Monday, October 12, 2020

திருக்குறளை அச்சிட்டவர் யார்?

திருக்குறளை அச்சிட்டவர் யார்?    பேசாலைதாஸ் 

திருக்குறள் என்ற ஓர் உயர்ந்த தமிழ் அற நூல் நமக்கு கிடைக்க ஒரு ஆங்கில அதிகாரியும் ,ஒரு சமையல்காரரும் தான் காரணம்.

அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர்,
தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர்.
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள் தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல்
போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் ,
அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது .

எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிசு வைட் எல்லிசு
(Francis Whyte Ellis 1777-1819)( எல் = சூரியன் , கடவுள் , எல் + ஈசன் = ஈசனாகிய கடவுள் = எல்லீசன் = எல்லிஸ் )
என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு
வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார்.
1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி
என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, மொழியியல்
துறையிலும் இவர் தமிழ் மொழிகள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம்
ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து,
" தமிழ் மொழிக் குடும்பம்" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார்.
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு
40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார்.

கி.பி. 1818-இல் சென்னையில்; உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளில்
ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச்
சுவரில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் எல்லீஸ் துரை 1818-ம் ஆண்டில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும்
நம் பார்வைக்கு உள்ளது. அதில்,

சாயங்கொண்ட தொண்டியசாணுறு நாடெனும்
ஆழியிலிழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகடலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரியப் பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

என்பதின் பொருளை யென்னுள்ளாய்ந்து... என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக்
கையாண்டிருக்கிறார்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரிலுள்ள எல்லிஸ் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் ( 'எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத்
தங்கு பல நூல்உ தாரணக் கடலைப் பெய்(து)
இங்கி லீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும்
அவருக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன.

எல்லிஸ் மாநில நிதி அதிகாரியாகவும், அக்கசாலை (Mint)யின் தலைவராகவும் இருந்த காரணத்தால்,
திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது.
இந்நாணயங்களை அண்மைக் காலத்தில் நாணயவியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன்,
அளக்குடி ஆறுமுக �தாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment