கெளரவ அமைச்சர் ரிஷட் பதிதியூன் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!
கெளரவ அமைச்சர் ரிஷட் பதிதியூன் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!
தாங்கள் மன்னார் மாவட்டத்தின் சார்பாக வணிக கைத்தொழில் அமைச்சராக இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி, அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, கட்சி, சமயம் இவைகளுக்கு அப்பால் மன்னார் மாவ ட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, மன்னார் மக்களின் வறுமை ஒழிப்பு இவைகளுக்காக மிக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம். தங்களுடைய செயல்பாடுகள் மிக அதிகமா முஸ்லிம் சமூகம் சார்பாக இருப்பதை அவதானிக்கி ன்றோம். முதலிம் இஸ்லாம் சமூகத்தில், உங்களது இருப்பை ஸ்திரப்ப டுத்த வேண்டிய அவசியும் உங்களுக்கு இருப்பதை நாம் ஒத்துக்கொள்கி ன்றோம். அதே வேளை உங்களது கொள்கை பிரகடனத்திலும், பாராள மன்ற உரையிலும், தனித்து இஸ்லாம் சமூகத்தவரின் அபிலாசைகளை மட்டுமே பிரதிபலிக்கின்றீர்கள். இஸ்லாம் மக்கள் தமிழர்கள் என்பதை ஏன் மறந்து போகின்றீர்கள்? தமிழர்களின் இருப்பு, கேள்விக்குறியாக மாறிவிட்டால்,,,, அது முஸ்லீம் சமூகதையும் பின்னர் பாதிக்கும் என்ற தீர்க்கதரிசன சிந்தனை ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? சிங்கள பெளத்த பேர்னவாத சிந்தனையானது முதலில் சிதைக்க நினைப்பது தமிழர்களின் தனித்துவ அடையாளத்தையும், அதன் அரசியல் அபிலா சைகளையும் தான். பின்னர் தான் பெளத்த பேரினவாதம் கைவைக்கும், இதனை முஸ்லீம் சமூகம் பல தடவை சந்தித்து இருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் அரசியல் ஞானமற்ற, முஸ்லீம் மக்கள் மீதான சில நடவடிக்கைகளின் விளவுகளை தமிழ் மக்களாகிய நாங்கள் அனுபவித்ததுண்டு. வடக்கில் முஸ்லீம் மக்களது மீள் குடியேற்றத்திற்கு தமிழ் தலைமை அசமந்த போக்கை கையாள்வது கண்டனத்திற்குறியதே! தமிழ் தலைமை எதனைத்தான் சாதித்துள்ளது? உங்களை போன்ற இளம் அரசியல் தலைமை முஸ்லீம் சமூகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் கனிசமான அளவு பங்களைப்பை செலுத்தலாம், அப்படி நீங்கள் செயல்பட்டால், அதாவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீங்கள் பிரதிபலித்தால் க்லட்டாயம் மன்னார் மக்கள் உங்கள் பின்னால் அணி திரள்வார்கள். மன்னாருக்கு உங்களை விட்டால் நல்ல தோர் தலைமை இல்லை, நீங்கள் மட்டும் தமிழர்களின் தாயக, சுய நிர்ணய உரிமைகளை பிரதிபலிக்கும் அரசியல் தீர்வுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுக்கின்றோம். வடக்கையும் கிழக்கையும் பிரித்தால் அது அது தமிழர்களின் இருப்பை அழிக்கும் முதலாவது பொறியாகும், இதன் மூலமாக வடக்கும் கிழக்கும் தமிழர்கள் முஸ்லீம் மக்கள்து பூர்வீக இடம் இல்லை என்பதை கோட்பாடு ரீதியாக நிறுவ முடியும். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கவேண்டும், தனி அதிகாரம் கொண்ட ஜானதிபதி முறையை நீங்கள் ஆதரித்து பேசியுள்ளீ ர்க. அப்படி தனி அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அலகின் மூலம் ஒரு போதும் தமிழர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் தீர்வு கிடை க்கவே கிடைக்காது! அப்படி தீர்வு கிடைத்தாலும், கொடுத்தவனே பறித்து கொண்டான்டி என்று புலம்பும் காலம் வரும்! தங்களை நான் ஒரு இரவு, தாராபுரத்தில் தனிமையாக சந்தித்த போது பேசியுள்ளேன், அதனையே இப்போது பகிரங்கமாக மடல் மூலம் தங்களை கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment