Thursday, April 26, 2018

தேர்தல் காலங்களில் நாம் நடந்து கொண்டது போன்று அல்லாது மன்னார் நகரத்தை ஒன்றுபட்டு அபிவிருத்தி செய்ய முனைவோம். மன்னார் நகரப் பிதா டேவிட்சன்

தேர்தல் காலங்களில் நாம் நடந்து கொண்டது போன்று அல்லாது மன்னார் நகரத்தை ஒன்றுபட்டு அபிவிருத்தி செய்ய முனைவோம்.
மன்னார் நகரப் பிதா டேவிட்சன்
(செய்தியாளர்) 24.04.2018
தேர்தல் காலங்களில் நாம் இவ் சபைக்கு தெரிவு செய்யப்படுவதற்காக போட்டியிட்டபோது நடந்து கொண்ட விதமாக இருக்காது மன்னார் நகரத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் நோக்குடன் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட உங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நிற்கின்றேன் என மன்னார் நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தனது கன்னிப் பேச்சில் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் இரண்டாவது அமர்வு நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை (20) மன்னார் நகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தனது கன்னிப் பேச்சில் கடந்த காலங்களிலே நாம் பல்வேறுப்பட்ட கட்சிகளிலே போட்டியிட்டு இவ் சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு இங்கு வந்திருக்கின்றோம்.
நாம் இங்கு தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்ற நோக்கம் எம் மன்னார் நகரத்தை அபிவிருத்தி செய்வதேயாகும்.
இவற்றை நாம் எம் மனதில் வைத்துக் கொண்டு நாம் எந்த விதமான முறையில் இவ் நகரத்தை அபிவிருத்தி செய்வது, எமது செயற்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒன்றினைந்து சிந்தித்து செயல்பட வேண்டும் என நான் இந்நேரம் உங்களுக்கு அழைப்பு விடுத்து நிற்கின்றேன்.
மேலும் நகர சபையின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவும். செயற்பாட்டுக்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நாம் மக்களுக்கு தேர்தல் காலங்களில் என்ன என்ன வாக்குறுதிகளை வழங்கினோமோ அதை நாம் மக்களுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.
அத்துடன் தேர்தல் காலங்களில் நாம் பல தரப்பட்ட கடசிகளில் போட்டியிட்டவாறு நாம் இந்த சபையில் நடந்து கொள்ளக் கூடாது எனவும் மாறாக எதிர் காலங்களில் எமது நகர சபையின் அபிவிருத்தியிலேயே நாம் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment