Tuesday, July 17, 2018

இராஜ இராஜனை இன்றும் வசை மொழிகள்

இராஜ இராஜனை இன்றும் வசை மொழிகள் கொண்டு சபித்துக் கொண்டிருக்கும் ஒரு சாராரும் இதேத் தமிழகத்தில் இன்றைக்கும் உண்டு எனில் அந்தப் பின்புலத்திற்கும் காரணமில்லாமல் இல்லை. ஏனெனில் இராஜ இராஜனால் தான் அவர்காலத்தில் தான் சாதியப் படிநிலைகளின் கொடூரம் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பிரிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டதெல்லாம் அவர்காலத்தில் தான், அதன் உச்சத்தைத் தொட்டது, சாதியப பிரமிடின் உச்சாணிக் கூர்மூனையில் கொண்டு போய் பிராமணர்களை மிக உயர்த்தித் தூக்கிக் கொண்டு போய் வைத்தது, அதிலும் மிகக் குறிப்பாக முதலில் தாசிகளில் சதிராட்டம் என்ற நாட்டிய, ஆடல் பாடல் சாதிகளாய் இருந்த பழைய தமிழ் தாசிகளின் இடத்திற்குப் போட்டியாக நுழைந்த வெள்ளைத் தோல் தாசிகளை அங்கீகரித்து அவர்களுக்கு தமிழ் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்த்தை அளித்தது என இராஜ இராஜன் மேலும் இன்றைய சமூகவியல் அறிஞர்கள் மத்தியில் இத்தகையக் கடுமையான விமர்சனங்கள் உண்டு.
பெரும் மக்கள் திரளினராக, ஒரு முழு இனக் குழு சமூகமாகத் தமிழ் உட்படத் எந்த ஒரு திராவிட மொழியினச் சமூகமும் வெள்ளைத் தோல் ஆரியர்களோடு சமத்துவமான முறையில் பெண் கொடுத்து, பெண் எடுத்துக் கலந்திருந்தால் இன்றைய சாதிய சமூகச் சிக்கலே வந்திருக்குமா?! என்பது சந்தேகமே! அப்படியே வந்திருந்தாலும் இன்றைக்கு இருப்பது போல, இவ்வளவு கடுமையாக எல்லாம் வளர்ந்து இருந்திருக்குமா?! என்பதெல்லாம் ஒரு வகையில் சந்தேகமே! குறைந்த பட்சம் கறுப்புத் தோல் திராவிட மன்னர்களுக்கு, ப்யூர் வெள்ளைத் தோல் ஆரிய மன்னர்கள் எவருமேயே பெண் கொடுத்து எடுத்திருக்கிறார்களா?! என்றால் இந்த விதிக்கு ஒருவேளைக் கேரளம் மட்டுமே விதிவிலக்கோ என்னவோ?! மகா பாரத காலத்திலேயே இந்தத் துணைக் கண்டத்திலேயே வட ஹிந்தியாவோடு மண உறவுகளைப் பேணிய ஒரே திராவிட அரச குலமாகவும் பண்டைக் கால மூவேந்தர்களில் ஒருவராகிய சேர அரச குடும்பங்கள் மட்டும் தான் விளங்கினவோ என்னவோ?!
(அது கூட குழந்தை இல்லாத பாண்டுவுக்கு குழந்தைப் பேற்றுக்காகக் கூடுதலாக இன்னொரு மனைவியாக குந்திக்கு ஒரு சக்களத்தியை போல மாத்ரி என்ற சேர தேச இளவரசியை இங்கிருந்து அங்கு அஸ்தினாபுரத்திற்கு பெண் எடுத்துச் சென்றிருக்கிறார்களே ஒழிய பெண் கொடுத்ததாய் ஏதும் தெரிய வில்லை. மேலும் பாண்டுவும், திருதராஷ்டனுமே கூட ஒரு வகையில் மீனவ குலப் பெண்ணான சத்தியவதியின், இன்னொரு மகனான வியாச முனிவருக்குப் பிறந்தவர்களாகையால், அஸ்தினாபுரத்துக் குரு வம்சம் என்பது குறைந்த பட்சம் சத்தியவதி காலத்திலிருந்தாவது மீண்டும் கறுப்பு மக்களின் குருதித் தொடர்புடையதாய் மாறியதாலோவோ என்னவோ, விசித்திர வீர்யனனுக்கு அன்றைக்கிருந்த 56 தேச அரசர்களும் பெண் கொடுக்க மறுத்ததினாலேயே சத்தியவதி பீஷ்மரின் மூலம் காசி தேசத்தின் இளவரசிகளை சத்திரிய தர்மப்படி கடிமணம் எனப்படும் போரிட்டுக் கவர்ந்து வருமாறு கட்டளையிடுகிறார். ஆனாலும் அந்த மணமுயற்சி அரசியலரங்கத்தில் பீஷ்மரின் புஜ பலத்தால் வெற்றியடைந்தாலும், அந்தரங்கத்தில் பள்ளியறையில் தோல்வியே காணுகிறது. விசித்திர வீர்யனால் அஸ்தினாபுரத்திற்கு வாரிசு எதையும் உருவாக்க முடியாமலே இறந்து போக, வாரிசு இல்லாத தேசம் அன்றைய வழக்கப்படி மற்ற சத்திரிய மன்னர்களால் கவர்ந்து கொள்ளப்படும் அபாயம் சூழ்ந்து கொள்ளவே பீஷ்மரையே அந்தக் காசி தேசத்து இளவரசிகளை மணக்கக் கூறி வேண்டியும் பீஷ்மர் தான் பூண்டிருந்த பிரம்மச்சர்ய நெறி காரணமாக மறுக்க, வேறு வழியே இல்லாது பராசர முனிவருக்கும் தனக்கும் பிறந்த தனது முதல் மகனான வியாசன் மூலம் காசி தேசத்தின் இளவரசிகளுக்கு நியோகம் புரிய விடுகிறார். அப்படி வியாசரின் நியோகக் குழந்தையாய் பிறந்தவர்களே திருதராஷ்டிரனும், பாண்டுவும். அதில் பின்னாளில் பாண்டுவுக்குக் கட்டிய இரண்டாவது மனைவியும், பஞ்ச பாண்டவர்களில் நகுல சகாதேவனின் தாயாருமான மாத்ரி மலையாள தேசத்தவரே. அதனால் தானோ என்னவோ தெற்கில் இன்றைக்கும் கேரள மாநில பிராமண இனத்தவர்களுக்கு ஒரு லாபி இன்றைக்கும் இன்றைய டெல்லி அரசியலிலும் (மிக ஆதி காலத்திய அந்த உறவின் ஒரு தொடர்ச்சி இழையைப் போல) தொடர்கிறதோ என்னவோ?!
ஆனால் உயிரோடு உள்ள சுந்தர் பிச்சையின் மதிப்பு என்னவோ அமெரிக்க முதலாளித்துவத்திற்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக உள்ளது தான் நமது சாபக்கேடு.
இப்பொழுது புரிகிறதா?! சாதியின் வலிமை எவ்வளவு என?! நாம் நினைக்கும் அளவுக்கு சாதி ஒன்றும் அவ்வளவு கொடியதும் அல்ல. நல்லதும் அல்ல. சாதியை உள்ளது உள்ளபடி பார்த்துணர்ந்து புரிந்து கொள்ளும், சமூக அறிவியல் பார்வை மட்டும் இருந்தால் போதும், நம் தமிழகம் மட்டுமல்ல, தமிழகம் உள்ளடக்கிய ஹிந்தியமும் கூட உலக அரங்கில் எங்கேயோ போய் விடும். ஆனால் சுந்தர் பிச்சையைத் தக்க வைத்துக் கொள்ளும் அந்த யோக்யதை ஏன் 130 கோடி இந்தியர்களுக்கும் இல்லாமல் போனது என்பதில், சாதியத்துக்கும், மதத்துக்கும், இந்திய அரசியல் களத்தின் சீரழிவுக்கும் எவ்வளவோ நல்ல தொடர்புகளும் உண்டு, கள்ளத் தொடர்புகளும் உண்டு என்பதைத் தான் நாம் ஹிருதய சுத்தியோடு ஒத்துக் கொள்வதேயில்லை. அதிகம் விளக்கவும் தேவையில்லை!
அது நம் அனைவர்க்குமே தெரிந்த உண்மையே. பிரதான சிக்கல் முடிச்சு எங்கே உள்ளது?! எதை அவிழ்த்தால், ஒரு மிஷின் தையலைப் பிரிப்பதைப் போல, மிக எளிதாக, லாவகமாக மொத்தச் சிக்கல் முடிச்சுகளையும் பிரிக்கலாமோ அந்தப் பிரதான முடிச்சை விட்டுவிட்டு, யானையைத் தடவிய குருடர்கள் கதையைப் போல இந்தியச் சிக்கல்களை சிலர் பொருளாதார வழியிலும், சிலர் அரசியல் சுதந்திரத்தின் வாயிலாகவும், இன்னும் சிலர் மதத்தின் வாயிலாகவும் என ஆளாளுக்கு யானையின் ஒவ்வொரு பாகத்தைத் தடவிப் பிடித்த, யானை தடவிய குருடர்கள் கதை போலத் தான் தடவிக் கொண்டுள்ளோம்.
விந்தியமோ ஹிந்தியமோ இத் துணைக் கண்ட முழுக்க இருக்கும் எல்லாப் பிராமணர்களுக்கும் தாய் மொழி வேண்டுமானால் வேறு வேறாக இருக்கக் கூடும். ஆனால் தந்தை மொழி என வரும் போது ஒரு காலத்தில் சமஸ்கிருதம் அவர்களது இணைப்பு மொழியாக இருந்தது. இன்றோ அந்த சமஸ்கிருதத்தோடு ஏற்பட்ட தமிழ், திராவிட, உருது, ஐரோப்பிய மொழிக் கலப்பு காரணமாக அது இன்று ஹிந்தியாக உருமாற்றம் கண்டுள்ளது. பிராமண துவேஷத்தை, வெறுப்பை நெருப்பாய் கக்கும் வினவு.காம் போன்ற தளங்கள் என்றைக்குத் தான் ங்களது வெறுப்பு நெருப்பின் உமிழ்வைக் குறைப்பார்களோத் தெரியவில்லை. அவர்களது வெறுப்பு நெருப்பிலும் அவர்களுக்கே உரித்தான தார்மீக நியாயங்களும் இல்லாமல் இல்லை. அதே நேரம் அவர்களிடத்தும் கபடம் இல்லாமலும் இல்லை. ஆனால் தங்களிடம் கபட வேடத்தின் ஒரு அணு கூட இல்லை என்பது போன்ற அவர்களின் வேடம் என்னவோ மிகையே.)
……….. அவரவர் தாய்மொழிப் பின்புலமும் மதமும் கூடக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றே எண்ணுகிறேன். பழைய காலங்களில் இந்த விந்தியத் துணைக் கண்டமெங்கும் மொழியைக் காட்டிலும் மதத்தைக் காட்டிலும் சாதிக்குத் தான் வலிமை அதிகம் இருந்திருக்கிறது. நீ எந்த மொழியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டிலும், மொழி எதுவாகவோக் கூட இருந்து விட்டுப் போகட்டும் சாதி எந்த சாதி என்று தான் அதிகம் பார்க்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பது எப்படி உயர்வாகவோ, அல்லது தாழ்வாகவோ, பார்க்கப்பட்டதோ அது, அதாவது ஒரு மனிதனின் பெருமை பொருளாதாரம் அல்லாத காரணிகளால் அளக்கப்படும் போது, அது சாதி கொண்டே அளக்கப்பட்டது. ஆனால் அது இனி வரும் காலங்களில் சாதியைக் காட்டிலும் அந்த சிறப்பு அதிகம் மொழிக்கு அளிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. மதம் கூட இங்கு சற்று பின்னணிக்கே சென்றாக வேண்டும். ஏனெனில் மதங்களுக்கு அந்த யோக்யதை அருகதை இல்லை என்பது இன்று நம் எல்லோருக்குமே தெரியும். மதங்களின் யோக்யதை அப்படி அந்தளவுக்குச் சீரழிந்து கிடக்கிறது.
எந்த ஒரு சாதியும் அது தனது மொழிக்கு, பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு எந்தளவுக்கு ஓரு சிறப்புப் பங்களிப்பை செய்துள்ளது. அப்படி ஒரு சிறப்புப் பங்களிப்பை அளிப்பதன் வாயிலாக அதன் மதத்துக்கும் எந்தளவுக்கு ஒரு சிறப்பைச் சேர்த்து வைத்துள்ளது அல்லது இழிவைச் சேர்த்து வைத்துள்ளது என்பதுவும் கூடக் கூடவே சேர்த்துக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் உயர் சாதித் தன்மைக்குரிய நிறம், பொருளாதாரம் இருந்தால் மட்டும் போதாது, எந்த மொழி, மதக் குடும்பத்து நபர் இவர்?! என்பதுவும் கூடவே சேர்த்துக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர்? நீங்கள் எந்தக் கண்டத்தையோ, நாட்டையோ, மொழியையோ, இனத்தையோ, மதத்தையோ சார்ந்தவராய் கூட இருந்து விட்டுப் போங்கள் ஆனால் நிறங்களைப் பொறுத்த வரை நிறங்களின் இந்த 5 வகைப் படிநிலையில் நீ எந்த வகைப் படிநிலையில் உள்ளாய்?! பொருளாதாரப் படிநிலையில் எந்த இடத்தில் உள்ளாய், (இந்தியாவுக்குள் நீ எந்த சாதியிலிருந்து, வந்துள்ளாய் எனப் பார்க்கப்படுவதைப் போல உலகு தழுவிய அளவில்) எந்த மொழி, மதக் குடும்பத்திலிருந்து வந்துள்ளாய்? என்பதைப் பொறுத்து தான் ஒரு புதிய வகைப்பட்ட Globle cast system ஒன்றும் உருவாகியே தீரும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில (அடிமை) மொழியினங்களுக்கிடையே இந்தப் போட்டி ஒரு சாதியப் போட்டியைப் போல் மொழிகளின் போட்டியாகவும் விரிவடையக் கூடும். ஒரு மனிதனது சாதிய அடையாளம் என்பது கடைசியில் அவனது இன, மொழி, மத அடையாளம் என்பதாகவும் விரிந்த பொருளில் விரிவடைந்து உருமாறக் கூடும். ஆனாலும் கடைசி வரை சாதி என்பது இனத்துக்கான அடையாளக் கூறுகளில் ஒன்றாகவும் தொடர்ந்து நீடிக்கவும் ஒரு வாய்ப்புள்ளது. ஒரே மொழி, நிறம், பழக்கவழக்கம், பண்பாடு, வழிபாட்டுக் கலாச்சாரம், வாழ்வியல் நிலப்பரப்புக் கொண்டவர்களைக் கூட எப்படிப் பல்வேறு சாதியத் தீவுகளாய் இந்த நிற பேதம் சிதறடித்ததோ, அதே போல பல்வேறு சாதிகளின் உண்மையான கடினமான கூட்டு உழைப்பு, தியாகங்கள், மற்றும் ஒற்றுமையுணர்வு, சகிப்புத் தன்மை, விவேக ஒற்றுமையுடன் கூடிய கூட்டு நடவடிக்கைகள் வாயிலாகவே, கடும் பங்களிப்புகளின் வாயிலாகவே தான் இனி ஒரு மொழி உயிர் வாழ்வதும் அழிவதும் என்பதுவும் நடக்கும்.
ஆக சாதிகளின் அழிவு என்பது ஒரு வகையில் மொழிகளின், இனங்களின், மதங்களின் அழிவும் கூட. ஹிந்திவாலாக்கள் ஏன் அலறுகிறார்கள் மதரீதியிலான கூப்பாடு போகிறார்கள் என இப்போது புரிகிறதா?! விந்திய, ஹிந்தியத் துணைக் கண்டத்தில் தாழ்வுற்ற (கருப்பர் இன) மொழிகளெல்லாம் சாதிய நிறப் பிரிவுகளினாலேயே தாழ்வுற்றது. ஆக ஒரு மொழியை எது சிதைத்ததோ அதுவே இனி அதன் மீட்சிக்கும் ஒரு விதத் தார்மீகப் பொறுப்பேற்கக் கடமைப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் அவனவன் தாய்மொழிக்கு விசுவாசம் காட்டினாலேயே தாய் நாட்டுக்கும் தனது மொத்த மொழியினத்துக்கும், மதத்துக்கும் விசுவாசம் காட்டியவனாவான். (ஆதியில் தாய்க்கு ஒரு மொழி, தந்தைக்கு ஒரு மொழியெல்லாம் கிடையாது. இன்று கதை வேறென்பதால் தான் இந்த விளக்கம்)
ஆனால் திராவிட மொழிகளைப் பேசிய பெரும்பான்மைக் கருப்பு மனிதர்களுக்கு தனி (க் கருப்பு) மதங்களே இருந்ததில்லை என மெல்ல மெல்ல திராவிடர் மத அடையாளங்களைத் தான் கிட்டத்தட்டப் பூரணமாகவே விழுங்கி விட்டோமே…….
(உண்மையில் அது கடப்பாறையை விழுங்குவானேன் பின் கஷாயம் குடிப்பானேன் கதையாகத் தான் மாறப் போகிறது என்பது அது வேறு விஷயம்.)
……….. என்ற தெம்பில் ஆரியம் திராவிடர்களுக்கு எனத் தனி மதங்களே இருந்ததில்லை, ஆதியிலிருந்தே சனாதன ஹிந்திய மதம் தான் என்று எப்படி சொல்லத் தொடங்கினார்களோ அதே போல், கொஞ்ச நாள் சென்றால் மதத்திற்கு ஏற்பட்டதே மொழிகளின் விஷயத்திற்கும் நடக்கும். மொழிக் கூடாரத்துக்குள் முதலில் மத ஒட்டகத்தின் மூக்கு தலை தான் மெல்ல எட்டிப் பார்க்கும். பின் மொத்த இனமெனும் கூடாரமும் ஒட்டகத்தால் ஆக்ரமிக்கப்படுவது போலத் தான் கதை மாறும். கொஞ்சம் விட்டால் திராவிடர்களுக்கென தனி மொழி கூட இருந்ததில்லை எனவும் (ஹிந்தியை ஏற்று நமது தாய்மொழியை மறந்தோம் எனில்) சொல்லத் தலைப்பட்டு விடுவர். இது தான் ஹிந்தியத்தின் வாயிலான ஆங்கிலத்தின் திட்டம்.
கரியமக்களின் வாழ்விடங்களை ஆக்ரமித்தது போலவே அவர்களது மதம் பண்பாட்டுக் கூறுகளையும் திருடி விழுங்கி விட்டு இன்று உங்களுக்கென்று எந்த மதம் இருந்தது?! ஆதியிலிருந்தே நீங்களெல்லாம் காட்டுமிராண்டிகள் தானே எனக் கூறுவது அயோக்கியத்தனத்தின் கடைந்தெடுத்த உச்சம். இதை விடக் கொடுமை என்னவென்றால் கருப்பு திராவிட மொழிச் சமூகத்திலிருந்து வந்தவர்களே இடையில் ஏற்பட்ட நிற பேதம் காரணமாகத் தங்களது வேர்களின் ஒரு………..
(கருப்புப் பக்கத்தை, அதாவது இப்போது மொழி அடையாளத்தையே துறக்கத் துணிவது தான் கொடுமையிலும் கொடுமை.)
………….. பகுதியை மறைக்க முயல்வது, அல்லது பெருமளவில் கைவிடுவது தான் இன்று பெரும் உலகப் பெரும் போக்காய், ஒரு பேஷனாய் உருமாறி வருகிறது.
அந்த வகையில் தமிழ் சமூகத்தின் கடைசித் தலித் இருக்கும் வரை தமிழ் அழியாது! ஆனால் இன்று இத் தமிழ் மொழிக்கு வேறு வகையில் இறுதியும் கடைசியுமான சில சத்திய சோதனைக் க்ளைமாக்ஸ்கள் கடைசியில் மத வடிவத்தில் வந்தே வந்து விட்டது. தமிழ் சமூகத்தின் இடை நிலை சாதிகளைத் தமிழைக் கைவிட வைத்து ஆங்கிலத்தின் முன் மண்டியிடவும் வைத்தாகி விட்டது. மொழியைத் துறப்பவர்களிடம் பெரிதாய் மதப் பற்றும் இருந்து விடப் போவதில்லை. ஆதலால் அத்தகையவர்களுக்குத் தமிழுக்கென்று தனி மதம் இருந்ததா என்ற தேடல் கூட எழப் போவதில்லை. ஆதலால் அத்தகையவர்களை ஏதாவதொரு பெரு மதம் ஸ்வீகரித்து அது தனக்குள் உள் வாங்கிக் கொள்வதிலும் பெரிதாய் பிரச்னை எழ வாய்ப்பில்லை. ஆனால் தலித்துகளும் மதத்தால் வேறுபட்ட இஸ்லாமியரும், சிலச் சிறுபான்மைக் கிறித்துவர்களும் கூட மதத்தால் வேறுபட்டும் கூட மொழியால் ………..
(ஆழமாக இறங்கி ஆராய்ந்தால் அவர்களில் பெரும்பான்மையோர் நிறத்தாலும் நெருங்கியவர்களாய் இருப்பர்)
………….. இணைந்து தடையாய் இருக்கிறார்களே என்பதால் தான் இந்தியாவில் இதை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட ஆயுதம் தான் Religious polarization எனப்படும் மதத் துருவப்படுத்தல். தமிழர்கள் உடனடியாக இப்பவோ நாளையோ எனவிருக்கும் அவர்களது செல்வாக்கிழந்த மதங்களில் ஏதேனும் ஒன்றையாவது (இப்பவோ நாளையோ என பிராமண Intensive care unity க்குள் சிக்கியுள்ள
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியைப் போலவும், உலக மதங்களுக்கெல்லாம் தாய் மதத்தைப் போன்றதான தமிழ் மொழியும் மதமும் இன்று அம்மொழியைப் பேசுவோரிடையேயே விழிப்புணர்வும் ஒற்றுமையின்றியும் உள்ளதால், இந்த விழிப்புணர்வின்மை, ஒற்றுமையின்மை என்ற குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விந்தியத்துக்கு வடக்கில் தன் வேர்களை ஆழப் பதிந்து கொண்ட ஹிந்தியம் தனது விழுதுகளை எப்படியாவது விந்தியத்திலும் இறக்கி விட வேண்டும் என நூற்றாண்டுக் கணக்கில் முயன்று அதை ஓரளவு சாதித்தும் கொண்ட ஹிந்தியம் இத் தமிழ் மண்ணில் ஒரு விழுதையாவது இறக்காமல் அப்பணி நிறைவுறாது எனத் தெரிந்ததால் தான் தனது முழு மூச்சையுமே கூட செலுத்தி, ஒரு வன்புணர்வைப் போலவும் கூட அச்சுறுத்திப் பார்த்துக் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் சமூகமோ அவ்வளவு எளிதில்
(அதன் ஊழல் அரசியல் தலைவர்கள் தவிர்த்து)
அச்சமுறுவதாய் தெரியவில்லை என்பதால் தான் தமிழகத்தின் மீது பட்டினிச் சாவு என்ற இறுதி ஆயுதத்தையும் கூட அது கையில் எடுக்கத் துணிந்து விட்டது. (இல்லை எடுத்து பிரயோகிக்கவே ஆரம்பித்து விட்டது)
அரசியல், பொருளியல், மதங்களில் ஏற்கனவேயே இத்தகைய நிறப் பாகுபாடுகள் உண்டு. ஆனால் நிறத்தின் அடிப்படையிலான இந்தப் பாகுபாட்டை இனிமேலும் மூடி மறைக்க முடியாத ஒரு காலம் மென்மேலும் நெருங்கி வந்தே தீரும். ஏற்கனவேயே பூமிப் பந்தில் அப்படி நிறத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மதங்களாய் தான் கிறித்துவமும், இஸ்லாமும் ……..
(ஏன் ஹிந்திய சனாதன மதமும் கூட அத்தகையதே)
……… விளங்குகின்றன.எல்லா வெள்ளைத் தோல் மதங்களுக்கும் ஆப்பு வைக்கக் கூடிய கண்டம் இந்த விந்தியத் துணைக் கண்டம் என்பது இன்னும் வட ஹிந்தியர்களுக்கே புரியாத போது ஆங்கிலத்திற்கு எங்கே புரியப் போகிறது. நிறத்தின் அடிப்படையில் மதங்களும், மதங்களின் அடிப்படையில் மொழிகளும், மொழிகளின் அடிப்படையில் நாடும், கண்டங்களும் என்ற புதிய வரிசை முறைகள் தோன்றினாலும் தோன்றக் கூடும்.
ஏற்கனவே உள்ள ஆதிக்க அரசியல், ஆதிக்கப் பொருளியல், ஆதிக்க மொழியியல், ஆதிக்க மதச் சக்திகள் அப்படி ஆதிக்க நிறவெறி மோகம் கொண்டவையாய் தான் உள்ளன. இந்த மானுட உலகின் எந்தத் துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கெங்கெல்லாம் ஆதிக்கம் நிலவுகிறதோ, அங்கெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் வெள்ளை நிறம் சம்பந்தபட்டிருப்பது சற்றுக் கூர்ந்து உற்று நோக்கினால் ……….
(மேலோட்டமான வெளிப்பார்வைக்கு அது அவ்வளவு எளிதில் இலேசில் புலப்படாது, என்ற போதிலும் சற்றுக் கூர்ந்து நோக்கினால்)
…….. அப்போது தான் அது புரிய வரும், நேரும். கடைசிக்கும் கடைசியாக இந்த உலகின் வர்க்க விரோதங்களையெல்லாம் ஏற்ற தாழ்வுகளையெல்லாம் , உயர் தாழ்வுகளையெல்லாம் ஒடுக்கப்படுவோர், ஒடுக்கும் சக்தி என்பதையெல்லாம் இந்த இரண்டே இரண்டு நிறங்களில் இருந்து தோன்றும் நிற பேதங்களின் அடிப்படையிலேயே வகைப்படுத்தி விட முடியும்.
இந்தக் கருத்துரு குறித்து விரைவில் பேச்சொலிச் செய்தியும் பதிவிடவுள்ளேன். .

No comments:

Post a Comment