Sunday, January 6, 2019

மரம் வளர்ப்போம் மண் காப்போம்!

மரம் வளர்ப்போம் மண் காப்போம்!  பேசாலைதாஸ்

                   1964 ஆண்டு பெரு வெள்ளம் இலங்கை முழுவதையும் தாக்கியது, குறிப்பாக பேசாலை கிராமம் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கியது, பேசாலையில் தென்கடலும், வடகடலும் கைகுலு க்கிக்கொண்டதாக ஒரு செய்தி, இந்த வெள்ளப் பெருக்கையொட்டி பல தொற்று நோய்கள் பர வின, அதில் கண்வருத்தம் முக்கியமானது, நான் ஆறுவயது சிறுவனாக இருந்த போது, நானும் கண் ந்ய்யாலும், சிரங்குப்புண்ணினாலும் பாதி க்கப்பட்டேன், பிரண்டை, சோற்று கற்றாளை இவைகளே அப்போது மருந்தாக பாவிக்கப்பட்டது, எனது அம்மா சோற்று கற்றாளையின் கழியை எனது கண்களில் கட்டிய ஞாபகம்! 

                                           கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழையெனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை
மருத்துவ குணங்களுக்கென்று பய ன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச் சாறுகளில் ஆந்த்ரோகுயினோ ன்கள், இரெசின்கள், பாலிசக் கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள் ளன. கற்றாழையிலிருந்து வடிக்க ப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. தளிர் பச்சை, இளம்பச்சை கரும்பச்சை யெனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழையில் முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.

                                             இப்போது வியாபாரப்பொருளாக இந்த கற்றாளை சாகுபடி செய்யப்படுகின்றது, கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை: குர்குவா கற்றாழை (அலோ பார்ப டென்ஸ் (Aloe vera)) கேப் கற்றாழை( அலோ பெராக்ஸ் (Aloe ferox))) சாகோ ட்ரின் கற்றாழை (அலோ பெர்ரி (Aloe perryi)) இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவார ணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைக ளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது.கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவையாக உள்ளன. இவ்வளவு மருத் துவ குணம் கொண்ட கற்றாளை எங்கள் ஊரில், எங்கள் சொத்தாக நாங்கள் பாவித்த இந்த இயற்கையான கற்றாளையை இப்போது தொட்டாலே அரச குற்றமாம்!

                                                              முகநூலிலே தமயந்தி என்ற சமூக ஆர்வலர் எழுதிய சீற்றமான பதிவை உங்களுக்காக மீண்டும் பதிவு செய்கின் றேன். 

"இப்போ கற்றாழையின் மரபுரிமை எந்த நாட்டுக்குச் சொந்தம்?" 

                                                      காணுமிடமெல்லாம், கால் வைக்க முடியாதபடி கற்றாழை (பிள்ளைக்கற்றாழை) எங்கள் நிலமெல்லாம் வியாபித்துக் கிடந்த ஒரு காலம் இருந்தது.  அன்றைய நாட்களில் எமது கிராமத்தில் கால்ப்பந்து விளையாடிவிட்டு எல்லோரும் அப்படியே பந்தடி மைதான த்து ஓரங்களில் ஆளுக்கொரு கற்றாழை மரத்தைப் பெயர்த்தெடுத்தபடி அமர்ந்து கொண்டு விடுவோம் கால் நோவுக்குப் போட்டு உழக்க. யார் அதிகம் தின்பதென்று கற்றாழைச் சோற்றை அப்படியே தண்டோடு சப்பி விழுங்குவோம். 

                                                                     எங்கள் தேசத்தின் மிகப்பெரும் இயற்கை மருத்துவ மூலிகை. வேப்ப மரத்தைப்போல் கற்றாழையும் அரிய பொக்கி ஷம். இப்போ, மிகப்பெரும் பணப்பயிராகி விட்டது கற்றாழை. அரசாங்க
 அனுமதி பெற்று, நிலத்தைச் செப்பனிட்டு பயிரிடுதலே செய்கிறார்கள். 
வெளிநாட்டுக்கு ஏற்றப் படுகிறது.  (மருத்துவத் தேவைகளுக்கும், ஷம்போ, முகக்க்கிறீம், பொடிகிறீம் வகையறாக்கள் தயாரிக்கவும்.)
கடந்த ஆண்டு தீவகத்தில் பெருமெடுப்பில் இந்தப் பயிர்ச்செய்கையை விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் அனுசர ணையுடன் தொடங்கி வைத்தார்கள். .  1கிலோ 150ரூபாய்க்கு சந்தைப் படுத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.

                                                                              இப்போ தகுந்த அனுமதியில்லாமல் ஒரு பயல் கற்றாழையைத் தொட முடியாது.  அண்மையில் செய்தியொ ன்று:- இயற்கையாகவே காட்டுக்குள் நின்ற கற்றாழையைப் பறித்த பொது மக்களை அதிகாரிகள் எச்சரித்துக் கலைத்தார்களாம்.

கற்றாழையை ஏற்றுமதி செய்வது ஒருபுறம் இருக்கட்டும்...., இப்போ
 கற்றாழையின் மரபுரிமை எந்த நாட்டுக்குச் சொந்தமாக இருக் கிறதென்று யாராவது அறிந்து வெளியிட முடியுமா? அல்லது அதையும் வெளிநாடுகளுக்கு விற்று விட்டதா அரசாங்கம்.

பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர் அம்ரிதா ஏயெம் போன்ற சமூக, இயற்கைவள அக்கறையுள்ளவர்கள் இவை பற்றிய தகவல்களைத் தேடியெடுத்து மக்களுக்குத் தர வேண்டுமென வேண்டிக் கொள்கி ன்றேன்.

                                                  பிரதானமான பிற்குறிப்பு;- கற்றாழை, நாகதாளி (சப்பாத்திக்கள்ளி) குமரிகற்றாழை போன்ற தாவரங்களும் மரங்களும் வரண்ட பிரதேசங்களிலும் செழிப்பாக வளரக் கூடிய, எல்லாக் காலங் களிலும் பசுமையாகவே காணப்படுபவையாகும். அவை அழிந்து போன தற்கான முக்கிய காரணம் இந்தியப் படைகள் விதைத்துப்போன சீமைக் கருவேலமரம் என்பதை யாரும் மறக்க வேண்டாம். அந்த விஷமரங்களை அழிக்க அரசு இன்றுவரை எந்த நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வில்லை என்பதுதான் உண்மை)    நன்றி தமயந்திக்கு  

  மரங்கள், காடுகள், சுற்றுப்புற சூழல்கள் இவைகள் மீது நாம் விழிப்பு ணர்வோடு இருக்கவேண்டும் என்பதற்காக இவ்வகையான பதிவுகளை வலைப்பின்னல்கள் உதவியுடன் ஒரு செய்தியாக உங்கள் பார்வைக்கு விடுகின்றோம், மிகுதி உங்கள் எண்ணங்களில், அன்புடன் பேசாலைதாஸ்    

No comments:

Post a Comment