இலங்கை முஸ்லிம் மக்களது அடையாளம் எது? பேசாலைதாஸ்
இலங்கை முஸ்லிம் மக்களது அடையாளம் எது? பேசாலைதாஸ்
இன்றைய இலங்கையின் இனச்சிக்க லில் முஸ்லிம் மக்களது பங்களிப்பை அவதானமாக கையாளவேண்டிய தேவை, தமிழ் பேசும் இனத்திக்கு இரு க்கின்றது. இலங்கையில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் இலங்கை சோனகர் Ceylon Moor என்றே கருதப்பட்டனர். சேர் பொன் இராமநாதன் போன்ற தலைவ ர்கள் மலையக மற்றும் இந்திய வம்சா வளி தமிழர்களை இலங்கை தமிழர் இனம் என்ற கோட்பாட்டுக்குள் உள்வா ங்க மறுத்த வரலாற்று தவறுகளை, இலங்கை சோனகரிலும் பிரயோகித்தனர். இதன் விளைவாக இலங்கை சோனகர் தமிழ் இனம் அல்ல என்று சேர் பொன் இராமநாதன் அவர்கள் The Royal Asiatic Society சமர்ப்பித்த அறி க்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனை அக்கால த்தில் இருந்த சோனக தலைவர் I.L.M அசீஸ் போன்றவர்கள் எதிர்த்தார்கள். வேறு வழியின்றி இலங்கை முஸ்லிம்கள் என்ற முறையில் இதர முஸ்லிம் சமூகமான மாலே, போரா, யாவா, மேமன் போன்ற சமூகங்களை ஒன்றினைத்து இலங்கை முஸ்லிம்கள் என்ற ஒரு குடைக்குள் ஒன்றுபட்டனர் அதன் விளைவாக இலங்கை முஸ்லிம்களது இன அடையாளம் இஸ்லாம் மார்க்கமாக காண்பிக்க முற்பட்டது துரதிஸ்ட வசமாகும். இதற்கு முக்கிய காரனம் சேர் பொன் இராமநாதன் போன்ற மேலோங்கி சாதியத்திமிர் என்பதில் சந்தேகமே இல்லை. சமூகவியல் அடிப்படையில் நோக்கினால், மார்க்க அடையாளம் ஒரு இனத்தின் அடையாள மாககொள்ள முடியாது. அது வெறும் மத அடையாளமே தவிர ஒரு இனத்தின் அடையாளம் அல்ல. எனவே இலங்கை முஸ்லிம்களது இன அடையாளம் தமிழ் இன அடையாளம் என்பதை ரவூப் ஹக்கீம், ரிசாட் பதிதியூன் போன்ற தலைவர்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை சோனகர்தான் இன்றைய இலங்கை முஸ்லிம்கள். இலங்கை சோனகரின் அடையாளம் தமிழ். அரேபியர்கள் இலங்கைக்கு கி.பி 8 நூற்றாண்டில் வந்தவர்கள், அதற்கு முன்பே இலங்கையில் சோனகர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு வரலாறு ஆதாரங்கள் இருந்திருக்கின்றது அவர்கள் தமிழ் பேசிய மக்கள் ஆனால் இறை வழிபாட்டில் தனித்துவமான முறை அதாவது தமிழ ர்கள் ஆதவனை, இயற்கையை வழிபட்டது போல, ஆதி சோனக தமிழ் இனத்தில், இருந்திருக்கின்றது இவர்கள் நாகர் இயக்கர் போன்று இலங்கை தீவில் வாழ்ந்திருக்கின்றார்கள், 8 நூற்றாண்டில் வர்த்தக நோக்கில் வந்த அரேபியர்கள் தமது வசதிக்காக சோனக பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் இஸ்லாம் சமயம் இலங்கையில் காலூன்ற தொடங்கி யது. எனவே இலங்கை முஸ்லிம்களது இன அடையாளம் தமிழ் இனமே! ஆரம்ப காலம் தொட்டே சிங்கள அரசியல்வாதிக ளினாலும், தமிழ் அரசியல்வாதிகளினாலும் ஒரம் கட்டப்பட்ட சோனகர்கள், தமது ஐக்கியத்தையும் வளர்ச்சியையும் மனதில் கொண்டு இஸ்லாம் மார்க்கத்தை ஐக்கியப்படுத்தும் வழியாக கையாண்டு தமது நலன்களையும் தமது சமூகத்தையும் வளர்ப்பதில் அக்கறை காட்டினார்கள் அதில் வெற்றியும் பெற்றார்கள். இன்றுவரை முஸ்லிம் அரசியல்வா திகள் தமிழ் இன அடையாளத்தை ஒதுக்கி இஸ்லாம் மார்க்க அடையாளம் ஊடாக அரசியலில் பயணிக்கின்றார்கள். இதற்கு இலங்கையில் வெடித்த இனவெறி தாகுதல்கள், போராட்டங்கள் இஸ்லாம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக மாறிவிட்டது. இந்த நிலை எப்பொழும் நீடிக்காது என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இனப்பி ரச்சனை தீர்வில் தமக்குறிய நலனை தாம் இலகுவாக பெற்று க்கொள்ள முடியும் என முஸ்லிம் தலைவர்கள் நினைக்கக்கூ டும், ஆனால் இனப்பிரச்சனை தீர்வு எட்டப்படாமல் விலகிச்செ ல்லும்போது மத விரோதம் என்ற போர்வையில் முஸ்லிம்கள் சிங்கள இனவெறியர்களால் ஓட ஓட விரட்டப்படுவார்கள். சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கி ன்றது என்பதை ஒரு பாடமாக முஸ்லிம்கள் உணரவேண்டும். முஸ்லிம் மக்களது ஆதரவும், இந்திய நலனும் ஒரு நேர்கோ ட்டில் பணிக்கும் போதுதான் தமிழர்களின் இனப்பிரச்ச னையில் தீர்வு கிட்டும் என்பதை அரசியல் விஞ்ஞான அறிவ ற்ற, தமிழ் தலைமகள் கற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு தகுந்தபடி முஸ்லீம் மக்களை அரவனைத்தபடி, இந்திய அரச ஆதரவுடன் தம்து வீயூகத்தை தமிழ் தரப்பு வகுக்கவேண்டும். தமிழ் அரசியல்கட்சிகளும், இயக்கங்களும் பதவிக்காகவும், தொகுதிகளுக்காவும், தமக்குள் அடிபடுவதை நிறுத்திவிட்டு, முஸ்லிம் சகோதரங்களை வேட்பாளர்களாக நிறுத்தி முஸ்லிம் மக்கள் தமிழ் இனமே, என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, தமிழ் வாக்குகாளால் அவர்களை வெல்லவைத்து, அவர்களை எமது சார்பாக பாராளமன்றத்துக்கு அனுப்பும் போது, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதிதியூன் போன்றவர்கள் அரசியல் பேரம் பேசும் சக்தி படைத்தவர்களாக இருப்ப துபோல மாற்று சக்தியாக எமது முஸ்லிம் தலைமகளும் வருவார்கள் அதன் மூலம் விடிவு கிட்டும், முஸ்லிம் மக்களுக்கு தமிழ் அரசியலில் போதிய வாய்ப்புகள் வழங்காமல், எல்லா பாராளமன்ற கதிரைகளிலும் யாழ்ப்பாண தமிழன் குந்தி இருக்க ஆசைப்பட்டால், கள்ளுமுட்டிக்குள் தலை ஓட்டிய கழுதைகள் போல ஆகிவிடுவோம். மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை பருத்திதுறை நிர்மலநாதன், அடைக்கல நாதன் இவர்கள் தேவை இல்லை, இவர்களுக்கு பதிலாக மன்னார் முஸ்லிம்களை நிறுத்தி, எமது ஒட்டுமொத்த வாக்கு களை அளிக்க முன்வரும்போது, கனிசமான முஸ்லிம் வாக்கு களை பறித்து, அவர்களையும் அர்வனைத்தபடி இனப்பிரச்ச னை தீர்வு நோக்கி பயணிக்கலாம் இதுவே எனக்கு முன் உள்ள உசீதமான வழி, என் கருத்தில் உடன்படாதவர்கள் தாராளமாக தம்து கருத்துக்களை முன்வைக்கலாம், ஆயிரம் கருத்து மலர்களே மலருங்கள் என்றும் அன்புடன் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment