Thursday, April 26, 2018

மன்னாரில் 'தம்பா' சுற்றுக்கிண்ணப் போட்டியில் டிலாசால் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.

மன்னாரில் 'தம்பா' சுற்றுக்கிண்ணப் போட்டியில் டிலாசால் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.
(செய்தியாளர்) 24.04.2018
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையுடன் மன்னார் கீரீன் வீல்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் கே.சிறீகாந் தலைமையில் மூன்று தினங்களாக நடாத்தப்பட்ட 'தம்பா' சுற்றுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அடம்பன் பாலைக்குழி டிலாசால் விளையாட்டுக் கழகம் இறுதி சுற்றுப் போட்டியில் எருக்கலம்பிட்டி அல்வல்லா விளையாட்டுக் கழகத்தை பெனால்டி மூலம் 2-1 கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
கடந்த வாரம் மன்னார் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ் போட்டியில் மன்னார் மாவட்டத்திலிருந்து 42 கழகங்கள் பங்குபற்றின.
இறுதி நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் மொ.இ.மொ.இஸ்தீன் உட்பட பலர் இதில் முக்கியஸ்தர்களாக கலந்து கொண்டனர்.
இறுதி சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுக் கொண்ட அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் 40 ஆயிரம், 30 அயிரம் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
( வாஸ் கூஞ்ஞ)
LikeShow More Reactions
Comment

No comments:

Post a Comment