Monday, December 11, 2017

பின்லாந்து நாட்டின் கல்வி வெற்றிக்கு அடிப்படை காரனம் எது?

பின்லாந்து நாட்டின் கல்வி வெற்றிக்கு அடிப்படை காரனம் எது?

அன்பர்களே சென்ற பதிவிலே பின்லாந்து கல்வி நடைமுறை பற்றிய தகவலை பதிவு செய்தேன். இப்பொழுது கல்வி வெற்றிக்கு அடிப்படை காரனம் எது என்பதை சற்று உற்று நோக்குவோம். முதலாவது உளவியல் அம்சம் நிறைந்தது அதாவது மன மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தை, இயற்கையை இரசிக்கின்றது அதன் மூலம் கல்வி கற்றுக்கொள்ளும் வினைதிறனை பெற்றுக்கொள்கின்றது. மாணவ்ர் மட்டும் போதாதது வெற்றிக்கு ஆசிரியர்கள் முக்கிய காரனமாகின்றனர். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, அரசாங்க அதிபர் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...
அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...ஏதாவது ஒரு பாடத்தில் ..project
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது... நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்... தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!... இங்கு நாம் எமது ஆசிரியர்களை உற்று நோக்குவோம். ஆகாக் குறைந்தது ஒரு வாத்திவேலை என்ற அளவுக்கு ஆசிரிய தொழிலானது பொருளாதர வருமானமற்ற துறையாக இருப்பதும், குறைந்த பட்ச தகுதி இருந்தாலே போதும் அதாவது ஆசிரிய போட்டி பரீட்சையில் வென்றுவிட்டால் போதும் என்ற நிலை. வருமானம் போதாதபடியால் ஆசிரியர்கள் வேறு தொழில் செய்யும் அவல நிலை, இரவு கடல் தொழிலுக்கு செல்லும் ஆசிரியர்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களை குறை சொல்வதில் பயனில்லை நாட்டின் பொருளாதார நிலை அப்படி! இதேவேளை பெற்றோர்களின் பங்களிப்பு நிறையவே உள்ளது.பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பொறுப்போடு செயல்பட்டால் வெற்றி நிட்சயம்.
பெற்றோர்களே! குழந்தைகள் வளர்ப்பில் நாம்  கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...முதலில், பிள்ளைக ளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துவோம்...ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று  ஒருபோதும்நினைக்காதீர்கள்….பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும். எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாக லாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி. லூயி பாஸ்டர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார். குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள். பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். வாழ்வில் வெற்றிபெற்ற வரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
 பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில். நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான். சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் ஒரு தகப்பனாக இருந்து ஓரளவு எனது பிள்ளைகளை வெற்றியாளராக மாற்றிய மாற்றிய அனுபவ சிந்தனையூடாக் எனது கருத்துக்களை முன் வைத்தேன் ஏதவது தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்
அன்புடன் என்றும் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment