Thursday, April 26, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த துரோகமே மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளரை இழப்பதற்கு காரணம்! -மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாகீர்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த துரோகமே மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளரை இழப்பதற்கு காரணம்!
-மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாகீர்-
(தலைமன்னார் நிருபர்- வாஸ் கூஞ்ஞ) 20.04.2018
மன்னார் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்றிருந்த போதும் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவில் தம்முடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதைத் தட்டிக் கழித்தமையே ஒற்றுமை சீர்குழைந்தது என மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகமது முஜாகீரும் மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை(20.04.2018) காலை மன்னார் நகர சபையின் உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அமைச்சர் றிஷாம் பதியுதின் மற்றும் அவரது கட்சியினையும் சாடி உரையாற்றியமையினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன் செய்தியாளர்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியி;டனர்.
மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தோதலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஐந்து உள்ளுராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.
இதில் ஐந்து உள்ளுராட்சி சபைகளிலும் அதிக வாக்குகளை பெற்ற போதும் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்திருந்தார்
ஆயினும் அவர்கள் அமைச்சரின் அழைப்பிற்கு செவி சாய்க்காததினால் வேறு கட்சிகளுடன் இணைந்து மக்கள் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முயன்றமையினால் தங்களால் கைப்பற்றப்பட்ட மூன்று சபைகளிலும் உப தவிசாளர் பதவியையும் இழக்க நேரிட்டது.
அதே நேரத்தில் நாங்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே இன்று(நேற்று) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வசமிருக்கும் மன்னார் நகர சபையின் வரவேற்பு விழாவில் இன,மத,கட்சி வேறுபாடின்றி கலந்து கொண்டோம்.
ஆயினும்,வரவேற்பு நிகழ்வில் எங்கள் தலைவரையும், கட்சியையும் தொடர்ச்சியாக விமர்சிப்பதால் எமது நல்லிணக்கத்தை அவர்கள் விரும்பவில்லை என்பதாக கருதியே நாங்கள் அணைவரும் ஒருமித்து அங்கிருந்து வெளி நடப்பு செய்தோம்.
மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக நாங்கள் ஒரு தமிழ் பிரதிநிதியையே தீர்மானித்திருந்தோம்
. ஆயினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் கூட எங்களுக்கு எதிராக செயற்பட்டதனாலேயே அந்த உப தவிசாளர் பதவியையும் அவர்கள் இழக்க நேரிட்டது.
இவ்வாரிருக்க அமைச்சர் றிஸாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிதான் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் குள்ள நரி வேளையை செய்வதாக தெரிவிப்பதை நாம் வன்மையாக கண்டிப்பதோடு எமது கவலையையும் தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகமது முஜாகீரும் மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment