Friday, May 19, 2017

மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்களை கௌரவிக்கும் நோக்குடன் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் மன்னாருக்கு விஐயம்.



மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்களை கௌரவிக்கும் நோக்குடன் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் மன்னாருக்கு விஐயம்.
(பிராந்திய செய்தியாளர்) 18.05.2017
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குத் தளங்களில் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்களை கௌரவிக்கும் நோக்குடன் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் மன்னாருக்கு விஐயம் மேற்கொள்ளுகின்றார். அவரை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மன்னார் ஆயர் இல்லத்துடன் இணைந்து மன்னார் மறைக்கல்வி நடுநிலையம் மேற்கொண்டு வருகின்றது.
பரிசுத்த பாப்பரரசரின் (வத்திகானின்) இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு பேராயர் பியாரினுயன் (Pஐநுசுசுநு NபுருலுநுN) ஆண்டகை அவர்கள் மன்னார் மறைமவாட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் மேதகு யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் அழைப்பை ஏற்று சனிக்கிழமை (20.05.2017) மன்னாருக்கு விஐயம் மேற்கொள்ளுகின்றார்.
மன்னார் மறைமாவட்டத்தின் 43 பங்குகளில் பத்து வருடங்களுக்கு மேலாக தங்கள் பங்குகளில் மறையாசிரியர்களாக தொடர்ந்து பணிபுரியும் 190 மறையாரியர்களை கௌரவிக்க வேண்டும் என்ற நோக்குடன் மன்னார் மறைமவாட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் மேதகு யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் அழைப்பை ஏற்றே அவர் மன்னாருக்கு வருகை தருகின்றார்.
மன்னார் மறைமாவட்டத்தில் மறையாசிரியர்களை திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் கௌரவிப்பது இதுவே முதல் தடைவ எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னாருக்கு வருகை தரும் திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவரான பேராயரை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மன்னார் ஆயர் இல்லத்துடன் இணைந்து மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனர் அருட்பணி எக்ஸ்.எவ்.றெஐpனோல்ட் அடிகளார் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட பேராலயத்துக்கு வருகை தந்ததும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட அருட்பணியாளர்களாலும் மறையாசிரியர்களாலும் இறை மக்களாலும் வரவேற்கப்பட்டதுடன் காலை 8.30 மணிக்கு பேராலயத்தில் திருத்தந்தையின் தூதுவரின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இதைத் தொடர்ந்து திருத்தந்தையின் தூதுவர் மறையாசிரியர்கள் மத்தியில் உரையாற்றுவதுடன் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மறையாசிரியர்களாக கடமைபுரியும் 190 மறையாசிரியர்களையும் அவர் கௌரவிப்பார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment