Saturday, April 28, 2018

வன்னியை பொறுத்தமட்டில் அமைச்சர் ரிசாட்டுடன் இணைந்து பயணிக்க முடியாது எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்

வன்னியை பொறுத்தமட்டில் அமைச்சர் ரிசாட்டுடன் இணைந்து பயணிக்க முடியாது எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்

(செய்தியாளர்) 26.04.2018
அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் அவர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க நாங்கள் கூட்டுச் சேர்ந்திருந்தால் நாங்கள் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் அவருடன் நாங்கள் கூட்டுச்சேர விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
-மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை நோக்கியதையிட்டு நேற்று முன்தினம் (25.04.2018) ஊடகவியலாளர்கள் இது விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோது அவர் தெரிவிக்கையில்
கேள்வி
மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோ இயக்கத்துக்கும் இடையே நிலவிய ஆசன பங்கீடே காரணம் என தெரிவிக்கப்படுகிறது இதற்கு உங்கள் கருத்து என்ன?
ஆசன பங்கீடுகளில் பிரச்சனை வந்தது உண்மை. ஆனால் தேர்தலில் வரைக்கும் அந்த பிரச்சனை தலை தூக்கவில்லை. அத்துடன் எங்களிடமும் ஒரு சில பிழைகள் இருக்கிறது. மக்களிடம் நாங்கள் போகவில்லை.
மேலும் மக்கள் இவ் தேர்தலில் தங்கள் வட்டாரத்தில் தங்கள் உறவினர் அத்துடன் தங்கள் வட்டாரத்தில் சேவை செய்யக் கூடியவர்கள் என்பதையே முன்னிருத்தி தெரிவு செய்துள்ளனர்.
ஆகவே இவ் தெரிவை நாங்கள் கட்சி முரன்பாடாக பார்க்கவில்லை. மாறாக இந்த தேர்தல் வட்டார முறையில் தெரிவு செய்யப்பட்டவர்கள். எங்களால் நியமிக்கப்பட்டவர்களை அந்த வட்டார மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்திருக்கின்றது. இதனால்தான் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றதொழிய எங்கள் கட்சிக்குள் உள்ள முரன்பாடுதான் காரணம் என சொல்ல முடியாது.
-கேள்வி
மக்கள் மத்தியில் இன்னொரு கேள்வி எழுந்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு நீங்கள் அதாவது உங்கள் கட்சியோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது தேசிய கட்சிகளுக்கு எதிராக எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் முன் வைப்பதில்லை எனவும், ஆனால் தமிழ் கடசிகளையே நீங்கள் பெரும்பாலும் தாக்கி பேசி வந்ததாகவும் என தெரிவிக்கப்படுகிறதே?
அப்படியல்ல தற்பொழுது உள்ள நாட்டிலுள்ள அரசியல் மாற்றம் எமது பிரச்சனைகளை இரு அரசியல் கட்சிகளம் சேர்ந்து தீர்ப்பதாக உறுதியளித்தார்கள். இதற்கு சர்வதேசம் எங்களுக்கு வாக்குறுதி தந்திருந்தது.
சர்வதேசத்துடன் நாங்கள் இணைந்து கொண்டுதான் நாங்கள் வெளியிலிருந்து இந்த அரசுக்கு ஆதரவை வழங்கி வருகின்றோம்.
ஆனால் நாங்கள் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் எவரையும் அல்லது அவர்களின் கட்சிளையோ தூற்றி பேசவில்லை. ஆனால் நாங்கள் பொதுவாக தெரிவித்தது என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பை எல்லோரும் ஒரு பொது எதிரியாக எங்களை நோக்குகின்றார்கள் என்றுதான்.
இதை நாங்கள் இந்த தேர்தல் தெரிவிலே கண்டு கொண்டோம். இதனால் பல சபைகளை தமிழர்கள் கைப்பற்ற முடியாது நிலை ஆகிவிட்டது.
உதாரணமாக மன்னார் பிரதேச சபையானது ஒன்று தமிழர் ஒருவர் தவிசாளராக வந்திருக்க வேண்டும். அல்லது உப தவிசாளராக வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டும் இல்லை.
இவ் பிரதேசத்தில் தமிழரும் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் இந்த இடத்தில் இவ்வாறு நிகழ்ந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு எதிரியாக நோக்கியமையே.
நாங்கள் பிரிந்து சென்றமையாலே எங்களுக்கு இவ்வாறான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் பிரிந்து சென்றமையால் இன்றைக்கு தென்னிலங்கை கட்சிகளான யானைக் கட்சிக்கும் கை கட்சிக்கும் கூடுதலான ஆசனங்கள் கிடைத்திருப்பது கவலை தரும் விடயம்.
பிரிந்திருப்பதற்கு நாங்களும் மற்றைய தமிழ் கட்சிகளும் வித்திட்டு இருக்கின்றோம். இது எமக்கு கவலையை உண்டு பண்ணியுள்ளது. இதனால் மற்றவர்களை பெரியவர்களாக்கி கூடுதலான ஆசனங்களை பெற வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் எதிர் காலத்தில் தமிழர்கள் பிரிந்து வாழக் கூடாது என்பதேயாகும்.
கேள்வி
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தவிசாளர் உப தவிசாளர் தெரிவுகளை கையாளுவோம் என அமைச்சர் ரிசாட் உங்களுடன் பல முறை முயன்றதாக தெரிவிக்கப்படுகிறதே அது விடயமாக?
அமைச்சர் ரிசாட் என்னுடன் பேசினார். ஆனால் வன்னியை பொறுத்தமட்டில் நாங்கள் அவருடன் கூட்டு சேர்ந்து போகமுடியாது.
காரணம் இங்கு எங்கள் மக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற நிலைக்கு அப்பால் அமைச்சர் ரிசாட்டுடன் நாங்கள் கூட்டுச் சேர முடியாது என்றுதான் எங்கள் நிலைப்பாடு.
உண்மையில் நாங்கள் அமைச்சருடன் இணைந்திருந்தால் நாங்கள் அதிகமான இடங்களில் ஆட்சியை பிடித்திருப்போம். அதை செய்ய விரும்பவில்லை என்றார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment