Thursday, January 10, 2019

பெண்ணடிமை தீரும் வரை,,,,,,,,,,

பெண்ணடிமை தீரும் வரை,,,,,,,,,,  பேசாலைதாஸ்

பெண்ணடிமை தொடரும் வரை, மண்னடிமை மறையாது!" இது பாரதியின் கூற்று, ஒரு சமூகம் விடுதலை பெறவேண்டுமானல், அங்கே ஒரு சமூகம் பெண்ணடிமை முற்றாக மறையவேண்டும், ஈழப் போராட்டத்தில் விடுதலைப்புலிக ளினால் பெண்கள் போராளிகளாக மாறி, களத்தில் சாதனைபடைத்தா ர்கள், இருந்தபோதும் அரசியல் உயர்மட்ட பேச்சுக்களில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்ற யதார்த்த உண்மையை, ஒஸ்லோ வில் நடைபெற்ற புலிகளுக்கும்,இலங்கை அரசுக்குமான பேர்ச்சுவார்த் தைகளில் பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கம்ஸாயினி டாண் தொலைக்காட்சியில் கூறினார், அவர் புலிகளின் மீது ஒரு குற்ற சாட்டாக இதனை கூறவில்லை, மாறாக பெண்கள் அரசியல் தலைமத் துவத்தில் ஈடுபடுவது தமிழ் தரப்பிலே மிக மிக குறைவாக இருக்கின்றது என்பதனையே மறைமுகமாக எடுத்துக்காட்டுகின்றார்.

                                                            எந்தவொரு நாட்டில் பெண்களின் அரசியல் முகாமைத்துவம் மேலோங்கியுள்ளதோ அந்த நாடு சமூக பொருளாதார பொதுப்பணிகளில் சிறந்து விளங்கும் என்பதற்கு நோர்வே எடுத்துக் காட்டாகவிளங்குகின்றது. இன்று சமூக நலன் பேணும் நாடாகவும், சந் தோசமான நாடாகவும் உலகிலே முதல்தர நாடாக நோர்வே விளங்கு வதற்கு முக்கிய காரனம், பெண்களின் சுதந்திரம், அவர்களின் ஆளு மையை நோர்வே நாடு அபரிமிதமாக வளர்த்துள்ளது என்பதே ஆகும், நோர்வே நாட்டில் ஒஸ்லோ நகரை பொறுத்தவரை, பல இன மக்கள், பல நாட்டு மக்கள் வாழும் பல்லின சமூகம் கொண்ட ஒரு நகராகும், இங்கு வாழும் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப சகலவாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன, கிடைக்கின்றது. ஒரு நாட்டின் வளம் எவ்வாறு பங்கிடப்படுகின்றது என்பதில் இருந்தே அந்த நாடு மக்களின் நாடாக கருத முடிகின்றது, அதேவேளை பெண்களின் உரிமைகள், அவர்களுக் கான பங்குகள் அவர்களுக்கு வழங்க்கப்படும் போது அந்த நாடு வள மான நாடாக வளர்ச்சியடையும் என்பதில் கம்ஸிகாவுக்கு மாற்று கருத் துகிடை யாது என நான் கருதுகின்றேன்.
                                                            

                                                                     ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என குடும்ப மட்டத்தில் சமமின்மையோடு வளர்க்கப்படுவாதாலேயே பெண் பிள்ளை கள் தமது ஆளுமையை இழக்கின்றனர், அதனால் ஒரு நாடும் சமூகமும் தாழ்ந்து போகின்றது! பெண்பிள்ளைகளை சிறுமைப்படுத்தி வளர்ப்ப தைவிட, அவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுத்து, "சட்டங்கள் செய்வதும், பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் என்ற பாரதியின் கனவை நோர்வே பெண்கள் யதார்த்தமாக்கியதாலே நாடும் சமூகமும் உயர்வுகண்டுள்ளது, அந்த மரபில் வந்தவர்தான் கம்சாயினி அவர்கள், இன்று அவர் ஒஸ்லோ உதவி மேயராக இருக்கின் றார். இன்னும் அவர் வளர்வார், புலம்பெயர் தமிழருக்கும், நோர்வே நாட்டுக்கும் பெருமையை தேடித்தருவார்,  அரசியல் என்றால் என்ன வென்று புரியாதா சில கிறுக்குகள், கம்ஸாயினியை தரக்குறைவாக முக நூலிலே பதியவிட்டுள்ளனர், அவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் என நாம் பகிரங்கமாக கோரிக்கைவிடுகின்றோம். 

                                                               கருத்துக்களை மதித்து ஜனநாய மரபோடு, புதிய அரசியல் கலாச்சாரபண்புகளோடு வாழ பழகவேண்டும்! கம்ஸா யினியின் நோர்வே கலாச்சார பண்புகளை, அவரின் தனிமனித வாழ் வை தாக்குவது புலம் பெயர்ந்து வாழும் எங்களின் பெண்பிள்ளைகளின் மீதான தாக்குதலாகும், ஏனெனில் கம்சாயினி அவர்கள் எங்கள் பெண் பிள்ளைகளின் உந்து சக்தியாக இன்று விளங்குகின்றார்.

                                                            கம்சாயினி அவர்கள் இலங்கைக்கு அண்மை  யில் விஜயம் செய்த பொழுது, டண் தொலக்காட்சிக்கு கொடுத்த பிரத் தியேகமான நேர்முக உரையாடலில், ஒரு கருத்தை மிக தெளிவாக விள க்கினார், அதாவது ஒரு பெண்பிள்ளையை பார்த்து, நீ கவனமாக சமூ கத்தில் இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்ப்பதைவிட, ஆண்கள் எல் லோரும் கன்னியமாக வாழ்ந்தால் பெண்கள் மீதான அத்துமீறல்கள் பாலியல் வன்கொடுமைகள் நிகழாது இருக்கும், ஏனெனில் இந்த கொடு மைகளுக்கு காரனம் ஆண்களே அன்றி பெண்கள் இல்லை. 


                                                       பெண்களை இன்னமும் சமூகத்தில் பின்னுக்கு வைப்பதாலயே நாடும் சமூகமும் பின் தங்கியுள்ள்து என்பதை சாதனை படைத்த ஒரு பெண்ணாக தாயகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுத்து சொல்லவே அவரது தாயக விஜய‌ம் இருந்தது அத்தோடு சிங்களவர், தமிழர் முஸ்லிம் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை என்ற நிலை வரவேண்டும் என்பதே கம்சாயினியின் எண்ணம் சிந்தனை நோக்கு, வளர்க, அவர் பணி சிறக்க அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment