருக்களில் மலம் கழிக்கிறார்கள்; அவர்களுக்கு ஒளிவுமறைவு தேவையே இல்லை,’ என்று நைப்பால் குற்றம்சாட்டியிருந்தார். இத்தகைய பின்னணியில் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் பல்கலைக்கழக நூலகத்திலும் இந்தியப் படையினர் மலங் கழித்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பதே கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் உக்கிரமான சண்டை நிகழ்ந்த வேளை காயப்பட்ட பொதுமக்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவர்களையும் இந்தியப் படையினர் பல சந்தர்ப்பங்களில் கொன்றனர். காயமுற்றவர்களையும் கொல்வதென்பது இந்தியப் படையினரின் நடைமுறையாக இருந்தது. இந்தியப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களின்போது கோவில்களில் தஞ்சமடைந்திருந்த மக்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எனது அம்மம்மாவின் சகோதரி மகளான ராணி அக்காவும் அவர் குடும்பமும் சண்டிலிப்பாயில் இருந்தனர். எறிகணை வீச்சு மோசமாக இருந்ததால் அவர்களும் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தனர். மோசமாகக் காயப்பட்டிருந்த ஒரு வயோதிபரை ஒருவரும் கவனிக்காத நிலையில் ராணி அக்காவின் கணவர் மருத்துவமனைக்குக் காரில் அழைத்துச் சென்றார். இடையில் இந்தியப் படையினர் காரை மறித்து, காரோடு அனைவரையும் எரித்தார்கள்.
1989 மே மாதம் நெதர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினேன். சுன்னாகம் ரயில் நிலையத்திலிருந்து அளவெட்டிக்கு நானும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாச்சாரக் குழுவில் ஒன்றாகப் பணியாற்றிய ஞானசேகரனும் வந்தோம். அளவெட்டி தலைகீழாக மாறியிருந்தது. எங்களுடைய வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் மூன்று இந்தியப் படை முகாம்கள் இருந்தன. அவர்களுடைய காவலரண்களையும் முகாம்களையும் கடக்காமல் எங்குமே போகமுடியாமல் இருந்தது. நான் ஊர் சேர்ந்த மறுநாள் இந்தியப் படையினர் வீட்டைச் சுற்றி வளைத்துவிட்டனர். ஊரில் புதிதாக யார் வந்தாலும் அவர்களுக்கு எப்படியோ விவரம் தெரிந்துவிடுகிறது என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நாட்டில் இல்லாமல் இருந்தேன் என்பதை எனது கடவுச்சீட்டைப் பார்த்து உறுதிசெய்த பிற்பாடு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் எனக்கு வேலை எதுவும் இருக்கவில்லை. சற்றர்டே றிவியூ வெளியீட்டாளர்களான நியூ ஈரா நிறுவனத்தினர் திசை என்னும் வார இதழை அப்போது வெளியிட்டு வந்தார்கள். மு. பொன்னம்பலம் ஆசிரியராக இருந்தார். அ. யேசுராசா முக்கிய பொறுப்பில் இருந்தார். இருவாரத்துக்கொருமுறை ‘ஏகாந்தன்’ என்ற பெயரில் ‘அங்கிங்கெனாதபடி’ என்று ஒரு பத்தி எழுத ஆரம்பித்தேன். எனினும் அரசியல் கட்டுரைகள் எதுவும் எழுத முடியவில்லை. கலை, பண்பாடு சார்ந்தே எழுத முடிந்தது. நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது.
அளவெட்டியிலிருந்து யாழ் நகர் வரும் போதெல்லாம் பல இந்தியப் படை முகாம்களில் சைக்கிளை விட்டு இறங்கி நடந்து போக வேண்டும். இது ஆரம்பத்தில் எனக்குத் தெரியாதபடியால் தெல்லிப்பழையில் மகாஜனக் கல்லூரியின் சிற்பி என அழைக்கப் படும் அதிபர் தெ.து. ஜயரத்தினம் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த படைமுகாமில் இருந்த படையினர் எனது தலைக்கு மேலால் சுட்டார்கள். அன்றிலிருந்து, “சைக்கிள் சிற்; யூ வோக்” (Cycle sit; You walk!) என்ற அவர்கள் கட்டளை எனக்குத் தாரக மந்திரமாகிவிட்டது.
அந்த முகாமிலிருந்தவர்களும் அளவெட்டியிலிருந்த முகாம்களில் இருந்தவர்களும் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் நேரம் வரிசையாகத் தெருவால் நடந்துபோவார்கள். வேலிகளில் இருக்கும் பூவரசு, கிளுவை மரங்களில் கிளைகளை ஒடித்து அவற்றால் சைக்கிளில் செல்லும் பாடசாலை மாணவிகளுக்கு அடிப்பதை அவர்கள் வழமையாகக் கொண்டிருந்தார்கள். சிலர் தெருவின் குறுக்கே நின்று மாணவிகளின் மார்பகங்களையும் பிடிப்பார்கள். இவற்றையெல்லாம் வெறுப்போடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டுதான் நான் செல்ல வேண்டியிருந்தது.
அளவெட்டியில் எமது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடைக்கு அருகாமையிலிருந்த இந்தியப் படை முகாம் சித்திரவதை முகாமாகவே பெரும்பாலும் இயங்கியது. எங்கள் ஊரில் இந்தியப் படையால் பிடிக்கப்பட்டு அங்கு கொண்டுசெல்லப்பட்டவர்களின் தாய், தந்தையர் சிலரோடு நான் மொழிபெயர்ப்பாளனாக அங்கு செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்த ஓர் அதிகாரிக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. வதைக்கூடத்துக்குப் பொறுப்பாக ஒரு தமிழர் இருந்தாலும் அவர் பேசுவதற்கோ உதவுவதற்கோ வரவில்லை.
இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் சிறுசிறு குழுக்களாக எல்லா இடங்களிலும் திரிந்தார்கள். இரவுகளில் திடீரென யாராவது வீட்டுக்குச் சென்று அன்றிரவு அங்கே தங்குவார்கள். அதிகாலையில் சென்றுவிடுவார்கள். இந்தத் தகவல் இந்தியப்படைக்குத் தெரிந்துவிட்டால் வீட்டுக்காரர்களைச் சுடுவார்கள்; இப்படியாகக் கொல்லப்பட்டவர்கள் ஏராளம் பேர். எனது பாடசாலை நண்பன் நிர்மலன், கொல்லப்பட்டதும் இப்படித்தான். அவனுடைய சாவீட்டுக்குக்கூட என்னால் போக முடியவில்லை. இந்தியப் படையோடோ அல்லது அவர்களுடன் இணைந்து இயங்கிய தமிழ் இயக்கங்களோடோ தொடர்பு வைத்திருந்தவர்கள், பழக நேர்ந்தவர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்.
இந்தியப் படையுடன் இணைந்திருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர்களில் ஒருவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தபோது ஏன் மாறிமாறி இத்தகைய படுகொலைகளில் ஈடுபடுகிறீர்கள் எனக் கேட்டேன். “நாங்கள் இருப்பதற்காகக் கொல்கிறோம். புலிகள் கொல்வதற்காக இருக்கிறார்கள் - அதுதான் வித்தியாசம்” என்றார். (அவர் சொன்னது ஆங்கிலத்தில்: We kill in order to exist; They exist in order to kill!)
யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த நாடக அரங்கக் கல்லூரியைச் சேர்ந்தவர்களும் நடிகர்கள் - நெறியாளர்களுமான வீ.எம். குகராஜாவும் ஜெயகுமாரும் இக்காலப் பகுதியிலேயே இந்தியப் படைகளால் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நாடக அரங்கக் கல்லூரிக்காக அரங்கம் என்ற இதழை நடத்திவந்தனர். தெரு நாடகங்கள் நிகழ்த்துவதிலும் மிக்க ஈடுபாட்டோடு பணியாற்றியவர்கள். எனது நீண்ட நாள் நண்பர்கள். அவர்களுடைய சா வீடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் தாயாரும் இந்தியப் படைகளால் எங்கள் ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைகுமாரனும் அவருடைய நெருங்கிய நண்பர் உமைகுமாரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) அமைப்பினரால் 1982இல் சுட்டுக்கொல்லப் பட்டனர். இது பற்றியும் தமிழ்ப் போராளிகளது உட்கொலைகள், சகோதரப் படுகொலைகள் பற்றியது மான என்னுடைய கவிதை ‘யுத்த காண்டம்’ என்ற தலைப் பில் வெளியாகியிருக்கிறது (பார்க்க: ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’, சேரன் கவிதைகள் ஒரு நூறு. ‘காலச்சுவடு பதிப்பகம்’, 2000).
இந்தியப் படையாலும் விடுதலைப்புலிகளாலும் மற்றைய தமிழ் இயக்கங்களாலும் இந்தக் காலத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பெயர்களும் முகங்களும் வாழ்வும் எமக்கு முழுமையாகத் தெரியாது. இந்தத் தகவல்களையும் கதைகளையும் சொல்லவும் தரவுமே இன்றும் பலர் அஞ்சுகின்றனர். தம்மால் முடிந்த அளவுக்கு விவரங்களை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) தமது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அவை இணையத்தில் கிடைக்கின்றன.
1989 நடுப்பகுதியில் எனது தங்கையின் திருமணப் பேச்சு வார்த்தைகள் தொடர்பில் மட்டக்களப்பு செல்ல நேர்ந்தது. அப்போதுதான் ‘தமிழ்த் தேசிய இராணுவத்துக் கான’ கட்டாய ஆட்சேர்ப்பில் இந்தியப்படையுடன் சேர்ந்தியங்கிய இயக்கங்கள் இறங்கியிருந்தன. வாகனங்களை இடைமறித்து இளைஞர்களையும் மாணவர்களையும் கடத்திச்செல்வது, வீடுகளுக்குள் புகுந்து கடத்திச்செல்வது என மிகத் தீவிரமாக ‘ஆள்பிடி’ நடந்த நேரம் அது. மட்டக்களப்பு செல்லும் வழியில் வவுனியாவில் என்னையும் கட்டாயமாக வாகனத்திலிருந்து இறக்கிப் ‘பயிற்சி’ முகாமுக்கு இழுத்துச் சென்றார்கள். என்னுடைய எந்த நியாயத்தையும் அவர்கள் கேட்பதாயில்லை. என்னுடைய தலைமயிரையும் குறுகத் தறித்துவிட்டார்கள்!
முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் ஒருவரையும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அவர்கள் பிடித்துவைத்திருந்தவர்களில் நான்தான் வயது சற்றுக் கூடியவனாக இருந்தேன். இரவு எங்களை வேறு ஓர் இடத்துக்கு மாற்றுவதாக இருந்தது. எங்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் வந்த வேளையில் தற்செயலாக எங்களோடு பல்கலைக்கழகத்தில் படித்த நண்பன் கணேசமூர்த்தியைக் கண்டேன். அவன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவன். கலைத்துறைப் பட்டதாரி. ‘மாயமான்’ என்ற எமது வீதி நாடகத்தை 1985இல் பல இடங்களில் நிகழ்த்த உதவியவன். நான் பிடிபட்டிருந்த முகாம் அவர்களுடைய இயக்கத்தினது அல்ல. எனினும் என்னை மீட்டு மட்டக்களப்புவரை தனது வாகனத்தில் கொண்டுவந்து சேர்த்தான். பின்னர் சில வாரங்களில் அவனையும் அவனோடு இருந்த வேறு சிலரையும் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டார்கள் என்ற சேதி என்னை வந்தடைந்தது.
நினைவில் அழியாத இப்படியான நிகழ்வுகள் தந்த அதிர்ச்சி, துயரம், கையறு நிலை, கோபம், ஆற்றாமை எல்லாவற்றினதும் பிரதிபலிப்பாகவும் சாரமாகவும் இந்தியப் படைகளின் காலத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுதிதான், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்.’ அப்போது இதனை யாழ்ப்பாணத்திலும் வெளியிடமுடியவில்லை; கொழும்புவிலும் வெளியிட முடியவில்லை. இந்தியாவிலும் வெளியிட முடியவில்லை. நண்பரும் கவிஞரும் திசை ஆசிரியருமான மு.பொ. கவிதைகள் ஒரு சிலவற்றையேனும் திசை இதழில் வெளியிடத் தயங்கினார். கருத்துச் சுதந்திரத்தின் நிலை அப்படி! எனினும் எனது நீண்டகால நண்பர் வேலு (ஜெயமுருகன்) எப்படியாவது இந்தத் தொகுதியை வெளியிட்டுவிடுவோம் எனத் தீர்மானித்தார். அவர் ஒரு கலை ஆர்வலர். வேலு, ஈரோஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஈழ மாணவர் பேரவையின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தவர். ஓவிய நண்பரொருவர் பொருத்தமான அட்டைப்படம் ஒன்றையும் வரைந்து தந்திருந்தார். கவிதைகள், அட்டைப்படம், எனது முன்னுரை எல்லாவற்றையும் சேர்த்து நூலின் மாதிரி வடிவமைப்புடன் அச்சகத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் இந்தியப் படைகளுடன் ஒத்தாசையாக வேலை செய்துவந்த ஈழ மக்கள் விடுதலை முன்னணியினர் (EPRLF) வேலுவைக் ‘கைது’ செய்தார்கள். யாழ்ப்பாணத்தில், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வல’த்தின் முடிவு அப்படியாயிற்று. வேலுவை யாழ்ப்பாணம் அசோகா ஹோட்டல் முகாமுக்குக் கொண்டுசென்றனர். எனினும் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் தலையீட்டால் வேலு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ பிற்பாடு, ‘தேடகம்’ நண்பர்களால் 1990இல் கனடாவில்தான் வெளியிடப்பட்டது.
1989 பிற்பகுதியில் அப்போது நாட்டின் அதிபராக இருந்த பிரேமதாச, புலிகளுடன் இணக்கத்துக்கு வந்து இந்தியப் படையினரை வெளியேறச் சொன்னார். 1990 மார்ச் மாத முடிவுக்குள் இந்தியப் படையினர் வெளியேறிவிடுவதாக உடன்பாடு எட்டப்பட்டது. பிற்பாடு நான் கொழும்பு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் புதிய சற்றர்டே றிவியூ என்பதைத் திருப்பியும் கொண்டுவருவோம் என காமினி நவரத்ன சொன்னார். சில நண்பர்கள் நிதியுதவி செய்தனர். பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.
மார்ச் மாதம் 1990இல் இந்தியப்படைகள் வெளியேறியபோது அவர்களுக்குப் ‘பிரியாவிடை’ கொடுக்க நானும் நண்பர் குகமூர்த்தியும் ஜேர்மன் ஊடகவியலாளர் வால்டர் கெல்லரும் திருகோணமலை சென்றோம். துறைமுகத்துக்குள் போக அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. வரிசையாக உள்ளே சென்றுகொண்டிருந்த இந்தியப் படையினரிடம், ‘நேரே காஷ்மீருக்குத்தான் போகிறீர்களா?’ என்று வால்டர் கெல்லர் புன்சிரிப்புடன் கேட்டார். நல்ல காலம். எங்களைக் கடந்துசென்ற இந்தியப் படைக் குழுவுக்கு இந்தியைவிட வேறு மொழி தெரிந்திருக்கவில்லை என்பதால் தப்பித்தோம். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்டுவிடும் என்பது தெரிந்திருக்கவில்லை. எனினும் இலங்கைச் சூழலில் சமாதானம் ஆயுள் குறைவானது என்பது எப்போதும் போலவே அப்போதும் எனக்குத் தெரிந்திருந்தது. இது இப்போதும் உண்மைதான்.
இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவம் கனடா தாய்வீடு ஜூலை மாத இதழில் வெளியானது.
மின்னஞ்சல்: cheran@uwindsor.ca

#வீரவணக்கங்கள்! #தமிழீழ_தேசிய_மாவீரர்_நாள்!

 மற்றும் பல்குழல் எறிகணைகள் வீட்டுக்கு மேலால் செல்லும் போது எங்கள் வீட்டிற்கு மேல் தவறியும் விழுந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவுகளில் நாங்கள் உறங்கிய போது, எங்கள் நிம்மதியான உறக்கத்திற்காக அங்கே முன்னரங்கில் அவ் வெடித்துச் சிதறும் எறிகணைகளை எதிர்பார்த்த வாறே உணவின்றி உறக்கமின்றி எதிரியை எதிர்த்து சமராடியவர்கள் நீங்கள்.....
வருடாவருடம் தேசியத் தலைவனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை கேட்க வானொலிப்பெட்டிக்குப் பக்கத்தில் நாம் காத்திருந்த போது, அவ்வுரையின் கனதிக்காக களங்களில் வெற்றித் திலகமிட்டு உரமாகியவர்கள் நீங்கள்.....
வெள்ளை உடுப்புடன் நாங்கள் பள்ளி சென்று பாடம் கற்க, கள்ளிச் செடிகளுக்கும் முட் புதர்களுக்கும், பெரும் காடுகளிலும் வரியுடை தரித்து பயிற்சி முடித்து போர்க்களம் போனவர்கள் நீங்கள்.......
போரைக் காரணம் காட்டி மண்விட்டு ஓடி வெளிநாட்டில் மறைவதற்கு நாங்கள் கொழும்பில் தங்கியிருக்க, மண் மீது பற்றுக்கொண்டு எதிரியின் குகைகளுக்குள்ளேயே வேவுப் புலி வீரர்களாகவும், கந்தகப் பொதிசுமந்த கருவேங்கைகளாகவும் காத்திருந்து எதிரியைக் கருவறுத்தவர்கள் நீங்கள்......
வெளியில் சென்று சற்று நேரம் தாமதித்து வந்தால் பதறித்துடிக்கும் எங்களுக்கு மத்தியில், எதிரியின் காப்பரண்களுக்குள் வேவுக்குச் சென்று வர முடியாமல் அம்மண்ணிலேயே மண்ணோடு மண்ணாகி வித்தாகி வராமலே விட்டவர்கள் நீங்கள்........
எங்கள் எல்லைகளை நாங்கள் புத்தக வரைபடத்தில் தேடிக்கொண்டிருந்த போது, எதிரி எல்லை தாண்டி வந்து விடக்கூடாது என்பதற்காக உங்கள் கைகளால் அடைத்து தாய் மண் காத்தவர்கள் நீங்கள்........
சிறு சிராய்வுக் காயங்களுக்கே வைத்தியரிடம் ஓடும் எங்களுகாக, குண்டுகள் துளைத்து சிதைவடைந்த மேனியிலிருத்து குருதி வழிந்தோடிய போதும் சிறு துணியால் கட்டி விட்டு சீறிப் பாய்ந்து பகை முடித்தவர்கள் நீங்கள்......
கடற்கரைகளுக்கு நாங்கள் சுற்றுலா செல்ல, தாயகக் கடலெங்கும் சுற்றுக் காவல் செய்து கடற்படையினரிடம் இருந்து எங்கள் எங்கள் கடல் வளத்தைக் காத்து நின்று கடல் நீரில் கரைந்தே சென்றவர்கள் நீங்கள்........
அன்னை தந்தை என்று பாசப்பிணைப்பில் நாமிருக்க, அன்னை மண்ணையும் அண்ணையையும் பெரிதென்று நினைத்துக் காத்து நின்று களப்பலியானவர்கள் நீங்கள்........
எம் அன்புக்குரிய மாவீரர்களே!
வீர வணக்கம் போடவே நாம் தகுதியற்றவர்கள்! மன்னிப்பீர்கள். ஏனெனில் நீங்கள் வாழ்ந்ததும் மண்ணில் விதையாகி வீழ்ந்ததும் எங்களுக்காகத் தானே! இருந்த போதும் மனமுருகி வணங்குகின்றோம்!
மறுபிறப்பில் நம்பிக்கையில்லை இருந்த போதும் சொல்கின்றேன் இன்னொரு முறை பிறந்து வாருங்கள்! ஏனெனில் அப்பொழுதும் இனத்திற்காக உயிர்கொடுக்க உங்களால் மட்டும் தான் முடியும்!
அடுத்து வரும் ஆயிரம் தலைமுறைக்கும் சொல்வேன் இன்றைய எங்களின் நல் வாழ்வின் பின்னால் உங்களின் எண்ணற்ற தியாகங்களும் உயிக்கொடைகளும் உண்டென்று!
27.11.2017

