Thursday, May 4, 2017

மன்னாரில் கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் அமைக்க தள்ளாடிக்கு அருகாமையில் நான்கு ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்படுகிறது. அமைச்சர் nஐயவிக்கிரம பெரெரா



மன்னாரில் கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் அமைக்க தள்ளாடிக்கு அருகாமையில் நான்கு ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்படுகிறது. அமைச்சர் nஐயவிக்கிரம பெரெரா
(பிராந்திய செய்தியாளர்) 28.04.2017
மன்னார் தள்ளாhடிக்கு அருகாமையிலுள்ள பறவைகள் சரணாலயம் பகுதியிலுள்ள நான்கு ஏக்கர் நிலத்தை கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன் இந்த நிலையம் மிருகத்துக்காக மட்டுமல்ல இயற்கைக்காகவும், உல்லாசப் பயணிகளுக்காகவும் மாற்றாற்றல் கொண்டோரின் நலன் கருதியும் நவீன முறையில் அமைக்கப்படும் என நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி nஐயவிக்கிரம பெரெரா இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பிறிஐpங் லங்கா நிறுவனமும், மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கமும் இணைந்து மன்னார் முருங்கன் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கத்தில் கழுதைகள் மூலமான உளநல சிகிச்சை நிலையம் ஒன்று வியாழக்கிழமை (27.04.2017) நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி nஐயவிக்கிரம பெரெராவினால் திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிறிஐpங் லங்கா நிறுவனம் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு nஐரமிலியனகே மற்றும் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கப் பணிப்பாளர் அருட்சகோதரி nஐhஸ்பீன் மேரி ஆகியோரின் முயற்சியால் இடம்பெற்ற இவ் விழா முன்னாhள் மன்னார் நகர சபை உப தலைவர் Nஐம்ஸ் யேசுதாசன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிலையமானது ஆசியக்கண்டத்திலேயே முதலாவதாக நிர்மானிக்கப்பட்டு மனநலம் குன்றிய சிறார்களுக்கான சிகிச்சை நிலையமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சின் அமைச்சர் காமினி nஐயவிக்கிரம பெரெரா இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு இங்கு உரையாற்றுகையில்
இன மத வேறுபாடின்றி நாம் எல்லோரும் இவ்விடத்தில் ஒன்றுகூடியிருக்கின்றோம். அதுவும் விலங்குகளுக்கான அமைச்சர் என்ற வகையில் என்னுடன் நீங்கள் கூடியிருப்பது மகிழவுக்குரியது. அத்துடன் இன்றைய இவ் நிகழ்வை நான் ஒரு பெரிய நிழ்வாக எண்ணி மகிழ்வு கொள்ளுகின்றேன்
.
மன்னார் பிறிஐpங் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் nஐரமிலியனகே இலங்கை பெரும்பான்மை இனத்தின் நாமத்தை அவர் கொண்டிருந்தாலும் ஐம்பது வருட காலமாக அவர் அவுஸ்ரேலியாவில் வசித்து வந்துள்ளார்.
இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு மன்னார் பகுதிக்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்த்தும் அத்துடன் இங்குள்ள கழுதைகளின் சூழ்நிலைகளைம் அவதானித்துள்ளார். அந்த நேரத்தில் என்ன செய்யலாம் என சிந்தித்தவராக இருந்தாலும் எந்தக் காரியத்தையும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தும்போது எங்கேயோ இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும் என்பார்கள்
அவ்வாறு அசோக் சக்கரவத்தியைப்போல இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரு பாலமாக திகழ்ந்ததுபோல இங்குள்ள கழுதைகளைக் கொண்டு மனித நேயத்தை வளர்த்து எடுப்பதற்கு இந்தியாவிலிருந்து வருகை தந்து செயல்பாட்டில் இறங்கியிருக்கும் வைத்தியர் ரமேஷ;குமாரை நான் நினைக்கின்றேன்
இந்த பூமியிலே மனிதர்கள் வாழ்கின்றதுபோல மிருகங்களும் பறவைகளும் நடமாடுகின்றது. மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ வேண்டும் என அனைத்து சமயங்களும் எமக்கு போதிக்கின்றது. ஆனால் நாம் தவறான வழியில் இவைகளை அழித்து வருகின்றோம்
.
இன்று அவுஸரேலியாவிலுள்ள nஐரமிலியனகே, இந்தியாவிலுள்ள வைத்தியர் ரமேஷ;குமார், Nஐர்மனியிலுள்ளவர்கள் இவர்கள் எல்லாம் ஏன் இங்கு வந்திருக்கின்றார்கள்.
இவர்கள் மனித நேயத்துடன் இருந்து செயல்படுத்தும் நோக்கிலேயே வந்திருக்கின்றார்கள். மன்னாரைப் பொறுத்தமட்டில் இங்கு எல்லா வளமும் இருக்கின்றன. நில வளமுண்டு, கடல் வளமுண்டு, வயல் வளமுண்டு இவ்வாறு பல்வேறு வளங்கள் இங்கு காணப்படுகின்றன.
இவ்வாறு நிறைந்த வளங்கள் இங்கு இருந்தாலும் இவைகளை நாம் நாளாந்தும் அழித்து வருவோமானால் எதிர்காலத்தில் நாம் இங்கு இருக்க முடியாது. நாம் தொடர்ந்து இங்கு வாழ வேண்டுமானால் இயற்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
.
இங்குள்ள பறவைகள், மிருகங்கள், காடுகள், மீன்கள் போன்ற இயற்கை வளங்களுக்கு எமது உதவிகள் தேவையில்லை. இப்பொழுது நாம் மழை இல்லையே என்று வேதனைப் படுகின்றோம். இதற்கு காரணம் நாம் இயற்கைக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவதே ஆகும்.
நாம் எதாவது குற்றம் புரிந்து நீதிமன்றம் சென்றால் அங்கு சட்டத்தரனிகள் மூலம் குற்றங்களிலிருந்து தப்பித்து வரலாம். ஆனால் எமது கண்களால் பார்க்க முடியாத ஒரு சக்தி இருக்கின்றது. இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கு இங்குள்ள ஒவ்வொரு மதத் தலைவர்களும் இப்பகுதி மக்களுக்கு நாளாந்தம் உணர்த்த வேண்டும் என்பதை நான் தயவாக வேண்டுகின்றேன்.
நான் நீர்பாசன அமைச்சராக இருந்தபொழுது 2002ம் ஆண்டில் பிரபாகரனுக்கும் பிரதம மந்திரி ரணிலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் நடைபெற்றபோது மன்னார் கட்டுக்கரைக் குளத்தில் நீர் இல்லாது வரண்டு காணப்பட்ட நேரத்தில் அனுராதபுரத்திலிருந்து இங்கு நீர் வரவழைப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன். இதனால் அப்பொழுது இங்குள்ள வேளாமைகள் பாதுகாக்கப்பட்டது.
இதையெல்லாம் நான் இங்கு ஒரு அமைச்சராக மட்டும் இருந்து பேசவில்லை. மாறாக மனித நேயம் கொண்டவனாக இருந்தே இவற்றை இங்கு கூறுகின்றேன். ஆகவே நாம் ஒவ்வொருவரும் நமது எதிர்கால சந்ததினர்களுக்காக இயற்கை மனித நேயம் கொண்டவர்களாக மாற வேண்டும் என நான் உங்களை வேண்டி நிற்கின்றேன்.
ஆகவே நான் மீண்டும் ஒவ்வொரு மதத் தலைவர்களைப் பார்த்து வேண்டுவது ஆன்மீகத்துடன் மனித இயற்கை நேயத்தையும் வளர்த்துக் கொள்ள மக்களுக்கு அறிவூட்டப்பட வேண்டும். இவைகள் மதத் தலைவர்களால்தான் முடியும். இதற்கு எனது அமைச்சும் உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கின்றது.
நானும் இன்னும் ஒரு அமைச்சரும் இணைந்து மந்திரி சபையில் ஒரு தீர்மானம் மேற்கொண்டிருன்றோம் அதாவது ஒவ்வொரு பாடசாலையிலும் சாரணியர் இயக்கம் கட்டாயம் ஆரம்பிக்க வேண்டும் என்று. ஏனென்றால் பாடசாலைகள், வீடுகள், கிராமங்களிலுள்ள மனிதர்கள் மட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமானால் சாரணியர் இயக்கம் செயல்பட வேண்டும். இதை மன்னாரில் வெகுவிரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்பொழுது சபையிலிருந்து நீங்கள் பெண்கள் சாரணியத்தைப்பற்றி தெரிவிக்கவில்லையே என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அமைச்சர் அதற்கு மன்னிப்பு கோரி பெண்கள் சாரணியம் இதற்கு விதிவிலக்கல்ல. இப்பொழுது பெண்கள் கைகள்தானே ஓங்கியுள்ளது. எதிர்காலத்தில் ஆண்கள் அடுப்படி நோக்கி செல்ல பெண்கள் உத்தியோகம் பெற்றுச் செல்லும் நிலை எற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இருந்தும் நாம் ஒவ்வொருவரும் சமூகத்துக்கு அர்ப்பணிப்பு உள்ளவர்களாக வாழ்வோம் என்றார்.
அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் நான் இதைப்பற்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். அதாவது மன்னார் தள்ளாhடிக்கு அருகாமையிலுள்ள பறவைகள் சரணாலயம் பகுதியிலுள்ள நான்கு ஏக்கர் நிலத்தை கழுதைகளை பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றார்.
இது சம்பந்தமாக எனக்கு ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் இவ் நிலையத்தின் திட்டங்களை முன்னெடுக்க உதவி புரிவார். இந்த நிலையம் மிருகத்துக்காக மட்டுமல்ல இயற்கைக்காகவும், உல்லாசப் பயணிகளுக்காகவும், அத்துடன் இங்கு டீப்திக்கா என்ற காது கேட்காத வாய் பேசாத சிறுமி பாடலுக்கு ஏற்றவாறு மிக பிரமாதமாக நடனம் ஆடினாள். இவ்வாறான பிள்ளைகளுக்காகவுமே இவ் நிலையம் நிர்மானிக்கப்பட இருக்கின்றது.
இந்த நிலையமானது மனிதரும் மிருகங்களும் மனதால் ஒன்றித்து செயல்படும் நிலையமாக நவீன முறையில் அமைக்கப்படும். இங்கு நான் மாற்றாற்றல் உள்ளவர்கள் என குறிப்பிட விரும்பவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு அங்கம் குறைபாடு என்றால் மாற்றாற்றல் உள்ளவர் என பெயர் சூட்டிவிடுகின்றோம். ஆனால் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி செயல்பாடு அற்றவர்களாக இருப்போர் மாற்றாற்றல் என சொல்ல முடியாதா?
மன்னாரில் போதைப் பொருட்கள் அதிகமாக கடத்தப்படும் இடமாக நான் கேள்விப்படுகின்றேன். இது எதிர்கால சந்ததினரை வெகுவாக பாதிப்படையும் நிலைக்கு மன்னாரை தள்ளிவிடும். ஆகவே வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் இங்கு இவ் மேடையில் அமர்ந்து இருக்கின்றார். அவரிடம் நான் வேண்டியிருப்பது இவ் போதைப் பொருட்கள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள். உண்மையில் இது பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரால் மட்டும் முடியாது இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து இவற்றை தடுக்க முயற்சிக்க வேண்டும்.
பெண்கள் சாரணியம் வேண்டும் என்று பெண்கள் இங்கு குரல் கொடுத்தீர்கள் அல்லவா அகவே பெண்களாகிய உங்களிடம் நான் வேண்டுவது நீங்கள் தலைவர்களாக இருந்து இவற்றை செயல்படுத்த முயற்சியுங்கள்.
மாற்றாற்றல் பிள்ளைகளுக்காக போக்குவரத்துக்கு பஸ் ஒன்று கேட்கப்பட்டது. இது தற்பொழுது உடன் சாத்தியப்படாத ஒன்றாக இருக்கின்றபோதும் மன்னார் இலங்கை போக்குவரத்து சபையுடன் நான் உடன் பேசி இவர்களின் போக்குவரத்துக்கான நடவடிக்கை எடுத்துத் தருவதாக தெரிவித்தார். இருந்தும் இவர்களுக்கான பஸ் ஒன்று பெறுவதற்கும் தான் ஆவண செய்வதாக தெரிவித்தார்.
மன்னாரில் வறுமையை ஒழிப்பதற்காகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சட்டத்துக்கு மாறாக பறவைகள் விலங்குகள் மன்னார் மக்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அணைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment