Wednesday, April 26, 2017

மன்னார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் இடத்துக்கான தீர்ப்பு யூலை 28

மன்னார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் இடத்துக்கான தீர்ப்பு யூலை 28

(பிராந்திய செய்தியாளர்) 25.04.2017
கடந்த 2013ம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வர மாந்தைப் பகுதியில் மனித புதை குழியிலிருந்து கண்டுப் பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை இலங்கையிலேயே பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு தரப்பு வாதங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் சார்பாக ஆஐராகி வரும் சட்டத்தரனிகளின் வாதங்களுக்கான கட்டளை எதிர்வரும் யூலை மாதம் 28ந் திகதி இடம்பெறும் என மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh இவ்வாறு கட்டளை பிறப்பித்தார்.
கடந்த 23.12.2013 அன்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்றவேளையில் மனித எச்சங்கள் கொண்ட புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இவ் புதைகுழியானது அன்று தொடக்கம் 05.03.2014 வரை 33 தடவைகள் அன்றைய மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்ன தலைமையில் அகழ்வு செய்தபோது 84 மனித மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
.மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இவ் மனித எச்சங்கள் பகுப்பாய்வு செய்யும் சம்பந்தமாக மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரனை நேற்று செவ்வாய் கிழமை (25.04.2017) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது
இவ் வழக்கில் அரச சட்டத்தரனியாக சிரேஷ;ட சட்டத்தரனி சமிந்த விக்கிரமரட்ண மற்றும் குற்றத்தடுப்பு விசாரனை பிரிவு அதிகாரியும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த சட்டத்தரனிகள் வீ.எஸ்.நிரஞ்சன், திருமதி மங்கேளஸ்வரி சங்கர், ரனித்தா ஞானராஐh, வீ.புவிதரன் மற்றும் மன்னார் சட்டத்தரனிகள் சிரேஷ;ட சட்டத்தரனி எம்.எம்.சபூர்தீன், எஸ்.செபநேசன் லோகு, சிராய்வா உட்பட பல சட்டத்தரனிகள் இவ் வழக்கில் ஆஐராகியிருந்தனர்.
அத்துடன் பாதிப்புற்றோர் சார்பாக பலர் மன்றுக்கு வருகை தந்திருந்தபோதும் ஆறு பேர் மற்றில் ஆஐராகி இருந்தனர்.
இவ் வழக்கில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்யப்படும் இடம் சம்பந்தமான வாத பிரதிவாதங்களே நடைபெற்றது.
இவ் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் நீதிமன்றில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கையில் இலங்கையில் இதுவரைக்கும் நடைபெற்ற காரணிகளில் நம்பகத் தன்மை இ;லை எனவும் அதாவது மாத்தலை பகுதியில் நடைபெற்ற மனித எச்சப் பரிசோதனையில் நம்பகத்தன்மை ஏற்படவில்லையெனவும், சட்ட வைத்திய நிபுணர் வைத்தியரத்தின ஐனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சம்பந்தமாகவும் இவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரனிகள் ஏற்கனவே இந்த மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு குற்ற விசாரனைப் பிரிவு பொருத்தமான நிறுவனமாக டீநவய யுயெடலவiஉ in குடழசனைய (ருளுயு) , டீநபநiபெ ஊhiயெ, மற்றும் ஆnஐன்டினா நாட்டுக்குரிய நிறுவனம் ஆகியவற்றை தெரிவு செய்து மன்றில் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் அரசு தரப்பு சார்பாக சீ.ஐ.டி யினரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது இவ் எச்சங்களை அமெரிக்காவிலுள்ள ஒரு ஆய்வுகூட நிறுவனத்தின் மூலம் பகுப்பாய்வு செய்ய அனுமதி வேண்டியிருந்தபோதும்
அவற்றை பாதிப்புக்குள்ளானவர்கள் சார்பில் ஆஐராகியிருந்த சட்டத்தரனிகள் ஏற்கனவே அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மாத்தலை புதைக்குழிக்கான ஆய்வு இந்த அமெரிக்காவிலுள்ள ஒரு ஆய்வுகூட நிறுவனத்தின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்குள்ள சந்தேகம் என்னவென்றால் இவ் நிறுவனத்துக்கு அனுப்பப்ட்டது சரியான மனித எச்சமா? சரியான மனித எச்சங்கள் அனுப்பப்படுமானால் அது எவ்வாறு பொதி செய்யப்பட வேண்டும் அத்துடன் மனித எச்சங்கள் கட்டுகாப்பு சம்பந்தமான சங்கிலி தொடர் சரியாக அமைய வேண்டிய என பல விடயங்களை மன்றில் காணாமல் போனவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் இவ் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்
.
இதற்கு அரச தரப்பினர் முன்வைத்தாவது காணாமல் போனவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு தாங்கள் முழுமையான உத்தரவாதம் தருவதாகவும் இலங்கையின் நிபுணத்துவத்தை பயண்படுத்தி இவ் மனித எச்சங்களை ஆய்வு செய்வது மேல் எனவும் இதில் திருப்தி காணாத பட்சத்தில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடலாம் என இவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் காணாமல் போனவர்கள் சார்பில் ஆஐரான சட்டத்தரனிகள் இன்னொரு விடயத்தையும் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அதாவது மன்னார் புதைகுழியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மனித எச்சங்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது அங்குள்ள வைத்தியர்கள் இடமாற்றம் பெற்று செல்வதாக அறிகின்றோம். இப்படியான நிலையில் இந்த மனித எச்சங்களின் நிலை என்னவாக இருக்குமோ என்ற ஐயப்பாடும் நிலவகின்றது என தெரிவித்தபோது
அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது ஏற்கனவே அனுராதபுர வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையிலேயே அவைகள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்படியாயின் சரியான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் முகமாக நீதிபதி மற்றும் பாதிப்புற்றோர் ஊடகங்கள் நீங்கள் குறிப்பிடும் எவர் முன்னிலையிலும் இவ் எச்சங்களை திறந்து பகுப்பாய்வுக்கு அனுப்பலாம் ஆகவே மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை இலங்கையிலேயே மேற்கொள்ள வேண்டும் என தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
இவர்களின் இரு தரப்பு வாதங்களுக்கும் செவிமடுத்த நீதிபதி கட்டளைக்காக எதிர்வரும் யூலை 28ந் திகதி இவ் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment