Sunday, December 17, 2017

மன்னார் ஆயரின் கனவு நனவாகுமா? புதிய ஆயர் அவரின் பாதையில் பயணிப்பாரா?,,,,, பேசாலைதாஸ்



ஓய்வு  நிலையி லிருக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் கனவு நனவாகுமா? ஆயர் அவர்கள் தனது மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அவர் மதத்துக்கு அப்பால் சாதி மதம் இனம் மொழி என்ற வேறுபாடின்றி இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அதாவது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அனைவரும் ஒன்றினைந்து நாட்டை நல் வழியில் கொண்டு செல்வதற்கு அரசியல் தீர்வு மூலம் பிரச்சைனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவரின் வேட்கையாக இருந்தது இருக்கின்றது.

அதுமட்டுமல்ல அரசியல் கைதிகள் விடுதலையாக வேண்டும் என்பது இன்றும் அவரின் சிந்தனையாகவே நிலைகொண்டிருக்கின்றது.
இன்றைய அவரின் ஓய்வு நிலையும் சுகயீனமும் இலங்கைவாழ் தமிழ் மக்கள் மத்தியில்மட்டுமல்ல உலகிலுள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் கவலையை உண்டுபண்ணியிருக்கின்றது. இவர் தொடர்ந்து பூரணசுகம்பெற்று எல்லா சமூகத்தின்மீதும் கொண்டுள்ள மனிதநேய பணி தொடரவேண்டும் என பலரும் வேண்டி நிற்பது கண்கூடாக இருக்கின்றது.
                                ஓய்வு நிலையிலுள்ள மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை 16.04.1940 ஆம் ஆண்டு இலங்கை வட மாகாணத்திலுள்ள நெடுந்தீவு என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது மெய்யியல் கல்வியை 1960 இலிருந்து 1963 வரை அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் இறையில் கல்வியை 1963 லிருந்து 1964 வரை அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் அதைத் தொடர்ந்து 1964 லிருந்து 1965 வரை சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் இடைக்கால ஆசிரியராகவும் 1965 முதல் 1968 வரை இவர் தனது இறையியல் கல்வியை திருச்சிராப்பள்ளி சென் போல்ஸ் பெரிய குருமடத்திலும் தனது கல்வியை மேற்கொண்டார்.
இவர் யாழ் ஆயர் nஐறோம் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் 13.12.1967ம் ஆண்டு சென்.மேரிஸ் பேராலயத்தில் அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
                                                                  இவருடைய பணி வாழ்வானது மே மாதம் 1968 தொடக்கம் 1969 வரை உதவி பங்குத்தந்தையாக முருங்கனிலும் மே மாதம் 1969 தொடக்கம் 1971 வரை உயிலங்குளம் இளவாலை சேன்தா ன்குளம் ஆகிய பங்குகளில் உதவி பங்கு தந்தையாகவும் 1971 ஆம் ஆண்டிலிருந்து 1975ம் ஆண்டுவரை உரும்பிராய்இ சுன்னாகம் ஆகிய பங்களில் பங்கு தந்தையாகவும் பின் 1975 லிருந்து 1980 வரை இவர் பெரிய விளான். பண்டத்தரிப்பு ஆகிய பங்குகளில் பங்கு தந்தையாகவும் ஒக்டோபர் 1980 தொடக்கம் 1984 வரை திருச்சபையின் சட்டக்கோவை முதுமானி பட்டப்படிப்பை றோம் நகர் கிறகோரியன் பல்கலைக்கழக த்தில் பயின்றார். அத்துடன் இவ் பல்கலைகழகத்தில் லத்தீன் மொழியில் டிப்ளோமா பட்டப்படிப்பை மேற்கொண்டு பட்டத்தையும் பெற்றார்.
                                                     இதைத் தொடர்ந்து 1985 ஐனவரி 25ந் திகதி இவர் தனது பட்டப்படிப்புகளை முடித்துக்கொண்டு யாழ் மறைமாவட்டத்துக்கு மீண்டும் திரும்பினார். வருகை தந்தவர் 1985 தொடக்கம் 1991 வரை இவர் யாழ் மறைமாவட்டத்தின் சுன்டிக்குழி பங்குதளத்தில் பங்குதந்தையா கவும் அதேவேளையில் திருச்சபையின் சட்டக்கோவை சம்பந்தமான கல்வியை கொழும்புத்துறை குருமடத்தில் கற்பித்தார். அத்துடன் யாழ் மறைமாவட்டத்தில் திருமணம் சம்பந்தமான விடயங்களின் பொறு ப்பின் ஆணையாளராகவும் செயல்பட்டார். இவரின் தாய் மொழியாக தமிழ் இருந்தாலும் லத்தீன் Nஐர்மன் இத்தாலியன் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர். சிங்கள மொழியை யும் சற்று விளங்கக்கூடிய விதத்தில் பேச திறமை கொண்டிருந்தார்.
அருட்பணி தோமாஸ் அடிகளார் சபை ஒன்றின் ஸ்தாபராக இருக்கின்ற அடிகளாரை புனித நிலைக்கு உயர்த்துவதுப்பற்றி கற்று ஆய்வு செய்வ தற்காக 1986ம் ஆண்டு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ரோமுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
                                                                       பின் இவர் 16.08.1992ம் ஆண்டு வவுனியா மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்று 20ந் திகதி ஒக்டோபர் மாதம் 1992ம் ஆண்டு மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மடு அன்னை ஆலயத்தில் அன்றைய மன்னார் ஆயராக இருந்த மேதகு தோமாஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை மற்றும் இலங்கைக்கான பாப்பரசரின் தூதுவராக இருந்த மேதகு வ்ரன்சுவா பார்கெட் (குசரபெய டீரசமநவ) ஆண்டகை கொழும்பு தலைமை ஆயர் அதிவணக்கத்துக்குரிய நீக்கிலாஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகைகளின் முன்னிலையில் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார்.
                                                 இதைத்தொடர்ந்து இவர் 22.08.1992ம் ஆண்டு ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமிருந்து மன்னார் மறைமா வட்டத்தை பொறுப்பேற்றார். 40 வருடங்களுக்கு மேலாக சமாதானத்தின் பாலமாகவும் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தார். அதிலும் 2012ம் ஆண்டு முதல் இவர் இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.
அத்துடன் இலங்கை ஆயர் மன்றத்தினால் பொதுநிலையினருக்கான தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் இலங்கை ஆயர் மன்றத்தின் உதவி தலைவராகவும் கடமை புரிந்தார். இந்த நிலையில் ஆயர் யோசேப் ஆண்டகை தனது 75வது வயதில் தனது ஆயர் பணி     யிலிருந்து கடந்த 14.01.2016 அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு அதாவது வத்திக்கான நேரப்படி கத்தோலிக்கர் மூவேளை செபம் சொல்லும் நேரமாகிய நண்பகல் 12 மணிக்கு தனது ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
                                                                                    ஆயர் அவர்களின் மனிதாபிமான பணிகள் அதிகம். இவற்றில் சில வெளிச்சத்துக்கு வந்தபோதும் பல விடயங்கள் இலைமறை காயாகவே இருக்கின்றது. அதாவது யுத்தக்கா லத்தில் பொதுமக்களுக்கு எதாவது துன்பம் நிகழ்ந்து விட்டால் அப்பகு திக்கு யாரும் செல்லமுடியாவிட்டாலும் அவர் அந்த இடத்துக்கு நேரடியா கச் சென்று பாதிப்படையும் மக்களுக்காக குரல் எழுப்பினார். ஆயர் அவர்கள் மறைவாக செய்த பணிகள் ஏராளம். அதாவது மன்னார் மறைமாவட்டத்தில் விதவைகள் எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக பல உதவிகள் புரிந்தார். கைவிடப்பட்ட நோய்வாய்பட்டவர்கள் இனம் காண ப்பட்டால் அவர்களுக்கான வைத்திய தேவைகளுக்கான உதவிகளை மேற்கொண்டிருந்தார்.
                                                 தங்கள் படிப்பை தொடரமுடியாமல் கஷ;டப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கஷட்டப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் பாடசாலைக்கல்விக்கென இவ்வாறு கல்விக்காக பல உதவிகளை புரிந்துள்ளார். கைவிடப்பட்ட சிறுவர்களை பராமரிப்பத ற்காக அருட்சகோதரிகள் துறவிகளை மன்னார் மறைமாவட்டத்துக்கு வரவழைத்து அவர்களுக்காக சிறுவர் பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி செயல்படுத்தியுள்ளார் இவைகள் இப்பொழுதும் வவுனியா மன்னார் பகுதிகளில் இருந்து வருகின்றன அதுமட்டமல்ல முருங்கனில் டொன்பொஸ்கோ சபை அருட்பணியாளர்களை வரவழைத்து தொழிற் பயிற்சி நிலையத்தை உருவாக்கியுள்ளார். இவ்வாறு பல சபைகளைச் சார்ந்த அருட்பணியாளர்கள் துறவியர்களை மன்னார்ம றைமாவட்ட த்துக்கு வரவழைத்து ஆன்மீகப் பணிகளை மட்டுமல்ல சகலரும் தொழில்சார் கல்விகளைப்பெற வழி சமைத்து கொடுத்துள்ளார்.
                                                                                     இவரிடமிருந்த ஒரு சிறப்பு குணம் என்னவென்றால் யார் இவரைநாடி வந்தாலும் இனம் மொழி மதம் பாராது உதவிகள் புரிந்துள்ளார் என பலரும் இவரை பாராட்டுவது கேட்க க்கூடியதாக இருக்கின்றது. இவருடை மனதுக்குள் நீண்டகாலமாக இருந்த விடயம் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும் என்பதே சிறையில் இருப்போரின் குடும்பங்களுக்கு தேவை யான உதவிகளை செய்வது சிறைகைதிகளை வெளியில் வருவதற்காக சட்டத்தரனிகளுடன் பேசுவதும் அவர்களுக்கான செலவுகளை செலவி டுவதும் இருந்ததுமட்டுமல்ல இந்த அரசியல் கைதிகளை எப்படியாவது விடுவித்துக் கொள்ளவேண்டும் என்பதே அவரின் தொடர் கனவாக காணப்பட்டது. கனவுமட்டுமல்ல சிறையில் வாடுவோரை நேரில் சென்று பார்வையிடுவதில் மிகவும் அவா கொண்டு தனது நேரங்களை இவர்க ளை சந்திப்பதில் செலவிட்டார்.
                                                                  யுத்தக்காலத்தில்கூட தனது கட்டுப்பாட்டு க்குள் இருந்த வாழ்வோதயம் Nஐ.ஆர்.எஸ்.நிர்வனங்களை சம்பவ இடங்க ளுக்கு அனுப்பி இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு சுமார் 85ஆயிரம் 90 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பணியை தனது தலை மையின் கீழ் இருந்து செயல்பட்டார். ஆயர் யோசேப்பு காலத்தில்தான் இவ் மாவட்டத்தில் பிரச்சனைகள் தலைதூக்கப்பட்டதும் பெரும்பாலன கோவில்கள் தாக்கப்பட்டு அழிவுற்று இருந்தன. அதேவேளையில் அவர் காலத்தில்தான் அழிவுற்ற நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்கள் எல்லாம் புனரத்தானம் செய்யப்பட்டதுடன் பெரும்பாலன புதிய பங்குகளும் உருவாக்கப்பட்டன. 105 பேருக்கு மேல் அருட்பணியாளர்களாக திருநிலைப்படுத்தியுள்ளார்.
                                                               மன்னார்pல் மதப்பிரச்சனைகள் மற்றும் மதங்களுக்கிடையே புரிந்து கொள்ளாத் தன்மை ஏற்படும்பொழுது அவற்றை நடுநிலமையாக நின்று தீர்த்து வைத்தது நிமித்தம் இங்கு ஒற்றுமையை நிலைநாட்டியதுடன் பிற சமயத்தவர்கள் கூட இவருடன் அந்நியோனியமாக கலந்துறையாடி பல ஆலோசனைகளை பெற்றுச்செ ல்வர் என்பது யாரும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
மன்னார் ஆயராக இருந்த யோசேப்பு ஆண்டகை மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்ட ஆயராக நியம னம் பெற்றபின் அவர் தனது மதத்துக்காக மட்டும் தனது பணியை மேற்கொள்ளவில்லை. மதம் கடந்த மானிடருக்காக ஆற்றிவந்த பணி யானது மகத்தானது.
                                              தமிழ் மக்கள் எந்தவகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல அவர்கள் பூரண அரசியல் உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவத்துடன் வாழவேண்டும் என்பதே ஆயரின் மனதில் இருந்துவந்த கொள்கையாகும். தமிழரின் பூர்வீகம் கலை கலாச்சாரம் அணைவராலும் அங்கிகரிக்கப்பட்டு இது அணை வராலும் மதிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை தனது மனதில் ஆழப்பதித்த ஆண்டகை 1992 ஆம் ஆண்டு ஆயராக பொறுப்பேற்றபின் அன்று முதல் இவ் கொள்கைக்காக துணிந்து செயல்படத்தொடங்கினார்.
இவ் கொள்கையை நடைமுறைப்படுத்த அவரின் துணிந்த செயல்பா ட்டைக்கண்டு பலரும் வியத்தபோதும் இவரே ஒரு உண்மை துறவி என பலரையும் வியக்கவைத்தது என்பது சந்தேகம் இல்லை.
                                                    அதுமட்டுமல்ல வெளிநாடு உயர்ஸ்தானிகர்களை சந்தித்து இவ்நாட்டில் இடம்பெற்ற யுத்தநிலைமைகளை உரைத்த உண்மைகள் இவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏன் இங்குவரும் பெருந்தலைவர்கள் யாரையும் சந்திக்காவிடினும் ஆயரான யோசேப்பு ஆண்டகையை சந்திக்காமல் செல்லமாட்டார்கள். இது ஆயரின் உண்மைக்கும் அவரின் ஆளுமைக்கும் ஒரு சான்றாக காணப்பட்டன.
பரிசுத்த பாப்பரசர் இத்தாலிய பிரதமர் இந்திய பிரதமர் அமெரிக்க தூதுவர் போன்ற பெருந்தலைவர்கள் இவ் சந்திப்புகளுக்கு சான்று பகிர்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஐனவரி 2011 இல் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லி னத்துக்குமான ஆணைக்குழுவானது மன்னாருக்கு வருகை தந்திரு ந்தபோது இவர்களுக்கு முன் தோன்றிய ஆயர் யோசேப்பு ஆண்டகை அவர்கள் நடந்து முடிந்த போரில் நீதிக்கு எதிரான அத்துமீரல்களை மிக தெளிவாக சுட்டிக்காட்டியதோடு இறுதி யுத்தத்தின்போது 146இ479 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவிடயமாக பொறுப்பு கூறப்படல் வேண்டும் என்ற பதிவை அங்கு மேற்கொண்டார். இந்த பதிவானது தமிழர்களின் நிலை உலகிற்கு வெளிச்சமானது. இதனால் இவரின் துணிவும் உண்மையும் ஒரு உண்மை துறவியின் நிலையை இவ்வுலகம் புரிந்து கொண்டது எனலாம்.
                                                                                2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் nஐனிவாவில் இலங்கை தொடபான பருவகால மனித உரிமைகள் தொட ர்பிலான மதிப்பீடொன்றின் போதான துணை மாநாட்டில் இணையம் ஊடாக ஆயர் யோசேப்பு ஆண்டகை உரையாற்றுகையில் தமிழ் மக்க ளுக்கு 13ம் திருத்தம் தீர்வாகாது எனவும் தமிழர்களும் இந்நாட்டு மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமையை ஏற்று க்கொள்ளும் தீர்வே நிலைகொண்ட தீர்வாக இருக்கும் என வலியுறுத்தி னார். போரின் முடிவில் தலத்துக்கே சென்று இறந்தவர்கள் காணாமல் போனவர்களின் தொகையை கேட்றிந்து எண்ணிச் சொன்னவர் ஆய ர்தான் என்பது இங்கு சந்தேகம் இல்லை. அதுமட்டுமல்ல இடம்பெயர்ந்த மக்களை மெனிக்பாமுக்கு அழைத்துவரப்பட்டபோது இவர்களை சாதி மதம் இனம் என எவ்வித பாகுபாடின்றி திருச்சமையின் தொண்டு நிறுவனங்கள் மூலம் இறுதிவரை இவ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்தவர்தான் ஆயர் அவர்கள்.
                                                                                       அத்துடன் இவ் முகாமில் எவரும் பொறுப்பேற்க முடியாதிருந்த அங்கவீனர்களை தன்பொறுப்பில் ஏற்று அவர்களை பராமரிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்தார். மேலும் பாதிப்படைந்தோர் கஷ;டப்பட்டோர் என மன்னார் வவுனியா மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் புரிவதிலும் இவர் பின் நிற்கவில்லை போரின்நிமித்தம் விதவைகளானோருக்கு வாழ்வாதார திட்டங்கள் அறிமுகம் செய்து அதை செயல்பாட்டில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகி ன்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.அநாதை சிறுவர்களுக்கான கல்விக்கு இன்றும் அனுசரனை செய்து வருகின்றமை கண்கூடாக இருக்கின்றன. வசதியற்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கான உதவிகளை செய்து வருகின்றமை உயிர் ஆபத்து நோயாளிகளுக்கு மருத்தவ அதரவை வழங்கி வருகின்றமை போன்றவையெல்லாம் இவரின் அரும்பெரும் பணிகளை பட்டியலிட்டு செல்லலாம்.
                                                                                   இதுமட்டுமா பாதிப்புக்குள்ளாகிய முஸ்லீம் சகோதரர்களுக்காக இவர் குரல் கொடுத்தபோது இவரின் மதம் கடந்த பணியைக் கண்டு பலரும் வியத்தனர். 1989 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டபோது அதற்கு எதி ராக இருந்து ஆயர் யோசேப்பு ஆண்டகை குரல் கொடுத்தது அரசு தவறு இழைக்கும்போது மட்டுமல்ல மனிதநேயத்துக்கு எதிராக யார் செயல்ப ட்டாலும் துணிந்து நின்று குரல் கொடுப்பவர்தான் ஆயர் அவர்கள் என பல சந்தர்ப்பங்களில் எண்பித்துள்ளார். ம்மணி மன்னார் மாந்தை புதைகுழி விடயங்களை இவர் வெளிகொணர்ந்தபோதும் யுத்தத்தி ன்போது காணாமல்போனோரின் தகவல்களை இவர் எடுத்தியம்பிய போதும் காணாமல்போனோர் சம்பந்தமான விசாரனை ஆனைக்குழு முன் அதாவது கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லினக்கத்துக்குமான என்ற அந்த ஆணைக்குழு முன் துணிவுடன் உண்மைகளை எடுத்துக் கூறினார்.
                                           அதுமட்டுமா அரசால் பொதுமக்களின் காணிகளை அபகரித்தபோதும் திட்டமிட்ட குடியேற்றம் சம்பந்தமாகவும் ஆயர் கண்ணை மூடிக்கொண்டு இராமல் அரசுக்கு எதிராக இவர் செயல்பட்ட போது இவரின் மனிதநேயம் துணிவு ஆகியவற்றை உலகம் வியப்புடன் பார்த்ததுமட்டுமல்ல இவரின் உண்மைதன்மையையும் உலகம் தொட ர்ச்சியாக புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது எனலாம்.தமிழ் மக்களின் உணர்வுகள் எண்ணங்கள் தேவைகளை அறிவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் வட மாகாண சபையினரிடமும் கலந்தாலோசித்து நல்லதொரு அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என மன்னாருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பொது வேட்பாளர் பிரதிநி திகள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையை சந்தித்தபோது ஆயர் இவ்வாறு தெரிவித்தார். அதாவது தமிழ் மக்களும் மைத்திலிக்கே வாக்களிக்க விருப்பம் கொண்டு இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்
ஐனாதிபதிக்கான தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்து க்காக மன்னாhருக்கு ஐனாதிபதி வேட்பாளர் மைத்திலிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள் றிஷhட் பதியூதீன்இ ராஐpதசேனரட்ன மற்றும் அமரர் ஐயலத் nஐயவர்த்தனவின் மகன் வைத்தியகலாநிதி காபிந்த nஐயவர்த்தன எம்.பி. ரவி கருணாயக்க மனோ கணேசன் ஆகியோர் கொண்ட குழு ஆயரை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தது.
இவ் சந்திப்பில் இடம்பெற்ற கருத்தமர்வில் அருட்பணியாளர்கள் முக்கயஸ்தர்கள் கலந்து கொண்டபோதும் ஊடகவியலார்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
                                                                        இருந்தபோதும் இவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை ஊடகங்களு க்கு தெரிவித்ததாவது ஐனாதிபதி தேர்தலில் பங்கு பற்றுகின்ற மைத்திரி பால சிறிசேனா அவர்களின் கட்சியும் அவர்களின் உதவியாளர்களும் இங்கு வந்தார்கள் இதன் நோக்கம் என்னவென்றால் தமிழ் மக்களின் ஆதங்களை அறிந்து கொள்வதற்காகவே ஏனென்றால் அவர்கள் கூட்டம் வைக்கும்போது தமிழ் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்க ளுக்கு நேரம் இன்மையாலும் அத்துடன் அவர்கள் தங்கள் கருத்தக்களை சொல்லி விட்டு சென்று விடுவார்கள் என்பதால் என்னுடன் பேசுவத ற்காக இங்கு வருகை தந்திருந்தார்கள் என்றார். அவர்களுடன் மக்களின் முக்கியப் பிரச்சனைகளை பிறகு பேசித் தீர்த்துக் கொள்ளளாம். இரு ந்தும் அதைப்பற்றி பேசவேண்டிய சம்பந்தமாக அரசியல் விடயமாகவே நாங்கள் பேசினோம். இந்த நாடு பல இனங்கள் கொண்ட நாடு அத்துடன் பல சமயங்கள் கொண்ட நாடு ஆனால் ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற கடந்த ஆட்சியில் துன்பங்களை தாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் கருத்துக்கள் அவர்களின் சிந்தனைகளுக்கு வருவதில்லை. மாறாக தமிழ் மக்களுக்கான எதிர்ப்பு உணர்வுகளையே கடந்த அரசிடமிருந்து நாங்கள் சந்தித்துள்ளோம். அத்துடன் இவ்வாறான இடர்களை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய எவரும் முன்வரவில்லை.
                                                தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் சிங்கள மக்கள் தங்களுக்கு நெருக்கடிகளை கொடுப்பார்கள் என ஒரு மாயையில் அவர்கள் சிக்குண்டு இருந்தார்கள். தழிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரே நாட்டு மக்கள் அணைவரும் சமரசமாக ஒன்று பட்டு வாழணேடு டியவர்கள் அப்படித்தான் தமிழ் மக்கள் நாங்கள் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்க ளைப்பற்றி ஒரு தவறான எண்ணக் கருத்துக்களையும் சிந்தனைகளை யும் சிங்கள மக்களிடம் தவறான வழியில் அரசியல்வாதிகளால் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் தமிழ் மக்கள் அவ்வாறு சிந்திக்க வில்லை ஏனென்றால் ஒரு துன்பம் நேருடுமாகில் அது தமிழ் மக்களு க்கும் சிங்கள மக்களுக்கும் ஒன்றுதான்.
                                                                                       ஆகவே இந்த ஒரே நாட்டிலுள்ள அரசில் பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்பட வேண்டும். தமிழ் ஈழத்தை தவிர தமிழ் மக்களுக்கு எல்லாம் தருவேன் என இவ் அரசியல் வாதிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் எங்களுக்கு ஒன்றும் தரவி ல்லை எங்களுக்கு ஈழம் தேவையில்லை மாறாக நாங்கள் சுய மரியாதை யோடு வாழும் மக்களாக இருக்க வேண்டும் ஆகவே பல இனம் மொழி சமயம் கொண்ட இந்த நாட்டில் தமிழ் மக்கள் அறுபது நூறு ஆண்டு களுக்கு மேலாக தங்கள் உரிமைகளை அரசியல் ரீதியாகவும் அகிம்சை வழியாக கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் இவைகள் எல்லாம் ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்டதொழிய வேறு எந்த பயனும் கிடைக்கவில்லை.
                                                     இதனால்தான் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அனைவரும் ஒன்றினைந்து நாட்டை நல் வழியில் கொண்டு செல்வதற்கு அரசியல் தீர்வு மூலம் பிரச்சைனைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் முனைந்தோம். இந்த நாடு இயற்கையிலே ஒரு அழகான நாடு இது இறைவன் எமக்கு தந்த பெருங்கொடை ஆனால் மனிதர்களோ இவற்றையும் மனிதத்தையும் அழிப்பதிலேதான் முனைந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆகவேதான் இதில் மாற்றம் பெற்று ஒரு புதிய நாடாக ஓர் அழகான இலங்கையாக இருக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம். தமிழ் மக்களுக்கு நீண்ட காலப் பிரச்சனைகள் இருக்கின்றன இதைப்பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை என அரசில்வாதிகள் இருக்க முடியாது அதைக் கேட்பவ ர்களையும் அவர்கள் தண்டிக்க முடியாது இவற்றைக் கேட்பவர்கள் தமிழ் பகுதியில்தான் இருக்கின்றார்கள் எனவும் சொல்ல முடியாது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் வட மாகாண சபையிடனும் பேச்சு வார்த்தை நடத்தும்போதுதான் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்கொண்டு வருவார்கள் அப்பொழுது எல்லோரும் ஒன்றினைந்து ஒரு தீர்வை பெறமுடியும் என்றுதான் பேசினோம் இப்படியான காரியம் செய்யப்படுமாகில் அநீதிகளோ மக்கள் புறக்கனிப்போ இந்த நாட்டில் ஏற்படாது. மேலும் இந்த நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் விதைவைகள் உடலில் காயத்துடனும் குண்டுகளுடனும் இன்னும் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை
                                                                                           இது ஏன் இவர்கள் கவனத்துக்கு எடுக்கப்படவில்லையென்றால் தமிழர்களின் வாக்குகள் தங்களுக்கு தேவைப்படாது என்ற காரணமே ஆனால் தற்பொழுது எதிரணியில் போட்டிடும் அமைப்பு அதன் வேட்பாளர் ஒரு பரந்த மனப்பாங்குடன் மட்டுமல்ல அவற்றை நல் செயல்பாட்டில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டபோது அவர்களும் அதே மனப்பாங்குடன் இருப்ப தாகவும் தெரிவித்தனர்
                                                                    அத்துடன் இவர்களின் செயல்பாட்டிலும் விஞ்ஞாபனத்திலும் இவர்களின் நல் எண்ணங்கள் இருப்பதையும் எம் மக்கள் நன்கு அறிவார்கள் ஆகவே எமது தமிழ் மக்கள் எதிரனி பொது வேட்பாளருக்கு வாக்களிக்க இருக்கின்றனர். ஆகவே இவர்களின் நல்லெ ண்ணங்கள் செயல்பாடுகள் நல்ல முறையில் நடைபெற வாழ்த்திய துடன் இந்த நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் திகழ வாழ்த்தி அனுப்பினேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை இவ்வாறு அந்நேரம் தெரிவித்தார் ஆயரின் இவ் ஆசீர்வாதம் சந்தித்த அந்த அரசியல்வாதிகளுக்கு இப்பொழுது பலன் கிடைக்கப் பெற்றிருக்கின்றபோதும் பிறர்மட்டிலுள்ள மனிதநேயம் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களுக்கு நிறைவு பெறாமல் இருப்பதே ஆயருக்கு இருந்துவரும் கவலையாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
                                                                                                         இதனால்தான் என்னவோ உலக தமிழினம் ஆயர் யோசேப்பு ஆண்டகை ஆயர் பதவியிலிருந்து ஓய்வு நிலையில் இருந்தாலும் அவர் மீண்டும் நற்சுகம் பெற்று தனது மனிதநேயப்பணியை தொடரவேண்டும் என மக்கள் இறைவனிடம் வேண்டி நிற்பதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆயரின் பாதையில் புதிய ஆயர் அவர்கள் பணிக்க வேண்டும் என்பதே மன்னார் மறை மாவட்ட விசுவாசிகள் மடுமல்ல, அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பதிவாளர் எனது ஆசைகளும் கூட ,,,,,, என்றும் அன்பில் பேசாலைதாஸ்

வடிவேலுவை ஏன் மகா கலைஞன் என்கிறோம்?

வடிவேலுவை ஏன் மகா கலைஞன் என்கிறோம்? கலைவாணர் அரசியல் பிரக்ஞையுடன் நிதானமாக நகைச்சுவை உணர்வை நம்மில் கிளர்த்துபவர். தங்கவேலு கீழ் மத்தியதர வர்க்கத்தின் இரட்டை வாழ்நிலையைப் பகடி செய்வதன் மூலம் நம்மைக் கவர்ந்தவர். கவுண்டமணி செந்தில் நகைச்சுவையில் இரண்டு பரிமாணங்கள் இருந்தன. நிலவும் அரசியலை அவர்கள் பகடி செய்தார்கள். அவர்களது நகைச்சுவையில் நிறம், சாதி போன்றவற்றை இழிவுபடுத்துதம் பண்புகள் அதிகம் இருந்தன. இந்த விஷயத்தில் கவுண்டமணி கவுண்டர் மனநிலையை வெளிப்படுத்தினார் எனச் சொல்லலாம். மணிவண்ணன் நடிகவேளின் சமகால நீட்சி. அதிகார வர்க்கத்தின்- உயர்குடிகளின் வாழ்வை அரசியல் பகடி செய்தவர்கள் அவர்கள். விவேக் எந்த ஒரிஜினாலிடியும் இல்லாத ஒரு கலவை. கவுண்டரின் இழிந்த வடிவம் சந்தானம். வடிவேலு நாம் அன்றாடும் வாழும்-எதிர்கொள்ளும் குடிமைச் சமூகத்தின் அனைத்துப் பண்புகளும் தழுவி முழு சமூகத்தையும் எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் அதுவாகவே ( பாத்திரப் படைப்புகளில்) வாழ்ந்து சுயபகடியின் மூலம் முழு சமூகத்தையும் பகடி செய்தவர். அவரது உடல் மொழி பிற எவருக்கும் வாய்க்காதது. ‘பிரண்ட்ஸ்’ மற்றும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழில் நகைச்சுவை நடிகர்களது தனித்தனிப் படங்களை எடுத்து அலசுகிற எவரும் இந்த எல்லையை வந்து அடைய முடியும் என நினைக்கிறேன்..
உண்மைதான் தோழர்....
வடிவேலுவை எல்லோருக்கும் ஏன் பிடிக்கிறது என்பதற்கான காரணங்கள் இவையே.
அதும் போக நமக்கு பழகிய வார்த்தைகளுக்கு புதிய புதிய அர்த்தங்களை தந்ததன் மூலம் தமிழ் மொழியின் எல்லைகளை சற்று விசாலமாக்கியிருக்கிறார்.

"ஆணியே புடுங்க வேண்டாம்"....இன்றைக்கு நாம் அடிக்கடி பல்வேறு இடங்களில் புழங்கும் வார்த்தை.
இதே போல......
"நாங்க எதுக்குடா ராத்திரி பன்னன்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போனும்...?"

" தம்பி இன்னும் டீ வர்ல".

"வந்துட்டாங்கய்ய்யா....
வந்துட்டாய்ங்க...."...

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். 
பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை ஏற்றியதன் மூலம் வடிவேலு நம் மொழிக்கு செய்திருக்கும் பணியும் கவனிக்கப்படவேண்டியதே தோழர்.

Tuesday, December 12, 2017

இலங்கை முஸ்லிம் மக்களது அடையாளம் எது? பேசாலைதாஸ்

இலங்கை முஸ்லிம் மக்களது அடையாளம் எது? பேசாலைதாஸ்

இன்றைய இலங்கையின் இனச்சிக்க லில் முஸ்லிம் மக்களது பங்களிப்பை அவதானமாக கையாளவேண்டிய தேவை, தமிழ் பேசும் இனத்திக்கு இரு க்கின்றது. இலங்கையில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் இலங்கை சோனகர் Ceylon Moor என்றே கருதப்பட்டனர். சேர் பொன் இராமநாதன் போன்ற தலைவ ர்கள் மலையக மற்றும் இந்திய வம்சா வளி தமிழர்களை இலங்கை தமிழர் இனம் என்ற கோட்பாட்டுக்குள் உள்வா ங்க மறுத்த வரலாற்று தவறுகளை, இலங்கை சோனகரிலும் பிரயோகித்தனர்.  இதன் விளைவாக இலங்கை சோனகர் தமிழ் இனம் அல்ல என்று சேர் பொன் இராமநாதன் அவர்கள் The Royal Asiatic Society சமர்ப்பித்த அறி க்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனை அக்கால த்தில் இருந்த சோனக தலைவர் I.L.M அசீஸ் போன்றவர்கள் எதிர்த்தார்கள். வேறு வழியின்றி இலங்கை முஸ்லிம்கள் என்ற முறையில் இதர முஸ்லிம் சமூகமான மாலே, போரா, யாவா, மேமன் போன்ற  சமூகங்களை ஒன்றினைத்து இலங்கை முஸ்லிம்கள் என்ற ஒரு குடைக்குள் ஒன்றுபட்டனர் அதன் விளைவாக இலங்கை முஸ்லிம்களது இன அடையாளம் இஸ்லாம் மார்க்கமாக காண்பிக்க முற்பட்டது துரதிஸ்ட வசமாகும். இதற்கு முக்கிய காரனம் சேர் பொன் இராமநாதன் போன்ற மேலோங்கி சாதியத்திமிர் என்பதில் சந்தேகமே இல்லை. சமூகவியல் அடிப்படையில் நோக்கினால், மார்க்க அடையாளம் ஒரு இனத்தின் அடையாள மாககொள்ள முடியாது. அது வெறும் மத அடையாளமே தவிர ஒரு இனத்தின் அடையாளம் அல்ல. எனவே இலங்கை முஸ்லிம்களது இன அடையாளம் தமிழ் இன அடையாளம் என்பதை ரவூப் ஹக்கீம், ரிசாட் பதிதியூன் போன்ற தலைவர்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை சோனகர்தான் இன்றைய இலங்கை முஸ்லிம்கள். இலங்கை சோனகரின் அடையாளம் தமிழ். அரேபியர்கள் இலங்கைக்கு கி.பி 8 நூற்றாண்டில் வந்தவர்கள், அதற்கு முன்பே இலங்கையில் சோனகர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு வரலாறு ஆதாரங்கள் இருந்திருக்கின்றது அவர்கள் தமிழ் பேசிய மக்கள் ஆனால் இறை வழிபாட்டில் தனித்துவமான முறை அதாவது தமிழ ர்கள் ஆதவனை, இயற்கையை வழிபட்டது போல, ஆதி சோனக தமிழ் இனத்தில், இருந்திருக்கின்றது இவர்கள் நாகர் இயக்கர் போன்று இலங்கை  தீவில் வாழ்ந்திருக்கின்றார்கள், 8 நூற்றாண்டில் வர்த்தக நோக்கில் வந்த அரேபியர்கள் தமது வசதிக்காக சோனக பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் இஸ்லாம் சமயம் இலங்கையில் காலூன்ற தொடங்கி யது. எனவே இலங்கை முஸ்லிம்களது இன அடையாளம் தமிழ் இனமே! ஆரம்ப காலம் தொட்டே சிங்கள அரசியல்வாதிக ளினாலும், தமிழ் அரசியல்வாதிகளினாலும் ஒரம் கட்டப்பட்ட சோனகர்கள், தமது ஐக்கியத்தையும் வளர்ச்சியையும் மனதில் கொண்டு இஸ்லாம் மார்க்கத்தை ஐக்கியப்படுத்தும் வழியாக கையாண்டு தமது நலன்களையும் தமது சமூகத்தையும் வளர்ப்பதில் அக்கறை காட்டினார்கள் அதில் வெற்றியும் பெற்றார்கள். இன்றுவரை முஸ்லிம் அரசியல்வா திகள் தமிழ் இன அடையாளத்தை ஒதுக்கி இஸ்லாம் மார்க்க அடையாளம் ஊடாக அரசியலில் பயணிக்கின்றார்கள். இதற்கு இலங்கையில் வெடித்த இனவெறி தாகுதல்கள், போராட்டங்கள் இஸ்லாம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. இந்த நிலை எப்பொழும் நீடிக்காது என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இனப்பி ரச்சனை தீர்வில் தமக்குறிய நலனை தாம் இலகுவாக பெற்று க்கொள்ள முடியும் என முஸ்லிம் தலைவர்கள் நினைக்கக்கூ டும், ஆனால் இனப்பிரச்சனை தீர்வு எட்டப்படாமல் விலகிச்செ ல்லும்போது மத விரோதம் என்ற போர்வையில் முஸ்லிம்கள் சிங்கள இனவெறியர்களால் ஓட ஓட விரட்டப்படுவார்கள். சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கி ன்றது என்பதை ஒரு பாடமாக‌ முஸ்லிம்கள் உணரவேண்டும். முஸ்லிம் மக்களது ஆதரவும், இந்திய நலனும் ஒரு நேர்கோ ட்டில் பணிக்கும் போதுதான் தமிழர்களின் இனப்பிரச்ச னையில் தீர்வு கிட்டும் என்பதை அரசியல் விஞ்ஞான அறிவ ற்ற, தமிழ் தலைமகள் கற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு தகுந்தபடி முஸ்லீம் மக்களை அரவனைத்தபடி, இந்திய அரச ஆதரவுடன் தம்து வீயூகத்தை தமிழ் தரப்பு வகுக்கவேண்டும். தமிழ் அரசியல்கட்சிகளும், இயக்கங்களும் பதவிக்காகவும், தொகுதிகளுக்காவும், தமக்குள் அடிபடுவதை நிறுத்திவிட்டு, முஸ்லிம் சகோதரங்களை வேட்பாளர்களாக நிறுத்தி முஸ்லிம் மக்கள் தமிழ் இனமே, என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, தமிழ் வாக்குகாளால் அவர்களை வெல்லவைத்து, அவர்களை எமது சார்பாக பாராளமன்றத்துக்கு அனுப்பும் போது, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதிதியூன் போன்றவர்கள் அரசியல் பேரம் பேசும் சக்தி படைத்தவர்களாக இருப்ப துபோல மாற்று சக்தியாக எமது முஸ்லிம் தலைமகளும் வருவார்கள் அதன் மூலம் விடிவு கிட்டும், முஸ்லிம் மக்களுக்கு தமிழ் அரசியலில் போதிய வாய்ப்புகள் வழங்காமல், எல்லா பாராளமன்ற கதிரைகளிலும் யாழ்ப்பாண தமிழன் குந்தி இருக்க ஆசைப்பட்டால், கள்ளுமுட்டிக்குள் தலை ஓட்டிய கழுதைகள் போல ஆகிவிடுவோம். மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை பருத்திதுறை நிர்மலநாதன், அடைக்கல நாதன் இவர்கள் தேவை இல்லை, இவர்களுக்கு பதிலாக மன்னார் முஸ்லிம்களை நிறுத்தி, எமது ஒட்டுமொத்த வாக்கு களை அளிக்க முன்வரும்போது, கனிசமான முஸ்லிம் வாக்கு களை பறித்து, அவர்களையும் அர்வனைத்தபடி இனப்பிரச்ச னை தீர்வு நோக்கி பயணிக்கலாம் இதுவே எனக்கு முன் உள்ள உசீதமான வழி, என் கருத்தில் உடன்படாதவர்கள் தாராளமாக தம்து கருத்துக்களை முன்வைக்கலாம், ஆயிரம் கருத்து மலர்களே மலருங்கள் என்றும்   அன்புடன் பேசாலைதாஸ்








Monday, December 11, 2017

பின்லாந்து நாட்டின் கல்வி வெற்றிக்கு அடிப்படை காரனம் எது?

பின்லாந்து நாட்டின் கல்வி வெற்றிக்கு அடிப்படை காரனம் எது?

அன்பர்களே சென்ற பதிவிலே பின்லாந்து கல்வி நடைமுறை பற்றிய தகவலை பதிவு செய்தேன். இப்பொழுது கல்வி வெற்றிக்கு அடிப்படை காரனம் எது என்பதை சற்று உற்று நோக்குவோம். முதலாவது உளவியல் அம்சம் நிறைந்தது அதாவது மன மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தை, இயற்கையை இரசிக்கின்றது அதன் மூலம் கல்வி கற்றுக்கொள்ளும் வினைதிறனை பெற்றுக்கொள்கின்றது. மாணவ்ர் மட்டும் போதாதது வெற்றிக்கு ஆசிரியர்கள் முக்கிய காரனமாகின்றனர். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, அரசாங்க அதிபர் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...
அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...ஏதாவது ஒரு பாடத்தில் ..project
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது... நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்... தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!... இங்கு நாம் எமது ஆசிரியர்களை உற்று நோக்குவோம். ஆகாக் குறைந்தது ஒரு வாத்திவேலை என்ற அளவுக்கு ஆசிரிய தொழிலானது பொருளாதர வருமானமற்ற துறையாக இருப்பதும், குறைந்த பட்ச தகுதி இருந்தாலே போதும் அதாவது ஆசிரிய போட்டி பரீட்சையில் வென்றுவிட்டால் போதும் என்ற நிலை. வருமானம் போதாதபடியால் ஆசிரியர்கள் வேறு தொழில் செய்யும் அவல நிலை, இரவு கடல் தொழிலுக்கு செல்லும் ஆசிரியர்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களை குறை சொல்வதில் பயனில்லை நாட்டின் பொருளாதார நிலை அப்படி! இதேவேளை பெற்றோர்களின் பங்களிப்பு நிறையவே உள்ளது.பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பொறுப்போடு செயல்பட்டால் வெற்றி நிட்சயம்.
பெற்றோர்களே! குழந்தைகள் வளர்ப்பில் நாம்  கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...முதலில், பிள்ளைக ளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துவோம்...ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று  ஒருபோதும்நினைக்காதீர்கள்….பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும். எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாக லாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி. லூயி பாஸ்டர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார். குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள். பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். வாழ்வில் வெற்றிபெற்ற வரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
 பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில். நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான். சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் ஒரு தகப்பனாக இருந்து ஓரளவு எனது பிள்ளைகளை வெற்றியாளராக மாற்றிய மாற்றிய அனுபவ சிந்தனையூடாக் எனது கருத்துக்களை முன் வைத்தேன் ஏதவது தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்
அன்புடன் என்றும் பேசாலைதாஸ்

பின்லாந்தின் அதி சிறந்த கல்வி முறையும் இலங்கை கல்வி முறையும்!

பின்லாந்தின் அதி சிறந்த கல்வி முறையும் இலங்கை கல்வி முறையும்!


அன்பர்களே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் இலங்கை கல்வி முறையில் மாற்றம் உட்பு குத்தப்படவுள்ளதாக அன்மை யில் ஊடகங்களுக்கு தெரிவி த்துள்ளார்.   கல்விப் பொதுத்த ராதர சாதாரண தர பரீட்சை யில் இனிவரும் காலங்களில் நடைமுறையிலுள்ள ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் குறைத்து, தகவல் தொழி ல்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டில் உலகின் வெற்றிகரமான கல்வி முறை காணப்படுவதாகவும், நடை முறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்குநடைமுறைப்ப டுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.பின்லாந்து நாட்டை ப் போல, குறித்த நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம், நாட்டி ன் மாணவர்களதுஎதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்ப டுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

                                           ஸ்கண்டினேவிய நாடுகளான நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து என்பன கல்வி முறையில் ஒரே மாதிரியையே பின்பற்றுகின்றன அதிலும் பின்லாந்து கல்வி முறை முதன்மை வகிக்கின்றது. எனவே பின்லாந்தின் கல்வி முறையில் உள்ள சில சிறப்பு அம்சங்களை இங்கு உற்றுநோக்குவது நல்லது. பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது...இலங்கை இந்தியாவில் உள்ளதுபோல ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை... கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசர மும் அவர்களுக்கு இல்லை... பிள்ளைகள் கற்கை திறனை தாமாகவே கண்டுணர்ந்து கல்வி கற்கவேண்டும் என்பது பின்லாந்து கல்வியாளர்களின் கொள்கை..எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்ன ஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இரு ந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வ தும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...அதாவது இயற்கையை உற்றுனோ க்குவதாலும் அதனை புரிந்து கொள்வதாலும், வினாக்களும் விந்தைகளையும் புதிர்களையும் உணர்ந்து அதனை வெற்றி கொள்ளும் ஆரம்ப வினைதிறனை குழந்தைகள் பெற்றுக்கொ ள்கின்றன.ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழ ந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை..ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்க ப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு... ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது... ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...தங்கள் பி ள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...ஆகமொத்தத்தில் திறந்த சுதந்தர சுற்றாடலில் பிள்ளைகள் கற்றல் திறனை பெற்றுக்கோள்ளும் வாய்ப்புகள் வழக்கப்படுகின்றன. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படு வது இல்லை...மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்வி க்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலா சாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...மே
லும் அதிக தகவலுடன் உங்கள் பேசாலைதாஸ்

Monday, December 4, 2017

பாரதம் தந்த பரிசு

பாரதம் தந்த பரிசு


ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு.
1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்தி அறிக்கைகள், இலக்கியப் பதிவுகள் பல உள்ளன. எனினும் இவை ஒழுங்காகத் தொகுக்கப்பட்டு இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. இணையத்தில் தேடுபவர்களுக்குக் கிடைக்கக் கூடிய விவரங்கள் ஆச்சரியம் தரும் வகையில் சொற்பமே. இந்தியப் படையினர் ஈழத்திலிருந்த காலத்தை அப்படியே மறைத்துவிடுகிற முயற்சி எடுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளேடுகளில் அக்கால கட்டத்துப் பதிவுகளைத் தேடிப் பார்ப்பவர்களுக்கு அவையெல்லாம் பெருமளவுக்கு இந்திய அரசினதும் படையினரதும் தகவல்களையும் எண்ணங்களையும் திருப்பித்திருப்பித் தருவதாகவே இருப்பது தெரியவரும்.
இந்தச் சிறப்புப் பகுதி, மாபெரும் வரலாற்றுத் துயரத்தின் ஒரு சில கண்ணீர்த்துளிகளை மட்டுமே நினைவெழுத லூடாகவும் கவிதைகளூடாகவும் காட்டுகிறது. மறக்க நினைக்கும் அவலங்கள் மறுபடிமறுபடி மேலெழுவது அஞரின் (Trauma) விளைவு.
இந்தக் காலகட்டத்தை மறந்தும் விடுதலைப் போராட்டத் தைக் கைவிட்டும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் வேறு முன்னேற்றப் பாதைகளுக்குச் சென்றுவிட்டார்கள். புலம்பெயர்ந்த, நாடு கடந்த, தாயகம் கடந்த தமிழர்கள் தான், இன்னும் நெருப்பைக் காவிக்கொண்டு, நொறுங்கிய இதயங்களோடு வெறுப்பையும் இந்திய எதிர்ப்பையும் ஈழக்கனவையும் வளர்க்கிறார்கள் என்ற கருத்து நிலையே இலங்கை அரசினதும் இந்திய அரசினதும் கொள்கை வகுப்பாளர்கள், ஆலோசகர்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்த பலரினதும் கருத்தாக உள்ளது. வரலாற்று அறிஞர் ரோமிலாதாப்பர்கூட இத்தகைய ஒரு கருத்தைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்புவில் சொல்லியிருந்தார். புலம்பெயர்ந்தோரையும் நாடுகடந்த நிலையில் வாழ்வோரையும் (Diasporic and Transnational communities) அவர்களது அரசியல், அனுபவங்கள், உறவுகள் என்பவற்றை ஒற்றைப்படையாகப் பார்க்கிற இந்தப் பார்வை இப்போது பொருந்தாது. தொலைவு பொறுப்பின்மையையும் தரலாம், பொறுப்பையும் தரலாம் என்கிற நுட்பமான பார்வை நமக்கு அவசியம். தென்னாபிரிக்காவில்ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கும் இனவெறி அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த வேளை, “கடந்த காலத்தை மறப்போம்; வன்முறையை மறப்போம்” என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. கடந்த
காலத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? தீர்வும் முடிவும் நிறைவும் இல்லாவிட்டால் கடந்த காலம் திருப்பித்திருப்பி எழுதப்படும் அல்லவா?
ஈழத்தில் இந்தியப் படைக்காலம் பற்றி இரண்டு வகையான வெளியீடுகள் வந்துள்ளன. ஒன்று, இந்தியப் படையின் உயர் தளபதிகளாகப் பணியாற்றியவர்கள், இராஜதந்திரிகளின் அனுபவங்களும் ஆய்வுகளும். மற்றது, தமிழில் வெளியான ஆவணங்கள், வாக்குமூலங்கள், இலக்கியப் பதிவுகள், நூல்கள். தமிழில் இருப்பவை பல இப்போது நூலகம் நிறுவனத்தின் வலைத்தளத்தில் எண்ணிம வடிவில் கிடைக்கின்றன (www.noolaham.org) இந்தியப் படைக் கால கட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்களும் அந்த வரலாற்றுத் துயரத்தின் வேர்களையும் ஊற்றுக்களையும் கண்டறிய முனைவோரும் பின்வருவனவற்றைத் தேடலாம்: இது முழுமையான பட்டியல் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான நாளிதழ்கள்.
2. சரிநிகர் இதழ்கள் (1990-2001)
3. தூண்டில் இதழ்கள். ஜேர்மனி.
5. திசை, வார வெளியீடு. யாழ்ப்பாணம்.
6. 1989 காலகட்டத்துக் கொழும்புப் பத்திரிகைகள்.
7. ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச்சக்கரமும்’ (ஈழம் - காலச்சுவடு பதிவுகள்: 1988-2008)
8. அனுபவப்பதிவுகளாக, ‘வில்லுக்குளத்துப் பறவைகள்’, ‘அம்மாளைக்கும்பிடுறானுகள்’ ஆகிய நூல்கள். ஆய்வுகளும் தகவல்களுமாக, ‘முறிந்த பனை’, ‘வல்வைப்படுகொலை.’
ஆங்கிலத்தில் வெளியானவற்றில் பின்வருவன தேவையானவை.
1. Saturday Review, Sri Lanka, இதனுடைய கடைசி இதழ் ஒக்டோபர் 17, 1987 வெளியானது.
2. Amnesty International அறிக்கைகளும் செய்திகளும்.
3. New Saturday Review, Colombo. 1987-1988; 1990-1991.
4. ‘University Teachers for Human Rights’ (Jaffna) ÜP‚¬èèœ: http://www.uthr.org/Reports/Report3/chapter 8.htm
5. Tamil Times. London. UK.
  
6. ‘Memorial for IPKF – Innocent People Killing Force.’
இலங்கையில் மிக உயர் பதவியில் இருந்து இளைப்பாறியவர் கலாநிதி சோமசேகரம். அவருடைய நினைவுக் குறிப்புகள்.
7. ‘In the Name of Peace:  IPKF Massacres of Tamils in Sri Lanka.’
‘Northeast Secretariat on Human Rights’ (NESoHR)
திரட்டிய ஆவணங்களின் நூல் வடிவம் தில்லித் தமிழ் மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இது இந்தியப் படையினர் புரிந்த படுகொலைகளில் பன்னிரண்டை ஆவணப்படுத்தி உள்ளது.
இந்தியப் படைத் தளபதிகள், அதிகாரிகள் எழுதியுள்ள நூல்களும் அவசியமானவை. இவை இந்தியப்படைத் தரப்பின் வாதங்களையும் கருத்துக்களையும் முன்வைக்கின்றன. இந்த நூல்களில் இந்தியப் படையினர் புரிந்த அநியாயங்கள், படுகொலைகள் பற்றிப் பேசப்படவில்லை. “தவிர்க்க முடியாத பக்க விளைவு,” என்றும், “புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி அறிய முடியாததால் பொதுமக்களையும்  கொலைசெய்ய வேண்டியிருந்தது,” என்றும் “போர்ச் சூழலில் மக்கள் கொலைகள் தவிர்க்க முடியாதவை,” என்றும் காலங்காலமாகப் படைத்தரப்புகளும் அரசுகளும் சொல்கிற போலி நியாயங்கள் தரப்படுகின்றன. கூடவே சில நூல்களில் இந்திய அரசு, படைத் தரப்பின் குழப்ப நிலை, ஈழக்கள நிலவரம் பற்றி உரிய, போதுமான புலனாய்வுத் தகவல்கள் இல்லாமை போன்ற விமர்சனங் களும் இடம்பெறுகின்றன. அதிகாரிகள், படைத் தளபதிகள், அரசியல்வாதிகளுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளும் அகங்கார, ஆளுமைப் பிரச்சினைகளும்கூட இந்த நூல்களில் பேசப்படுகின்றன.
8. ‘Intervention in Sri Lanka .  The IPKF Experience Retold’ by Maj. Gen. Harikirat Singh. 2007.
ஹரிகிரத் சிங்தான்இந்தியப்படைகளின்கட்டளைத் தளபதியாக இருந்தவர். 1987 செப்டெம்பர் மாதம் பிரபாகரனைச் சுட்டுக் கொல்லுமாறு ஜே.என். தீக்ஷித் உத்தரவிட்டதாகவும் அதனைச் செய்ய மறுத்ததால் இலங்கையை விட்டுத் தான் 1988 ஜனவரி மாதம் வெளியேற்றப்பட்டதாகவும் இந்த நூலில் எழுதுகிறார் ஏ.ஜீ. நூரானி. இந்தியத் தளபதி சுந்தர்ஜியையும் தீக்ஷித்தையும், : அகங்காரமும் ஆடம்பரமும் மிக்கவர்கள்’ என்று தனதுகட்டுரையொன்றில் விமர்சிக்கிறார். ஹரிகிரத் சிங்கின் வெளியேற்றத்துக்கு அவர்கள் இருவருமே பொறுப்பு என்கிறார்.
9. ‘Assignment Jaffna’  by Lt. Gen. S.C. Sardeshpande. (Lancer Publishers, 1991)
யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக இருந்த படைத் தளபதியின் நினைவுகள். ஒப்பரேஷன் பவான் (Operation ‘Pawan’) என்ற படை நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர். இந்த நடவடிக்கை யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் இந்தியக் கொமாண்டோக்களை இறக்க முயற்சி செய்த நடவடிக்கை. இந்தத் தாக்குதலைப் புலிகள் முறியடித்தார்கள். 39 இந்தியக் கொமாண்டோப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த நூலில் நாகாலாந்து, மிஸோராம் ஆகிய இடங்களில் இந்தியப்படையினரின் நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண நடவடிக்கைகளையும் ஒப்பிடுகிறார்.
10. ‘The IPKF in Sri Lanka by Lt. Gen. Depinder Singh (Trishul Publications, Noida, 1991)
இந்திய உளவு சேவையான RAW பற்றிய காட்டமான விமர்சனங்களை இந்த நூலில் காணலாம்.
11. ‘India’s Vietnam’  by Col. John Taylor (rediff.com)
இணையத்தில் கிடைக்கிறது.
12. ‘Assignment Colombo’, J.N. Dixit.1988.
நெருக்கடி மிக்க காலத்தில் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணியாற்றிய ஜே.என். தீக்ஷித்தின் நூல். மிக முக்கியமான அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.
அக்காலத்தில் சில ஆண்டுகள் இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிய ரொமேஷ் பண்டாரியுடனான அனுபவம் ஒன்றை தீக்ஷித் பின்வருமாறு விவரிக்கிறார்: தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் எமது அனுசரணையுடன் நிகழ்ந்த வேளை தில்லி திரும்புமுன் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து என்னிடம் இரு முக்கியமான ஆவணத்தை பண்டாரி தந்தார். “இதனைத் தமிழ்த் தலைவர் செல்வநாயகத்திடம் சேர்ப்பித்து விடுங்கள் என்று சொன்னார். ஆச்சரியத்துடன் செல்வநாயகம் எப்போதோ செத்துப்போய் விட்டாரே,” என்று நான் சொன்னேன்.
“சரி, அப்போ அமிர்தலிங்கத்திடம் கொடுத்துவிடுங்கள். இந்தத் தென்னிந்தியப் பெயர்கள் எல்லாமே எனக்கு எப்போதும் குழப்பமாக இருக்கிறது,” என்றார் பண்டாரி.
13. ‘Sri  Lanka Misadventure: India’s Military Peace-keeping Campaign, 1987-1990’ by Gautam Das, and MrinalK.Gupta Ray
இந்திய அரசையும் படையையும் விமர்சனரீதியாக அணுகுகிற நூல்.
14. ‘Operation ‘Pawan’ by Kuldip Singh Ludra. 1999.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இந்திய ராணுவம் மேற்கொண்ட படையெடுப்பை விவரிக்கிறது.
India’s My Lai: Massacre at Valvettithurai: வல்வைப் படுகொலை நூலின் விரிவாக்கிய ஆங்கிலப் பதிப்பு. பல வாக்கு மூலங்களும் சத்தியக்கடதாசிகளும் (Affidavits) இணைப்பில் தரப்பட்டுள்ளன.
Indo-LTTE war: http://www.sangam.org/2007/11/Indo_LTTE_War_Anthology.php?uid=2643-?iframe=true&width=100% & height=100%
போர் தொடர்பான ஊடகச் செய்திகள் அனைத்தையும் தொகுத்து தனது முற்குறிப்புகளுடன் பல பாகங்களாக நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் சச்சிசிறீகாந்தா.
India Today இந்தியப் படையினரின் யுத்தங்கள் தொடர் பான தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் விடுதலைப் புலிகளுக் கும் இந்தியப்படைகளுக்கும் இடையான போர் பற்றிய பல பாகங்கள் உள்ளன. Guns and Glory  என்ற இத் தொடர் யூட்யூபில் கிடைக்கிறது. இந்தியப் படையினரின் ‘சாகசங்க’ளையும் ‘சாதனை’களையும் சொல்லும் பாணியிலேயே இவை உள்ளன.
இந்த நூல்களுக்கும் ஆவணங்களுக்கும் கொள்கை வகுப்புக் கோப்புகளுக்கும் அப்பால், கண்ணீரும் தசையுமான நமது நினைவுகளை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீள எடுத்துப் பார்க்கிறபோது இந்தக் காயங்களின் வலி எப்போதுமே ஆறாதது என்பது துலக்கமாகத் தெரிகிறது.
இந்தச் சிறப்புப் பகுதியைத் தொகுக்க எனக்கு உதவிய நண்பன் மஜேந்திரன் ரவீந்திரனுக்கும் தமது பெயரை வெளியிட விரும்பாத வேறிரு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பாரதம் தந்த பரிசு- எனும் தலைப்பு எனது தமிழாசிரியர் செ. கதிரேசர் பிள்ளையின் புகழ்பெற்ற புராண நாடகங்களின் திரட்டு நூல் ஒன்றின் தலைப்பாகும். அவருக்கும் அவரது தலைமுறைக்கும் பாரதமும் காந்தியும் சுபாஷ் சந்திர போசும் நெஞ்சுள் நிறைந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் நிதி சேர்த்து வழங்கியது அவரது தலைமுறை. அந்த வரலாற்றின் அடியே தெரியாதவர்கள் கையில் இப்போது இருக்கும் பாரதம் வேறு. இந்தப் பாரதம் நமக்குத் தந்த பரிசு பற்றியதே இந்தச் சிறப்புப் பகுதி. இது எமது ‘ஆறாவடு’வின் ஒரு சிறிய சஞ்சலப் படம். அழிய மறுக்கும் குருதிக் கோடு.

Sunday, December 3, 2017

பெரஸ்டொரிக்கா அதாவது சோவியத் மறு சீரமைப்பும் திருத்தந்தை புனித ஜோன் போல் 2 அவர்களும்!

பெரஸ்டொரிக்கா அதாவது சோவியத் மறு சீரமைப்பும் திருத்தந்தை புனித ஜோன் போல் 2 அவர்களும்!

அன்பர்களே! எமது சமகால மாமனிதர்களுள் புனிதர் என்ற நிலைக்கு கிடு கிடு என உயர்த்த பட்டவர்கள் இருவர் ஒன்று அன்னை திரேசா மற்ற து திருத்தந்தை புனித ஜோன் போல் அவர்கள் இந்த இருவருமே இலங்கை மண்ணை தரிசி த்தவர்கள். அன்னை திரேசாவுக்கு புனிதர் பட்டம் வழக்கப்பட்டதில் சகல உலக மக்களும் வரவே ற்றார்கள் ஆனால் திருத்தந்தை புனித ஜோன் போல் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட தில் பலர் முகம் சுழித்துக்கொண்டார்கள், பல பத்திரிகைகள் தொடர்பு சாதனங்கள் தமது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். குறிப்பாக கம்யூனிஸ ஆதரவர்கள் திருத்தந்தையை அடியோடு வெறுத்தார்கள். அவரை கொலை செய்யுமளவுக்கு துருக்கி நாட்டு அலி அக்கா என்ற இளைஞன் துணிந்து செயல்பட்டான். தன்னை கொலை செய்ய துணிந்த அலி அக்காவை மன்னித்து அவனை சிறையில் சந்தித்தார் புனித ஜோன் போல் அவர்கள், உலகமே இதைக்கண்டு வியந்து நின்றது.

அப்படி இவரை கொலை செய்யும ளவுக்கு சோவியத் கம்யூனிஸ்ட்டு க்களுக்கு ஏன் அக்கறை என்பதை அலச முற்பட்டால் பெரஸ்டொ ரிக்கா அதாவது சோவியத் அரச பொருளாதார மறு சீரமைப்பு என்ற விடயம் முன்னுக்கு வருகின்றது இந்த பெரஸ்டொரிக்கா மறுசீர மைப்புக்கு முன்னோடியாக திகழ்வது சோவியத் ஒன்றியத்தின் இறுதி அதிபராக இருந்த மிக்கல் கோப்பர்சேவ் அவர்களின் அரசியல் சிந்தனை அதனை கிளஸ்நொஸ்ட் Glasnost என்று அழைப்பார்கள், மிகிந்தாவின் சிந்தனை என்று உருவகப்படுத்தலாம்!
Perestroika (Russian: Перестро́йка, IPA , was a political movement for reformation within the Communist Party of the Soviet Union during the 1980s until 1991 widely associated with Soviet leader Mikhail Gorbachev and his glasnost (meaning "openness") policy reform. The literal meaning of perestroika is "restructuring", referring to the restructuring of the Soviet political and economic system. சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட நாள் முதல் எட்டு
அதிபர்கள் அந்த பதவியை அலங்கரித்தனர் அதில் இறுதியாக இருந்தவர் அதிபர் மிக்கல் கொப்பர்சேவ், 1991 ஆண்டு மார்கழி 26 திகதி சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் உச்ச நீதிம ன்றத்தின் ஆணைப்படி சோவியத் ஒன்றியம் களைக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தொடர்ந்து, அதிபர் மிக்கல் கொப்பர்சேவ் அவர்கள் தனது பதவியை துறந்து, சகல் அதிகாரங்கள், சோவி யத் அணு ஏவுகனைகளின் இரகசிய குறியீட்டு இலக்கம் உட்பட அனை த்தையும் ருஸியா அதிபர் போரிஸ் யல்ஸ்டீனிடம் ஒப்ப்டைத்தார்.
                                                        சோவியத ஒன்றியத்தின் சிதைவை புனித ஜோன் போல் அவர்கள் மனதார ஏற்றுக்கொண்டாரா? அல்லது உயர்ந்த கம்யூனிஸ சிந்தாந்தங்களுக்கு அவர் எதிர்ப்பாளராக
இருந்திருக்கின்றாரா? என்ற பல கேள்விகள் நமது மனத்திரையில் எழும்பக்கூடும்! இங்கு தான் தத்துவார்த்த முரண்பாடுகளை புரிந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது. உண்மையில் இயேசு கிறிஸ்து கம்யூனிச அதாவது சமதர்ம கோட்பட்டை நிராகரித்தாரா? என்ற கேள்வி முன் எழுகின்றது? இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் பூர்சுவா எண்ணம் கொண்ட யூத மதலைவர்களை மன்னர்களை, பிரபுக்களை, பரிசேயர்களை, சதுசேயர்களையும் அவர்களது மனிதாபிமானமற்ற செயல்களையும் வெளிப்படையாக கண்டித்தார். அதற்காகவே அவரை அரசியல் சமூக குற்றவாளியாக சிருஸ்டித்து சிலவையிலே அறைந்து கொலை செய்தார்கள்.
                                                        
ஐரோப்பாவில் மத்திய இருண்ட‌ காலத்தில், கிறிஸ்தவ மதம், அரசியல் அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு, அதிகார சுக போகங்களை திருத்தந்தைமார்கள் ஆயர்கள் துஸ்பிரயோகம் செய்தார்கள். தமது கொள்கைகளுக்கு எதிர்ப்பாக இருக்ககோடிய அத்தனை அறிவியல் சிந்தனைகளை அழித்தனர், புதுமையாக சிந்தித்தவர்களை கொலை செய்தனர். பூமி உருண்டை என்று சொன்ன கொபர்னிகஸை எரியூட்டி கொலை செய்தனர். கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பீடத்தின் பிற்போக்கு எண்ணங்களை அப்போதைய கம்யூணிஸ்டுகள் அடியோடு வெறுத்தனர் இந்த கசப்பான உணர்வுகள் தான் கம்யூனிஸ நாட்டில் மதங்களுக்கு தடைவிதிக்க காரனமாக இருந்தது.
                                                    நாளடைவில் கத்தோலிக்க திருச்சபையானது தன்னைத்தானே சுத்திகரித்துக்கொண்டு, மக்களை முதன்மைபடுத்தி பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தது, அறிவியல் எண்ணங்களை கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் அணுக முற்பட்டது, சகல மதங்களின் தத்துவங்களை கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன் உற்று நோக்கியது, கம்யூனிஸ்டுகளின் கசப்பான உணர்வுகளை களைந்து, அவர்களையும் அவர்களது நாட்டையும் இறைவான் பால் ஈர்க்கவேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை புதுமையாக எண்ணியது, அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் புனித ஜோன் போல் திருத்தந்தை அவர்கள். அவரது காலத்தில் போலாந்து நாட்டில் வலேஸா தலைமையில் தொழில் சங்கங்கள் இணைந்து ஆட்சியை கைப்பற்ற புனித தந்தை அவர்கள் உறுதுணையாக இருந்தார். அதுபோல சோவியத் ஒன்றியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, பனிப்போர் முடிவுக்கொண்டுவந்து உலகத்தில சமாதானம் ஏற்பட திருத்தை அவர்கள் அயராது பாடுபட்டார். இதற்காக வரலாற்று சிறப்பு மிக்க மல்டா சந்திப்பை அதிபர் மிகல் கொப்பர்சேவ் அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்டார். VATICAN CITY — Soviet President Mikhail S. Gorbachev on Friday promised full religious freedom in the Soviet Union during a meeting with Pope John Paul II in which the two leaders also agreed to restore formal diplomatic relations between the Holy See and the Kremlin.The Pope gave his blessing to the restructuring of Soviet society going on under Gorbachev's program of perestroika, or reform and restructuring, during their historic encounter, which bridged the bitter chasm dividing Christianity and communism. Gorbachev invited the Pope to visit the Soviet Union. And John Paul, noting improvement in the religious climate there under perestroika, said he hoped that further developments would allow him to make a long-awaited visit.The Soviet president, dressed in a black suit, and the Pope, in his white robes, both seemed to enjoy the encounter of two sturdy Slavs, unabashed risk-takers who have emerged from opposite doctrinal poles to become two of the most compelling figures on the world stage today.
                                                        திருத்தந்தை அவர்கள் திருச்சபைக்குள் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். உலக அரசியல் விடயங்களில் தலையிட்டு உலக சமாதானத்திற்காக அரும்பாடுபட்டார். உலக அரசியல் அரங்கிலே திருந்தையின் எண்ணங்கள் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்டது. சகல உலக தலைவர்களும் திருத்தந்தை உளமார நேசித்தார்கள் என்பதற்கு அவரது மரண ஊர்வலமே சாட்சி அதுமட்டுமல்ல திருத்தந்தை அவர்கள் ஆயராக போலாந்து நாட்டில் கிராகோவ் நாட்டில் வாழ்ந்த போது ஏழை எளிய மக்களுடன் மிக எளிமையான‌ முறையில் வாழ்ந்திருக்கின்றார். நான் இரண்டு தடவை கிராகோவ் நகருக்கு சென்று திருத்தை பற்றி பலதகவல்களை அந்த நகரத்து மக்களிடம் இருந்து கேட்டறிந்தவைகளையே இன்று ஒரு கட்டுரை வடிவில் தருகின்றேன். திருத்தந்தை பற்றிய இன்னும் பல தகவல்களுடன் மீண்டும் உங்களை சந்திப்பேன்
. அன்புடன் பேசாலைதாஸ்