Sunday, January 6, 2019

மரம் வளர்ப்போம் மன்னாரை காப்போம்!

மரம் வளர்ப்போம் மன்னாரை காப்போம்!    பேசாலைதாஸ்

                                                                        சென்றதடவை பேசாலை காட்டில் உடை மரங்கள், உயில் மரங்கள் தனியார் வியாபார நோக்கத்திற்காக  பெருவா ரியாக வெட்டப்பட்டு, பேசாலை காடுகள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதை பதிவு செய்து, அதனை தடுக்க பேசாலையில் உள்ள கிராம சபை மற்றும் சமய நிறுவனங்கள், கழகங்கள் உடனடியாக தகுந்த நட வடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தை பதிவு செய்திருந்தேன் .   பேசாலையில் உள்ள தனியார் நிறுவணம் ஒன்று, தனது உற்பத்தி நடவ டிக்கைக்காக நாள்தோறும் ட்ரெக்டர்கனக்காக மரங்களை வெட்டி
குவிக்கின்றனர். படத்தில் உள்ளது ஒரு நாளுக்கு பேசாலைக்காட்டில் வெட்டப்படும் மரங்களை நீங்கள் படத்தில் காணலாம். பேசாலைக் காடு ஏறக்குறைய 8 சதுரமைல் பரப்பளவை கொண்டது, இதில் நாள்தோறும் இந்தளவு மரங்கள் வெட்டப்படுவது அதிர்ச்சியான விடயம் ஆனால் பேசாலை கிரம வாசிகள் இதுபற்றி சிந்தித்தார் களா? என்பது கேள்விக்குரியதே!



                                         இப்போது மன்னார் மாவட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் அடுத்த பதிவு, மீண்டும் மரங்களைப்பற்றியதே! எமது மன்னார் மாவட்டத்தில் முள்முருங்கை மரத்திற்கு என்ன நடந்தது என்பது பெரும் மர்மமாகவே இருக்கின்றது, பல்வகை பயண்பாட்டுக்கு உகந்த மரம் தற்போது இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. மரங்களை செடிகள் முற்றாக அழிந்துபோகாமல் இருக்க, விதை வங்கிகள் என்ற அமைப்பு ஒவ்வொரு நாடுகளிலும் உண்டு அப்படிப்பட்ட அமைப்பு இலங்கையில் உள்ளதா? என்பது எனது சிற்றறிவுக்கு இன்னமும் தென்பட வில்லை. எதிர்பாராத இயற்கை அழிவு காரணமாக ஒரு தாவர இனம் அழிந்தால், அந்தத் தாவரத்தினை எப்படி மீள உருவாக்குவது என்பது பெரிய கேள்விக்குறி. உலகின் மிகப்பழைய மரங்களில் ஒன்றாகக் கூற ப்படும் மன்னாரின் பெருக்க மரம் இலங்கையில் வேறெங்கும் உள்ளதா என நான் அறியேன். நான் சென்ற இடங்களில் அதைக் கண்டதும் இல்லை.

                                               அவ்வாறு இல்லாதுவிடின், இந்த மரம் இறந்தால், பெருக்கமரம் எப்படித் தோற்றமளிக்கும் எனப் புத்தகங்களில்தான் (அல்லது வீடியோவில்) அடுத்த தலைமுறை படிக்கவேண்டியிருக்கும்.
மன்னாரில் சுற்றுலாப் பயணி யரை ஈர்க்கும் பெருக்கமரம் அரேபிய ர்களால் தங்களது குதிரைகள், ஒட்டகங்களுக்குத் தீனியாகக் கொண்டு வரப்பட்டது எனக் கூறப்படுகிறது. "வந்தேறுகுடி" என்றாலும் எம் மண் ணோடு இணைந்து பல நூறாண்டு வாழும் இந்த மரம் வேறெங்கும் இல்லாவிடில், முற்றிலும் அழிவ தற்கான சாத்தியங்கள் உள்ளன.



                                                                   பெருக்கமரம் இதனை Biobab Tree என்றும் அழைப்பர்கள், ஆபிரிக்கா மடகஸ்கார் காடுகளில் காணப்பட்ட இந்த மரங்கள் கி.பி 1470 ஆண்டளவில் மன்னார் மாவடத்தில் அரேபிய வியா பாரிகளினால் பயிடப்பட்டது, தமது ஒட்டகங்களுக்கும், குதிரைகளுக்கும் தீவனமாக இதன் விதைகள் இலைகள் பாவிக்கப்பட்டதினால் தமது தேவைக்காக அரேபிய வியாபாரிகள் இதனை இங்கே விதைத்தனர். தலைமன்னார், ஓலைத்தொடுவாய் வடக்கு, விறானாவுக்கு அருகாமை யில் காணப்பட்ட இந்த பெருக்க மரம் முற்றாக அழிந்துவிட்டன. பெருக்க மரம் இதனை Biobab Tree என்றும் அழைப்பர்கள், ஆபிரிக்கா மடகஸ்கார் காடுகளில் காணப்பட்ட இந்த மரங்கள் கி.பி 1470 ஆண்டளவில் மன்னார் மாவடத்தில் அரேபிய வியாபாரிகளினால் பயிடப்பட்டது, தமது ஒட்ட கங்களுக்கும், குதிரைகளுக்கும் தீவனமாக இதன் விதைகள் இலைகள் பாவிக்கப்பட்டதினால் தமது தேவைக்காக அரேபிய வியாபாரிகள் இதனை இங்கே விதைத்தனர். தலைமன்னார், ஓலைத்தொடுவாய் வடக்கு, விறானாவுக்கு அருகாமையில் காணப்பட்ட இந்த பெருக்க மரம் முற்றாக அழிந்துவிட்டன.



                                                        இவ்வாறான அழிவுகளைத் தவிர்க்க உலகின் பல நாடுகளில் விதை வங்கிகள் உள்ளன. அந்தந்த நாடுகளின் அரிய விதைகளும், ஒவ்வொரு தாவரத்தினதும் வெவ்வேறு வகை விதைகளும் அங்கு பேணப்படுகின்றன. இவ்வாறான வங்கிகளின் "தலைமையகம்" என்று கூறக்கூடிய ஓரிடம் நோர்வேயில் உள்ளது. நாலரைக் கோடி குறோணர்கள் செலவில் மிகப் பாதுகாப்பான் முறையிற் கட்டப்பட்டுப் பேணப்படும் இந்த "வங்கியில்" உள்ளவை மிகப் பெரும்பாலும் உணவுத் தாவரங்களின் விதைகளே! ஆயினும் ஏனைய தாவரங்களை, அரிய வகை மரங்களை இவ்வகையிற் பேணமுடியும்.

                                                                        இவ்வாறான ஓரமைப்பை இலங்கையில் (இதுவரை இல்லாவிடின்) உண்டாக்குவது மிக அவசியம். முள்முருங்கை எவ்வாறு அழிந்தது என்று பலர் அறியவில்லை. ஆனால் வட இலங்கை யில் முன்பிருந்தளவு இந்த மரங்களை யாரும் காணமுடியாது. விதை வங்கி இருந்திருப்பின் கொஞ்சமாவது இந்த மரத்தைக் காப்பாற்றியிரு க்க முடியும். எல்லா மாவட்டங்களிலும் விதைவங்கி தேவை. துறைசார் வல்லுநர்கள் இதுபற்றிக் கவனத்தில் கொள்ளல் அவசியம். விவசாயத் திணைக்களமோ, பல்கலைக்கழக விவசாய பீடங்களோ இவற்றை இலகுவாக நிர்வகிக்க முடியும். அவ்வகையில் எமது தாவர இனங்கள் அத்தனையும் அடுத்த தலைமுறையின் கையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

                                         மன்னார் பள்ளிமுனையில் உள்ள பெருக்கமரத்தின் விதைகள் பேணப்பட்டு அடுத்த தலைமுறைகளுக்கும் இதனை எடுத்து செல்லவேண்டும் . இது தொடர்பாக மன்னார் பிரதேசசபை உரிய கவன ஈர்ப்பை அரசாங்கதிற்கு எடுத்துச்செல்லும் கடமை பட்டவர்கள். எனது இந்த பதிவுக்கு இளைவாலை விஜயேந்தரின் முகநூல் பதிவுக்கு நன்றி

அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment