மன்னாரில் தமிழ் முஸ்லீம் மக்களின் நிலவிடுவிப்பு போராட்டத்தின்போது சர்வதேச மன்னிப்பு சபை குழுவினர்
(பிராந்திய செய்தியாளர்) 03.04.2017
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச பகுதியிலுள்ள முள்ளிக்குளம் மக்களும் முஸ்லீம் மக்களும் தங்கள் பூர்வீக காணியை விடுவிக்கக்கோரி அப்பகுதியில் இரு வௌ;வேறு இடங்களில் கடற்படை முகாமுக்கு முன்பாகவும் பள்ளிவாசல் முன்றலிலும் தங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை அறிந்து சர்வதேச மன்னிப்புச் சபை பொது செயலாளர் சாளில் சிற்றி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் லண்டனிலிருந்து இவ்விடங்களுக்கு திங்கள் கிழமை (03.04.2017) வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் மக்களை சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட படங்கள்.
இவ் சந்திப்பின்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வன்னி எம்.பி.எஸ்.வினோதராதலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.சிவாஐpலிங்கம், ஐp.குணசீலன் உட்பட அருட்பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
( வாஸ் கூஞ்ஞ )
( வாஸ் கூஞ்ஞ )
No comments:
Post a Comment