Sunday, December 17, 2017

வடிவேலுவை ஏன் மகா கலைஞன் என்கிறோம்?

வடிவேலுவை ஏன் மகா கலைஞன் என்கிறோம்? கலைவாணர் அரசியல் பிரக்ஞையுடன் நிதானமாக நகைச்சுவை உணர்வை நம்மில் கிளர்த்துபவர். தங்கவேலு கீழ் மத்தியதர வர்க்கத்தின் இரட்டை வாழ்நிலையைப் பகடி செய்வதன் மூலம் நம்மைக் கவர்ந்தவர். கவுண்டமணி செந்தில் நகைச்சுவையில் இரண்டு பரிமாணங்கள் இருந்தன. நிலவும் அரசியலை அவர்கள் பகடி செய்தார்கள். அவர்களது நகைச்சுவையில் நிறம், சாதி போன்றவற்றை இழிவுபடுத்துதம் பண்புகள் அதிகம் இருந்தன. இந்த விஷயத்தில் கவுண்டமணி கவுண்டர் மனநிலையை வெளிப்படுத்தினார் எனச் சொல்லலாம். மணிவண்ணன் நடிகவேளின் சமகால நீட்சி. அதிகார வர்க்கத்தின்- உயர்குடிகளின் வாழ்வை அரசியல் பகடி செய்தவர்கள் அவர்கள். விவேக் எந்த ஒரிஜினாலிடியும் இல்லாத ஒரு கலவை. கவுண்டரின் இழிந்த வடிவம் சந்தானம். வடிவேலு நாம் அன்றாடும் வாழும்-எதிர்கொள்ளும் குடிமைச் சமூகத்தின் அனைத்துப் பண்புகளும் தழுவி முழு சமூகத்தையும் எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் அதுவாகவே ( பாத்திரப் படைப்புகளில்) வாழ்ந்து சுயபகடியின் மூலம் முழு சமூகத்தையும் பகடி செய்தவர். அவரது உடல் மொழி பிற எவருக்கும் வாய்க்காதது. ‘பிரண்ட்ஸ்’ மற்றும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழில் நகைச்சுவை நடிகர்களது தனித்தனிப் படங்களை எடுத்து அலசுகிற எவரும் இந்த எல்லையை வந்து அடைய முடியும் என நினைக்கிறேன்..
உண்மைதான் தோழர்....
வடிவேலுவை எல்லோருக்கும் ஏன் பிடிக்கிறது என்பதற்கான காரணங்கள் இவையே.
அதும் போக நமக்கு பழகிய வார்த்தைகளுக்கு புதிய புதிய அர்த்தங்களை தந்ததன் மூலம் தமிழ் மொழியின் எல்லைகளை சற்று விசாலமாக்கியிருக்கிறார்.

"ஆணியே புடுங்க வேண்டாம்"....இன்றைக்கு நாம் அடிக்கடி பல்வேறு இடங்களில் புழங்கும் வார்த்தை.
இதே போல......
"நாங்க எதுக்குடா ராத்திரி பன்னன்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போனும்...?"

" தம்பி இன்னும் டீ வர்ல".

"வந்துட்டாங்கய்ய்யா....
வந்துட்டாய்ங்க...."...

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். 
பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை ஏற்றியதன் மூலம் வடிவேலு நம் மொழிக்கு செய்திருக்கும் பணியும் கவனிக்கப்படவேண்டியதே தோழர்.

No comments:

Post a Comment