ஓய்வு நிலையி லிருக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் கனவு நனவாகுமா? ஆயர் அவர்கள் தனது மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அவர் மதத்துக்கு அப்பால் சாதி மதம் இனம் மொழி என்ற வேறுபாடின்றி இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அதாவது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அனைவரும் ஒன்றினைந்து நாட்டை நல் வழியில் கொண்டு செல்வதற்கு அரசியல் தீர்வு மூலம் பிரச்சைனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவரின் வேட்கையாக இருந்தது இருக்கின்றது.
அதுமட்டுமல்ல அரசியல் கைதிகள் விடுதலையாக வேண்டும் என்பது இன்றும் அவரின் சிந்தனையாகவே நிலைகொண்டிருக்கின்றது.
இன்றைய அவரின் ஓய்வு நிலையும் சுகயீனமும் இலங்கைவாழ் தமிழ் மக்கள் மத்தியில்மட்டுமல்ல உலகிலுள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் கவலையை உண்டுபண்ணியிருக்கின்றது. இவர் தொடர்ந்து பூரணசுகம்பெற்று எல்லா சமூகத்தின்மீதும் கொண்டுள்ள மனிதநேய பணி தொடரவேண்டும் என பலரும் வேண்டி நிற்பது கண்கூடாக இருக்கின்றது.
ஓய்வு நிலையிலுள்ள மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை 16.04.1940 ஆம் ஆண்டு இலங்கை வட மாகாணத்திலுள்ள நெடுந்தீவு என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது மெய்யியல் கல்வியை 1960 இலிருந்து 1963 வரை அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் இறையில் கல்வியை 1963 லிருந்து 1964 வரை அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் அதைத் தொடர்ந்து 1964 லிருந்து 1965 வரை சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் இடைக்கால ஆசிரியராகவும் 1965 முதல் 1968 வரை இவர் தனது இறையியல் கல்வியை திருச்சிராப்பள்ளி சென் போல்ஸ் பெரிய குருமடத்திலும் தனது கல்வியை மேற்கொண்டார்.
இவர் யாழ் ஆயர் nஐறோம் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் 13.12.1967ம் ஆண்டு சென்.மேரிஸ் பேராலயத்தில் அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவருடைய பணி வாழ்வானது மே மாதம் 1968 தொடக்கம் 1969 வரை உதவி பங்குத்தந்தையாக முருங்கனிலும் மே மாதம் 1969 தொடக்கம் 1971 வரை உயிலங்குளம் இளவாலை சேன்தா ன்குளம் ஆகிய பங்குகளில் உதவி பங்கு தந்தையாகவும் 1971 ஆம் ஆண்டிலிருந்து 1975ம் ஆண்டுவரை உரும்பிராய்இ சுன்னாகம் ஆகிய பங்களில் பங்கு தந்தையாகவும் பின் 1975 லிருந்து 1980 வரை இவர் பெரிய விளான். பண்டத்தரிப்பு ஆகிய பங்குகளில் பங்கு தந்தையாகவும் ஒக்டோபர் 1980 தொடக்கம் 1984 வரை திருச்சபையின் சட்டக்கோவை முதுமானி பட்டப்படிப்பை றோம் நகர் கிறகோரியன் பல்கலைக்கழக த்தில் பயின்றார். அத்துடன் இவ் பல்கலைகழகத்தில் லத்தீன் மொழியில் டிப்ளோமா பட்டப்படிப்பை மேற்கொண்டு பட்டத்தையும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து 1985 ஐனவரி 25ந் திகதி இவர் தனது பட்டப்படிப்புகளை முடித்துக்கொண்டு யாழ் மறைமாவட்டத்துக்கு மீண்டும் திரும்பினார். வருகை தந்தவர் 1985 தொடக்கம் 1991 வரை இவர் யாழ் மறைமாவட்டத்தின் சுன்டிக்குழி பங்குதளத்தில் பங்குதந்தையா கவும் அதேவேளையில் திருச்சபையின் சட்டக்கோவை சம்பந்தமான கல்வியை கொழும்புத்துறை குருமடத்தில் கற்பித்தார். அத்துடன் யாழ் மறைமாவட்டத்தில் திருமணம் சம்பந்தமான விடயங்களின் பொறு ப்பின் ஆணையாளராகவும் செயல்பட்டார். இவரின் தாய் மொழியாக தமிழ் இருந்தாலும் லத்தீன் Nஐர்மன் இத்தாலியன் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர். சிங்கள மொழியை யும் சற்று விளங்கக்கூடிய விதத்தில் பேச திறமை கொண்டிருந்தார்.
அருட்பணி தோமாஸ் அடிகளார் சபை ஒன்றின் ஸ்தாபராக இருக்கின்ற அடிகளாரை புனித நிலைக்கு உயர்த்துவதுப்பற்றி கற்று ஆய்வு செய்வ தற்காக 1986ம் ஆண்டு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ரோமுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பின் இவர் 16.08.1992ம் ஆண்டு வவுனியா மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்று 20ந் திகதி ஒக்டோபர் மாதம் 1992ம் ஆண்டு மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மடு அன்னை ஆலயத்தில் அன்றைய மன்னார் ஆயராக இருந்த மேதகு தோமாஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை மற்றும் இலங்கைக்கான பாப்பரசரின் தூதுவராக இருந்த மேதகு வ்ரன்சுவா பார்கெட் (குசரபெய டீரசமநவ) ஆண்டகை கொழும்பு தலைமை ஆயர் அதிவணக்கத்துக்குரிய நீக்கிலாஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகைகளின் முன்னிலையில் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இவர் 22.08.1992ம் ஆண்டு ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமிருந்து மன்னார் மறைமா வட்டத்தை பொறுப்பேற்றார். 40 வருடங்களுக்கு மேலாக சமாதானத்தின் பாலமாகவும் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தார். அதிலும் 2012ம் ஆண்டு முதல் இவர் இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.
அத்துடன் இலங்கை ஆயர் மன்றத்தினால் பொதுநிலையினருக்கான தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் இலங்கை ஆயர் மன்றத்தின் உதவி தலைவராகவும் கடமை புரிந்தார். இந்த நிலையில் ஆயர் யோசேப் ஆண்டகை தனது 75வது வயதில் தனது ஆயர் பணி யிலிருந்து கடந்த 14.01.2016 அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு அதாவது வத்திக்கான நேரப்படி கத்தோலிக்கர் மூவேளை செபம் சொல்லும் நேரமாகிய நண்பகல் 12 மணிக்கு தனது ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஆயர் அவர்களின் மனிதாபிமான பணிகள் அதிகம். இவற்றில் சில வெளிச்சத்துக்கு வந்தபோதும் பல விடயங்கள் இலைமறை காயாகவே இருக்கின்றது. அதாவது யுத்தக்கா லத்தில் பொதுமக்களுக்கு எதாவது துன்பம் நிகழ்ந்து விட்டால் அப்பகு திக்கு யாரும் செல்லமுடியாவிட்டாலும் அவர் அந்த இடத்துக்கு நேரடியா கச் சென்று பாதிப்படையும் மக்களுக்காக குரல் எழுப்பினார். ஆயர் அவர்கள் மறைவாக செய்த பணிகள் ஏராளம். அதாவது மன்னார் மறைமாவட்டத்தில் விதவைகள் எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக பல உதவிகள் புரிந்தார். கைவிடப்பட்ட நோய்வாய்பட்டவர்கள் இனம் காண ப்பட்டால் அவர்களுக்கான வைத்திய தேவைகளுக்கான உதவிகளை மேற்கொண்டிருந்தார்.
தங்கள் படிப்பை தொடரமுடியாமல் கஷ;டப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கஷட்டப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் பாடசாலைக்கல்விக்கென இவ்வாறு கல்விக்காக பல உதவிகளை புரிந்துள்ளார். கைவிடப்பட்ட சிறுவர்களை பராமரிப்பத ற்காக அருட்சகோதரிகள் துறவிகளை மன்னார் மறைமாவட்டத்துக்கு வரவழைத்து அவர்களுக்காக சிறுவர் பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி செயல்படுத்தியுள்ளார் இவைகள் இப்பொழுதும் வவுனியா மன்னார் பகுதிகளில் இருந்து வருகின்றன அதுமட்டமல்ல முருங்கனில் டொன்பொஸ்கோ சபை அருட்பணியாளர்களை வரவழைத்து தொழிற் பயிற்சி நிலையத்தை உருவாக்கியுள்ளார். இவ்வாறு பல சபைகளைச் சார்ந்த அருட்பணியாளர்கள் துறவியர்களை மன்னார்ம றைமாவட்ட த்துக்கு வரவழைத்து ஆன்மீகப் பணிகளை மட்டுமல்ல சகலரும் தொழில்சார் கல்விகளைப்பெற வழி சமைத்து கொடுத்துள்ளார்.
இவரிடமிருந்த ஒரு சிறப்பு குணம் என்னவென்றால் யார் இவரைநாடி வந்தாலும் இனம் மொழி மதம் பாராது உதவிகள் புரிந்துள்ளார் என பலரும் இவரை பாராட்டுவது கேட்க க்கூடியதாக இருக்கின்றது. இவருடை மனதுக்குள் நீண்டகாலமாக இருந்த விடயம் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும் என்பதே சிறையில் இருப்போரின் குடும்பங்களுக்கு தேவை யான உதவிகளை செய்வது சிறைகைதிகளை வெளியில் வருவதற்காக சட்டத்தரனிகளுடன் பேசுவதும் அவர்களுக்கான செலவுகளை செலவி டுவதும் இருந்ததுமட்டுமல்ல இந்த அரசியல் கைதிகளை எப்படியாவது விடுவித்துக் கொள்ளவேண்டும் என்பதே அவரின் தொடர் கனவாக காணப்பட்டது. கனவுமட்டுமல்ல சிறையில் வாடுவோரை நேரில் சென்று பார்வையிடுவதில் மிகவும் அவா கொண்டு தனது நேரங்களை இவர்க ளை சந்திப்பதில் செலவிட்டார்.
யுத்தக்காலத்தில்கூட தனது கட்டுப்பாட்டு க்குள் இருந்த வாழ்வோதயம் Nஐ.ஆர்.எஸ்.நிர்வனங்களை சம்பவ இடங்க ளுக்கு அனுப்பி இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு சுமார் 85ஆயிரம் 90 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பணியை தனது தலை மையின் கீழ் இருந்து செயல்பட்டார். ஆயர் யோசேப்பு காலத்தில்தான் இவ் மாவட்டத்தில் பிரச்சனைகள் தலைதூக்கப்பட்டதும் பெரும்பாலன கோவில்கள் தாக்கப்பட்டு அழிவுற்று இருந்தன. அதேவேளையில் அவர் காலத்தில்தான் அழிவுற்ற நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்கள் எல்லாம் புனரத்தானம் செய்யப்பட்டதுடன் பெரும்பாலன புதிய பங்குகளும் உருவாக்கப்பட்டன. 105 பேருக்கு மேல் அருட்பணியாளர்களாக திருநிலைப்படுத்தியுள்ளார்.
மன்னார்pல் மதப்பிரச்சனைகள் மற்றும் மதங்களுக்கிடையே புரிந்து கொள்ளாத் தன்மை ஏற்படும்பொழுது அவற்றை நடுநிலமையாக நின்று தீர்த்து வைத்தது நிமித்தம் இங்கு ஒற்றுமையை நிலைநாட்டியதுடன் பிற சமயத்தவர்கள் கூட இவருடன் அந்நியோனியமாக கலந்துறையாடி பல ஆலோசனைகளை பெற்றுச்செ ல்வர் என்பது யாரும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
மன்னார் ஆயராக இருந்த யோசேப்பு ஆண்டகை மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்ட ஆயராக நியம னம் பெற்றபின் அவர் தனது மதத்துக்காக மட்டும் தனது பணியை மேற்கொள்ளவில்லை. மதம் கடந்த மானிடருக்காக ஆற்றிவந்த பணி யானது மகத்தானது.
தமிழ் மக்கள் எந்தவகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல அவர்கள் பூரண அரசியல் உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவத்துடன் வாழவேண்டும் என்பதே ஆயரின் மனதில் இருந்துவந்த கொள்கையாகும். தமிழரின் பூர்வீகம் கலை கலாச்சாரம் அணைவராலும் அங்கிகரிக்கப்பட்டு இது அணை வராலும் மதிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை தனது மனதில் ஆழப்பதித்த ஆண்டகை 1992 ஆம் ஆண்டு ஆயராக பொறுப்பேற்றபின் அன்று முதல் இவ் கொள்கைக்காக துணிந்து செயல்படத்தொடங்கினார்.
இவ் கொள்கையை நடைமுறைப்படுத்த அவரின் துணிந்த செயல்பா ட்டைக்கண்டு பலரும் வியத்தபோதும் இவரே ஒரு உண்மை துறவி என பலரையும் வியக்கவைத்தது என்பது சந்தேகம் இல்லை.
அதுமட்டுமல்ல வெளிநாடு உயர்ஸ்தானிகர்களை சந்தித்து இவ்நாட்டில் இடம்பெற்ற யுத்தநிலைமைகளை உரைத்த உண்மைகள் இவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏன் இங்குவரும் பெருந்தலைவர்கள் யாரையும் சந்திக்காவிடினும் ஆயரான யோசேப்பு ஆண்டகையை சந்திக்காமல் செல்லமாட்டார்கள். இது ஆயரின் உண்மைக்கும் அவரின் ஆளுமைக்கும் ஒரு சான்றாக காணப்பட்டன.
பரிசுத்த பாப்பரசர் இத்தாலிய பிரதமர் இந்திய பிரதமர் அமெரிக்க தூதுவர் போன்ற பெருந்தலைவர்கள் இவ் சந்திப்புகளுக்கு சான்று பகிர்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஐனவரி 2011 இல் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லி னத்துக்குமான ஆணைக்குழுவானது மன்னாருக்கு வருகை தந்திரு ந்தபோது இவர்களுக்கு முன் தோன்றிய ஆயர் யோசேப்பு ஆண்டகை அவர்கள் நடந்து முடிந்த போரில் நீதிக்கு எதிரான அத்துமீரல்களை மிக தெளிவாக சுட்டிக்காட்டியதோடு இறுதி யுத்தத்தின்போது 146இ479 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவிடயமாக பொறுப்பு கூறப்படல் வேண்டும் என்ற பதிவை அங்கு மேற்கொண்டார். இந்த பதிவானது தமிழர்களின் நிலை உலகிற்கு வெளிச்சமானது. இதனால் இவரின் துணிவும் உண்மையும் ஒரு உண்மை துறவியின் நிலையை இவ்வுலகம் புரிந்து கொண்டது எனலாம்.
2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் nஐனிவாவில் இலங்கை தொடபான பருவகால மனித உரிமைகள் தொட ர்பிலான மதிப்பீடொன்றின் போதான துணை மாநாட்டில் இணையம் ஊடாக ஆயர் யோசேப்பு ஆண்டகை உரையாற்றுகையில் தமிழ் மக்க ளுக்கு 13ம் திருத்தம் தீர்வாகாது எனவும் தமிழர்களும் இந்நாட்டு மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமையை ஏற்று க்கொள்ளும் தீர்வே நிலைகொண்ட தீர்வாக இருக்கும் என வலியுறுத்தி னார். போரின் முடிவில் தலத்துக்கே சென்று இறந்தவர்கள் காணாமல் போனவர்களின் தொகையை கேட்றிந்து எண்ணிச் சொன்னவர் ஆய ர்தான் என்பது இங்கு சந்தேகம் இல்லை. அதுமட்டுமல்ல இடம்பெயர்ந்த மக்களை மெனிக்பாமுக்கு அழைத்துவரப்பட்டபோது இவர்களை சாதி மதம் இனம் என எவ்வித பாகுபாடின்றி திருச்சமையின் தொண்டு நிறுவனங்கள் மூலம் இறுதிவரை இவ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்தவர்தான் ஆயர் அவர்கள்.
அத்துடன் இவ் முகாமில் எவரும் பொறுப்பேற்க முடியாதிருந்த அங்கவீனர்களை தன்பொறுப்பில் ஏற்று அவர்களை பராமரிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்தார். மேலும் பாதிப்படைந்தோர் கஷ;டப்பட்டோர் என மன்னார் வவுனியா மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் புரிவதிலும் இவர் பின் நிற்கவில்லை போரின்நிமித்தம் விதவைகளானோருக்கு வாழ்வாதார திட்டங்கள் அறிமுகம் செய்து அதை செயல்பாட்டில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகி ன்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.அநாதை சிறுவர்களுக்கான கல்விக்கு இன்றும் அனுசரனை செய்து வருகின்றமை கண்கூடாக இருக்கின்றன. வசதியற்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கான உதவிகளை செய்து வருகின்றமை உயிர் ஆபத்து நோயாளிகளுக்கு மருத்தவ அதரவை வழங்கி வருகின்றமை போன்றவையெல்லாம் இவரின் அரும்பெரும் பணிகளை பட்டியலிட்டு செல்லலாம்.
இதுமட்டுமா பாதிப்புக்குள்ளாகிய முஸ்லீம் சகோதரர்களுக்காக இவர் குரல் கொடுத்தபோது இவரின் மதம் கடந்த பணியைக் கண்டு பலரும் வியத்தனர். 1989 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டபோது அதற்கு எதி ராக இருந்து ஆயர் யோசேப்பு ஆண்டகை குரல் கொடுத்தது அரசு தவறு இழைக்கும்போது மட்டுமல்ல மனிதநேயத்துக்கு எதிராக யார் செயல்ப ட்டாலும் துணிந்து நின்று குரல் கொடுப்பவர்தான் ஆயர் அவர்கள் என பல சந்தர்ப்பங்களில் எண்பித்துள்ளார். ம்மணி மன்னார் மாந்தை புதைகுழி விடயங்களை இவர் வெளிகொணர்ந்தபோதும் யுத்தத்தி ன்போது காணாமல்போனோரின் தகவல்களை இவர் எடுத்தியம்பிய போதும் காணாமல்போனோர் சம்பந்தமான விசாரனை ஆனைக்குழு முன் அதாவது கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லினக்கத்துக்குமான என்ற அந்த ஆணைக்குழு முன் துணிவுடன் உண்மைகளை எடுத்துக் கூறினார்.
அதுமட்டுமா அரசால் பொதுமக்களின் காணிகளை அபகரித்தபோதும் திட்டமிட்ட குடியேற்றம் சம்பந்தமாகவும் ஆயர் கண்ணை மூடிக்கொண்டு இராமல் அரசுக்கு எதிராக இவர் செயல்பட்ட போது இவரின் மனிதநேயம் துணிவு ஆகியவற்றை உலகம் வியப்புடன் பார்த்ததுமட்டுமல்ல இவரின் உண்மைதன்மையையும் உலகம் தொட ர்ச்சியாக புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது எனலாம்.தமிழ் மக்களின் உணர்வுகள் எண்ணங்கள் தேவைகளை அறிவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் வட மாகாண சபையினரிடமும் கலந்தாலோசித்து நல்லதொரு அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என மன்னாருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பொது வேட்பாளர் பிரதிநி திகள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையை சந்தித்தபோது ஆயர் இவ்வாறு தெரிவித்தார். அதாவது தமிழ் மக்களும் மைத்திலிக்கே வாக்களிக்க விருப்பம் கொண்டு இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்
ஐனாதிபதிக்கான தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்து க்காக மன்னாhருக்கு ஐனாதிபதி வேட்பாளர் மைத்திலிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள் றிஷhட் பதியூதீன்இ ராஐpதசேனரட்ன மற்றும் அமரர் ஐயலத் nஐயவர்த்தனவின் மகன் வைத்தியகலாநிதி காபிந்த nஐயவர்த்தன எம்.பி. ரவி கருணாயக்க மனோ கணேசன் ஆகியோர் கொண்ட குழு ஆயரை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தது.
இவ் சந்திப்பில் இடம்பெற்ற கருத்தமர்வில் அருட்பணியாளர்கள் முக்கயஸ்தர்கள் கலந்து கொண்டபோதும் ஊடகவியலார்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இருந்தபோதும் இவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை ஊடகங்களு க்கு தெரிவித்ததாவது ஐனாதிபதி தேர்தலில் பங்கு பற்றுகின்ற மைத்திரி பால சிறிசேனா அவர்களின் கட்சியும் அவர்களின் உதவியாளர்களும் இங்கு வந்தார்கள் இதன் நோக்கம் என்னவென்றால் தமிழ் மக்களின் ஆதங்களை அறிந்து கொள்வதற்காகவே ஏனென்றால் அவர்கள் கூட்டம் வைக்கும்போது தமிழ் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்க ளுக்கு நேரம் இன்மையாலும் அத்துடன் அவர்கள் தங்கள் கருத்தக்களை சொல்லி விட்டு சென்று விடுவார்கள் என்பதால் என்னுடன் பேசுவத ற்காக இங்கு வருகை தந்திருந்தார்கள் என்றார். அவர்களுடன் மக்களின் முக்கியப் பிரச்சனைகளை பிறகு பேசித் தீர்த்துக் கொள்ளளாம். இரு ந்தும் அதைப்பற்றி பேசவேண்டிய சம்பந்தமாக அரசியல் விடயமாகவே நாங்கள் பேசினோம். இந்த நாடு பல இனங்கள் கொண்ட நாடு அத்துடன் பல சமயங்கள் கொண்ட நாடு ஆனால் ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற கடந்த ஆட்சியில் துன்பங்களை தாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் கருத்துக்கள் அவர்களின் சிந்தனைகளுக்கு வருவதில்லை. மாறாக தமிழ் மக்களுக்கான எதிர்ப்பு உணர்வுகளையே கடந்த அரசிடமிருந்து நாங்கள் சந்தித்துள்ளோம். அத்துடன் இவ்வாறான இடர்களை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய எவரும் முன்வரவில்லை.
தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் சிங்கள மக்கள் தங்களுக்கு நெருக்கடிகளை கொடுப்பார்கள் என ஒரு மாயையில் அவர்கள் சிக்குண்டு இருந்தார்கள். தழிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரே நாட்டு மக்கள் அணைவரும் சமரசமாக ஒன்று பட்டு வாழணேடு டியவர்கள் அப்படித்தான் தமிழ் மக்கள் நாங்கள் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்க ளைப்பற்றி ஒரு தவறான எண்ணக் கருத்துக்களையும் சிந்தனைகளை யும் சிங்கள மக்களிடம் தவறான வழியில் அரசியல்வாதிகளால் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் தமிழ் மக்கள் அவ்வாறு சிந்திக்க வில்லை ஏனென்றால் ஒரு துன்பம் நேருடுமாகில் அது தமிழ் மக்களு க்கும் சிங்கள மக்களுக்கும் ஒன்றுதான்.
ஆகவே இந்த ஒரே நாட்டிலுள்ள அரசில் பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்பட வேண்டும். தமிழ் ஈழத்தை தவிர தமிழ் மக்களுக்கு எல்லாம் தருவேன் என இவ் அரசியல் வாதிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் எங்களுக்கு ஒன்றும் தரவி ல்லை எங்களுக்கு ஈழம் தேவையில்லை மாறாக நாங்கள் சுய மரியாதை யோடு வாழும் மக்களாக இருக்க வேண்டும் ஆகவே பல இனம் மொழி சமயம் கொண்ட இந்த நாட்டில் தமிழ் மக்கள் அறுபது நூறு ஆண்டு களுக்கு மேலாக தங்கள் உரிமைகளை அரசியல் ரீதியாகவும் அகிம்சை வழியாக கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் இவைகள் எல்லாம் ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்டதொழிய வேறு எந்த பயனும் கிடைக்கவில்லை.
இதனால்தான் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அனைவரும் ஒன்றினைந்து நாட்டை நல் வழியில் கொண்டு செல்வதற்கு அரசியல் தீர்வு மூலம் பிரச்சைனைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் முனைந்தோம். இந்த நாடு இயற்கையிலே ஒரு அழகான நாடு இது இறைவன் எமக்கு தந்த பெருங்கொடை ஆனால் மனிதர்களோ இவற்றையும் மனிதத்தையும் அழிப்பதிலேதான் முனைந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆகவேதான் இதில் மாற்றம் பெற்று ஒரு புதிய நாடாக ஓர் அழகான இலங்கையாக இருக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம். தமிழ் மக்களுக்கு நீண்ட காலப் பிரச்சனைகள் இருக்கின்றன இதைப்பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை என அரசில்வாதிகள் இருக்க முடியாது அதைக் கேட்பவ ர்களையும் அவர்கள் தண்டிக்க முடியாது இவற்றைக் கேட்பவர்கள் தமிழ் பகுதியில்தான் இருக்கின்றார்கள் எனவும் சொல்ல முடியாது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் வட மாகாண சபையிடனும் பேச்சு வார்த்தை நடத்தும்போதுதான் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்கொண்டு வருவார்கள் அப்பொழுது எல்லோரும் ஒன்றினைந்து ஒரு தீர்வை பெறமுடியும் என்றுதான் பேசினோம் இப்படியான காரியம் செய்யப்படுமாகில் அநீதிகளோ மக்கள் புறக்கனிப்போ இந்த நாட்டில் ஏற்படாது. மேலும் இந்த நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் விதைவைகள் உடலில் காயத்துடனும் குண்டுகளுடனும் இன்னும் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை
இது ஏன் இவர்கள் கவனத்துக்கு எடுக்கப்படவில்லையென்றால் தமிழர்களின் வாக்குகள் தங்களுக்கு தேவைப்படாது என்ற காரணமே ஆனால் தற்பொழுது எதிரணியில் போட்டிடும் அமைப்பு அதன் வேட்பாளர் ஒரு பரந்த மனப்பாங்குடன் மட்டுமல்ல அவற்றை நல் செயல்பாட்டில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டபோது அவர்களும் அதே மனப்பாங்குடன் இருப்ப தாகவும் தெரிவித்தனர்
அத்துடன் இவர்களின் செயல்பாட்டிலும் விஞ்ஞாபனத்திலும் இவர்களின் நல் எண்ணங்கள் இருப்பதையும் எம் மக்கள் நன்கு அறிவார்கள் ஆகவே எமது தமிழ் மக்கள் எதிரனி பொது வேட்பாளருக்கு வாக்களிக்க இருக்கின்றனர். ஆகவே இவர்களின் நல்லெ ண்ணங்கள் செயல்பாடுகள் நல்ல முறையில் நடைபெற வாழ்த்திய துடன் இந்த நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் திகழ வாழ்த்தி அனுப்பினேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை இவ்வாறு அந்நேரம் தெரிவித்தார் ஆயரின் இவ் ஆசீர்வாதம் சந்தித்த அந்த அரசியல்வாதிகளுக்கு இப்பொழுது பலன் கிடைக்கப் பெற்றிருக்கின்றபோதும் பிறர்மட்டிலுள்ள மனிதநேயம் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களுக்கு நிறைவு பெறாமல் இருப்பதே ஆயருக்கு இருந்துவரும் கவலையாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
இதனால்தான் என்னவோ உலக தமிழினம் ஆயர் யோசேப்பு ஆண்டகை ஆயர் பதவியிலிருந்து ஓய்வு நிலையில் இருந்தாலும் அவர் மீண்டும் நற்சுகம் பெற்று தனது மனிதநேயப்பணியை தொடரவேண்டும் என மக்கள் இறைவனிடம் வேண்டி நிற்பதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆயரின் பாதையில் புதிய ஆயர் அவர்கள் பணிக்க வேண்டும் என்பதே மன்னார் மறை மாவட்ட விசுவாசிகள் மடுமல்ல, அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பதிவாளர் எனது ஆசைகளும் கூட ,,,,,, என்றும் அன்பில் பேசாலைதாஸ்
No comments:
Post a Comment