Wednesday, November 22, 2017

ஓர் வார இறுதிக்குபின்

ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும். ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.
அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது. ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார். உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!' என்றார்.
உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி
மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி
நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '
ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'
அடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…
அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதி க்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.
மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”
ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...
Mrs. Sumathi
‘I have seen many more people in my life. are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore PhD…..
அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார். அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".
திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
ஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''
.
.
.
அன்பான ஆசிரியர்ரகளே
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.
அன்பு உள்ளங்களே, உங்கள் பங்கிற்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு இதனை அனுப்புங்கள்.. ஆசிரியர்களை ஊக்கப்படுத்துங்கள், உற்சாகமூட்டுங்கள்..ஏனெனில் நாளைய சமுதாயத்தை நல்ல முறைப்படுத்த ஆசிரியர்களால் மட்டுமே முடியும் 🙏

Friday, November 17, 2017

பனி மனிதன் ஊட்சி வயது 5300


5300 ஆண்டுகளுக்கு முன்பு பனிமனிதன் பேசிய மொழி தமிழ் – விஞ்ஞானிகள் ஆடியோவால் பரபரப்பு அதிகமாக பகிருங்கள்..




5300 ஆண்டுகளுக்கு முன்பு பனிமனிதன் பேசிய மொழி தமிழ் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லையில் விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் டைசென்ஜான் என்கிற சிகரம்தான் இப்போது டாக்கிங் பிலேஸ்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19ம் தேதி மதியம் 1.30 மணிக்கு இரண்டு ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது அவர்களுக்குத் தெரியாது தாங்கள் அற்புதமான ஒன்றை இங்கு கண்டுபிடிக்கப் போகிறோம் என்று..
சுற்றுலாவிற்காக சென்ற அவர்கள் முன் வரலாற்று பொக்கிஷம் ஒன்று கிடைத்தது.
அதுதான் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். அந்த உடல் 90 சதவிகிதம் பழுதடையாமல் அப்படியே இருந்தது என்பதோடு, அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது.
மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் அந்த மனிதன் மரணமடைந்ததால் பனி அவரை பாதுகாத்து உலக வரலாற்று ஆய்வுக்காக நமக்கு அளித்திருக்கிறது..

பனிப்படலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி மனிதனுக்கு ‘ஊட்சி‘ என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது வரை அறிவியலின் ஆற்றலால் கண்டுபிடித்துள்ளனர்.
இன்னும் என்னென்ன அவர் உடம்பில் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் புட்டு புட்டு வைக்கின்றனர். அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்திருக்கிறார்.
அவருடைய உடலில் உள்ள எலும்புகளில் கோளாறுகள் இருந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பு முதுகில் குத்தி இறந்ததையும், அப்போது அவருக்கு 45 வயது என்றும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஊட்சி இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பெரும் மனவேதனையுடன் இருந்ததை அவரது விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப் போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.
இதையெல்லாம் கண்டு பிடித்ததைவிட விஞ்ஞானிகள் பெரும் சிரமம் மேற்கொண்டு, தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு இந்த மம்மி மனிதனின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆய்வை செய்துள்ளனர்.
இறுதியாக அவரது குரல் தடத்தையும் உருவாக்கிவிட்டனர்.
ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினையும் உருவாக்கி விஞ்ஞான உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
5300 ஆண்டுகளுக்கு முன் பேசிய ஊட்சி என்று அழைக்கப்படுகிற மம்மி மனிதன் தமிழ் பேசியிருப்பானா? உச்சரிப்பை கவனியுங்கள்.
“ஆ, இ, ஈ, உ, ஊ” ஆகிய தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் ஒலியை ஊட்சி உச்சரிக்கிறார்.
இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது.
இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி அதனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நீங்களும் ஆடியோவை கேட்டால் தெரியும் 5300 ஆண்டுகளுக்கு முன் மம்மி மனிதன் பேசியது தமிழ்தான் என்று….

Monday, November 13, 2017

‘நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!”

இது ஒர் உண்மைக் கதை..
வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி… கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை… ‘இதுதானடா தமிழா… இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
”எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி ‘புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், ‘அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான்.
தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன். நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை.
அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.
பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.இயக்கத்தில் பெண்கள்படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?”
”1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி.
சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார். ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!””
அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில்பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்குவருவது எது?”
”இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!”
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?’
”ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!”
என்ன நடந்தது?”
”விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர். அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.
அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். ‘சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. ‘தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!’
விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?”
”சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!’
நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?’
”பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு ‘பால்… பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!”
ஏன்நீங்கள் வேலை தேடவில்லையா?”
”எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்… எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!”
யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?”
”பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.”
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?”
”அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.”
இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும்உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?”
(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ”இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. ‘ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் இன்றும் ‘இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, ‘எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.)
இந்தியத் தலைவர்களே… உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்… எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே… உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!”
”உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை ‘விபசாரி’ என விமர்சித்…’
(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்…) ‘நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!”
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.) 

Saturday, November 11, 2017

வீரியம் கொண்ட விந்தும், விதையும் விருட்சமாகும்!

வீரியம் கொண்ட விந்தும், விதையும் விருட்சமாகும்! 

அன்பர்களே! தமிழ் தேசிய கூட்ட மைப்பை பலவீனப்படுத்துவது எமது கண்களை எமது விரல்க ளாலே குத்துவது போலாகும். பலவீனப்படு த்தலை விட,  சற்று மேலாக தமிழ் தேசிய கூட்டமை ப்பை சுத்திகரிக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு  தேசிய தலைவரின் சிந்தனையில் உதயமான ஒரு விடயம்! தனது இயக்க த்தின் விட்டுக்கொடா, ஆயுத பலவந்தம்  இவைகளை ,ஒருவேளை சர்வ தேச சமூகம் ஜீரனிக்க தயங்குமேயானல், மிதவாத அரசியல் நீரோட்ட த்தில் இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பாவது, சுய நிர்ணயம், உள்ளக இறைமை கொண்ட சமஸ்டி அமைப்புக்கு பேச்சுவார்த்தை மூலம், அல்லது சமரச போக்கின் அடிப்படையிலாவது பெற்றுக்கொள்ள ட்டும் என்றுதான் தேசிய தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரி த்தார். தேசிய தலைவர் கணித்த ப‌டியே விடுதலை இயக்கம் சர்வேதேச சமூகத்தினாலும், இந்தியாவினாலும் நசுக்கப்பட்டது வரலாற்று உண்மை. சர்வதேச சமூகமும், நோர்வே நாடும் இலங்கை அரசினால் அல்வா கொடுக்கப்பட்டதை நோர்வே இப்போது உணர்கின்றது. இந்தியாவின் நிலைப்பாடோ, ஆப்பு இழுத்த குரங்காக சீனவின் இலங்கை பிரவேசத்தை நினைத்து அல்லல்படுகின்றது. இதனால்தான் சர்வ்தேச சமூகம் ஜெனிவா மன்றில் இலங்கைக்கு போர்க்குற்ற விசாரணை,  இன அழிப்பு என்ற விவகாரத்தை மெல்ல இழுத்தது, ஆனால் சிங்கள அரசியல் தலைமையோ, எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் வரப்போகும் ஆபத்தை அறிந்து ஒன்றிணைந்து நல்லாட்சி அரசை நிறுவி, கூடவே தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிக்கட்சியாக்கி, அந்த எதிக்கட்ட்சி மூலமாக, போர்க்குற்றம் நடக்கவில்லை, சில மீறுதல்களே நடந்துள்ளன என சமபந்தர் வாயாலேயே சொல்லவைத்ததுமல்லாமல், சிங்கள அரசியல் சாணக்கியர்களின் அறிவுத்தல்படி, போராட்டத்தில் சற்றும் சம்பந்தபடாத சுமத்திரன் எதோ ஒரு நகர்வில், தேசிய கூட்டமைப்புக்குள் சொருகப்பட்டுள்ளார். அந்த சுமந்திரனே முள்ளிவாய்க்கால் நிகழ்வு இனப்படுகொலையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சான்றுதழ் வழங்கியுள்ளார்,  சிங்கள சக்திகளின் முகம் சுழிக்காமல் ஏதாவது பெறலாம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பவிட,  தேசிய கட்சிக்குள் இருந்து கொண்டு, தனது சமூகத்தவருக்கு நன்மை செய்கின்ற ரிசாட் பத்தியூன் போன்றவர்கள் பரவாயில்லை என்பதே எனது வாதம்! இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சக்தி வாய்ந்த முஸ்லிம் தலைவர்கள் உள்வாங்கபட்டுள்ளதா?  புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் பற்றி தமிழ் தலைமைகள் ஏன் அசமந்த போக்கில் உள்ளார்கள்? முஸ்லீம் என்றால் மாற்றான் தாய் பிள்ளைகளா? தமிழ் தலைமையின் சிந்தனை இப்படி இருக்குமானல், சிங்கள பேரினவாத சிந்தனைக்கும், இதற்கும் என்ன வேறுபாடு? சற்று சிந்தியுங்கள்! முஸ்லீம் சமூகத்தை தொப்பி பிரட்டி என்கின்றோம், அரசியல் சொல்லாடல் மூலம் சொன்னால் அதுதான் சாணக்கியம் என்று சொல்வேன். அவர்கள் தமது மதத்தின் மீது தீரா பற்று கொண்டவர்கள் அதனால் சிங்கள மொழியின் பூதாகரத்துக்கு முஸ்லீம் சமய கலாச்சரம் பலியாகும் என்று ஒருபோதும் சிந்திப்பது கிடையாது! நாம் நினைக்கின்றோம் இலங்கையில் தமிழ் அழிந்து விட்டால் தமிழ் மெல்லச்சாகும் என்ற ஒரு பயம் எமக்கு! இதனையே தமிழ் தேசிய உளவியலாக தமிழ் தலைமை பாவித்து வாக்கு வேட்டையாடுகின்றது.  சிங்களவர்கள் தமிழர்களுக்குள்ளும், தமிழர்கள் சிங்களவர்க்குள்ளும் கலப்பதினால் தமிழினம் அதன் காலாச்சாரம் அழியும் என்பது சுத்த மடத்தனம்! வீரியம் கொண்ட விந்தும், விதையும் விருட்சமாகும்! தமிழுக்கு அந்த வீரியம் , எல்ல உலக மொழிகளைவிட உண்டு என்பது எனது வாதம்.  எனவே  அரசியல் சாணக்கியத்துடன் செயல்பட சிந்திக்க, உங்களை கேட்பதுதான் என் பதிவின் நோக்கம்  அன்புடன் பேசாலைதாஸ்

Friday, November 10, 2017

தாமசு ஆல்வா எடிசன் ஒளி விளக்கு,

இந்த உலகுக்கு வெளிச்சத்தை தந்துவிட்டு வரலாற்றில் இடைவிடாத முயற்சிகள் என்றும் தோற்பதில்லை என நிரூபித்து காட்டிய தோல்விகளை கடந்த வெற்றியாளர் "தாமஸ் ஆல்வா எடிசன்" நினைவு தினம் இன்று.தாமசு ஆல்வா எடிசன் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார்.
திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர்.
1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.
தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.
குறைகளை நிறைகளாக்குவது எப்படி என அவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது!
தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார்.
மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார்.
பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார்.
படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு, பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார்.
ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.
கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது.
நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11.
தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கைச் சோதனைத் தத்துவம் ' (Natural & Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார்.
பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார்.
தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார்.
இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது!
செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.
1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார்.
அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே.
பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பறிபோனது.
அதன் பின்னர் இரயில்நிலையத்தில் சிற்றுண்டிகளும் மிட்டாய்களும் விற்றார்.
சில காலம் பன்றி வெட்டினார்.
காய்கறி வணிகம் செய்தார்.
இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று (மின் வாக்குப் பதிவு ) முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன்.
பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று.
1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால், அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை!
பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கிலத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையைக் காட்டினார்.
1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின்குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .
எடிசன் தனது தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு, நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார்.
1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று.
அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி '(Carbon Transmitter) என்னும் சாதனம்.
1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும். பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப்பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!
எடிசன் அடுத்து ஓர் உருளை மீது தகரத் தாளைச் சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் இவரது ஒலிவரைவி ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர பத்தாண்டுகள் ஆயின.
எடிசன் கண்டுபிடித்த முதல் மின் விளக்கு, 1879-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.
எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது!
கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது.
எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள்.
1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார்.
எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது.
மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள்.
1881 ஜனவரியில் முதல் 'மின் விளக்கொளி அமைப்பு ' வணிகமாக்கும் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' அச்சக மாளிகையில் நடந்தது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார நிறுவனம் ', எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது.
அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.
இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள்.
இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும்.
விளக்கு எரியும் போது, வெற்றிட மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர்.
பதினைந்து ஆண்டுகள் கழித்து 1898 இல் ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதல் 'எதிர் மின்னணுத் துகளைக் ' [Electron] கண்டுபிடித்தார். அதன் பின்னரே அறிவியலறிஞர்கள் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எலக்ட்ரான்கள் சூடான முனையிலிருந்து குளிர்ச்சியான முனைக்கு வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எலக்ட்ரான் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு' இது அடிகோலியது.
அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை.
வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார்.
கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது. பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்
அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.” எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது
கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது:
'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம் ' என்னால் தயாரிக்க முடியும் '
.
முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.
ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.

கெளரவ அமைச்சர் ரிஷட் பதிதியூன் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!

கெளரவ அமைச்சர் ரிஷட் பதிதியூன் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!

தாங்கள் மன்னார் மாவட்டத்தின் சார்பாக வணிக கைத்தொழில் அமைச்சராக இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி, அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, கட்சி, சமயம் இவைகளுக்கு அப்பால் மன்னார் மாவ ட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, மன்னார் மக்களின் வறுமை ஒழிப்பு இவைகளுக்காக மிக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம். தங்களுடைய செயல்பாடுகள் மிக அதிகமா முஸ்லிம் சமூகம் சார்பாக இருப்பதை அவதானிக்கி ன்றோம். முதலிம் இஸ்லாம் சமூகத்தில், உங்களது இருப்பை ஸ்திரப்ப டுத்த வேண்டிய அவசியும் உங்களுக்கு இருப்பதை நாம் ஒத்துக்கொள்கி ன்றோம். அதே வேளை உங்களது கொள்கை பிரகடனத்திலும், பாராள மன்ற உரையிலும், தனித்து இஸ்லாம் சமூகத்தவரின் அபிலாசைகளை மட்டுமே பிரதிபலிக்கின்றீர்கள். இஸ்லாம் மக்கள் தமிழர்கள் என்பதை ஏன் மறந்து போகின்றீர்கள்? தமிழர்களின் இருப்பு, கேள்விக்குறியாக மாறிவிட்டால்,,,, அது முஸ்லீம் சமூகதையும் பின்னர் பாதிக்கும் என்ற தீர்க்கதரிசன சிந்தனை ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? சிங்கள பெளத்த பேர்னவாத சிந்தனையானது முதலில் சிதைக்க நினைப்பது தமிழர்களின் தனித்துவ அடையாளத்தையும், அதன் அரசியல் அபிலா சைகளையும் தான். பின்னர் தான் பெளத்த பேரினவாதம் கைவைக்கும், இதனை முஸ்லீம் சமூகம் பல தடவை சந்தித்து இருக்கின்றது.             

                                                        விடுதலைப்புலிகளின் அரசியல் ஞானமற்ற, முஸ்லீம் மக்கள் மீதான  சில நடவடிக்கைகளின் விளவுகளை தமிழ் மக்களாகிய நாங்கள் அனுபவித்ததுண்டு. வடக்கில் முஸ்லீம் மக்களது மீள் குடியேற்றத்திற்கு தமிழ் தலைமை அசமந்த போக்கை கையாள்வது கண்டனத்திற்குறியதே!  தமிழ் தலைமை எதனைத்தான் சாதித்துள்ளது? உங்களை போன்ற இளம் அரசியல் தலைமை முஸ்லீம் சமூகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் கனிசமான அளவு பங்களைப்பை செலுத்தலாம், அப்படி நீங்கள் செயல்பட்டால், அதாவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீங்கள் பிரதிபலித்தால் க்லட்டாயம் மன்னார் மக்கள் உங்கள் பின்னால் அணி திரள்வார்கள். மன்னாருக்கு உங்களை விட்டால் நல்ல தோர் தலைமை இல்லை, நீங்கள் மட்டும் தமிழர்களின் தாயக, சுய நிர்ணய உரிமைகளை பிரதிபலிக்கும் அரசியல் தீர்வுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுக்கின்றோம். வடக்கையும் கிழக்கையும் பிரித்தால் அது அது தமிழர்களின் இருப்பை அழிக்கும் முதலாவது பொறியாகும், இதன் மூலமாக வடக்கும் கிழக்கும் தமிழர்கள் முஸ்லீம் மக்கள்து பூர்வீக இடம் இல்லை என்பதை  கோட்பாடு ரீதியாக நிறுவ முடியும். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கவேண்டும், தனி அதிகாரம் கொண்ட ஜானதிபதி முறையை நீங்கள் ஆதரித்து பேசியுள்ளீ ர்க. அப்படி தனி அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அலகின் மூலம் ஒரு போதும் தமிழர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் தீர்வு கிடை க்கவே கிடைக்காது! அப்படி தீர்வு கிடைத்தாலும், கொடுத்தவனே பறித்து கொண்டான்டி என்று புலம்பும் காலம் வரும்! தங்களை நான் ஒரு இரவு, தாராபுரத்தில் தனிமையாக சந்தித்த போது பேசியுள்ளேன், அதனையே இப்போது பகிரங்கமாக மடல் மூலம் தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.  அன்புடன் பேசாலைதாஸ்