புலிகளுக்கு பணம் திரட்டிய ஐவருக்கு 20 வருட சிறை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவு, நோர்வேயிலும் விசாரணைகள் தொடர இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரின் மேன்முறையீட்டு மனுவினை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அத்துடன், மேன்முறையீடு செய்த நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நெதர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் நிதி சேகரித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டவிரோதமாக அதிஷ்ட இலாபச் சீட்டுக்களை விநியோகித்தமை, பலருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, விடுதலைப் புலிகளுக்காக சேகரித்த நிதியினை இலங்கைக்கு அனுப்பியதாகவும் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவர்கள் இழைத்ததாக கூறப்பட்ட குற்றத்திற்காக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தேகநபர்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்த ஐந்து பேரில் நால்வர் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு மனு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுவை நேற்றைய தினம் தள்ளுபடி செய்த நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பையொட்டி நோர்வேயில் புலிகளுக்காக பணம் சேகரித்து தமது சொந்த பைகளை நிரப்பிய பல நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர பலர் செயல்படுவதாக வதந்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment