வீரியம் கொண்ட விந்தும், விதையும் விருட்சமாகும்!
வீரியம் கொண்ட விந்தும், விதையும் விருட்சமாகும்!
அன்பர்களே! தமிழ் தேசிய கூட்ட மைப்பை பலவீனப்படுத்துவது எமது கண்களை எமது விரல்க ளாலே குத்துவது போலாகும். பலவீனப்படு த்தலை விட, சற்று மேலாக தமிழ் தேசிய கூட்டமை ப்பை சுத்திகரிக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய தலைவரின் சிந்தனையில் உதயமான ஒரு விடயம்! தனது இயக்க த்தின் விட்டுக்கொடா, ஆயுத பலவந்தம் இவைகளை ,ஒருவேளை சர்வ தேச சமூகம் ஜீரனிக்க தயங்குமேயானல், மிதவாத அரசியல் நீரோட்ட த்தில் இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பாவது, சுய நிர்ணயம், உள்ளக இறைமை கொண்ட சமஸ்டி அமைப்புக்கு பேச்சுவார்த்தை மூலம், அல்லது சமரச போக்கின் அடிப்படையிலாவது பெற்றுக்கொள்ள ட்டும் என்றுதான் தேசிய தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரி த்தார். தேசிய தலைவர் கணித்த படியே விடுதலை இயக்கம் சர்வேதேச சமூகத்தினாலும், இந்தியாவினாலும் நசுக்கப்பட்டது வரலாற்று உண்மை. சர்வதேச சமூகமும், நோர்வே நாடும் இலங்கை அரசினால் அல்வா கொடுக்கப்பட்டதை நோர்வே இப்போது உணர்கின்றது. இந்தியாவின் நிலைப்பாடோ, ஆப்பு இழுத்த குரங்காக சீனவின் இலங்கை பிரவேசத்தை நினைத்து அல்லல்படுகின்றது. இதனால்தான் சர்வ்தேச சமூகம் ஜெனிவா மன்றில் இலங்கைக்கு போர்க்குற்ற விசாரணை, இன அழிப்பு என்ற விவகாரத்தை மெல்ல இழுத்தது, ஆனால் சிங்கள அரசியல் தலைமையோ, எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் வரப்போகும் ஆபத்தை அறிந்து ஒன்றிணைந்து நல்லாட்சி அரசை நிறுவி, கூடவே தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிக்கட்சியாக்கி, அந்த எதிக்கட்ட்சி மூலமாக, போர்க்குற்றம் நடக்கவில்லை, சில மீறுதல்களே நடந்துள்ளன என சமபந்தர் வாயாலேயே சொல்லவைத்ததுமல்லாமல், சிங்கள அரசியல் சாணக்கியர்களின் அறிவுத்தல்படி, போராட்டத்தில் சற்றும் சம்பந்தபடாத சுமத்திரன் எதோ ஒரு நகர்வில், தேசிய கூட்டமைப்புக்குள் சொருகப்பட்டுள்ளார். அந்த சுமந்திரனே முள்ளிவாய்க்கால் நிகழ்வு இனப்படுகொலையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சான்றுதழ் வழங்கியுள்ளார், சிங்கள சக்திகளின் முகம் சுழிக்காமல் ஏதாவது பெறலாம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பவிட, தேசிய கட்சிக்குள் இருந்து கொண்டு, தனது சமூகத்தவருக்கு நன்மை செய்கின்ற ரிசாட் பத்தியூன் போன்றவர்கள் பரவாயில்லை என்பதே எனது வாதம்! இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சக்தி வாய்ந்த முஸ்லிம் தலைவர்கள் உள்வாங்கபட்டுள்ளதா? புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் பற்றி தமிழ் தலைமைகள் ஏன் அசமந்த போக்கில் உள்ளார்கள்? முஸ்லீம் என்றால் மாற்றான் தாய் பிள்ளைகளா? தமிழ் தலைமையின் சிந்தனை இப்படி இருக்குமானல், சிங்கள பேரினவாத சிந்தனைக்கும், இதற்கும் என்ன வேறுபாடு? சற்று சிந்தியுங்கள்! முஸ்லீம் சமூகத்தை தொப்பி பிரட்டி என்கின்றோம், அரசியல் சொல்லாடல் மூலம் சொன்னால் அதுதான் சாணக்கியம் என்று சொல்வேன். அவர்கள் தமது மதத்தின் மீது தீரா பற்று கொண்டவர்கள் அதனால் சிங்கள மொழியின் பூதாகரத்துக்கு முஸ்லீம் சமய கலாச்சரம் பலியாகும் என்று ஒருபோதும் சிந்திப்பது கிடையாது! நாம் நினைக்கின்றோம் இலங்கையில் தமிழ் அழிந்து விட்டால் தமிழ் மெல்லச்சாகும் என்ற ஒரு பயம் எமக்கு! இதனையே தமிழ் தேசிய உளவியலாக தமிழ் தலைமை பாவித்து வாக்கு வேட்டையாடுகின்றது. சிங்களவர்கள் தமிழர்களுக்குள்ளும், தமிழர்கள் சிங்களவர்க்குள்ளும் கலப்பதினால் தமிழினம் அதன் காலாச்சாரம் அழியும் என்பது சுத்த மடத்தனம்! வீரியம் கொண்ட விந்தும், விதையும் விருட்சமாகும்! தமிழுக்கு அந்த வீரியம் , எல்ல உலக மொழிகளைவிட உண்டு என்பது எனது வாதம். எனவே அரசியல் சாணக்கியத்துடன் செயல்பட சிந்திக்க, உங்களை கேட்பதுதான் என் பதிவின் நோக்கம் அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment