Thursday, January 10, 2019

தண்ணீர் தண்ணீர்,,,,,,,,

தண்ணீர் தண்ணீர்,,,,,,,, பேசாலைதாஸ்

                                                      கே. பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் படத்துக்கு ஏதோ விமர்சனம் எழுதப்போகின்றார் என நினைக்கின்றீர் களா? விடயம் படம் அல்ல, தண்ணீர் தான், அதுவும் மழை நீர்தான், இனிமேல் மழைத்தண்ணீரை சேகரித்துவைத்தால், அல்லது அதை பாவித்தால் தண்டனைக்குறிய குற்றமாக விரைவில் சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. பிரான்ஸ் நாட்டில் இயங்கிவரும் Suez என்ற நிறுவணம் தான் இதற்கு காரனம்! இந்த நிறுவணம்  Water managment அதாவது நீரை மையமாக கொண்டு இயங்கும், உலகவங்கியின் ஒரு நிறுவணமாகும்.
                                           நல்ல குடி நீருக்கு தற்போது பணம்செலுத்தவேண்டிய ஒரு கட்டாயம் இப் போது கிராமவாசிகளுக்கும் வந்துவிட்டது. தண் ணீர் பிரச்சனை மாபெரும் பிரச்சனையாக தற் போது எல்லா நாட்டிலும் உருவெடுத்துள்ளது. சென்றவருடம் தென்னாபிரிக்கா குடிதண்ணீர் இல்லாமல் தவித்ததை யாவரும் அறிந்திருப்பீர் கள். இந்த தண்ணீர் இப்போது அரசியலாகவும், வியாபாரமாகவும் மாறிவிட்டது, காற்றும் தண் ணீரும் Commom Comodity  பொதுப்பொருளாக இருந்துவந்துள்ளது, இதில் தண்ணீர் தற்போது Commercial comodity வியாபார பொருளாக மாறிவிட்டது. விரைவில் காற்றும் ஒரு வியாபார பொருளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

                                                               சுத்தமான குடிதண்ணீரை தட்டுப்பாடு
இல்லாமல் தருகின்றோம், விவசாயத்துக்கு தண் ணீரை தாராளமாக தருகின்றோம் என்ற தோர ணையில் இந்த சுயேஸ் என்ற தண்ணீர் நிறுவ ணம் நாடுகளுக்குள் கால்பதிக்க முனைகின்றது. போத்தல் தண்ணீர் வியாபாரிகள் தொடக்கம், அரசியல்வாதிகள் உட்பட எல்லோரும் இந்த தண்ணீரை தந்திரமாக பாவிக்கின்றனர். இலங்கை அரசியலில் மகாவலி கங்கை, இரணைமடு குளம் என்பன அரசியல் வியூகங்களாக மாறியுள்ளது. நிலத்தடி சுன்னாம்பு தண்ணீரை நம்பி வாழ்ந்த யாழ் குடா நாடு, வெகு விரைவில் பெரும் தண்ணீர்ப்பஞ்சத்தை மேற்கொள்ளவிருக்கின்றது. நிலத்தடி நீரிலே கழிவுப்பொருட்கள் அதிகமாக கலப்பதும், அளவுக்கதி கமாக நிலத்தடி நீரை
உறிஞ்சித்தள்ளும் குழாய்க்கிணறுகளும் இதற்கு காரனம், பேசாலை போன்ற மணல் தரை கொண்ட இடங்களும், இந்த நிலத்தடி நீரிலே கழிவுகள் சேறும் அபாயம் உள்ளது, வீட்டுக்கு வீடு குழிக்கழிவறைகள் அதுவும் இன்னொரு வளவுக்கும் கிணறுகளுக்கும் மிக மிக அருகா மையில் கழிவறைக்குழிகள் அமைவது தண்ணீர் மாசுபடுவதை துரிதமாக்குகின்றது. மிக மிக நெருக்கமாக மக்கள் தமது வீடுகளை அமைப்ப தும், கிராம, நகர சபை நிருவாங்கம் இதில் போதியளவு சிரத்தை காட்டவேண்டிய அவசி யம் உண்டு. இவர்களின் அசமந்த போக்கினால், நாடுமுழுவதும் தண் ணீர் மாசுபடும் அபாயத்தை எதிர் கொள்கின்றது, இதனை நல்லதோர் சந்தர்ப்பமாக உபயோகித்து Suez என்ற பிரான்ஸ் நாட்டு நிறுவணம் தனது மூக்கை நுழைக்கப்பார்க்கின்றது.


                                                                                       இந்த suez என்ற நிறுவணம் ஒரு நாட்டுக்குள் காலடி எடுத்துவைத்தால் என்னென்ன விபரிதம் நடக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம். முதலில் இந்த நிறுவணம், ஒரு நாட் டில் உள்ள தண்ணீர் பாவனையில் தனது நிர்வாகத்தை நுழைக்கும், ஆறுகளை முதலில் ஏதோ திட்டத்தை முன்வைத்து தனது கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரும், பின்னர் அந்த ஆற்றில் குளிப்பதை, அந்த ஆறு நீரை விவசாயத்துக்கு பயண்படுத்துவதில் கட்டணங்களை கொண்டுவ ரும், நிலத்தின் கீழ் உள்ள நீரை, சுத்தமாக்குகின்றொம் என்ற பாவனை யில், நிலத்தடி நீரின் மிதும் தமது உரிமையை நிலநாட்டுவார்கள், பின் னர் என்ன,  கிணறுகள், குழாய்க்கிணறுகள் எதையும் யாரும் அவர்கள் அனுமதி இன்றி தோண்ட முடியாது. உங்கள் வீடுகளுக்கு அவர்கள் வேண்டியளவு தண்ணீர் கட்டணத்தோடு தருவார்கள், இந்தியாவில் கோவை மாவட்டத்தில் இந்த தண்ணீர் முகாமைத்துவ பொறுப்பை இந்த Suez என்ற நிறுவணம் வாங்கியுள்ளது, இனி என்ன நடக்கும் என்பதை கீழே நான் தரும் காணொளி விபரமாகவிளக்கும், அன்புடன் பேசாலைதாஸ்
                                             

No comments:

Post a Comment