யார் இந்த யாழ்ப்பாணத்தான்? பேசாலைதாஸ்
தந்தை செல்வா மறைவுக்குப்பின்னர், தமிழர் விடுதலை கூட்டணியில், தலைவர் பிரச்சனை எழுந்தது, அந்த காலகட்டத்தில் வயதில் மூத்தவரும், சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இராசரத்தினதுரை உண்மையில் தலைவராக இருந்திருக்கவேண்டியவர். அவர் மட்டக்களப்பு என்றதினால், பிராந்திய செல்வாக்கு இங்கே ஆதிக்கம் பெற்றது, யாழ்ப்பாணத்தை பிற்புல மாக கொண்ட, வயதில் இளமையான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைவ ராக்கப்பட்டார். தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகளை களைக்க, அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கயர்கரசி மேடைப்பேச்சாளராக களமி றக்கப்பட்டார். அவர் மேடைதோறும், அத்தான் என்னத்தான்? அவர் யாழ்ப்பா னத்தான் என்று பாடி, யாழ் மக்களை தமிழருக்கு அத்தானாக்கினார்! அது வரலாறு அல்ல,
யாழ்ப்பாணத்தார், நாகதீபம் என்று அழைப்பட்ட, தற்போதைய யாழ் குடா நாட்டில் வழ்ந்தவர்கள் இல்லை. பாணர்கள் தமிழக த்தில் இருந்து வந்தவர்கள். அந்த பாணர் எனும் குடியினர் தமிழகத்தில் இரு ந்து எப்படி காணாமல் போனார்கள்? சரித்திர புகழ் பெற்ற நீலகண்ட யாழ்பா ணர் சந்ததியினர் கதி என்ன? இது பற்றி என் சிற்றறிவுக்கு எட்டக்கூடியவகை யில் சில தேடல்களை மேற்கொண்டேன் அதன் விளைவு, இந்த கட்டுரை.
பண் அமைத்து பாடுவோர் என்பதனால் இவர்கள் பாணர்கள் என அழைக்கப்பட்டனர். இந்த பாணர்களே தமிழ் இசையின் ஆதி மூர்த்திகள். பாணர்கள் சாதியத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல, உண்மையில் ஆதி தமிழ் குடியில் சாதி இல்லை. வடக்கில் இருந்து வந்த வடக்கத்தியான் இந்த ஜாதியை கொண்டுவந்தான். அவனை செருப்பாலே அடிக்கவேண்டும். தமிழுக்கு ஜா என்ற எழுத்து கிடையாது. எனவே தமிழருக்குள் ஜாதி என்பது இருக்க நியாயமில்லை, ஆனால் குடிகள் இருந்தனர். வடக்கத்தியானுக்குத்தான் ஜாதி உண்டு, அவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஜா என்ற எழுத்தை இணைப்பா ர்கள், வனஜா, கிருஜா, பத்மஜா,பங்கஜா இப்படி பெயர் கொண்டவர்கள், மைதிலி வேதப்பிராமணர்கள் ஆகும், அதை ரெம்ப பெருமையாக பேசுவார் கள் இந்த சாதி திமிர்கொண்ட நக்கிகள்! எனவே பாணர்கள் சாதி அல்ல, அவர்கள் பழந்தமிழ் குடிகள். தமிழர்கள் குடிகளினால் ஆனவர்கள் அதுவும் சிவனின் குடிகள், நாமார்க்கும்குடிகள் அல்லோம்,,,,
"பாணான் கழுதை பரதேசம் போனான்" என்று சொல்வார்கள். பாணனுக்கும் கழுதைக்கும் என்ன சம்பந்தம்? இருக்கவே, இரு க்கு, பாணர்கள், ஊர் ஊராப் பாடிப் பொழைக்கப் போவார்கள், அப்படி போனால், 6 மாசம் கழிஞ்சுதான் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய தட்டு,முட்டு, பாய், படுக்கை எல்லாம் சொமந்துக்கிட்டுக் கூடப்போற கழுதைக்கு எப்போ ஊரு க்கு வரப்போறோம்னு தெரியாது? பாணன் எப்ப வரு வானோ, அப்பத்தான் அவன் கூடப்போன கழுதையும் ஊருக்குத் திரும்பும். கழுதை என்றவுடன் என் ஊர்க் கழுதைகள் சத்தம் கேட்கின்றது! கூடவே ஒரு என் பள்ளிக்கூட நினைவுகளும் தொற்றிக்கொள்கின்றது.
அந்தக்காலத்திலே பாடசாலைக்கிடையில் தமிழ் தினப் போட்டி நடக்கும், அது இலங்கை பூராக வும் மாவட்டம், மாகாண அளவில் நடக் கும், சில பாடல்கள் கல்வி திணைக் கள த்தால் வெளியிடுவார்கள், அப்பாட லுக்கு இனிமையான இசை அமைத்து, பாடிக்காட்ட வேண்டும், அவ்வாறு பாணன் பாணிக்கு பாடிய பாடலை கல்வி திணைக்களம் போட்டிக்கு வெளியிட்டது, அப்பொழுது பாடசாலை தலைமை வாத்தியார் துரம் மாஸ்டர் அவர்கள், பாணன் பாடலுக்கு அழகாக இசைய மைத்து எங்களை பாடச்சொன்னார், மாவட்ட அளவில் அது முதல் பரிசை ப்பெற்றது பாடல் இதோ!
என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் , பாணி
வம்பதாம் களப மென்றேன், பூசுமென்றாள்,
மாதங்க மென்றேன், யாம்வாழ்ந்தே மென்றாள்,
பம்புசீர் வேழமென் றேன்தின்னு மென்றாள்,
கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்,
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே !
இந்த பாடலுக்குறிய விளக்கம் தெரிந்ததா? அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு யானை ஒன்றைப் பரிசிலாகப் பெற் று வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனைவி கேட்கிறாள் ! புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! ( களபம் என்றால் யாணை அல்லது சந்த னம், அது கேட்ட அவர் மனைவி, ’சந்தனம்’ என புரி ந்து, சாப்பாட்டு க்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவ ளாக, சரி பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள் !
சங்ககாலத்தின் கேளிக்கைத் தொழிற்சாலை - 'Entertainment Industry' -யாக விளங்கியவர்கள் 'துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கு குடி இசைவாணர்கள் ஆவர். வேளாண்குடி உள்ளிட்ட தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தொழிற் குடிகளும் இசைவாணர்களை எத்துணை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றின என்பதன் சாட்சியே மாங்குடிக் கிழாரின் 'துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கு அல்லது (எக்)குடியும் இல்லை.' என்னும் புறம்:335 பாடல் சொல்லும் சாட்சி. ஏதோ பிராமணர்கள்தாம் இசையையே கண்டுபிடித்தவர்கள் போல, 'சங்கீத மும்மூர்த்திகள்' என்றும், 'தியாகப் பிரும்மம்' என்றும் அளவுக்க திகமாக ஆட்டம் போடுகிறனர். இசையின் கொச்சை வடிவத்தை மட்டுமே கொண்டிருந்த சாம வேதத்திலிருந்துதான் கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட உலகின் அனைத்து இசைகளும் பிறந்ததாக அவிழ்த்து விடுகிறார்கள். பண்ணோடு பாடல் பாடுவது, இசையோடு நடனம் ஆடுவது போன்றவற்றில் தேர்ந்த பாணர்களை, மன்னர்கள், குறுநில மன்னர்கள், செல்வர்கள் ஆகியோர் ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை 'விறலியர்' என்பார்கள். பாணர்களின் முக்கிய இசைக்கருவியான யாழில், சகோட யாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவையும், ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கின்றன.
இவ்வாறு யாழ் இசையில் சிறந்து விளங்கிய ஒரு பாணன் இலங்கையில் உள்ள மன்னன், ஒருவேளை அது இராவணானாக இருக்கலாம், இராவாணனும் வீணை வாசிப்பதில் மிகதேர்ச்சி பெற்றவன் என்பதும், சிவபக்தன் என்பதும் வெளிப்படை, இவ்வாறு இராவணனை தமிழகத்தில் இருந்து வந்த பாணான், அதாவது முன்பு சொன்னது போல, கழுதையோடு வந்த பாணான், இராவாணனை புகழ்ந்து பாடியதால், தமிழகத்தோடு ஒட்டி இருந்த பகுதியை பாணானுக்கு பரிசாக கொடுத்து இர்க்காலாம், பின்வந்த கடற்கோளினால் அந்த பகுதி தமிழகத்தில் இருந்து பிரிந்து ஒரு தீபகற்பமாக மாறி இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.
எனவே இந்த தீபகற்பத்தில் வாழ்ந்த ஆதி தமிழர்களிடத்தில் சாதி இருந்ததில்லை, அப்படியானால் தற்போது யாழ்ப்பாண த்தில் சாதியம் தலைதூக்கி ஆடுவதின் காரனம் என்ன? விடை இது தான்! மாறவர் மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழமன்னன் சூடிய பொன்-மகுடம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களைப் பாணர்களுக்குப் பரிசி லாகக் கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது. துருக்கர் படையெடுப்புக் குப் பின்னர் இக்குடியினர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அதுமட்டு மல்ல, குப்தர்கள், மொகலாலயர்கள், களப்பிரர்கள் வருகையின் பின், ஆதி தமிழர் கள் ஓரங்கட்டப்பட்டு, அழிக்கப்பட்டனர் என்பதே உண்மை, எனவெ தற்போது சாதியம் பேசுபவர்களும், சாதிய பெருமை கூறும் யாழ்ப்பாணத்தவர்கள், வந்தேறு வடக்கத்தியானக இருக்கவேண்டும், அல்லது அவர்களையும், பார்ப்பணியத்தையும் நக்கிப்பிழைத்தவர்கள் என்றே சொல்லவேண்டும், சாதியத்தை ஒழிப்போம், தமிழை வளர்ப்போம்! அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment