Monday, October 12, 2020

உலகின் முதல் இலக்கியம் "கில்காமேஸ்"

 உலகின் முதல் இலக்கியம்  "கில்காமேஸ்"  பேசாலைதாஸ் 


                            தமிழுக்கு 50000 ஆண்டு களுக்கு மேல் வரலாறு உண்டென்கி றார்கள். இருப்பினும் உலகின் முதல் இலக்கியமாக சுமேரியன் மொழி யின் "கில்காமேஸ்" காணப்படு கிறது!  1602 நூற்பாக்களால் ஆன தொல்காப்பியம் தான் நமது மிக மூத்த தமிழ் இலக்கண நூலாக கொண்டாடுகின்றோம். செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று வரையறை செய்கிறது. இவ்வாறான ஓர் சூழலிலே தான் “கில்காமேஷ்” உலகத்திலே எழுதப்பட்ட புராதன கதைகளில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அவர்கள் பதிவு செய்கின்றார்கள். 

                                                     


இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான் மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை அல்லது இலக் கியம் என்பதாக பல வரலாற்றுக் குறிப்புகள் பதி வாகி வருகின்றன. அது குறிப்பிட வருகிற செய்தி எளிதானது. சுமேரியாவிலுள்ள “உருக்” தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ் பற்றியும், அவன் வாழ்ந்த நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும் பேசுகிற அந்நவீனம் உண்மையில் இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களையும் அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்கிற தன்மை கொண்டதாகத் தரவில்லை. ஆனாலும் மிகப்பெரிய புகழ்பூத்த சுமேரிய அரசர்கள் வரிசையில் கில்காமேஷ்ஷையும் சேர்த்திருக்கிறார்கள். இதில் வியப்பதற்கெதுவும் இல்லைத்தான். சிங்கங்கத்தைக்கூட வீரத்திற்காக அல்லது வேறெதற்காகவோ மணந்தாள் தம் குலப்பெண் என்று தங்கள் வரலாறுகளை எழுதி பெருமை பேசுகிற வரலாற்று மாந்தருள் இதை நம்புவது ஒன்றும் பெரிய காரியமில்லைத்தான்.

                                                            கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருந்ததாகவும் அது எழுதப்பட்ட மொழி அக்காடியா என்றும் உருக் எனும் வார்த்தை தான் பிற்காலங்களில் ஈராக் என்றும் திரிபு பெற்றது என்கிறது இணையவழித் தேடல். இன்றைய ஈராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ். உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில் தான். இந்த வகையில் மொசப்படோமியாவின் “உருக்” கை ஆண்ட மன்னர்களுள் முக்கியமானவர் கில்காமேஷ் (Gilgamesh) . கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செயத கலவை தான் இந்த கில்காமேஷ். ஆம் அவன் மூன்றில் இரு பங்கு கடவுள், மூன்றில் ஒரு பங்கு மனிதன் என்கிறது கதை. ஜலப்பிரளயத்திற்கு பின்பு தப்பித்த நோவாவின் திரிப்பே கில்காமேஷ் என்று வாதிடுவோர் உண்டு. பழைய செமிட்டிக் இலக்கியமான இது ஆசிரிய மன்னர் அஷ்டர் பனிப்பால் அவர்களின் (கி.மு. 668-627) அரண்மனைப் பொக்கிஷமாக கண்டுபிடிக்கப்பட்டுப் போற்றப் படுகிறது. இதை ஒரு புராதனமான உலகத்தின் முதல் நாவல் என்று பழைமை ஆங்கில இலக்கியவாதிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்தக் காவியத்தின் பல இடைவெளிகள் அனடோலியா மற்றும் இதர மெசப்பட்டோமிய கியூனி ஃபார்ம் கல்வெட்டுக்கள் மூலம் தொடர்பு செய்து நிரப்பட்டது. இந்த விவரங்களின்படி கில்காமேஷ் கி.மு. 2500 காலகட்டத்தில் உருக் நகர மன்னராக வாழ்ந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இதர சுமேரிய புராணங்களில் யுகப்பிரளயத்திற்குப் பின் ஆட்சி செய்த மன்னர்கள் வரிசையில் கில்காமேஷ் இடம் பெற்றுள்ளார். இராமாயண மகாபாரதங்களில் உள்ளவற்றைவிடவும் மிகப் பெரிய முரண்களோடு நடக்கிற சண்டைகளோடு தொடர்கிறது கில்காமேஷின் கதை. “என்கிரு” என்ற விலங்கு மனிதன் – எனுஸ் உருவாக்கிய மாவீரன். உருக் நகரத்திற்கு வருகிறான். கில்காமேஷ்நிலம், வானம், மண், காற்று பற்றிய பஞ்சபூத அறிவு நிரம்பப்பெற்ற பலசாலி. இருவருக்கும் போட்டி நடக்கிறது. என்கிடு தில்முனில் வாழுந்தெய்வமான எனுஸ் படைத்த முரட்டு அரக்கன். மூர்க்கமான போர் நிகழ்கிறது. கில்காமேஷ் என் கிருவை வென்றான். ஆனால் அவனைக் கொல்லாமல் அவனது நட்பைப் பெறுகிறான். என்கிருவும் கில்காமேஷீம் உயிர் நண்பர்களாயினர் என்று அந்தக் கதை தொடர்ந்து செல்கின்றது. அன்பின் பேசாலைதாஸ் 

No comments:

Post a Comment