Tuesday, April 25, 2017

மன்னாரில் எரிபொருள் இன்மையால் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் ஒரு நிலையத்தில் மட்டும் விநியோகம் இடம்பெறுகின்றது.

மன்னாரில் எரிபொருள் இன்மையால் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் ஒரு நிலையத்தில் மட்டும் விநியோகம் இடம்பெறுகின்றது.
(பிராந்திய செய்தியாளர்) 25.04.2017
நேற்று முன்தினம் திங்கள் கிழமை (24.04.2017) முதல் நாடு பூராகவும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னாரில் திங்கள் கிழமை காலை முதல் மன்னார் நகரில் பெற்றோல் விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.
அதேநேரத்தில் நகரத்துக்கு அப்பாலுள்ள எரிபொருள் நிலையங்களில் பிற்பகல் வரையுடன் எரிபொருள் விநியோகிக்கப்பட்டபோதும் எரிபொருள் தீர்ந்த நிலையில் தற்பொழுது எரிபொருள் நிலையம் வெரிச்சோடிக் காணப்படுகின்றன
.
மன்னார் நகரில் மன்னார் மாந்தை மேற்கு எரிபொருள் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கள் கிழமை காலையுடன் எரிபொருள் விநியோகத்தை இடைறிறுத்தி வைத்திருந்தபோதும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மாந்தை மேற்கு எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசிய சேவை தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த எரிபொருள் நேற்று செவ்வாய் கிழமை (25) காலை முதல் விநயோகத்தை மீண்டும் ஆரம்பித்தபோது எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நெரிசல் பட்டுக்கொண்டிருப்பதையும், எரிபொருள் இன்மையால் எரிபொருள் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment