Saturday, October 10, 2020

தேவதாசி முறை என்பது என்ன?

 தேவதாசி முறை என்பது என்ன? எதற்காக அதை இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டது? பேசாலைதாஸ் 


கவிஞர் வரைமுத்து ஆண்டாளை தேவதாசி என்று குறிப்பிட்டதினால் அவர் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டார். உண்மையில் ஆண்டாள் கிருஸ்ணரை தன் மானசீக கணவனாக எண்ணி வழிபட்டு வாழ்ந்த ஒரு பத்தினி பெண்தெய்வம் தான், தேவதாஸிகள் தொண்டு ஒரு பக்தி முயற்ச்சிதான். திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், இறைவனையே தம் தலைவனாக ஏற்றுக் கொண்டு ஆலயத்திலேயே தங்கி கோவில் நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டனர். விழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், கலைகளை கற்பித்தல் போன்ற சேவைகளையும் புரிந்தனர்.

நாளடைவில், சில மன்னர்கள் அவ்வாறான தேவதாசிகளைத் தம் அந்தப்புற நாயகிகளாகக் கொள்ள ஆரம்பித்தனர். பட்டத்து ராணிக்கு இணையான அதிகாரம் கொண்ட தேவதாசிகள் கூட இருந்தது உண்டு.

பல்லவர்கள் காலத்திலேயே நடைமுறையில் இருந்து, பிற்கால சோழர்கள் காலத்தில் கேவலம் அடைந்த இந்த வழக்கம், நாயக்கர்காலத்தில் மிகவும் தாழ்வுற்றது.

பின்னர் மேல்சாதி என்று கருதப்பட்டவர்கள், கீழானோரை இளம் வயதிலேயேப் பாலியல் அடிமையாகக் கொள்ளும் பொருட்டு, வலுக்கட்டாயமாக தேவதாசி ஆக்கினர். இந்த வைபவத்திற்காக ஆலயத்தில் வைத்து இறைவனுக்கு மனைவியாக சொல்லி, அந்த சிறுமிக்கு பொட்டு கட்டப்படும் (பொட்டுகட்டுதல் என்கிற சடங்கு).

சடங்கு முடிந்த நாள் முதல் அவர் அந்த ஊருக்குப் பொதுவானவர். ஆலயத்தில் தொண்டு செய்வதுதான் அவரது வாழ்நாள் முழுவதுமான வேலை. யாரையும் திருமணம் செய்யக் கூடாது. மரணம் வரையில் அங்கேயே அப்படியே வாழ்ந்து சாக வேண்டும். ஊர் முக்கியப் பிரமுகர்களுக்கு ஆசை நாயகியாகவும் இருந்தாக வேண்டும்.

தேவரடியார் (தேவர் + அடியார்) என்ற பெயரில் கண்ணியமான சேவை செய்பவர்களைக் குறித்த அந்த சொல், மருவி பாலியல் தொழில் செய்யும் பெண்களைக் கொச்சையாகக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. ( இரண்டு சொற்களும் வெவ்வேறு சொல் மூலம் கொண்டவை எனக் கூறுவோரும் உண்டு)

கர்நாடக மாநிலத்தில் இன்றும் சில இடங்களில் பொட்டு கட்டும் வழக்கம் ரகசியமாக நடைபெறுகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்கும் போது செய்திகள் வெளியாகின்றன.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிஅம்மையார் இந்தக் கொடிய வழக்கத்தை அழிக்க சட்டம் இயற்ற முயற்சித்து, பெரும்எதிர்ப்புகளைக் கடந்து அதில் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment